செந்தழலில் மூழ்கிய செம்மல் : அவன் பெரியசாமி

  – கே இராமையா 1. பொங்கியெழுந் தென்கடலி னடுவே தோன்றிப் பொதிகைமலைச் சாரலெல்லாம் புனலோ யோடிப் பொங்கரிடைத் தென்றலெனப் பூவோ டாடிப் புகழ்மறவர் தென்பாண்டிக் கூடல் சேர்ந்து சங்கமமர்ந் தகமகிழப் புறமு மார்ப்பச் சதிராடி வந்தவளே! தமிழே! தாயே! மங்கரவுன் புகழ்வாழ வாழ்வா யுன்றன் மக்களுளோம் மண்டமர்க்கு மயங்கா மள்ளர் 2. சீராருந் தாயேநின் சேயே னோர்நாள் செத்தபிணம் படையெடுத்து வருதல் கண்டேன் போராட லேன்? பிணங்கள் தானே விழும் பூசலெதற் கென்றிருந்தே னானா லன்னாய்! நேராத செயல்நேரக் கண்டேல் வேலி நெற்பயிரை…

“மொழிகாக்க உயிர் நீத்த தமிழ் மறவர்கள்”

ஆதிக்க இந்தி, தமிழ்வேரில் கொதிநீர் ஊற்றிய கொடுமையைக் கண்டு சிறையில் மாண்ட வீரச்செம்மல் “நடராசன்!” இந்தி எனும் தேள் தமிழன் தோள் மீது ஏறுவதைக்கண்டு அதை நசுக்கிட எழுந்தான் “தாளமுத்து!” அவன் சிறையில் மடிந்த தமிழ்ச்சொத்து. இந்தியை எரிக்க தன்னுடல் எரித்த முதல் நெருப்பு “கீழப்பழுவூர் சின்னச்சாமி!” இவன்தான் நெருப்புக்குத் தமிழை அறிமுகம் செய்தவன்! தமிழுக்காக தீயைத் தீண்டியது “சிவலிங்கத்தின்” சந்தன உடல்! அது இந்தியை எரிக்க, செந்தீயைத் தின்றது. தமிழைக் காக்க தன்னுடலைத் தீயாக்கி, “இந்தி”யப் பேயைப் பொசுக்க, உயிரைச் சிந்திய தீரன்……

இலங்கைத் தமிழ்மன்னரின் வழிவந்தவர் மரணம்

இலங்கையை ஆண்ட இறுதித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவரின் மூன்றாவது தலைமுறையைச் சேர்ந்த பிருதிவிராசு 17.01.14 அன்று மரணம் அடைந்துள்ளார். வேலூர் சாயிநாதபுரம் நடேச(முதலி)த் தெருவில் வசித்து வந்த பிருதிவிராசு அப்பகுதி மக்களால் இளவரசன் என அழைக்கப்பட்டு வந்துள்ளார். ஏராளமான பொதுமக்கள் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இலங்கை, கண்டியில், மதுரை நாயக்கர் வம்சத்தைச் சேர்ந்த, தமிழ் மன்னர்கள், கி.பி. 1739 1815 வரை, ஆட்சி செய்தனர்.  இலங்கையை ஆண்ட கடைசித் தமிழ் மன்னர் விக்கிரமஇராசசிங்கர். இவர் மீது, நான்கு முறை, போர்…

பொங்கல் வாழ்த்து

  பாரினில் எங்கும் மக்கள்   பலநலம் பெற்று வாழ சீரிய வழியில் எல்லாம்   சிறப்புகள் மேன்மே லோங்க மார்கழித் திங்கள் சென்று   மலர்ந்த தைத்திங்கள் நாளில் ஆர்வமோ டளித்தேன் இந்த   அணிமிகு பொங்கல் வாழ்த்தை! – புலவர் பு.சீ.கிருட்டிணமூர்த்தி புள்ளியியல் அலுவலர்(ஓய்வு) தலைவர், இந்திய அரசின் மக்கள் கல்விநிறுவனம் திருவொற்றியூர் பாரதிப்பாசறை துணைத்தலைவர், சோழர் கலாலயம், இணைச்செயலர், ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம்

என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்

செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி — பாடும் பாட்டெல்லாம்…

எங்கும் இன்பம் இனிதே பொலிகவே!

குறள்நெறி     ஓங்கி         குடியர              சுயர்ந்து பசியும்           பிணியும்        பகையும்   நீங்கி வசியும்      வளனும்             சுரந்து            வாழியர் வையகம்      வாழ்க;        வான்தமிழ்     வெல்க உழைப்பே   உயிரென      உலகுக்    குணர்த்தும் பொங்கற்   புதுநாள்        பொலிவுடன்     சிறக்க எங்கும்           இன்பம்      இனிதே      பொலிகவே. –  செம்மொழிச்சுடர் பேராசிரியர்     முனைவர் சி.இலக்குவனார்        (குறள் நெறி பொங்கல் ஆண்டு மலர் 15-01-1965)

தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்து !

உலகின்    வடிவம்   உருண்டை   என்பதை உருபெரும்  அறிவியலாளர்   கலிலியோ  கூறினார் கலிலியோ    கூற்றை   கண்கண்ட  நாடுகளுக்கு கருத்துரையாகப்   பரப்புரை  செய்தார்   ஆனால் ஈராயிரத்து   ஐநூறுக்குமுன்னே   சீராயிரம்  படைத்த இருவரிமறை  ஆசான்   திருவள்ளுவப்  பெருமகன் உருவான  உலகம்   உருண்டை  என்றே இருவரியிலே   உலகிற்கு   இயம்பினார்   அன்றே ! ”  சுழன்றும்ஏர்ப்    பின்னது   உலகம் ;   அதனால் உழந்தும்    உழவே    தலை ”    என்றாரே படித்தனர்   ஆயினும்    பரப்புரை  செய்தனரா ? பிறநாட்டார்  சொல்லையே போற்றிப் புகழ்ந்தனரே ! சுழலும்   உலகம்கூட  உழவரின்  பின்செல்லும் நிழலாக  இருக்கிறதென …

மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 6

 (முன்னிதழ்த் தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம்.  . . . -மாவீரர் நாள் உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது…

வெல்வீர் இனி… – புதுவைத் தமிழ்நெஞ்சன்

  மதுவிலக்கு மாணவப் போராளிகள் நந்தினி, சோதிமணி….. தமிழகத்தைச் சீரழிக்கும் மதுக்கடையை மூடு – அன்றே தலைநிமிர்ந்து தன்மானத்தோடு நிற்கும் தமிழ்நாடு மதுக்கடையை மூடாவிட்டால் நாட்டை விட்டே ஓடு – நீ மக்களுக்குச் செய்கின்றாய் இன்றுவரை பெருங்கேடு மது அருந்துவது உடல்நலத்திற்குத் தீங்கானது – என்று விளம்பரம் செய்து மதுவிற்பது கேடானது தமிழினத்தைச் சிந்திக்காது செய்வதற்கே மதுபோதை- அடடா திராவிடம் காட்டுகின்றது அறிவழிக்கும் தீயபாதை சிந்தனைக்கு வைக்கின்றார் மதுவாலே வேட்டு – தமிழா சிந்தித்து தெளிந்து போடடா கடைக்குப் பூட்டு மானமுள்ள தமிழனென்று உலகிற்குக்…

அழகு மங்கை

 –  அன்பு    இன்று மாலை  தெரிந்து விடும், யாருக்கு விருது என்று? தனக்குத்தான் கிடைக்கும் எனச் சிலரும், தனக்குக் கிடைக்குமா எனச் சிலரும், அவளுக்குக் கிடைக்கும், இவளுக்குக் கிடைக்கும் என்பதுபோல் சிலரும்,  இன்னாருக்குக் கிடைக்கக்கூடாது எனச் சிலருமாக எண்ணிக் கொண்டும் பேசிக் கொண்டும்  இருந்தனர். என்ன விருது என்று எண்ணுகிறீர்களா? ‘அழகு மங்கை’ விருது. உலக அழகி, நகர அழகி என்றெல்லாம் வழங்குவதுபோல், மங்கையர்க்கரசி பள்ளியில்   அழகியைத் தேர்ந்தெடுத்து, அழகி விருது வழங்குகிறார்கள். முதலில் ‘செல்வி மங்கை’ எனப் பட்டம் வழங்குவதாகத்தான் முடிவெடுத்தார்கள்….

இயற்கை எழில் !

வான்மிதந்து  சென்றடையும்  கதிரவனைத் தான்தழுவி  ஒளிஉமிழும்   தண்நிலவில் கண்நிறைந்த  காட்சிகாண  கடல்வெளியில் மண்மீது  படுத்தேன்என்  கண்முன்னே தொங்கிச்  சுழலும்இப்   பூமிப்பந்தில் தங்கிவாழும்  மக்கள்குலம்   தழைக்க பொங்கிவழியும்   அழகுடன்நம்  பூமித்தாய் இங்கிருக்கும்  மக்களுக்கே  படைத்தாள் குறிஞ்சிமுல்லை  குறையாத  மருதத்துடன்நாம் அறிந்த  நெய்தல்பாலை  எனப் படைத்தாளே ! ஐவகைநிலத்தை   அழகுடன்    பார்த்தேன் மூவகைத்   தமிழுடன்   முத்திரைபதித்து பாவகையுடன்  பைந்தமிழ்ப்  புலவர்கள் பாடக்கேட்டேன்  இயற்கை  எழில்பற்றி ! எங்கு   பார்க்கினும்   மக்களெல்லாம் பொங்கும்  மகிழ்ச்சியால்  பூரித்ததையும் வறுமையைப்  புறந்தள்ளி   வாழும் வளமையும்  கண்டேன்  நாட்டில் ! இயற்கை    அன்னை …

வந்தேறிக் குடிப்புகளின் கொடூரமும் தமிழர் குடிப்புகளின் நலத்தன்மையும்

– அசித்தர் படிப்போர் பயன் குறிப்பு ஓர் அயிரை – ஒரு கிராம் ஒரு குவளை – 250 அயிரை ஒரு சிறிய கரண்டி – 5 அயிரை ஒரு பெரிய கரண்டி – 15 அயிரை இந்நூலில் சக்கரை எனக் குறிப்பிடப்படுவது பனை வெல்லம் அல்லது பனஞ் சக்கரை – யையேயாகும். வெள்ளைச் சக்கரையை அல்ல. ( ) இவ்வகை பிறை அடைப்புக்குள் வரும் சொற்கள் பிறமொழிச் சொற்கள் ஆகும்.   எலும்பைக் கரைக்கும் குளிர் குடிப்புகள் கோடைக்காலததில் களைப்பைப் போக்க மட்டுமல்லாது…