அகல் விளக்கு – மு.வரதராசனார்: 61

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 60. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி நான் அங்கிருந்து திரும்ப இருந்த நேரத்தில், “அந்தக் காலத்தில் பெண் கேட்க வந்தபோது, அப்பா இவருக்குக் கடிதம் எழுதினார். பொய்யாகவாவது கெட்ட பிள்ளை என்று ஒரு வரி எழுதமாட்டாரா என்று கடவுளை வேண்டிக் கொண்டேன். அப்போது என் எதிர்காலத்தைப் பற்றி அண்ணனும் கவலைப்படவில்லை. இவரும் கவலைப்படவில்லை” என்றாள் கற்பகம் கண்களைத் துடைத்தபடியே. பழைய நிகழ்ச்சியை இவள் மறக்கமாட்டாள் போல் இருக்கிறதே என்று தலைகுனிந்துபடியே திரும்பினேன். தெருத் திண்ணை மேல்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 60

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 59. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 தொடர்ச்சி “வீட்டு வாயில் வரைக்கும் வந்து விட்டுவிட்டு, ஒரு வேளையும் சாப்பிடாமல், சொல்லாமல் போய்விட்டாராம். கற்பகத்தின் அண்ணி எவ்வளவோ சொல்லி வேண்டிப்பார்த்தாளாம். பின் தொடர்ந்து சென்று அழைத்தும் முயன்றாளாம். அவர் திரும்பி வராமலே போய்விட்டாராம். அப்போது கற்பகத்தின் அப்பா இல்லையாம். எங்கோ போயிருந்தாராம்.” “அண்ணன் சந்திரன்?” “அவர் வீட்டிலேயே சரியாகத் தங்குவதில்லையாம் மனம்போன படி வாழ்கிறாராம்.” “அய்யோ குடும்பமே! இந்த நிலைமைக்கா வரவேண்டும்? “இவள் என்ன செய்வாள்? நல்லவள்; சூது…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  35

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 34 தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் இயல் 13 தொடர்ச்சி அச்சகத்தில் வலது பக்கம் ஓர் உணவுவிடுதி, இரண்டுக்கும் நடுவில் ஒரு சிறு சந்து உண்டு. கொல்லைப்பக்கத்தில் உணவுவிடுதிக்கும் அச்சகத்துக்கும் பொதுவாக ஏழெட்டுத் தென்னை மரங்களோடு கூடிய ஒரு காலிமனை இருந்தது. உணவுவிடுதியின் கழிவு நீரும், அச்சகத்துக் கிழிசல் காகிதக் குப்பைகளுமாக அந்தப் பகுதி கால் வைத்து நடக்க முடியாத இடமாக இருக்கும். தினசரி காலையில் சந்து வழியாக வந்து குப்பை வாரிக்கொண்டு போகிற தோட்டியைத் தவிர அந்த…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 59

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 58. தொடர்ச்சி) “நீ ஒரு பைத்தியம்’டா. அவள் என்ன செய்வாள்? கையோடு அழைத்துக்கொண்டு வந்து விட்டு விட்டான். சொத்தோடு வந்தால் வா, இல்லாவிட்டால் வரவேண்டா என்று சொல்லி விட்டுவிட்டுப் போனால் அந்தப் பெண் என்ன செய்யமுடியும்?” “மறுபடியும் புறப்பட்டுக் கணவன் வீட்டுக்கே போகவேண்டும்?” “அவன் கழுத்தைப் பிடித்துத் தள்ளினால்? – அவன் அப்படிப்பட்ட முரடனாகத் தெரிகிறதே” என்னால் நம்பவே முடியவில்லை. “அப்படிச் சொல்லாதே அம்மா! தப்பு, தப்பு” என்றேன். “உன் கண்ணுக்கு எல்லாரும் நல்லவர்களாகத் தெரியும். கற்பகத்தின் திருமணத்துக்கு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  34

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 33 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அதிகாரம் 13 தொடர்ச்சி “கொஞ்சம் இரு அப்பா முருகானந்தம். தொல்காப்பியர் மேல் நம்முடைய அச்சுக் கோப்பாளருக்கு ஏதோ கோபம் போலிருக்கிறது. கடுஞ்சினத்தோடும் அந்தப் பேர் வருகிற இடங்களில் எல்லாம் தொல்காப்பியருடைய காலை முடமாக்கியிருக்கிறார். தெல்காப்பியர், தெல்கப்பியர் என்று கால் இல்லாமல் திணறும்படி தொல்காப்பியர் வேதனைப்படுத்தப்பட்டிருக்கிறார்.” சரி செய்து தொல்காப்பியர் கால் இல்லாமல் நின்று திண்டாடிக் கொண்டிருந்த இடங்களில் எல்லாம் கால் போட்டுத் திருத்தினான் அரவிந்தன். முருகானந்தத்துக்கு இதைக்கேட்டுச் சிரிப்புப் பொங்கியது. “காலி புரூஃபில்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 58

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 57. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 24 ஏதாவது ஒரு வேலை வேண்டும் வேண்டும் என்று மாலன் அடிக்கடி கடிதம் எழுதிக் கொண்டிருந்தான். நண்பராகிய நகர்மன்றத் தலைவரிடம் அவனுடைய நிலையை எடுத்துரைத்தேன். உள்ளூரிலே ஒன்றும் இல்லையே என்று அவர் வருந்தினார். அவருடைய பொதுத் தொண்டு காரணமாகச் சென்னையில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருந்த காரணத்தால் அங்காவது ஒரு வேலை தேடித் தருமாறு வேண்டிக் கொண்டேன். அவ்வாறே அவர் அடுத்த முறை சென்னைக்குச் சென்றபோது இதே கூட்டுறவுத் துறையில் நூறு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர்  33

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 32 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 13 பாளையாந் தன்மை செத்தும் பாலனாந் தன்மை செத்தும்காளையாந் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்மீளும் இவ்வியல்புமின்னே மேல்வரும் மூப்பும் ஆகிநாளும் நாம் சாகின்றோமால் நமக்கு நாம் அழாததென்னோ?      — குண்டலகேசி வாழ்க்கையின் பொருளடக்கம் போல் வகையாக வனப்பாக அமைந்த வீதி அது. மேலக் கோபுரத்திலிருந்து மதுரை நகரத்து இரயில் நிலையம் வரையிலுள்ள வீதிக்குப் பகலும் இல்லை இரவும் இல்லை. எப்போதும் ஒரு கலகலப்பு. எப்போதும் ஒரு பரபரப்பு. கையில்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 57

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 56. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 தொடர்ச்சி இருந்தாலும், புத்தகப் படிப்பில் அவளுக்கு, ஆர்வம் இல்லை. போகப் போக அதை நன்றாக உணர்ந்தேன். புத்தகப் படிப்பில் அக்கறை இல்லாவிட்டாலும், அறிவுப் பசி மட்டும் இருந்தது. செய்தித்தாள் படித்து ஏதாவது சொன்னால், ஆர்வத்தோடு கேட்பாள். வார இதழிலிருந்து ஏதாவது கதை படித்துச் சொன்னால் கேட்பாள். நாளடைவில் அவளே அந்த இதழ்களில் இருந்த கதைகளைப் படித்துப் பழகினாள். பழக்கம் விடவில்லை. வார இதழ்கள் எப்போது வரும் என்று காத்திருந்தாள். சிறு…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 32

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 31 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  12 தொடர்ச்சி “அவர் உளறவில்லை! உண்மையைத்தான் சொல்லுகிறார். அன்று உங்களைப் பார்த்ததும் பார்க்காததுபோல் வேண்டுமென்றேதான் நான் எழுந்து போனேன். சந்தர்ப்பம் அப்படி அமைந்துவிட்டது. அன்று உங்களை ஏமாற்றிய வேதனை இன்னும் என்னை முள்ளாகக் குத்திக் கொண்டிருக்கிறது. அந்த வேதனையினால்தான் இந்தக் காய்ச்சல் வந்தது. அதுதான் என்னைப் படுக்கையில் தள்ளியது.” பேச முடியாமல் தொண்டைக் கரகரத்துக் குரல் வந்தது பூரணிக்கு. கண்களில் நீர் பனிக்க அரவிந்தனின் முகத்தைப் பார்த்தாள் அவள். அவன் அமைதியாக இருந்தான்….

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 56

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 55. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 23 கோவைக்குச் சென்றதும் மாலனுடைய கடிதம் பார்த்தேன். வேலை எங்கும் கிடைக்கவில்லை என்பதைக் குறித்து வருந்தி எழுதியிருந்தான். நான் இருக்கும் கூட்டுறவுத் துறையிலேயே தனக்கும் வேலை தேடித் தருமாறு கோரி இருந்தான். ஒரு வேளை சோதிடர் சொன்னதைக்கேட்டே இந்த முடிவுக்கு வந்தானோ என எண்ணினேன். இயன்ற முயற்சி செய்து கேட்டும் பார்த்தேன். பி.ஏ. ஆனர்சு, எம்.ஏ. படித்தவர்கள் போட்டியிட்டுக்கொண்டு வருவதால் பி.ஏ.வில் ஒருமுறை தவறியவர்களுக்கோ, மூன்றாம் வகுப்பில் தேறியவர்களுக்கோ இடமே இருக்காது…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 31

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 30 தொடர்ச்சி) குறிஞ்சி மலர் 12 தொடர்ச்சி சில நாட்களாகவே அவன் போக்கு ஒரு மாதிரி விரும்பத்தகாத விதத்தில் மாறியிருந்தது. பள்ளிக்கூடத்திலிருந்து நேரங்கழித்து வீடு திரும்புதல், அந்தச் செலவு, இந்தச் செலவு என்று அடிக்கடி காசு கேட்டல், வீட்டில் தங்காமல் வெளியே சுற்றுதல் என்ற பழக்கங்கள் உண்டாயிருந்தன. பன்னிரண்டிலிருந்து பதினெட்டு வயது வரையுள்ள வயது ஆண்பிள்ளையின் வாழ்க்கையில் மிக முக்கியமானது. எண்ணெய் வழுக்குகிற கையில் கண்ணாடிக் குவளையை எடுத்துக் கொண்டு கல் தரையில் நடந்து போகிற மாதிரிப் பருவம்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 55

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 54. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 22 தொடர்ச்சி “நாம் வீடுகளுக்கு வலுவான கதவும் சன்னலும் வைத்து, உறுதியான தாழ்ப்பாளும் போட்டு இரவில் படுத்துக் கொள்கிறோம். வாசலுள் யாரும் இறங்கி வராதபடி வாசலிலும் கம்பிகள் போட்டுவிடுகிறோம். எல்லோரும் இப்படிச் செய்தால் திருடர்கள் எப்படிப் பிழைப்பார்கள்? அவர்களுடைய மனைவி மக்கள் என்ன ஆவார்கள்?” என்றார் பாக்கியம். இப்போது என் மனைவியும் சேர்ந்து ஒரே ஆரவாரமாகச் சிரித்தது கேட்டது. “பட்டுத் தொழிலும் வீட்டில் திருடுவதும் ஒன்றுதானா?” என்று சிரித்தபடியே மனைவி கேட்டாள்….