நூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்!
நூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்! பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு ஊரில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்று ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார். சிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு…
துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் இரத்தத்தான முகாம்
ஆவணி 06, 2050 / 23.08.2019 வெள்ளிக்கிழமை காலை 9.00 முதல் நண்பகல் 1.00 மணி வரை அசுகான் இல்லம் அருகில், துபாய் தேரா பகுதி இந்தியாவின் 73-ஆவது விடுதலைநாளையொட்டி துபாய் ஈமான் பண்பாட்டு மையத்தின் சார்பில் துபாய் இரத்தத்தான மையத்துடன் இணைந்து இரத்தத்தான முகாம் இந்த முகாமில் பங்கேற்க விரும்புபவர்கள் தங்களது அமீரக அடையாள அட்டையைக் கட்டாயம் கொண்டு வர வேண்டும். முகாமில் பங்கேற்பவர்கள் தங்களது வருகையை உறுதி செய்ய தேவிப்பட்டினம் நிசாம் : 050 3525 305 முதுவை இதாயத்து : 050…
மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ
தொரண்டோ பல்கலைக்கழகத் தமிழ் இருக்கை நிதிசேர் தொடர்பாக மாபெரும் தமிழறிவுப் போட்டி, தொரண்டோ Fundraising for University of Toronto Tamil Chair Grand Tamil Knowledge Competition தொரண்டோ பல்கலைக்கழகத்தில் அமையவிருக்கும் தமிழ் இருக்கைக்காக நிதி சேகரிக்கும் நோக்கிலும் மாணவர்களுக்குத் தமிழ், தமிழர் தொடர்பான அறிவை ஊட்டும் நோக்கோடும் மாணவர்களுக்கான மாபெரும் தமிழறிவுப் போட்டி நடைபெறவுள்ளது. நிலைகள் கீழ்ப்பிரிவு 12 வயது வரை 80 வினாக்கள் மேற்பிரிவு 18 வயது வரை 120 வினாக்கள் இப்போட்டிகளுக்கான வினாக்களும் விடைகளும் இணையத் தளத்தில் வழங்கப்பட்டுள்ளன….
இலக்கிய அமுதம் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’
ஆவணி 01, 2050 / 18.08.2019 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 இலக்கிய அமுதம் சித்திரா பாலசுப்பிரமணியன் : ‘அமரர் சக்தி வை.கோவிந்தன்’
அந்திப்பழமை – நூல் வெளியீடு, கோயம்புத்தூர்
ஆவணி 01, 2050 – 18.08.2019 பிற்பகல் 2.30-3.30 பழமைபேசியின் அந்திப்பழமை – நூல் வெளியீடு
நவீனத் தமிழ் விமரிசன இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும் (1950-2000)
ஆடி 32, 2050 சனி 17.08.2019 மாலை 6.00 சிரீராம்குழுமஅலுவலகம் மூகாம்பிகைவளாகம் ஆறாவது தளம், மயிலாப்பூர்,சென்னை 600 004 (சிபி.இராமசாமிதெருவில் உள்ள பாலம் கீழே) சிறப்புரை : பிரவீண் பஃறுளி உதவிப் பேராசிரியர், குருநானக்கு கல்லூரி புதிய தமிழ்த்திறனாய்வு இயக்கங்களும் கருத்தியல் போக்குகளும்(1950-2000)
முத்து நெடுமாறன் உரை: தமிழ் வரிவடிவத்தில் அழகியலும் அறிவியலும், சென்னை
ஆடி 29, 2050 புதன் 14.08.2019 மாலை 5.30 (உ)ரோசா முத்தையா ஆராய்ச்சி நூலகம் சொற்பொழிவாளர் : முத்து நெடுமாறன், கணிணியியலர் தேநீர் மாலை 5.00 மூன்றாவது குறுக்குச்சாலை மையத் தொழில் நுட்பப் பயிலக வளாகம் தரமணி, சென்னை 600 113
செல்வி நிலா தங்கவேலு – அரங்கேற்றம்
ஆடி 25,2050 சனி 10.08.2019 மாலை 5.00இராணி சீதை மண்டபம், அண்ணா மேம்பாலம் அருகில், சென்னை உரொண்டோ நடன ஆசிரியை திருமதி வசந்தா தானியல் அவர்களின் மாணவியும் திரு திருமதி மணிவண்ணன் – தேவி இருவரதும் அருமை மகளும் திரு திருமதி தங்கவேலு – சரோசினி அவர்களின் செல்லப் பேத்தியுமான செல்வி நிலா தங்கவேலுவின் நாட்டிய அரங்கேற்றம்
சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க! -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்
சி.எம் (எ) கேப்மாரி படக்குழுவினரைக் கைது செய்க! ‘சி.எம் (எ) கேப்மாரி’ என்னும் படத்தை உருவாக்கி வரும் படக்குழுவினரைக் கைது செய்ய வேண்டும். கேப்மாரி என்பது குற்றத் தொழிலில் – பெரும்பாலும் கொள்ளைத் தொழிலில் – ஈடுபடும் – தெலுங்கு, கன்னடம் பேசும் கூட்டத்தாரைக் குறிக்கும் சொல். அந்தப் பெயரில் படம் எடுத்தவர்கள் அதன் பெயரை இப்பொழுது ‘சி.எம் (எ) கேப்மாரி’ என மாற்றியுள்ளனர். சி.எம். என்பது கேப்மாரியின் சுருக்கெழுத்துகளாம். அப்படியானால் கே.எம். என்றுதான் குறிப்பிட வேண்டும். பெயர்க்காரணம் என்னவாக இருந்தாலும் சி.எம். என்பது…
குவிகம் இல்லம் – அளவளாவல்
ஆடி 26, 2050 / 11.08.2019 மாலை 5.00 ஏ6, மூன்றாம் தளம், வெண்பூங்கா அடுக்ககம்,24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர்,சென்னை 600 017 அளவளாவல்திரு ஆர்.வி.இராசன்இலக்கிய ஆர்வலர், விளம்பரத்துறை ஆர்வலர்
கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல்!
எதிர்வரும்ஆடி 25, 2050 / 10.08.2019 சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் பின்னிரவு வரை மிலிக்கென் பூங்காவில் (5555 Steels Ave.East) கனடா வாழ் ஏழாலை வடக்கு உறவுகளின் ஒன்றுகூடல் நடைபெறவுள்ளது. அனைத்து உறவுகளையும், சிற்றூர் நலன்விரும்பிகளையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைப்பு விடுக்கிறோம். தொடர்புகளுக்கு: 416-876-3349 ஏழாலை வடக்குக் கிராம அபிவிருத்தியகம்
சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்? -கருத்தரங்கம்
‘சிதைந்து போவதோ செம்மொழி ஆய்வு நிறுவனம்?’ என்ற தலைப்பில் திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் மகளிர் அணி நடத்தும் சிறப்பு கருத்தரங்கம் ஆடி 18, 2050 / 03.08.19 ஞாயிறு மாலை 6 மணிக்கு, சென்னை, இராயப்பேட்டை, ஒளவை சண்முகம் சாலை, இந்திய அலுவலர் சங்க அரங்கத்தில் நடைபெற உள்ளது. விழாவில் திமுக நாடாளுமன்றக் குழுத் துணைத்தலைவரும் மாநில மகளிர் அணிச் செயலாளருமான கனிமொழி நா.உ., தமிழச்சி தங்கபாண்டியன் நா.உ., சோதிமணி நா.உ., புதிய குரல் ஓவியா ஆகியோர் கருத்துரை வழங்க உள்ளனர்….
