கருத்தில் வாழும் கவிஞர்கள் : பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
ஆடி 11, 2049 வெள்ளிக்கிழமை 27.07.2018 மயிலாப்பூர் பாரதிய வித்யா பவனில் , இலக்கியவீதி அமைப்பும், சிரீ கிருட்டிணா இனிப்பகம் நிறுவனமும் இணைந்து நடத்தும் கருத்தில் வாழும் கவிஞர்கள் தொடர் நிகழ்வு முன்னிலை : இலக்கியவீதி இனியவன் தலைமை : திரு மெய் . உரூசுவெல்ட்டு (தலைவர் : மக்கள் கவிஞர் அறக்கட்டளை) அன்னம் விருது பெறுபவர்: கவிஞர் இரண்டாம் நக்கீரன் சிறப்புரை : மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்பற்றி கவிஞர் சீவபாரதி நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு : முனைவர் ப. சரவணன் தகுதியுரை : துரை இலட்சுமிபதி
அமரர் செம்பியன் செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி 2018
அமரர் செம்பியன் செல்வன் (ஆ.இராசகோபால்) நினைவுச் சிறுகதைப் போட்டி (புரவலர்: அமரர் செம்பியன் செல்வன் குடும்பத்தினர்) முதற் பரிசு: உரூ.5,000/- இரண்டாம் பரிசு: உரூ.3,000/- மூன்றாம் பரிசு: உரூ.2,000/- ஏனைய ஏழு சிறுகதைகளுக்குப் பரிசுச் சான்றிதழ்கள் வழங்கப் பெறும். போட்டிக்கான விதிகள்: சிறுகதைகள் முன்னர் எங்கும் வெளியிடப்படாதனவாக இருக்க வேண்டும். போட்டியிடுபவர்கள் தங்கள் பெயர், முகவரி விவரங்களைத் தனியாக இணைக்க வேண்டும். அஞ்சல் உறையின் இடப்பக்க மூலையில் ‘அமரன் செம்பியன்செல்வன் நினைவுச் சிறுகதைப் போட்டி’ எனக் குறிக்க வேண்டும். அனுப்ப வேண்டிய முகவரி:…
விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40
ஆடி 10, 2049 (வியாழக்கிழமை) 26.07.2018 மாலை 5.45 மணி கிளை நூலகம், 7, இராகவன் குடியிருப்பு 3ஆவது தெரு, சாபர்கான் பேட்டை, சென்னை விருட்சம் இலக்கியச் சந்திப்பு 40 தலைப்பு: கல்கி இதழில் வளர்ந்த எழுத்தாளர்கள் சிறப்புரை : ஆர். வெங்கடேசு (இதழாளர், கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், கட்டுரையாளர்) அன்புடன் நண்பர்கள் வட்டம் தொடர்புக்கு : அழகியசிங்கர் – தொலைபேசி எண் : 9444113205
யாப்பரங்கம் -2 பாவலர்களின் உயர்வு
யாப்பரங்கம் -2 : பாவலர்களின் உயர்வு ஆறடிஆசிரியப் பா நிலைமண்டில ஆசிரியப் பா இயற்றுங்கள். ‘வெல்லும் துாயதமிழ்’ வெளியிடும். ஓர் அடியில் நான்கு சீர்கள் இருப்பதுபோல் ஆறடிகளிலும் நான்கு நான்கு சீர்கள் அமைத்து இயற்றப்படுவது நிலைமண்டில ஆசிரியப் பா இயன்றவரை எதுகை மோனைகளை மிகுதியாகப் பயன்படுத்திப் பாடலைப்புனையுங்கள். பாடலின் இறுதிச்சீர் ஏ,என்,ஓ,க என்று முடிய வேண்டும். தலைப்பு – பசுமைச் சாலை ஆவணி 04, 2049 / 20.8.2018க்குள் கிடைக்குமாறு அனுப்புக. தொடர்பு எண் 97 91 62 99 79 மின்அஞ்சல் vtthamizh@gmail.com முகவரி…
குவிகம் இல்லம் – அளவளாவல் : திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன்
ஆடி 06, 2049 ஞாயிறு – சூலை 22, 2018 – மாலை 5.00 குவிகம் இல்லம் ஏ6, மூன்றாம் தளம். வெண்பூங்கா அடுக்ககம், 24, தணிகாசலம் சாலை, தியாகராயர்நகர், சென்னை 600 017 அளவளாவல்: திரு கு.அழகிரிசாமி புதல்வர்களுடன் சிறுகதைகள் – ஒரு காணொளி அனைவரையும் வரவேற்கும் சுந்தரராசன்: 9442525191 கிருபா நந்தன்: 8939604745 இல்லம் அடைய
மலேசிய ஆசிரியர்களுக்கான சிறுகதைப் போட்டி – யாழ் பதிப்பகம்
மலேசியக் கல்விப் பரப்பில் மாணவர்களுக்கான பல்வேறு பயிற்சி நூல்களைப் பதிப்பித்து வருவதோடு அரசாங்கத் தேர்வுகள் தொடர்பான பயிலரங்குகளையும் நடத்திவரும் ‘யாழ் பதிப்பகம்’ 2018 ஆண்டுக்கான சிறப்புத் திட்டமாக இந்நாட்டில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கான தமிழ்ச் சிறுகதைப் போட்டி ஒன்றை நடத்த உள்ளது. இப்போட்டியில் மலேசியத் தமிழ்/தேசிய/இடைநிலைப்பள்ளிகளில் தற்சமயம் பணிபுரியும் எல்லா ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். ஆசிரியர் பயிற்சிக் கழகங்களிலும் உயர்கல்விக் கூடங்களிலும் பயிலும் பயிற்சி ஆசிரியர்களும் கலந்து கொள்ளலாம். பணி ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் கலந்து கொள்ள முடியாது. அதேபோல இதுவரை தனித்த சிறுகதை தொகுப்பு…
சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா, சென்னை
ஆடி 10-13, 2049 வியாழன்-ஞாயிறு சூலை 26-29, 2018 சேக்கிழார் ஆராய்ச்சி மையம் திரு இராமச்சந்திரா மருத்துவம் – ஆராய்ச்சிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்தும் தெய்வச் சேக்கிழார் 26 ஆம் ஆண்டு விழா
தனித்தமிழ் இயக்கம் நடத்தும் தனித்தமிழ்ச் சிறுகதைப் போட்டி
பரிசு உரூ 1000.00 கதைகள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஆவணி 04, 2049 /20.8.2018 கதைகள் சேரவேண்டிய முகவரி: முனைவர் க.தமிழமல்லன், தலைவர் தனித்தமிழ் இயக்கம், 66,மாரியம்மன்கோவில் தெரு, தட்டாஞ்சாவடி,புதுச்சேரி–9 போட்டிக்கான நெறிமுறைகள்: நான்கு பக்கங்கள் அளவில் மிகாத குமுகாயக் கதைகளை 2 படிகள் மட்டும் அனுப்புக. 2.தாளின் ஒரு பக்கம் மட்டும் எழுதுதல் வேண்டும்.தாளின் பின்பக்கத்திலோ முன்பக்கத்திலோ பெயரோ முகவரியோ முத்திரையோ இருக்கக் கூடாது. 3.கதையின் மேல் தனித்தாளில் எழுதியவர் பெயரையும் கதையின் பெயரையும் இணைத்து அனுப்புக. 4.ஆங்கிலம்,வடமொழிமுதலிய பிறமொழிச்…
அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர்
ஆடி 05, 2049 சனி 21.07.2018 முற்பகல் 9.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை அனைத்துலக 16ஆவது சைவத்தமிழ் மாநாடு, தஞ்சாவூர் தமிழ்ப்பல்கலைக்கழக இலக்கியத்துறை மொரிசியசு மாணிக்கவாசகர் திருக்கூட்டம் திருவையாறு தமிழ் ஐயா கல்விக்கழகம்
வைத்தீசுவரனும் நானும் – தமிழ் மணவாளன்
வைத்தீசுவரனும் நானும் சிறப்புரை: முனைவர் கவிஞர் தமிழ் மணவாளன் ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 மாலை 6.00 சிரீராம் குழும அலுவலகம் மூகாம்பிகை வளாகம் (4 பெண்கள் தேசிகர் தெரு) ஆறாவது தளம் மயிலாப்பூர் சென்னை 600 004 (சி பி.இராமசாமி தெருவில் உள்ள பாலம் கீழே) அன்புடன் அழகியசிங்கர் 9444113205 விருட்சம் இலக்கியச் சந்திப்பு
நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கக் கோடைக்கால ஒன்றுகூடல், கனடா
கனடா, நடேசுவராக் கல்லூரி பழைய மாணவர் சங்கத்தின் இந்த வருட (2018) கோடைக்கால ஒன்று கூடல் எதிர்வரும் ஆடித்திங்கள் 12 ஆம் நாள்யூலை மாதம் 28 ஆம் தேதி சனிக்கிழமை மிலிக்கன் பூங்காவில் (5555 Steeles Ave. E) நடைபெறவுள்ளது. நிகழ்வு : முற்பகல் 10.00 மணி. தொடர்புகளுக்கு : பிரபா – 416-402-1372, இரகு – 647-299-7443. காங்கேசன்துறை நடேசுவராக் கல்லூரியின் பழைய மாணவர்கள், நலன்விரும்பிகள் அனைவரையும் தவறாது இவ் ஒன்றுகூடலில் கலந்து கொள்ளுமாறு பழைய மாணவர் சங்கம்…
புதிய சுதந்திரன்: இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா
ஆடி 05, 2049 சனி சூலை 21, 2018 முற்பகல் 10.00 சாவகச்சேரி, ஈழம் புதிய சுதந்திரன் இதழும் இணையத்தளப் பணிமனையும் திறப்பு விழா
