இலக்குவனார் நடுநிலைப்பள்ளியின் விளையாட்டு விழா

    தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் பிறந்த  ஊர் [இப்போதைய நாகப்பட்டினம் மாவட்டம்,  திருமரைக்காடு(வேதாரண்யம்) வட்டம்,] வாய்மைமேடு என்னும் ஊராகும்.  இங்குள்ள இலக்குவனார் நடுநிலைப்பள்ளியில் பங்குனி 17, 2045 / 31.03.14 அன்று விளையாட்டு விழா நடந்தது. விழா தொடர்பான  ஒளிப்படக்காட்சிகள் :       நன்றி : – வாய்மைமேடு மணிமொழி முகநூல் பக்கம்

கணினித்தமிழ் வளர்ச்சி – இரண்டாம் மாநாடு

கணினித்தமிழ் வளர்ச்சிப் பேரவையும் மாநிலக் கல்லூரியின் தமிழ்த்துறையும் இணைந்து  நடத்திய மாநாடு 2014 மார்ச்சு 30 ஞாயிறு காலை 10.30 மணி முதல் மாலை 6 மணிவரை சென்னை மாநிலக் கல்லூரியின் புதிய தேர்வரங்க அறையில் நடைபெற்றது. தொடக்கவிழாவில்,பேராசிரியர் ந. தெய்வ சுந்தரம் வரவேற்புரை நிகழ்த்தி, . மாநாட்டின் மையக் கருத்தை விளக்கினார். தமிழ்நாடு அரசு தமிழ்வளர்ச்சி-செய்தித்துறைச் செயலர் முனைவர் மூ. இராசாராம்  இ.ஆ.ப., அவர்கள் தலைமை தாங்கி கணினித்தமிழ் வளர்ச்சிக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித்துறை மேற்கொண்டுவருகிற பல்வேறு பணிகளை விளக்கிக் கூறினார்….

தமிழ்க்கணினி : பன்னாட்டுக் கருத்தரங்கம்

    திருச்சிராப்பள்ளியில், பாரதிதாசன் பல்கலைக்கழக கலை-அறிவியல் கல்லூரியில்(நவலூர் குட்டப்பட்டு) தமிழ்த்துறையின் சார்பாக தமிழ்க்கணினி இணையப் பயன்பாடுகள் என்ற பொருண்மையில் பன்னாட்டுக் கருத்தரங்கம்  இருநாள் நடைபெற்றது. முதல் நாளான 27-03-2014 அன்று காலையில் தொடக்க விழா நடைபெற்றது. கல்லூரி முதல்வர்(பொ.) முனைவர் உண்ணாமலை வரவேற்புரையாற்றினார். பாரதிதாசன்  பல்கலைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினர் முனைவர் சுப்பையா தலைமை தாங்கினார்.  பாரதிதாசன் பல்கலைககழகப் பதிவாளர் முனைவர் இராம்கணேசு முன்னிலையுரையாற்றினார். பல்கலைக்கழகத் தமிழ்த்துறைத் தலைவர் முனைவர் பா.மதிவாணன் மையப்பொருளுரையாற்றினார்.  தமிழ்நாடு  தேசியச் சட்டப்பள்ளி துணைவேந்தர் முனைவர் ந.முருகவேல் வாழ்த்துரை வழங்கினார். …

குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம்

  குவைத்து வளைகுடா வானம்பாடிகளின் திங்கள் கூட்டம் 14-03-2014 வெள்ளி அன்று மிகச் சிறப்பாக, தோழர் செங்கொடி அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சியை வானம்பாடி நிறுவனர் திரு சேது அவர்கள் தொடங்கி வைக்க, தமிழ்த்தாய் வாழ்த்துடன்  தொடங்கியது. செல்வி அனு,  திருக்குறள்களைத் தன் மழலை மொழியால் வழங்க, நிகழ்ச்சி இனிதே  களைகட்டியது. நிகழ்ச்சிக்கு ”அரவணைப்பு” திரு இளங்கோவன், தொழிலதிபர் திரு சாமி, வானம்பாடிகள் உதவித் தலைவர் திரு அலெக்சு ஆகியோர் தலைமை வகித்தனர்.   நிகழ்ச்சியில் மண்ணிசைப் பாடல்களை, திரு பாண்டி, செந்தில்,இராமகிருட்டினன் ஆகியோரும் மெல்லிசைப்…

செய்திக்குறிப்புகள் சில பங்குனி 2,2045, மார்.16, 2014

புதுதில்லி : வீரப்பன் கூட்டாளிகள்  முதலான 15 பேரின் தூக்குத் தண்டனை, ஆயுள்தண்டனையாகக் குறைக்கப்பட்டதை எதிர்த்து, மத்திய அரசு  அளித்த மறு சீராய்வுமுறையீட்டை, உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இராசீவு வழக்கில் பொய்யாகச் சேர்க்கப்பட்டுப் பழிவாங்கப்படுவோரின் விடுதலையை நிறுத்துவதற்காக மத்திய அரசு போட்ட நாடகம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. இனப்படுகோலைப் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் நிலை மோசமாக உள்ளது என்றும் தமிழர்களின்  உரிமைப் போரைச் சிங்களவர்களுடன்  போராட்டங்களுடன் ஒப்பிட முடியாது என்றும் மனித உரிமைச் செயற்பாட்டாளரான நிமல்கா பெர்னாண்டோ,  ‘தமிழ் இந்து’ நாளிதழ்ச் செவ்வியில்…

மறைமலை இலக்குவனார் : அமெரிக்காவில் தமிழ்க்கல்வி ஆய்வரங்கம்

  பேராசிரியர் ஆண்டர்சன் தம் வகுப்பில் முனைவர் மறைமலை இலக்குவனாரை அறிமுகம் செய்தல்

ஔவை உரைவேந்தரானது எப்பொழுது?

    செஞ்சொல் வீரர் ஔவை சு.துரைசாமி  அவர்களை உரைவேந்தர் எனக் குறிப்பிடுகின்றோம். இவரது உரைத்திறன்சிறப்பை அறிந்து எப்பொழுது யாரால், எவ்வமைப்பால் உரைவேந்தர் பட்டம் வழங்கப் பெற்றது என்பதை அறிவீர்களா?   உரைவேந்தரைச் செம்மொழிச்சுடர் பேராசிரியர் சி.இலக்குவனார் பாராட்டி மகிழும் பின் வரும் குறள்நெறிச் செய்தியைப் படியுங்கள். புரியும். உரைவேந்தர் பேராசிரியர் ஔவை சு.துரைசாமிப்பிள்ளையவர்களின் அறுபதாம் ஆண்டு நிறைவு விழாவை மதுரைத் திருவள்ளுவர் கழகம் தைத்திங்கள் மூன்றாம் நாள் (16-01-64) சிறப்பாகக் கொண்டாடியது. ஆட்சி மொழிக் காவலர் கி.இராமலிங்கனார் தலைமையில் தமிழவேள் பொ.தி. இராசர்…

காரைக்குடியில் வண்ணக் கோலப்போட்டி- சொ. வினைதீர்த்தான்

அண்மையில் அழகப்பா பல்கலைக் கழகத்தின் நுண்கலை- பண்பாட்டு மையத்தின் சார்பில் அதன் கல்லூரிகளின் மாணவ மாணவிரிடையே  நாட்டுப்புறப்பாடல்கள், தனிப்பாடல்கள், கோலப்போட்டி முதலானவை   போட்டிக்கான ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்தன. உள்ளத்தைக் கொள்ளைகொண்டன. பல கோல ஓவியங்களில் எழுதியிருந்ததைக்கொண்டு போட்டிக்கான தலைப்பு “எண்ணங்களின் வண்ணங்கள்’ என அறிந்தேன். கண்டு களித்த வண்ணக் கோலங்கள் சில : – சொ. வினைதீர்த்தான் [கோல மாவில் ஓவியங்கள் வரைவதே வண்ணக் கோலம் என்றாகிவிட்டது. அவ்வாறில்லாமல், புள்ளிகள் மூலம் ஓவியங்கள் அமையும் வண்ணக்கோலம் பெருக வேண்டும். தமிழக நாகரிக, பண்பாட்டு, வரலாற்று…

இலக்குவனார் விழா

  திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில் இலக்குவனார் முப்பெருவிழாவினைச் சிறப்பாக நடத்தின.   மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  3 நாளும் தமிழ்ப் போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கம், நூல்கள் வெளியீட்டு விழா, இலக்கியப் போட்டிகள் என மூன்று நாளும் முப்பெரு விழாக்கள் நடைபெற்றன.   ம.தி.தா.இந்துக்கல்லூரி ஆண்டு நூற்றைம்பது கண்ட  தொன்மை வளம் சான்ற கல்லூரி….