புதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்க நிகழ்ச்சிப் படங்கள்

புதுமை இலக்கியத் தென்றல், சென்னை பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம் ஆவணி 16, 2050  திங்கள் கிழமை 02.09.2019 மாலை  5.45மணி   பெரியார்  திடல், சென்னை 600007 தொடக்கவுரை: கவிஞர் தஞ்சை கூத்தரசன்               தி.மு.க. மாநில இலக்கிய அணிப் புரவலர் நினைவுரை: அரிமா முனைவர்  த.கு.திவாகரன்

சிங்கப்பூரில் பெரியார் விழா 2019, தமிழ்மொழிப் போட்டிகள்

சிங்கப்பூரில்  பெரியார் விழா 2019,  தமிழ்மொழிப் போட்டிகள் சிங்கப்பூர், ஆக.29  சிங்கப்பூர் பள்ளி மாணவர்களி டையே தமிழ்மொழி மீதான ஆர்வத்தை மேம்படுத்தும் வகையில் பெரியார் சமூகச் சேவை மன்றத்தின் பெரியார் விழா 2019 தமிழ்மொழிப் போட்டிகள் ஆவணி 07, 2050 /ஆகத்து மாதம் 24ஆம் நாள் உமறுப்புலவர் தமிழ்மொழி நிலையத்தில் நடைபெற்றது. இதில் சிங்கப்பூரில் உள்ள பல்வேறு பள்ளிகளிலிருந்து எண்பதுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். போட்டி மூன்று பிரிவுகளாக நடத்தப்பட்டது. தொடக்கநிலை (2,3) மாணவர்களுக்குப் பாடல் போட்டியும், தொடக்கநிலை (4,5) மாணவர்களுக்கு ஓவியப் போட்டியும்,…

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குச் சிறப்புப் பரிசு

கவிஞர் மு.முருகேசின் சிறுவர் கதை நூலுக்குக் கம்பம் பாரதி இலக்கியப் பேரவையின் சிறப்புப் பரிசு கம்பம். ஆக.19. கவிஞர் மு.முருகேசு எழுதிய ‘தவிட்டுக் குருவியும் தங்கராசு மாமாவும்’ சிறுவர் கதை நூலுக்கு, கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த சிறுவர் இலக்கிய நூலுக்கான சிறப்புப் பரிசினை வழங்கியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளாகத் தேனி மாவட்டம் கம்பத்தில் செயல்பட்டு வரும் கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை, 14 ஆண்டுகளாகத் தமிழில் வெளியாகும் சிறந்த நூல்களுக்குப் பரிசுகளை வழங்கிப் பாராட்டி வருகிறது. 2018-ஆம் ஆண்டு…

தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றத் தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கப் பெற்றன. செங்கற்பட்டு, ஆக. 17- தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் காஞ்சிபுரம் – செங்கற்பட்டு மாவட்டங்கள் வழங்கும் தமிழ்சான்றோர்களுக்கான தமிழாற்றுப்படை விருதுகள் வழங்கும் விழா ஆடி 30, 2019 / 15.8.2019 அன்று காலை 11 மணிக்குச் செங்கற்பட்டில் புத்தக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இந்திய – இரசிய பண்பாட்டு நட்புறவுக் கழகத்தின் பொதுச் செயலாளர் ப.தங்கப்பன்  27 விருதாளர்களுக்கு விருது வழங்கினார். ஓவியக்கவி நா.வீரமணி  தலைமையில் விருது பெற்றவர்கள்: குரு.சம்பந்தம் – தொல்காப்பியர்…

நூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்!

நூற்று ஐந்து அகவை கடந்த ப.அ.வைத்தியலிங்கம் இயற்கை எய்தினார்! பட்டுக்கோட்டை செங்கப்படுத்தான்காடு ஊரில் பிறந்த பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் நண்பரும் பேராவூரணி அருகே அழகியநாயகிபுரம் ஊரில் வசித்து வரும் திராவிடர் விடுதலைக் கழகத்தின் பொறுப்பாளருமான நூற்று ஐந்து வயது கடந்த பெரியவர் வைத்தியலிங்கம் அவர்கள் அவரது இல்லத்தில் இயற்கை எய்தினார்.  சிறுவயது முதலே பெரியார் கொள்கைகளில் ஈர்க்கப்பட்ட இவர் கடைசிவரை பெரியார் கொள்கைகளில் முழு ஈடுபாடும் சமூகத் தொண்டும் செய்து வாழ்ந்து வந்தார். மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் அவர்களின் குடும்பத்தோடு மிகுந்த நட்போடு…

நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா

நன்னன் குடியின் வெளியீட்டு விழாவும் பரிசளிப்பு விழாவும் நன்னன்குடி நடத்திய நூல் வெளியீட்டு விழா சென்னை தி.என்.இராசரத்தினம் கலையரங்கில் ஆடி 14, 2050 / 30.7.2019 அன்று மாலைநடைபெற்றது. தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக தலைவர் தளபதி மு.க.தாலின் ஆகியோர் பங்கேற்று நூல்களை வெளியிட்டுச் சிறப்பித்தனர் இவ்விழாவிற்கு வந்தவர்களை திருமதி வேண்மாள் கோவிந்தன் வரவேற்றார். மூத்த தமிழறிஞர் புலவர் மா.நன்னனின் ‘அகமும் புறமும்’ என்ற நூல் குறித்து வழக்குரைஞர் த.இராமலிங்கமும், ‘இவர் தாம் பெரியார்’ (வரலாறு -திராவிடர் கழ கத்தின் திருப்புமுனைத் தீர்மானங்கள்…

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு

புத்தக வாசிப்பினால் வாழ்வில் உயரங்களை அடைய முடியும் – கவிஞர் மு.முருகேசு வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர் வட்டத்தின்சார்பில் நடைபெற்ற ’வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் விழிப்புணர்வுப் பேரணி ஆனி 30 / சூலை 15 அன்று வந்தவாசியில் நடைபெற்றது. தமிழக அரசின் பொது நூலகத்துறையும் எம்.எசு.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையமும் இணைந்து தேசிய அளவில் ‘வாசிப்பு இயக்கம் – 2022’ எனும் இயக்கத்தைத் தொடங்கியுள்ளன. அந்த இயக்கத்தின் செயல்பாட்டை விளக்கும் வாசிப்பு விழிப்புணர்வுபேரணி வந்தவாசி அரசுக் கிளை நூலகத்தின் நூலக வாசகர்…

கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்!

கவியோகி பேகன் கவிபாட விண்ணுலகு சென்றார்! இ.ஆ.ப. அலுவலராகச் சிறப்பாகப் பணியாற்றிய இயற்பெயர் பி.பாண்டியன் எனக் கொண்ட கவிஞர் முனைவர் பேகன் இன்று   ( ஆனி 11, 2050 / 26.06.2019)  காலை செய்தி கேட்டுக்கொண்டிருக்கும் பொழுது வியர்த்துக் கொட்டுவதாகக் கூறிப் பின்னர்  உயிரிழந்தார். இவரது மக்கள் வெளிநாட்டில் உள்ளதால் அவர்கள் வருகைக்காக இரு நாள் பின்னரே இறுதிச்சடங்கு நடைபெறும் என அவரின் உறவினர், மேனாள் மொழிபெயர்ப்புத் துணை இயக்குநர், முனைவர் கு.பாலசுப்பிரமணியம் தெரிவித்தார்.  சிறந்த கவிஞராகவும் மொழி பெயர்ப்பாளராகவும் திகழ்ந்து பல நூல்களைத் தமிழிலும்…

மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை சிலை அமைப்பதை எதிர்த்துப் போராட்டம்! பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது!

மதுரையில் வேத பிராமணிய முறையில் தமிழன்னை  சிலை அமைப்பதை  எதிர்த்துப் போராட்டம்!  பெ. மணியரசன் முதலான 200 பேர் கைது! போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! மதுரையில் தமிழ்ச் சங்க வளாகத்தில் வேதகாலப் பிராமணிய முறைப்படித் தமிழன்னை சிலை அமைக்கப்படும் எனத் தமிழ்நாடு அரசு அறிவித்ததை எதிர்த்து இன்று(ஆனி 02, 2050 / 17.06.2019) காலை நடைபெற்ற போராட்டத்தில் 200க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் தலைமையில் ‘தமிழர் மரபுக்கு எதிரான தமிழன்னை சிலைஎதிர்ப்புக் கூட்டமைப்பு’ சார்பில் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி இன்று காலை பேரணியாக இப்போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் “தமிழக அரசே தமிழக அரசே!, நீக்கு! நீக்கு!வேதகாலப்பிராமண முறைப்படித் தமிழன்னை சிலைஅமைப்பதை…

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?]

கருத்துக் கதிர்கள் 12- 13: இலக்குவனார் திருவள்ளுவன் [12. திருமாவளவன் விளக்கம் சரிதானே! 13. தமிழிசையின் குடும்பத்திற்கு வெளியே நடப்பது எப்படிக் குடும்ப அரசியலாகும்?] திருமாவளவன் விளக்கம் சரிதானே! தீவிரவாதத்திற்கும் பயங்கர வாதத்திற்குமான விளக்கத்தை முனைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளதற்காக அவர் மீது வழக்கு தொடுத்துள்ளதாகச் செய்தி வந்துள்ளது. நான் அரசிலறிவியலைத் துணைப்பாடமாக எடுத்துப் படித்துள்ளேன்.அப்பொழுதிருந்தே தீவிரவாதியையும் பயங்கரவாதிகயையும் ஒன்றுபோல் கூறும் பழக்கம் தவறு என்ற கருத்து உடையவன். சில இடங்களில் இது குறித்துப் பேசியும் எழுதியும் உள்ளேன். இப்பொழுது வி.சி.க.தலைவர் இந்த விளக்கத்தைக் கூறுவது…

முனைவர் இரா.மோகன் பிரியா விடை பெற்றார்!

முனைவர் இரா.மோகன்பிரியா விடை பெற்றார்! எழுத்தாளர், சொற்பொழிவாளர், பட்டிமன்றப் பேச்சாளர், கவிஞர், தமிழ்த் தேனீ பேராசிரியர் முனைவர் இரா.மோகன் இன்று(வைகாசி 29,2050 / 12.06.2019)  காலை மாரடைப்பால் மரணமுற்றார். நேற்று நெஞ்சகநோய்ப் பாதிப்பால் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டவர் இன்று திரும்பவில்லை.  ஆய்வு மாணாக்கர்களுக்கு வழிகாட்டியாகவும் நூல்களுக்கு அணிந்துரை, திறனாய்வு, மதிப்புரை வழங்கிப் படைப்பாளர்களை ஊக்கப்படுத்துபவராகவும் நகைச்சுவை மன்றத்தில் பங்கேற்று நகைச்சுவை வாணர்களின் ஊக்குநராகவும் புன்னகையுடனும் பண்புடனும் அனைவருடனும் பழகும் தோழராகவும் சிறந்து விளங்கிய முனைவர் இரா.மோகன் தமிலுகில் இருந்து பிரியா விடை பெற்றார். செளராட்டிரக்…