நாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்? – இலக்குவனார் திருவள்ளுவன்: மின்னம்பலம்

நாலடி இன்பம் 3 : தேர்தல் நேரத்துப் பெருஞ்செல்வம்? துகள்தீர் பெருஞ்செல்வம் தோன்றியக்கால் தொட்டுப்  பகடு நடந்தகூழ் பல்லாரோ டுண்க ; அகடுற யார்மாட்டும் நில்லாது செல்வம் சகடக்கால் போல வரும். பொருள்: குற்றமில்லாப் பெருஞ்செல்வம் பெற்றால் ஏர் ஓட்டி பெற்ற உணவைப் பலருடனும் பகுத்துண்க. ஏனெனில் செல்வம் வண்டிச்சக்கரம் போல் மேல் கீழாகமாறி மாறி உருளும். சொல் விளக்கம்: துகள் தீர்=குற்றமற்ற; பெரும்=பேரளவு சொத்து; தோன்றியக்கால்=தோன்றினால் (அஃதாவது தோன்றாமலும் இருக்கலாம்); தொட்டு=அது முதல்;பகடு = எருது; நடந்த=உழுத; கூழ்= உணவை, பல்லாரோடு= பற்பலருடன்;…

நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே!- இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்-2 வெறுமனே வைத்திருக்காதே! அறுசுவை யுண்டி அமர்ந்தில்லாள் ஊட்ட மறுசிகை நீக்கியுண் டாரும் – வறிஞராய்ச் சென்றிரப்பர் ஓரிடத்துக் கூழ்எனின், செல்வம்ஒன் றுண்டாக வைக்கற்பாற் றன்று. பொருள்: அறுசுவை உணவை மனைவி அன்புடன் உண்பிக்க, ஒவ்வொரு வகை உணவிலும் மீண்டும் கைப்பிடி அளவேனும் உணவு வேண்டா என்னும் அளவில்சுவையாக நிறைவாக உண்ணும் செல்வரும் வறுமையுற்று ஒரு காலத்தில் இரந்து உண்ண நேரும். எனவே, செல்வத்தை நிலையானதாகக் கருதற்க. சொல் விளக்கம்: அறு சுவை=அறுவகை சுவையாகிய; உண்டி=உணவை; அமர்ந்து=விரும்பி; இல்லாள்=மனைவி; ஊட்ட=ஊட்டிவிட; மறு=மறுக்கப்பட்ட;சிகை=வன்மையான உணவு…

நாலடி இன்பம்- 1 வானவில் அறிவியல்!, -இலக்குவனார் திருவள்ளுவன், மின்னம்பலம்

நாலடி இன்பம்– 1 வானவில் அறிவியல்! சங்கஇலக்கிய நூல்களிலும் அதற்குப் பிற்பட்ட பதினெண் கீழ்க்கணக்கு எனப் பெறும் நீதி நூல்களிலும் நூலாசிரியர்களால் கடவுள் வாழ்த்து பாடப் பெறவில்லை. அவற்றுக்குப் பின்னர்த் தோன்றிய புலவர்கள்தாம் கடவுள்வாழ்த்துப் பாடல்களைப் பாடிச் சேர்த்துள்ளனர். ‘அபியுத்தர்’ அல்லது பதுமனார் இக்கடவுள் வாழ்த்துச் செய்யுளை இயற்றிச் சேர்த்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. வான் இடு வில்லின் வரவு அறியா வாய்மையால், கால் நிலம் தோயாக் கடவுளை யாம் நிலம் சென்னி உற வணங்கிச் சேர்தும்- ‘எம்உள்ளத்து முன்னியவை முடிக!’ என்று. பொருள்: வான்முகிலால் தோன்றும்…

புறநானூறு சொல்லும் வரி நெறி! -இலக்குவனார் திருவள்ளுவன்

புறநானூறு சொல்லும் வரி நெறி! மத்திய நிதியமைச்சர் நிருமலா சீதாராமன், சூலை 5 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் முன் வைத்த 2019-20 நிதிநிலை அறிக்கையில் புறநானூற்றுப் பாடலில் இருந்து மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் சங்கத்தமிழின் சிறப்பையும் பண்டைத் தமிழரின் வரி விதிப்புக் கொள்கையையும் உலகம் அறியச் செய்துள்ளார். எனவே, அவருக்கு நம் பாராட்டுகள். அவரால் மேற்கோளாகக் கூறப்பட்ட பாடலை நாமும் அறிவோமா? புலவர் பிசிராந்தையார் காணாமலேயே கோப்பெருஞ்சோழனுடன் நட்பு கொண்டவர்; அவர் வடக்கிருந்து உயிர் துறந்த பொழுது தாமும் உண்ணாமல் உயிர்…

சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 3/3: முனைவர் இரா.வேல்முருகன், சிங்கப்பூர்

(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 2/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 3/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில்  மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில்…

சாகித்திய அகாதெமியின் இலக்கிய அரங்கம், குன்றத்தூர்

சித்திரை 20, 2050 வெள்ளி 03.05.2019 காலை 10.30 அன்னை பூரணம் கல்வி வளாகம், குன்றத்தூர் சாகித்திய அகாதெமி முனைவர் கோ.ஆலந்தூர் மோகனரங்கன் தமிழியல் ஆய்வு மையம் இணைந்து நடத்தும் இலக்கிய அரங்கம் வாழ்வும் இலக்கியமும் தலைமை: வைகைச் செல்வி வாழ்த்துரை:  மோ.பாட்டழகன் பங்கேற்போர்: வே.சிரீஇலதா – சங்க இலக்கியத்தில் பெண்களின் நிலை செ.முத்துச்செல்வன் – இடைக்கால இலக்கியத்தில் பெண்களின் நிலை பா.சம்பத்குமார் – சமக்கால இல்ககியத்தில் பெண்களின் நிலை

சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 2/3 முனைவர் இரா.வேல்முருகன்

(சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 1/3 இன் தொடர்ச்சி) சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 2/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது.  திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில்  மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள் குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற…

சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – ஓர் ஆய்வு 1/3: முனைவர் இரா.வேல்முருகன்

சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் –  ஓர் ஆய்வு 1/3 [அண்மையில் மறைந்த பேராசிரியர் முனைவர் இரா.வேல்முருகன் அவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்பெறுகிறது. திருநெல்வேலி மதுரை  திரவியம் தாயுமானவர் இந்துக்கல்லூரி, வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், இலக்குவனார் இலக்கிய இணையம்  இணைந்து திருநெல்வேலி ம.தி.தா. இந்துக்கல்லூரியில்  மாசி 12,13,14 தி.பி 2045 (பிப் 24,25,26.2014) ஆகிய  நாள்களில் நடத்திய இலக்குவனார் முப்பெருவிழாவில், ‘முனைவர் சி.இலக்குவனார் தமிழ்ப்  பணிகள்’ குறித்த பன்னாட்டுக் கருத்தரங்கத்தில் அளிக்கப் பெற்ற கட்டுரை. 3 பிரிவாகப் பகுக்கப்பெற்று வெளியிடப் பெறுகிறது.]        …

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 அ. அரவரசன்

[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 3/3 பட்டினப் பாலை எனும் பைந்தமிழ் பனுவலில் காவிரி சிறப்பு பற்றிய பாடிய புலவன் தான் பாடிய பாடலின், ‘‘வசைஇல் புகழ் வயங்கு வெண்மீன். . . . . . . . கொழிக்கும்” என்ற வரிகளில் தற்பாடிய தளி உணவின் புள் என்ற சொல் வானம்பாடியை குறிப்பிட்டுச் சொல்லும் அமுதவரிகள் அஃதாவது கார்முகில்கள் திரண்டு வரும் போது அந்த முகில்கள் முதலில் தள்ளிவிடும் மழைத்தூறல்…

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3: அ. அரவரசன்

[சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை:1/3 தொடர்ச்சி] சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 2/3 மேலும் கலித்தொகை தரும் பாடல் வரிகள் பொதிந்துள்ள பல நூறு பாடல்களின் ஒரு பாடலில் ‘அரக்கு’பற்றிய செய்தி உள்ளது. அரக்கு பற்றிய செய்தியில் மகாபாரதம் தோன்றிய காலத்தில் அரக்குமாளிகை இருந்ததாக வரும் தகவலின் தொன்மை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே இந்திய மண்ணில் உலவி வருகின்றது. எனினும் மனித வாழ்வுக்கு நற்பயன் தரும் பூச்சிகளில் (தேனீ, பட்டுப்பூச்சி போன்றவை) அரக்குப் பூச்சியும் ஒன்று. 1787 இல் சான்கேர் என்ற…

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 அ. அரவரசன்

சங்கத்தமிழில் வனவியல் – ஒரு பார்வை: 1/3 மாந்த இனத்தின் வாழ்வியல் கூறுகளில் வனவியல் எவ்வாறு ஒன்றியும் இணைந்தும் ஊடுருவியும் உள்ளது என்பதை சங்கத் தமிழ் இலக்கியம் எவ்வகையில் எடுத்துரைக்கின்றது என்பதை பேராழியின் துளி நீரைச் சுவைத்துப் பார்க்கும் நோக்கில் நவில்வதே இக்கட்டுரை. மனித இனம் முதலில் தோன்றிய பகுதி கடல்கொண்ட தமிழகத்தின் தென்பகுதி என்றும் அதன் பெயர் ‘இலெமூரியா’ என்றும் அதன் வரலாற்றை நுணுகி ஆராய்ந்து வரையறுத்த வரலாற்று ஆய்வறிஞர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் லெமூரியா என்பது ‘இலெமூர்’ என்ற குரங்கின் பெயர்தான்…

அகநானூற்றில்  ஊர்கள் :7/7 – தி. இராதா

(அகநானூற்றில் ஊர்கள் 6/7 இன் தொடர்ச்சி   அகநானூற்றில்  ஊர்கள் -7/7   வல்லம்     மழைபோல் செரியும் அம்பனையும், மேகம் போன்ற தோற்கிடுகினையும் உடைய சோழரது அரண் கொண்டது வல்லம் எனும் ஊராகும்.                 “……………..சோழர்                 வில்ஈண்டு குறும்பின் வல்லத்துப் புரமிளை” (அகநானூறு 336)                 “நெடுங்கதி நெல்லின் வல்லம்”                                      (அகநானூறு  356) நெல்வளம் மிக்க ஊர் வல்லம் என்பதை மேற்கண்ட அடிகள் விளக்குகின்றன. வாகை       வாகை மரம் நிற்றலால் வாகைப் பெருந்துறை எனப்பட்டது. வாகைப்போர்…