இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு தொடர்ச்சி ஆங்கிலேயர்களின் முன்னோர்களான ஆங்கில சாக்சானியர்கள் உரூனிக்கு (Runic) என்று அழைக்கப்பட்ட ஒரு எழுத்து முறையைக் கொண்டிருந்தனர். இவ்வெழுத்துகளுக்கு மந்திர ஆற்றல் உண்டு என்று கருதித் தம் போர்க் கருவிமீதும் பிற கருவிகள் மீதும் இவ்வெழுத்துகளைப் பொறித்து வந்தனர். சிகாந்தினேவியர்களும் (Scandinavians) இவ்வெழுத்து முறையையே கொண்டிருந்தனர். ஆங்கில சாக்குசானியர்களும் சிகாந்தினேவியர்களும் கிருத்துவ சமயத்தைத் தழுவிய ஞான்று உரூனிக்கு முறையைக் கைவிட்டு உரோமானிய முறையைக் கொண்டனர். தமிழர்கள் எழுத்துமுறையை என்று அமைத்துக் கொண்டனர்…
இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் – தேமொழி
இலக்கியத்தில் நகைச்சுவையும் பழிப்புரையும் வெளிப்படையாகவோ குறிப்பாகவோ, தனிமனிதர் ஒருவர் அல்லது சமூகத்தின் குறையை, அவர்கள் உணருமாறு அவர்களுக்கு உறுத்தவேண்டும் என்று வசையாகவும், அதே நேரம் நயத்துடனும் நகைச்சுவையுடனும் சொல்வது அங்கதம் எனப்படும். அதாவது, ஒருவரது கீழ்மை குணத்தை நகைச்சுவை தோன்ற நயமாகப் பழித்துரைப்பதுதான் அங்கதம். இந்த இலக்கிய முறையை ஆங்கிலத்தில் ‘சட்டயர்’ (Satire) என்பர். நடுவுநிலைமை, நகைச்சுவை உணர்வு, சமுதாய அக்கறை என்பனவற்றை நோக்கமாகக் கொண்டு நகைப்பு, இகழ்ச்சி, நன்னோக்கம் ஆகிய மூன்றும் இயைந்து வரும் சிறப்பு கொண்டது அங்கதம். தாக்குதலும் நகையும் இணைந்தே…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு தொடர்ச்சி “அம்மா” என்று, மக்களுடன் நெருங்கிப் பழகும் விலங்குகளாம் பசுவும் எருமையும் ஆடும் கூப்பிடக் காண்கின்றோம். தமிழில்தான் அம்மா எனும் சொல் முழு உருவுடன் ஒலிக்கப்படுகின்றது. ஆதலின் தமிழே இயற்கையை ஒட்டி எழுந்த உலக முதன்மொழியென்று கூறுதல் சாலும். கடலிடையிட்டும் காடிடையிட்டும் மலையிடையிட்டும் வாழ நேர்ந்த காரணத்தால் ஒரு கூட்டத்தினர்க்கும் இன்னொரு கூட்டத்தினர்க்கும் தொடர்பின்றி அவரவர் போக்கில் கருத்தை அறிவிக்கும் மொழியாம் கருவியை உருவாக்கிக் கொண்டனர் மக்கள். பேச்சுமொழியை…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ 1
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல், ஆசிரியர் முன்னுரை) இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 1. மொழியின் சிறப்பு மக்களினத்தைப் பிற உயிர்களினும் உயர்ந்ததாகச் செய்வனவற்றுள் மொழியே தலைசிறந்ததாகும். மக்களினம் மொழியால் உயருகின்றது. மொழியின்றேல் மக்கள் வாழ்வு மாக்கள் வாழ்வேயாகும். ஆனால், மக்களினம் மொழியின்றி வாழ்ந்த காலமும் உண்டு. மொழியின் துணையின்றித் தமக்குத் தாமே செய்து கொள்ளக்கூடிய செயல்கள் பல உள. பிறர் கூட்டுறவுடன் செய்து கொள்ளக்கூடிய செயல்களும் சில உள. நாம் ஆற்ற வேண்டிய செயலில் சிக்கல் சிறிது இருப்பினும் அதனை நீக்கிக்கொள்ளப் பிறர்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 2/2 பழந்தமிழ் நிலை என்னும் தலைப்பில் பழந்தமிழ்ச் சொற்களைப்பற்றி விளக்குவதுடன் தற்போது வழக்கு வீழ்ந்துள்ள பழந்தமிழ்ச் சொற்கள் சிலவற்றை அளித்து இவற்றை வழக்கில் கொணர்ந்து தமிழை வளப்படுத்த வேண்டும் என்கிறார். அடுத்த தலைப்பில் பழந்தமிழின் எழுத்துச் சான்றுகளை இந்தியக் கண்டத்தின் பிற மொழி இலக்கியக் காலங்களுடன் ஒப்பிட்டு விளக்கித் தமிழும் இந்திய அரசின் முதன்மைமொழியாக, அலுவல் மொழியாகத், தேசிய மொழியாக ஆக்கப்படல் வேண்டும் என்கிறார். பழந்தமிழ்ச் சொல்…
புலவர்கள் 3. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 32 16. புலவர்கள் (தொடர்ச்சி) அக்காலத் தமிழ்மக்கள் இயலிசை நாடகங்களிலும், நடனங்களிலும் இன்பங் கண்டனர். அக்கால நடனம் எவ்வாறு நடந்தது என்பதை இயற்கைக் காட்சியில் இன்புறக் காட்டுகின்றார். இங்கு நடனப் பெண்ணாக மயில் தோன்றுகிறது. பார்த்து மகிழும் அவையினராக மந்திகள் அமருகின்றன. குழலிசையை இயற்கையில் துளைபட்ட மூங்கிலில் கோடைக்காற்று சென்று எழுப்புகின்றது. முழவாக அயலில் ஓடும் அருவியின் இன்னிசை இயம்புகின்றது. தூம்பு…
புலவர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 31 16. புலவர்கள் (தொடர்ச்சி) தொல்காப்பியர், திருவள்ளுவர், இளங்கோவடிகள் ஆய மூவரும் தனிச்சிறப்புடையவர்கள். தொல்காப்பியர் காலத்துக்குப் பின்பே தமிழ் வளர்ப்பதற்கெனச் சங்கம் தோன்றியிருக்க வேண்டும். ஆதலின், சங்கக் காலத்துக்கு முற்பட்டவராவார் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு எனவும், திருவள்ளுவர் காலம் கி.மு. முதல் நூற்றாண்டு எனவும், இளங்கோ அடிகளின் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு எனவும் கொண்டுள்ளோம். சங்கக்காலத்தைக் கி.மு….
புலவர்கள் 1. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 30 16. புலவர்கள் புலவர்களே நமது மொழியின், பண்பாட்டின், நாகரிகத்தின் புரவலர்கள் ஆவார்கள். புலவர் எனும் தமிழ்ச் சொல் மிகவும் பொருள் பொதிந்த ஒன்றாகும். வெறும் மொழிப் புலமை மட்டும் உடையோர் புலவர் ஆகார். மொழிப் புலமையுடன் பண்புநலன் சான்று, ஏதேனும் ஒரு துறையில் வல்லுநராகவும், பிறர்க்கென வாழும் பெற்றியராகவும் இருப்போரே புலவர் எனும் பெயர்க்கு உரியவராவார். சங்ககாலப் புலவர்கள் அனைவரும் இவ்…
போர்கள் 2. – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 28 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 29 15. போர்கள் (தொடர்ச்சி) சங்கக்காலத் தமிழரசர்கள் அமைதி நோக்கோடு அருள் நோக்கமும் உடையவராவர். இக்காலத்தில் இரு பகைநாடுகள் போரிலீடுபட்டிருக்கும்போது அவ்விரு நாடுகளையும் சாராது, இரு நாட்டுப் படைகளிலும் துன்புறுவோர்க்குச் ‘செஞ்சிலுவைச் சங்கம்’ எனும் அருள்நெறி அமைப்பு அன்போடு சென்று ஆம் உதவிகளைச் செய்கின்றது. இது போன்றே அக்காலத்தில் உதியன் சேரலாதன் எனும் சேரநாட்டுப் பெருமன்னன், பாரதப் போர் நிகழ்ந்த காலத்து, பாண்டவர்…
பிசிராந்தையார் 2 : ந. சஞ்சீவி
(பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 24 4. பிசிராந்தையார் ஒரு நாட்டிற்கு வாழ்வளிக்கும் தலை சிறந்த செல்வம் அந்நாட்டின் மண்ணும் மலையும் அல்ல; ஆறும் அடவியும் அல்ல. அந்நாட்டின் அழியாப் பெருஞ் செல்வம் அமிழ்தொழுகும் கனிவாய்க் குழந்தைகளே ஆம். வருங்கால உலகைப் படைக்கும் தெய்வங்களல்லரோ அச் செல்வச் சிறார்கள்? இவ்வுண்மையை நாடாளும் தலைவனாகிய பாண்டிய மன்னன் உணர்ந்திருந்தான்; தான் உணர்ந்ததோடன்றித் தான் உணர்ந்த அவ்வுணர்வைத் தமிழிலக்கியம் உள்ள வரை அதைக் கற்பார் உணர்ந்து பயன் பெறுமாறு சொல்லோவியமாகவும்…
போர்கள் – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 27 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 28 15. போர்கள் ‘போர்’ என்பது இன்று எல்லோராலும் வெறுக்கப்படும் ஒன்றாக முழங்கப்பட்டு வருகின்றது. ஆயினும், ஆங்காங்கே போர் ஆயத்தங்களும் போர் முழக்கங்களும் நிகழ்ந்துகொண்டு தானிருக்கின்றன. ” அமைதியை நிலை நாட்டவே போர் ஆயத்தங்களில் ஈடுபட்டுள்ளோம்” என்று பறையறையும் அரசுகளும் உள. கட்சிக் கொள்கை, சமய வேறுபாடு, பொருட்பற்று, பதவி விருப்பம் ஆயவைபற்றி ஆங்காங்கும் போர் இயல் காட்டும் நிகழ்ச்சிகள் தோன்றி…
பிசிராந்தையார் 1 : ந. சஞ்சீவி
(சங்கக்காலச் சான்றோர்கள் – 23: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 24 4. பிசிராந்தையார் உலகின் வளர்ச்சிக்கும் வாழ்விற்கும் அடிப்படையாய் விளங்கும் உயிர் ஊற்று, அன்பு என்னும் நல்லுணர்வேயாகும். ஞாயிற்றின் ஒளியின்றேல் எவ்வாறு ஞாலம் அழிந்து ஒழிந்து நாசமாகிவிடுமோ, அவ்வாறே அன்பு என்ற உணர்வும் உயிர்கள் மாட்டு இல்லையாயின் உலகமும் உலக வாழ்வும் சீர் கெட்டுப் பாழடைந்து போதல் ஒருதலை. அதனலன்றோ வான்மறை தந்தருளிய பெரியார் வள்ளுவரும், ‘அன்பின் வழிய(து) உயிர்நிலை; அஃதிலார்க்(கு)என்புதோல் போர்த்த உடம்பு.’ …
