தமிழர் மெய்யுணர்வுக் கொள்கை – சி.இலக்குவனார்
இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 18 (இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 17 – தொடர்ச்சி) வாழ்வியல் உண்மைகளை மக்களுக்கு அறிவுறுத்த முற்படுபவர்கள் சான்றோர்கள் எனச் சிறப்பிக்கப்படுவார்கள். இவர்களே உயர்ந்தோர் என மதிக்கப்படும் தகுதியுடையவர்கள். இவ் வுயர்ந்தோர் வழியே ஏனையோர் செல்லுதல் வேண்டும் என்பது பழந்தமிழர் கொள்கை. உயர்ந்தோர் வழக்குத்தான் உலக வழக்காகக் கருதப்பட்டது. உலக நிகழ்ச்சியை இயக்க வேண்டியவர்கள் உயர்ந்தோர்களே என எண்ணினர். “வழக்குஎனப் படுவது உயர்ந்தோர் மேற்றே நிகழ்ச்சி அவர்கட் டாக லான” (தொல்காப்பியம், பொருளதிகாரம்,…
ஒளவையார்:6 : ந. சஞ்சீவி
(ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 15 2. ஒளவையார் (தொடர்ச்சி) இத்தகைய தலை சிறந்த வள்ளியோன் வீரத்தின் பெருமையையும் நாம் நன்கு அறிவோமல்லமோ? எழுவரொடு முரணி அவன் போர் புரிந்து கண்ட வெற்றியும் கோவலூரை நூறி அவன் கொண்ட கொற்றமும் என்றென்றும் அவன் புகழ் பேசுவன அல்லவோ? அத்த கைய போர் அடு திருவினாகிய பொலந்தார் அஞ்சியின் இணையற்ற வீரத்தை எத்தனையோ அருந்தமிழ்க் கவிதையால் பெருமிதம் தோன்றப் புகழ்ந்துள்ளார் ஒளவையார். அவற்றுள் எல்லாம் தலை சிறந்தது ஒன்று….
ஔவையார் 6 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார் : 15 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 14. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி) ஔவையார் இத் திருக்கோவலூர்ப் பெருமணத்திற்குப்பின் யாண்டுச் சென்றன ரென்பது நன்கு உணரப்படவில்லை. சோணாட்டுத் திருத்தருப்பூண்டிச் சேகரத்து திருக்கடிக்குளம், திருவிடும்பாவனம் இவற்றுப்புறத்து வளவனாற்றின் கீழ்கரை-[*] யில் துளசியார் பட்டினம் என்ற ஊரில் இவ்வௌவையார் திருப்பெயரான் ஒரு சிறிய பழைய கோயி லிருப்பது கேட்கப்படுதலால் [*] இவர் ஆண்டுப்போய் விண்ணுலகெய்தினரோ என ஊகிக்கப்படுகிறார். இனி, இவர் ஓரூர்க்குச் செல்லும்போது இடைவழியில் வெயிலால் வியர்த்து வாடித் துவரப்பசித்து…
தமிழர் கடவுட் கொள்கை – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 16 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 17 8.கடவுட் கொள்கை சங்ககாலத் தமிழ் மக்கள் உயர்பண்பாடு உடையவர்கள் என்பதனை அவர்கள் கொண்டிருந்த கடவுட் கொள்கையும் நன்கு நிறுவும். ‘கடவுள்’ என்னும் சொல்லே அவர்கள் கடவுளைப்பற்றிக் கொண்டிருந்த கருத்தினை நன்கு விளக்கும். ‘கடவுள்’ என்றால் “உள்ளத்தைக் கடந்தது” என்பதாகும். உள்ளத்தாலும் உணர இயலாத இயல்பினது ‘கடவுள்’ என்பதுதானே கடவுளைப்பற்றிய உண்மைக் கொள்கையாகும். இதனை நன்கு தெளிந்திருந்தனர் என்பதனைக் கடவுள் எனும் சொல்…
ஒளவையார்: 5 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:4: ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 14 2. ஒளவையார் (தொடர்ச்சி) ஒளவையார் யாதும் அறியாதவராய் அக்கனியை உண்டு ஆராமகிழ்வு கொண்டு, “மன்னா, அமிழ்தினு மினிய சுவை மிக்க இக்கனியை எங்குப் பெற்றாய்?” என்று உள்ளமும் உடலும் அன்பாலுருகிக் கேட்டார். மன்னன் தலை வணங்கித் தமிழ்ப் பெருமாட்டியாரிடம் உண்மையை உரைத்து நின்றான். மன்னன் மொழிகள் கேட்டதும் ஒளவையாரின் உடல் புளகமெய்திற்று; “மன்னா, யாது செய்தனை! உலகு புரக்கும் வேந்தன் நீ, அருஞ்சுவைக் கனியை உண்டிருக்க வேண்டியவனும் நீயே. அதனை உண்டு நெடுங்காலம்…
ஔவையார் 5 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 14 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 13. தொடர்ச்சி) 3 . ஔவையார் (தொடர்ச்சி) இதனான் இவர் பாண்டி நாடு புகுதற்கு முன்னே வேற்றுநாட்டு ஊர்கள் பலவற்றிற்குச் சென்றிருந்தனர் எனவும் ஆண்டெல்லாமில்லாத நல்ல தமிழைப் பாண்டியநாட்டேதான் கண்டன ரெனவும், அக்காலத்து அம்பர்நகரத்து வளமையும் வண்மையு மிக்க குடிகள் பல இருந்தன எனவும், திருவாவினன் குடியில் முத்தீயோம்பும் நான்மறை யந்தணர் நிறைந்திருந்தனர் எனவும் அறியப்படும். நல்லிசைப் புலவர் பல்லோர் ஒருங்கு குழீஇத் தமிழாயுநன்னா டாதலின், “நின்னாட்டுடைத்து நல்லதமிழ்” என்றார்….
தமிழர் இல்லறம் (தொடர்ச்சி) – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 15 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 16 7. இல்லறம் தொடர்ச்சி திருமணத்தில் பெண்ணுக்குத் தாலியணிதல்பற்றி ஒன்றும் கூறப்பட்டிலது. பெண்ணுக்குத் தாலி எனும் அணி உண்டு என்பது கணவனோடு வாழுகின்றவர்களை “வாலிழை மகளிர்” என்று அப் பாடலில் குறிப்பிட்டுள்ளமையால் தெரியலாம். `வாலிழை’- உயர்ந்த அணி- என்பது தாலிiயைத்தான் குறிக்கும். திருமணத்தில் மணமகளுக்குத் தாலி கட்டுதல் தமிழரிடையே மட்டும் காணப்படும் தொன்றுதொட்டு வரும் பழக்கமாகும். திருமணத்தோடு தொடர்புடைய இன்னொரு சடங்கும்…
ஒளவையார்:4 : ந. சஞ்சீவி
(ஒளவையார்:3 : ந. சஞ்சீவி தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் – 13 2. ஒளவையார் (தொடர்ச்சி) ஒளவையாரின் எண்ணம் நிறைவேறிவிட்டது. அதிகனது அஞ்சா மழவர் படை, ஆர்த்தெழுந்து காரியின் கடியரண்களையும் கடும்படையையும் கலக்கழியச் செய்தது. அரிமா அன்ன அதிகன் தலைமையில் வரிப் புலிகளெனப் பாய்ந்த மழவர் சேனைக்கு ஆற்றாது மான் கூட்டமாயின மலையமான் படைகள். அதிகமான் வீர முரசு கொட்டி, வாகை சூடி, வெற்றிக்கொடியை விண்ணுயரப் பிடித்தான்; அதனோடும் அமைந்தானில்லை அவன்; மலையமான் காரியின் கோவலூருக்குள் நுழைந்து அந்நகரையும் பாழாக்கினான். பொலிவு மிக்க அவ்வள்ளியோன்,…
ஔவையார் 4 – இரா.இராகவையங்கார்
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 12. தொடர்ச்சி) 3. ஔவையார் (தொடர்ச்சி) இக்கதை, ‘எரி னியற்றுங் களைக்கோலை யீந்தன்ன மிட்டுநல்லபாரி பறித்தென்னும் பாடல்கொண் டோன்பண்பு சேர்பழையனூரி லிருப்பவ னௌவைதன் பாடற் குவந்தபிரான்மாரி யெனத்தரு கைக்காரி யுந்தொண்டை மண்டலமே.’ என்னும் தொண்டை மண்டல சதகச் செய்யுளானும் அறியப்படும். பின் அக்காரிக்கு ஆடு வாங்கிக்கொடுக்கவேண்டி வாதவன் வத்தவன் யாதவன் என்னும் மூவரிடத்துப்போய்க் கேட்க அவர்கள் கொடாமையாற் சேரநாட்டுச் சென்று வஞ்சிநகர்புக்கு ஆண்டுள்ள சேரன்பால், வாதவர்கோன் பின்னையென்றான் வத்தவர்கோ னாளையென்றான்யாதவர்கோன் யாதொன்று மில்லையென்றா–னாதலால்வாதவர்கோன் பின்னையினும் வத்தவர்கோ னாளையினும்யாதவர்கோ…
இலக்கியம் கூறும் தமிழர் இல்லறம் (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 14– தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 15 7. இல்லறம் ‘இல்லறம்’ என்பது வீட்டிலிருந்து வாழும் அறநெறி என்னும் பொருளதாகும். இல்லற வாழ்வே மக்களை மாக்களினின்றும் வேறு பிரித்து உயர்த்துவதாகும். மக்களும் மாக்கள்போல் பசித்தபோது கிடைத்தனவற்றை உண்டு, உறக்கம் வந்தபோது உறங்கி, அவ்வப்போது பொருந்தியோருடன் விரும்பியஞான்று மணந்து, வேண்டாதஞான்று தணந்து நாளைக் கழித்த காலம் உண்டு. மரங்களிலும் மலைப்புழைகளிலும் விலங்குகளோடு விலங்குகளாய் வாழ்ந்த காலம் அது. நாளாக நாளாக அறிவு…
ஔவையார் 3 – இரா.இராகவையங்கார்
(நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 11. தொடர்ச்சி) நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்– இரா.இராகவையங்கார். : 12 3. ஔவையார் (தொடர்ச்சி) ஒரு காலத்தவரும் ஒரு தன்மையரும் ஆதல்பற்றி இவரது ஓருடற்பிறப்பு ஒருவழியான் வலிபெறுவதாகும். இப்பிறப்பையும் அதிகமான்பாலே பெரிதுமுறலாகும். அதுவும் அவன் பரிசில் நீட்டித்தபோது ஔவையார் அவனைச் சினந்து, அதிகமான், ‘தன்னறி யலன்கொல் என்னறி யலன்கொல்’ என்றது ஔவையார்க்கும் அவ்வதிகற்கும் உளதாகிய இவ்வுறவினையே குறிப்பாற் றெரித்துக் கூறப்பட்டதெனக் கொள்ளுதற்கும் இயைதலின் நீங்கும் என்க. இவ்வாறு கொள்ளுதலே பண்டுதொட்டு வழங்கும் உலகவழக்கிற்கும் செய்யுள்வழக்கிற்கும் இயைபுடைத்தாகும். ஔவையார் பெண்ணையாற்றங்…
இலக்கியம் கூறும் தமிழர் கல்வி (சங்கக் காலம்) – சி.இலக்குவனார்
(இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 13 – தொடர்ச்சி) இலக்கியம் கூறும் தமிழர் வாழ்வியல் (சங்கக் காலம்) 14 6. கல்வி பழந்தமிழ் நாட்டில் கல்வியின் சிறப்பை யாவரும் உணர்ந்திருந்தனர். கல்வியற்ற மக்களை விலங்குகளோ டொப்பவே கருதினர் என்பது, “விலங்கொடு மக்கள் அனையர் இலங்குநூல் கற்றாரோடு ஏனை யவர் ” ( குறள்-410) என்னும் வள்ளுவர் வாய்மொழியால் அறியலாகும். அரசரும் இவ் வுண்மை தெளிந்து தம் கடனாற்றினார் என்பது பின்வரும் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் கூற்றால் தெளியலாகும். “ உற்றுழி உதவியும்…
