மாவீரர் நாள் வணக்கமும் உறுதிமொழியும்

மாவீரர் நாள் வணக்கம் தாய்மண் காக்க தம்முயிர் நீத்த மாவீரர்களை வணங்கிப் போற்றுவோம்! விடுதலைப்போரிலும் இன அழிப்புப் படுகொலைகளிலும் உயிர்நீத்த மக்களும் மாவீரர்களே! அவர்களையும் தலைவணங்கிப் போற்றுவோம்! அவர்கள் கனவை நனவாக்குவதே உண்மை வணக்கம் என்பதால் அவர்களின் கனவை நனவாக்குவோம்!   மாவீரர் நாள் உறுதிமொழி   “மொழியாகி, எங்கள் மூச்சாகி – நாளை முடிசூடும் தமிழ்மீது உறுதி! வழிகாட்டி எம்மை உருவாக்கும் தலைவன் வரலாறு மீதிலும் உறுதி! விழிமூடு இங்கு துயில்கின்ற வேங்கை வீரர்கள் மீதிலும் உறுதி! இழிவாக வாழோம் தமிழீழப் போரில்…

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல், புது தில்லி

மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு குறித்த கலந்துரையாடல் கூட்டம் கார்த்திகை 11, 20149 / 17.11.2018 மாலை 4.00 இந்தியப் பன்னாட்டு மையம், புது தில்லி (India International centre. Lodhi Road, New Delhi.) புது தில்லியில் புரட்டாசி 06-07, 2049 /   செட்டம்பர் 23 – 24,  2019 நாள்களில் மூன்றாவது அனைத்துலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. இம்மாநாட்டைச் சீரும் சிறப்புற நிகழ்த்த தில்லி வாழ் ஆர்வலர் 35 பேர் கொண்ட கருத்தரங்கக் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அதன் ஏற்பாட்டில்…

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! – இலக்குவனார் திருவள்ளுவன்

புறநானூற்றுப் படைத் தலைவர் பிரபாகரன் வாழ்க! தமிழ்த்தேசிய ஞாலத் தலைவர் மேதகு பிரபாகரன், திருவள்ளுவர் கூறும் படைமாட்சி இலக்கணத்திற்கேற்ப செம்மாந்த படை அமைத்தவர். உறுப்பமைந் தூறஞ்சா வெல்படை வேந்தன் வெறுக்கையு ளெல்லாந் தலை. (குறள் 761) என்கிறார் திருவள்ளுவர். இதற்கு விளக்கம் தரும் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார், “அரசுக்குரிய செல்வங்களுள் படையே முதன்மையானது. அப் படையும் காலத்திற்கேற்பப் பல்வகைப் பகுதிகளும் பொருந்தி இருத்தல் வேண்டும். போர் முகத்தில் உண்டாகும், உறுப்பிழத்தல், உயிர்போதல் துன்பங்கட்கு அஞ்சாது இருத்தல்வேண்டும். ‘வெல் அல்லது வீழ்’ என்ற குறிக்கோளையுடையதாய் இருத்தல் வேண்டும்….

சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி

சார்சாவில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி   சார்சா இனிய திசைகள் வாசகர் வட்டத்தின் சார்பில் ‘என்னைத் தேடி’ நூல் அறிமுக நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சிக்கு வாசகர் வட்டத் தலைவர் திருச்சி சாதிக்கு அலி தலைமை வகித்தார். ’என்னைத் தேடி’ என்ற சிறுகதை நூலை இனிய திசைகள் ஆசிரியர் பேராசிரியர் சே.மு.முகமதலி வெளியிட முதல் படியைச் சாதிக்கு அலி பெற்றுக் கொண்டார். அதன் பின்னர் இந்த நூலை நசீமா இரசாக்கு திறம்பட வடிவமைத்துள்ளார். அவர், “தியான வாழ்வின் மூலம் வாழ்வில் வசந்தத்தைக்…

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா

தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2018, கனடா தமிழீழத் தேசிய மாவீரர் நாளை முன்னிட்டு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படும் நிகழ்வுகள்: கார்த்திகை 08, 2049 /சனிக்கிழமை / 24.11.2018 பிற்பகல் 5 மணிக்கு (635 MIDDLE FIELD SCARBOROUGH இல் அமைந்துள்ள) ஐயப்பன் ஆலய மண்டபத்தில் மாவீரர் நினைவுகளோடு பைரவி இசையருவியின் எழுச்சி கானங்களும், கலை நிகழ்வுகளும் நடைபெறும். கார்த்திகை 09, 2049 / 25 .11.2018 முதல்  கார்த்திகை 11 / 27.11.2018  வரை, பிற்பகல் 1 மணி தொடக்கம் பிற்பகல் 5 மணி வரை (24-5210 FINCH AVE (FINCH & MIDDLE FIELD ) இல் அமைந்துள்ள) நாடு…

மாவீரர் நாள், அமெரிக்கா

  கார்த்திகை 11, 2049 / செவ்வாய்/ 27.11.2018 மாலை 6.05 80-51, 261ஆம் தெரு, கிளென் ஓக்கு, புதிய யார்க்கு – என்.ஒய்.11004 மாவீரர் நாள்   எழுச்சி உரை:  பெ.மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கம்  நினைவுரை: வி.உருத்திரகுமாரன், நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தொடர்பிற்கு:   917 8800 320

‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன்

‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா, இலண்டன் தமிழாய்வு மையத்தின் வெளியீட்டில் உருவான அரசறிவியலாளர் மு.திருநாவுக்கரசு எழுதிய ‘பூகோளவாதம் புதிய தேசியவாதம்’ நூலின் அறிமுக விழா கடந்த சனிக்கிழமை அன்று இலண்டனில்  ஆல்பெருட்டன் குமுகாயப்பள்ளி( Alperton Community school) அரங்கத்தில் சிறப்பாக  நடைபெற்றது. ஊடகவியலாளர் திரு.பிரேம் சிவகுரு தலைமை தாங்கினார். தமிழாய்வு மையத்தின் இயக்குநர்களில் ஒருவரான திரு தி.திபாகரன் நிகழ்ச்சியை நடத்தினார்.  திருமதி.கெளரி பரா, திரு.சிவரதன். திருமதி.வேணி சதீசு, திரு.பாலகிருட்டிணன் ஆகியோர் சிறப்புரை நிகழ்த்தினர். அதனைத்தொடர்ந்து வெளியீட்டு உரையினை நூலகவியலாளர் என்.செல்வராசா நிகழ்த்தி…

மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம், சென்னை

  ஐப்பசி 24, 2049 சனிக்கிழமை 10.11.2018 காலை 10.00 முதல் நண்பகல் 1.00 வரை ம.சா.சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம், தரமணி (M.S.Swaminathan Research Centre) மலேசியாவில் உலகத் திருக்குறள் மாநாடு – கருத்தாடல் கூட்டம் மலேசியாவில் 2019 ஆம் ஆண்டு பிப்பிரவரி 22,23,24 இல் உலகத் திருக்குறள் மாநாடு நடைபெற உள்ளது. தொடர்பான ஆதரவிற்காகவும் கருத்துரை தெரிவிக்கவும் நடைபெறும் கூட்டம்.  தலைமை:  தமிழ்ச்செம்மல் ப.முத்துக்குமாரசுவாமி(வ.உ.சி.பெயரனார்) ஆர்வலர்கள் வருக. இங்ஙனம் மநாநாட்டுக்குழுவினர் கவிஞர் உடையார்கோயில் குணா தமிழ்த்தாய் அறக்கட்டளை,மாரியம்மன் கோயில், தஞ்சாவூர் 613501 பேசி 75300…

புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது

புதிய வெளிச்சத்தின் நல்லாசிரியருக்கான புலமைப்பரிசில் விருது தமிழ் இனத்தின் புதிய நம்பிக்கை இராகினி. அவரது ஆசிரியர்களுக்குப் புலமைப்பரிசில் புதிய வெளிச்ச நிதி  நூறாயிரம் உரூபாய்!    அண்மையில் தரம் ஐந்து புலமைப்பரிசில் தேர்விற்கான பெறுபேறுகள் வெளியாகின. முல்லைத்தீவு மாவட்டம் முள்ளியவளை மாணவி இராகினி தேசிய நிலையில் ஐந்தாம் தரப் புலமைப்பரிசில் தேர்வில் 169 புள்ளிகளைப் பெற்று  தேர்ச்சியடைந்துள்ளார். இவர் 2009 முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் தன் தாய்,  படையினரின் குண்டுதாக்குதலில் கொல்லப்பட்ட பின்னர்த் தன் ஒரு கையையும் இனஅழிப்புப்போரில் பறிகொடுத்த குழந்தையாவார் . விழ…

இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்

இனப்படுகொலையாளி தலைமையாளராக நியமனம் – உருத்திரகுமாரன் கண்டனம்   மகிந்த இராசபக்சவைத் தலைமை யமைச்சராக நியமித்ததன் மூலம் மைத்திரிபால சிறிசேன ஐக்கியநாடுகள் மனித உரிமை பேரவையைக் கேலி செய்துள்ளார் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் தலைமையாளரர் விசுவநாதன் உருத்திரகுமாரன் தெரிவித்துள்ளார் கடந்த நான்கு வருடங்களாக இலங்கைக்கு ஆதரவு வழங்கிவந்துள்ள ஐநா, இலங்கை தனது செயற்பாடுகளை மாற்றி வருகின்றது எனத் தெரிவித்து வந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். எனினும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் இது ஒரு தந்திரோபாயம் என மீண்டும் மீண்டும் தெரிவித்து…

பிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019

 பிரித்தானியா தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019.  பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடிப்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி  மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான…

ஒன்றியக் கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு -நூல் வெளியீட்டு விழா, இலண்டன்

ஐப்பசி 10, 2049 27.10.2018 மாலை 6.30 சிவன்கோயில் அரங்கம், இலண்டன் முன்னாள் அதிபர் திரு.கதிர் பாலசுந்தரம் அவர்களின் ஒன்றியக்(யூனியன்) கல்லூரியின் 200 ஆண்டு வரலாறு                  -தங்கத் தாரகை- நூல் வெளியீட்டு விழா !   தொடர்புகளுக்கு: திருமதி சொருணாதேவி தம்பிபிள்ளை (காஞ்சி) தலைவர் kaanji@yahoo.com https://www.facebook.com/photo.php?fbid=10156732149031950&set=a.10153556195046950&type=3