புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளையின் ஓவியப்போட்டி

புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை தமிழறிஞர் மன்னர்மன்னன் 96 ஆவது பிறந்த நாள் மாணவர்களுக்கான ஓவியப்போட்டி. புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் மைந்தரும் முதுபெரும் தமிழறிஞருமான கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர், தமிழ்மாமணி மன்னர் மன்னன் ( கோபதி) அவர்களின் 96 ஆவது பிறந்த நாள் வரும் 03/11/2023 வெள்ளிக்கிழமை கொண்டாடப்படுகிறது.இதனை முன்னிட்டுப் புதுச்சேரி பாரதிதாசன் அறக்கட்டளை சார்பில் மாணவர்கள் பங்கேற்கும் ஓவியப்போட்டி நடைபெற ஏற்பாடு ஆகியுள்ளது.தலைப்பு : கலைகள் வளர்த்திடுவோம்!( மன்னர் மன்னன் அவர்களின் கவிதை வரி )எவ்வகை ஓவியமாகவும்…

திருப்பூர் இலக்கிய விருது வேண்டுவோர் விண்ணப்பிக்கலாம்

திருப்பூர் மக்கள் மாமன்றம் திருப்பூர் இலக்கிய விருது  இவ்வாண்டுக்கான திருப்பூர் இலக்கிய விருதுக்காக தமிழ் நூல்கள் எல்லாப் பிரிவுகளிலும் கடந்த மூன்று ஆண்டுகளில் வெளிவந்த நூல்களை அனுப்பலாம்.ஒரு படி அனுப்பவும் நூல்கள் அனுப்பக் கடைசி நாள்:  ஐப்பசி 29, 2054 /15 -11- 2023  நூல்கள் அனுப்ப வேண்டிய முகவரி:  திருப்பூர் மக்கள் மாமன்றம் டைமண்டு திரையரங்கு அருகில் மங்கலம் சாலை திருப்பூர்  641 604 ( 95008 17499) ( வரவேற்கும் முத்தமிழ் சங்கம் / கனவு )

சிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி

தமிழ்ப் புத்தகத் திருவிழா, பெங்களூருசிறந்த தமிழ் நூல்களுக்கான பரிசுப் போட்டி 1.11.2022 முதல் 31.10.2023 வரை வெளியிடப்பட்ட அனைத்து வகையான நூல்களும் விண்ணப்பிக்கத் தகுதிக்குரியன.பின்வரும் பரிசுகள் வழங்கப் பெறும்.முதல் பரிசு உரூ.5,000/-இரண்டாம் பரிசு உரூ. 3,000/-மூன்றாம் பரிசு உரூ. 2,000/-3 ஊக்குவிப்புப் பரிசுகள் – ஒவ்வொன்றும் உரூ.1,000/- தொடர்பிற்கு : 6363118988 ; tamilbookfestivalblr@gmail.com விண்ணப்பிப்போர் 2 நூல்கள், நூலாசிரியர் ஒளிப்படம், நூலாசிரியர் குறிப்பு, பதிவுக்கட்டணம் நூலொன்றுக்கு உரூ.500இற்கான கேட்போலை அளிக்க வேண்டும்.நூலோ பதிவுக்கட்டணமோ திருப்பியளிக்கப்படமாட்டாது.விண்ணப்பங்கள் முழு விவரங்களுடன் வர வேண்டிய இறுதி நாள்…

5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோ

சிக்காக்கோ தமிழ்ச்சங்கம்ஆசியவியல் நிறுவனம், சென்னைஉலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம், அமெரிக்கா பங்குனி 23-25, 2055 வெள்ளி – ஞாயிறு ஏப்பிரல் 5-7, 2024 5ஆவது உலகத்திருக்குறள் மாநாடு, சிக்காகோசெரட்டன் இலிசில் நேப்பெர்வில்லி உறைவகம்SHERATON LISLE NAPERVILLE HOTEL

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி இறுதி நாள் 10.09.23 என நீட்டிப்பு தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி குறித்து அறிவித்திருந்தோம். இப்போட்டியில் மொத்தம் 18 பரிசுகள் வழங்கப்பட உள்ளன. சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /, & மூன்றாம் உரூ.2000/ நான்காம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-) ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு…

தமிழ் அகராதியியல் நாள் – ஆய்வு மலருக்குக் கட்டுரைகள் வேண்டப்படுகின்றன

செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்தமிழ் அகராதியியல் நாள் 2023ஆய்வு மலர்கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன கட்டுரைகள் அனுப்ப வேண்டிய நாள் : 15.09.2023 மாலை 5,00 மணிக்குள்அனுப்ப வேண்டிய மின்வரி : agarathimalar2020@gmail.com விவரம் அறிவிப்பில் காண்க

மும்பையில் தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள்

மும்பையில் பாண்டுப்பு தமிழ்ச் சங்கம் சார்பில் இலவசத் தமிழ் வகுப்புகள் தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு சார்பில் இலவசத் தமிழ் வகுப்பு அடுத்த மாதம்(செப்டம்பர்) 3-ந்தேதி முதல் தொடங்குகிறது. வகுப்புகள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 7 மணி முதல் 9 மணி வரை பாண்டுப்பு மேற்கு, காவுதேவி சாலைப் பகுதியில் உள்ள அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத்தில் நடைபெறும். முதல் நாள் வகுப்பை அன்னை சிவகாமி தேசிய நினைவு மன்றத் தலைவர் மாயாண்டி தொடங்கி வைக்கிறார். தமிழ்ச் சங்கம் பாண்டுப்பு தலைவர் ச.சி.தாசன், மன்ற…

இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான உலகளாவிய போட்டிகள்

இலக்குவனாரின் ஐம்பதாவது நினைவாண்டில் மாணாக்கருக்கான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டிகள் இலக்குவனார் நடுநிலைப்பள்ளி, வாய்மைமேடு உலகத்தமிழாராய்ச்சி மன்றம், அமெரிக்கக் கிளை இலக்குவனார் இலக்கிய இணையம் தமிழ்க் காப்புக் கழகம் உலகளாவிய போட்டிகள் இனிய தமிழ் பேசும், எழுதும் குழந்தைகளின் திறமையை வெளிக்காட்ட ஓர் அரிய வாய்ப்பு! மொத்தம் 24 ஆயிரம் உரூபாய்ப் பரிசுத் தொகை. – 4 பிரிவுப் போட்டிகள் பரிசு விவரம்: ஒவ்வொரு பிரிவிற்கும் முதல் பரிசு உரூ.3000/- இரண்டாம் பரிசு உரூ.2000/- மூன்றாம் பரிசு உரூ.1000/- என நான்கு பிரிவுகளுக்கும் வழங்கப் பெறும். அனைத்துப்போட்டிகளுக்குமான…

தமிழ்இணையம் 2023’ – ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்

மதுரை காமராசர் பல்கலைக்கழக  மொழியியல் துறை,தமிழ் இணையக் கழகம், இந்தியா, தமிழ் அறித நுட்பியல் உலகாயம்(இலங்கை) தமிழ் இதழ், கனடாஇணைந்து  நடத்தும்  ‘தமிழ் இணையம் 2023’ ஒருநாள் பன்னாட்டுக் கருத்தரங்கம் அட்டோபர் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் நடைபெறும். கட்டுரைகளை அனுப்ப வேண்டிய மின்வரி: indiatia2020@gmail.com கட்டுரைகள் வந்து சேர வேண்டிய இறுதி நாள் 01.10.23 5 முதல் 8 பக்க அளவில் கட்டுரைகளை அனுப்ப வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் 3 கட்டுரைகளுக்கு விருது வழங்கப்பெறும். பிற விவரங்களை இப்பக்கத்தில் உள்ள விவர இதழில் காண்க….

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டு – கட்டுரைப்போட்டி

தமிழ்ப்போராளி சி.இலக்குவனாரின் 50ஆம் நினைவாண்டை முன்னிட்டு யாவரும் பங்கேற்கும் கட்டுரைப்போட்டி மொத்தம் 18 பரிசுகள்  சித்தாலயா, (பேரா.மரு.செயப்பிரகாசு நாராயணன்) வழங்கும் முதல்பரிசு உரூ.5,000/- இலக்குவனார் மனநல மருத்துவமனை, (பேரா. மரு.செல்வமணி தினகரன்) வழங்கும் இரண்டாம் பரிசு உரூ.3,000 /,  & மூன்றாம்  உரூ.2000/ நான்காம்  பரிசு ஐவருக்கு இலக்குவனார் இதழுரைகள் நூல் (விலை உரூ.600/-) ஐந்தாம் பரிசு ஐவருக்கு இலக்குவனாரின் படைப்பு மணிகள் நூல் (விலை உரூ.300/-) ஆறாம் பரிசு ஐவருக்கு இலக்குவனார் எழுதிய பழந்தமிழ் நூல் (விலை உரூ.100/-) கட்டுரைப்போட்டியின் தலைப்பு: இந்தி,…

தோழர் தியாகு எழுதுகிறார்  146:  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை

 (தோழர் தியாகு எழுதுகிறார்  145: வேங்கைவயல் குற்றப் புலனாய்வு பற்றிய குற்றாய்வு தொடர்ச்சி)  பாசிச எதிர்ப்பு மக்கள் முன்னணி அறிக்கை புதுக்கோட்டை மாவட்டம் முத்துக்காடு ஊராட்சியில் உள்ள இறையூர், வேங்கைவயல் தெருவில் பட்டியலினச் சாதி மக்களின் குடிநீர்த் தொட்டியில் சாதி ஆதிக்க வெறியினர்  மலத்தைக் கலந்த கொடூரமான வன்கொடுமை நிகழ்வு நாடெங்கும் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியுள்ளது. அன்று திண்ணியத்தில் நடந்த வன்கொடுமையின் உச்சபட்ச கொடூரம் இன்று இறையூரிலும் நடக்கிறது. “குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்” என முதல்வர் சட்டப் பேரவையில் உறுதியளித்தார். ஆனால்,  சாதிவெறிக் குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதற்கு மாறாக அவர்களைப் பாதுகாக்கும்…

உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும்

உலகத் தமிழ் மாநாடு : நூல் வெளியீடும் விற்பனை அரங்கும் உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம்(IATR) நடத்தும் 11 ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு, சென்னை வரும் ஆனி 22, 23 & 24, 2054 ****சூலை 07,08& 09.2023 அன்று சென்னையில் செம்மண்சேரியில் உள்ள ஆசியவியல் நிறுவனத்தில்  உலகத்தமிழ் ஆராய்ச்சி மாநாடு நடைபெற உள்ளது. உ.த.ஆ.நி. தலைவராக முனைவர் பொன்னவைக்கோவும் மாநாட்டு ஒருங்கிணைப்பாளராகப் பொறி.அரசரும் மாநாட்டுச் செயற்தலைவராக முனைவர் சான்சாமுவேலும் உள்ளனர். அறிஞர்கள் பலரும் பணிக்குழுப் பொறுப்புகளில் உள்ளனர். இம்மாநாட்டில் நூல்…