வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? – இலக்குவனார் திருவள்ளுவன்

வாகை சூடுமா தேர்தல் ஆணையக் கூட்டணி? 2019 ஆம் ஆண்டின் பொதுத் தேர்தலுக்காகவும் உடன் நடத்தப்படுகின்ற இடைத் தேர்தல்களுக்காகவும் வழக்கம்போல் பல்வேறு கட்சிகள் இணைந்து கூட்டணி வைத்துள்ளன. வழக்கம்போல் தேர்தல் ஆணையமும் ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துச் செயல்படுகிறது. தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்தியா முழுமையும் பாசகவுடனும் பாசகவுடன் இணைந்துள்ள மற்ற கட்சிகளுடனும் தேர்தல் ஆணையம் வைத்துள்ள கூட்டணி மக்கள் யாவரும் அறிந்ததே.  ஆனால் இந்தக் கூட்டணி வெற்றி பெறுமா என்றால் எதிர் விளைவுகளால் வெற்றி மாலை நழுவிப்போகும் என்பதே உண்மை. வாக்காளர்களை விலைக்கு வாங்கி வாக்கு…

சந்திப்பு – இலக்குவனார் திருவள்ளுவன்

சந்திப்பு   எண்ணத்தின் சந்திப்பு நட்பாய் மலரும் உள்ளத்தின் சந்திப்பு காதலாய்க் கனியும் தாய் தந்தை சந்திப்பு மகவை ஈனும் ஆய்வு செயல் சந்திப்பு அறிவைப் பேணும் அறிஞரின் சந்திப்பு ஆக்கம் அளிக்கும் கலைஞரின் சந்திப்பு ஊக்கம் அளிக்கும் மறவரின் சந்திப்பு வீரம் ஊட்டும் அறத்தார் சந்திப்பு வறுமை ஓட்டும் எழுத்தின் சந்திப்பு சொல்லாய் மாறும் சொல்லின் சந்திப்பு வரியாய் மாறும் வரியின் சந்திப்பு கவியாய் மாறும் கவியின் சந்திப்பு காவியம் ஆகும் உழைப்போர் சந்திப்பு உயர்வைச் சேர்க்கும் விலைமகள் சந்திப்பு இழிவைச் சேர்க்கும்…

தேடுகின்றேன் நான்! – இலக்குவனார் திருவள்ளுவன்

உடலில் பாதியைத் தேடுகின்றேன் நான் உளத்தில் பாதியைத் தேடுகின்றேன் நான் கண்ணின் ஒளியைத் தேடுகின்றேன் நான் கருத்தின் எழுச்சியைத் தேடுகின்றேன் நான் பார்வையின் கனிவைத்  தேடுகின்றேன் நான் ஆர்வத்தின் தொடக்கத்தைத் தேடுகின்றேன் நான் பேச்சின் சுவையைத் தேடுகின்றேன் நான் மூச்சி்ன் மூலத்தைத் தேடுகின்றேன் நான் இளமையின் பொலிவைத் தேடுகின்றேன் நான் பழமையின் வலிவைத் தேடுகின்றேன் நான் அமிழ்தின் இனிமையைத் தேடுகின்றேன் நான் அழகின் இயற்கையைத் தேடுகின்றேன் நான் தாயின் பரிவைத் தேடுகின்றேன் நான் சேயின் மழலையைத் தேடுகின்றேன் நான் உன்னிடம் மட்டும் காணுகின்றேன் நான் தமிழே…

சிலம்பு ஒலிப்பு நின்றது! சிலம்பொலி செல்லப்பன் இயற்கை எய்தினார்!

மூத்த தமிழறிஞர், சிலம்பொலி செல்லப்பன், இவர் உடல்நலக் குறைவு காரணமாக வீட்டில் மருததுவம் பெற்று வந்தார். இன்று (பங்குனி 23, 2050 சனி ஏப்பிரல் 06.2019) காலை 6.30 மணிக்குச் சென்னையில் காலமானார். இவரது உடல்  பதப்படுத்தப்பட்டு நண்பகல் கொணரப்படும். நாளை காலை வரை இல்லத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பெறும்.நாளை மறுநாள் நாமக்கல் சிவியாம்பாளையத்தில் இறுதி நிகழ்வு நடைபெறும். சிலப்பதிகாரம் என்றதும் நினைவிற்கு வரும் சிலம்புச்செல்வர் ம.பொ.சிவஞானம் போன்ற மற்றோர் அறிஞர் சிலம்பொலி செல்லப்பன். 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிலப்பதிகாரத்தைப் பாரெங்கும் பரப்பிய இலக்கியச் சொற்பொழிவாளர்….

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 – பேரா. வெ.அரங்கராசன்

திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் 1/2 முன்னுரை திருக்குறள் சான்றோர்களை உலகிற்கு அறிமுகப்படுத்தும் உயர் நோக்கில் பேராசிரியர் முனைவர் கு.மோகன்ராசு அவர்கள் அறிஞர்களைக் கொண்டு உரையாற்றச் செய்து அவற்றை நூல் தொகுதிகளாக வெளியிட்டு வருகிறார். அந்த வரிசையில் இன்று நான் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்களை அறிமுகப்படுத்துவதில் மகிழ்ச்சி கொள்கின்றேன். திருவள்ளுவர் வழித்தோன்றல்கள் திருவள்ளுவர் பெயரைத் தாங்கித் திருக்குறள் வழியில் வாழும் திருக்குறள் சான்றோர் இலக்குவனார் திருவள்ளுவன். இவருடைய பெற்றோர் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார்-இ.மலர்க்கொடி இணையர் இவருக்குப் பிறக்கும் பொழுது சூட்டிய பெயரே…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 61-70: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 51-60 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி)   காதற் துணையை அடைந்து கடவுட் பெருமையை அடை! புகழ்மிகு துணையால் பெருமித நடை கொள்! இல்லறப் பெருமையே பொலிவு! நன்மக்களே அழகு! என உணர்! நன்மக்கட்பேறே சிறந்த பேறு என அறி! எப்பருவத்திலும் துன்பங்கள் நெருங்காவண்ணம் பழியிலா மக்கள் பெறு! நம் மக்கள் நம் செல்வம். அவர் முயற்சியால் அவர் செல்வம் வரும் என அறி! நம் மக்கள் சிறு கையால் தரும் உணவை அமிழ்தினும் இனிதாய்ச் சுவை! மக்களைத்…

கல்வி உ ரிமையைப் பொதுப்பட்டியலில் இருந்து மீட்க முழக்க நிகழ்வு – ஒளிப்படங்கள்

செ ன்னை வள்ளுவர் கோட்டம் அருகே, பங்குனி 9, சனிக்கிழமை, 23.03.2019 அன்று முற்பகல் தமிழ்க்கல்வி உரிமைகளுக்காக முழக்க நிகழ்வு நடைபெற்றது.  தோழர் அ.சி.சின்னப்பத் தமிழர் தலைமையுரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் நிறைவுரை ஆற்றினார்.  தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் பல்வேறு அமைப்பினர் உரைகளும் முழக்கங்களும் இடம் பெற்றன. முதல் படத்தைச் சொடுக்கியபின் வரிசையாகப் பிற படங்களைக் காண்க.

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? – இலக்குவனார் திருவள்ளுவன்

சிவகங்கை அரசு மருத்துவமனையின் பெயரில் இராமச்சந்திரானர் பெயரை நீக்கியது ஏன்? யார்? தமிழ்நாட்டு மக்கள் சாதிப்பட்டங்ளைத் துறப்பதற்கு முன்னோடியாய் விளங்கிய சீர்திருத்தச் செம்மல் சிவகங்கை இராமச்சந்திரனார். பகுத்தறிவு இயக்கத் தலைவர், கல்விப் புரவலர், மது ஒழிப்பைப் பரப்பிய அறவாணர், தமிழ் வளர்த்த தகைமையாளர் எனப் பல சிறப்புகள் கொண்டவர் அவர். அவரது பெயர் சிவகங்கை அரசு மருத்துவமனைக்குச் சூட்டப்பட்டது. ஆனால் அப்பெயர் தந்திரமாக  அகற்றப்பட்டுள்ளது. அவர் கட்சிகளுக்கு அப்பாற்பட்ட அருந்தலைவர். 21.12.1991 இல் மதுரையில் தி.மு.க.வின் பவளவிழா மாநாட்டு அரங்கத்திற்குச் சிவகங்கை இராமச்சந்திரனார் பெயர்…

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை!- இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தல் ஆணையத்தின் கொடுங்கோன்மை! தேர்தல் ஆணையத்தின் அறமுறையற்ற செயல்பாடுகளைக் கொடுங்கோலாட்சியின் செயல்பாடுகளுடன்தான் ஒப்பிட முடியும். மக்களாட்சியின் அடையாளமாகத் திகழ்வது தேர்தல். தேர்தலில் போட்டியிடுவோருக்குரிய மக்களாட்சிக் கடமைகளை ஆற்ற உதவ வேண்டியது தேர்தல் ஆணையத்தின் அடிப்படைப் பணி. ஆனால் கட்சிகளுக்கேற்றவாறு மாறுபட்ட அளவுகோல்களைக் கொண்டு சூழ்நிலைகளை ஆராய்ந்து தனக்குரிய கடமையிலிருந்து தவறுவதே தேர்தல் ஆணையத்தின் பணியாக உள்ளது. நடுநிலையாளர் என்ன சொல்லுவார்கள் என்ற அச்சம் இன்றித் துணிந்து தவறுகளைச் செய்கிறார்கள் என்றால் இதனை எங்ஙனம் செங்கோன்மையாகக் கூற முடியும்? ஆளுங்கட்சியுடன் கூட்டணி வைத்துள்ள கட்சிகளுக்கு ஓர்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 51-60: இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 51. தவமிருப்போரின் பணியினும் சிறந்த இல்லறத்தானாக விளங்கு! 52. பழிக்காகா இல்வாழ்வை மேற்கோள்! 53. வானவர்க்கு ஒப்பாக, வாழ்வாங்கு வாழ்! 54. மனைக்குத் தக்க மாண்பு கொண்டுவளத்திற்கேற்ப நட! .  55. பிற மாட்சியைவிடச் சிறந்த மனைமாட்சியுடன் திகழ்!. 56. இல்லாதது ஒன்றுமில்லை என ஆக்கும் பெருமைமிகு துணைவராக இரு! 57. நின்னிலும் பெருமை யாதுமில்லை எனக் கலங்கா கற்பு நிலையில் வாழ்! 58. பெய்யெனப் பெய்யும் மழை போன்று துணைவர்…

தமிழ்நாட்டுக் கல்வி உரிமை – ஆர்ப்பாட்டம்

பங்குனி 09, 2050/ சனி / 23.03.2019 முற்பகல் 09.00 முதல் நண்பகல் 12.00 வரை வள்ளுவர் கோட்டம், சென்னை தமிழ்வழிக் கல்வி இயக்கம் – 8015562644

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50: இலக்குவனார் திருள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 31-40 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 41-50 (குறள்நெறி) நாளை வீணாக்காமல் நன்றாக்கி வாணாள் காக்கும் அணையாக்கு! அற வழியில் உண்மை இன்பம் அடை! அறம் செய்! பழிச்செயல் விடு! சார்ந்தோர்க்குத் துணையாக இரு! துறந்தார், துய்க்க இயலார், காப்பிலார்க்குத் துணை நில்! பிறருடன் உன்னையும் காத்திடு! பழிக்கு அஞ்சிப் பகுத்துண்டு வாழ்! இல்வாழ்வின் பண்பும் பயனுமான அன்பையும் அறனையும் கடைப்பிடி! இல்வாழ்வே அறவாழ்வு, பிற வாழ்வில் ஒன்றுமில்லை. என உணர்! முயற்சியுடையாருள் தலைசிறந்து விளங்கு!இலக்குவனார்திருவள்ளுவன் (தொடரும்) இலக்குவனார்திருவள்ளுவன்