சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 : மக்களுக்குத் தேவை நல்லாட்சி!- இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 14 – தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 15 மக்களுக்குத் தேவை நல்லாட்சி! “அரசுமுறை செய்க களவில் லாகுக” – ஐங்குறுநூறு, பாடல் 8, அடி 2 புலவர்: ஓரம்போகியார்திணை: மருதம்சொற் பிரிப்பு : களவு இல்லாகுக நாட்டில் அரசு முறையாக இயங்க வேண்டும். வஞ்சகம் இல்லாதிருத்தல் வேண்டும் என்கிறார் புலவர் ஓரம்போகியார். அரசு முறையாக இயங்காவிடில் நாட்டில் பல தீவினைகள் நிகழும். மக்களுக்கும் பிற உயிரினங்களுக்கும் தீங்குகள் நேரும். இவையெல்லாம்…
45. இந்து மதம் எல்லாரையும் அரவணைக்கிறது. – நீதியர் நாகரத்தினா 46. “இந்தியா சனாதனத்தின்படி தான் இயங்குகிறது” – ஆளுநர் இரவி 47. கோயிலுக்குத் தூய்மையாக வரவேண்டும் என்று கூறுவது தவறா? – இவை பொய்யான வாதங்கள் – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 45-47 “ஒரு நாமம் ஓருருவம் ஒன்றும் இலார்க்கு ஆயிரம், திருநாமம் பாடிநாம் தெள்ளேணம் கொட்டாமோ” .என்றார். (தெள்ளேணம் என்பது கை கொட்டிப் பாடிக்கொண்டே ஆடும் ஆட்டம்) இன்றும் இந்த நிலை தொடர்வதால்தான் இந்து மதத்தில் பலருக்குச் சகிப்புத் தன்மை உள்ளது. அவர்கள் எல்லாக் கடவுளர் கோயில்களுக்கும் செல்கின்றனர். ஆனால் இதில் பிளவை ஏற்படுத்தியதுதான் சனாதனம். அந்தப்பிளவும் தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. அதனால் ஒற்றுமைக் குலைவு நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. “அவளைத் தொட்டதனால் ஆளுநர்தான் தன் கைகளைப் பினாயில் போட்டுக்…
கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர், அன்றே சொன்னார்கள்35, இலக்குவனார் திருவள்ளுவன்
(வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – தொடர்ச்சி) கதிரவன் தன்மைகளைக் கணித்த கன்னித்தமிழர் சூரியன் அல்லது ஞாயிறு ஒரு விண்மீனே! சூரியனின் கிரேக்கப் பெயர் அப்பல்லோ என்பதாகும். கிரேக்கத் தொன்மக் கதையின்படி லெட்டோ (Leto)வின் உறவால் சீயசு (Zeus) தாய் ஆகிக் குழந்தையைப் பெற்றுக் கொள்ள இடம் தேடி அலைந்து இறுதியில் கிரேக்கத்தில் உள்ள தீவில் (தெலோசு : Delos) அப்பல்லோவைப் பெற்றெடுக்கிறாள். சப்பான், சிரியன் முதலான சில நாடுகளில் சூரியன் பெண் கடவுளாகக் கருதப்படுகிறது. சூரியக் கடவுளின் பெயர் சப்பானில் அமத்தெரசு (Amaterasu)…
வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் – அன்றே சொன்னார்கள் 34 – இலக்குவனார் திருவள்ளுவன்
(புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – தொடர்ச்சி) வெள்ளி குறித்து வெகுவாக அறிந்திருந்தனர் கதிரவனிலிருந்து இரண்டாவதாக உள்ள கோள். எனினும் பூமியின் மிக அருகில் உள்ள கோள். வெள்ளிக்கோளின் ஆங்கிலப் பெயர் வீனசு (Venus) என்பதாகும். வீனசு உரோமப் பெண்கடவுள் ஆகும். இலத்தீன் மொழியில் வீனசு என்றால் காதல் என்றும் காமவிருப்பம் என்றும் பெயர். இதற்கு இணையான கிரேக்கப் பெண்கடவுள் பெயர் அபிரடைடி (Aphrodite). எனவே, வீனசு காதல் கடவுள் ஆகும். உரோமானியர்கள், கிரேக்கர்கள் முதலானோர்போல், பிறப்பு, உடன் பிறப்பு கதைகள் அடிப்படையில் இல்லாமல்…
42. சனாதனத்தில் உயர்வு தாழ்வு இல்லை ; 43. ஆலயத்தில் நுழையத் தடை இல்லை” 44.சனாதனத்தை யாராலும் அழிக்க முடியாது” : ஆளுநர் இரவி சொல்வன சரிதானா? – இலக்குவனார்திருவள்ளுவன்
(சனாதனம் பொய்யும் மெய்யும் 41 – தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 42-44 பல நகரங்களிலும் ஊர்களிலும் கோவில் நுழைவுப் போராட்டம் நடந்துள்ளன என்பதை வரலாறு சொல்கிறது. ஆரியத்தின் பாய்ச்சல் – வருணாசிரமத்தின் இரும்புக் கை – சனாதனத்தின் கொடுங்கை நீதித்துறை வரை பாய்ந்துள்ளதற்குப் பல நிகழ்வுகளைச் சொல்லலாம். ஒன்று பார்ப்போம். 1874இல் மூக்க நாடார் என்பவர் மதுரையில் கோயில் ஒன்றில் கிளி மண்டபம்வரை சென்றுவிட்டார். அவர் பிராமணர் அல்லர் என்பதை அறிந்த கோயிற் பணியாளர்கள் அவரைப் பிடித்துக் கொன்றுவிட்டனர். இதனால், நாடார்கள் பணியாட்கள் மீது வழக்கு தொடுத்தனர்….
புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! – அன்றே சொன்னார்கள் 33 – இலக்குவனார்திருவள்ளுவன்
(திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – தொடர்ச்சி) புதன் இயல்பைப் புரிந்து இருந்தனர்! புதன் கோளுக்கு ஆங்கிலத்தில் மெர்க்குரி எனப் பெயர். மெர்க்குரீஇசு(Mercurius) என்னும் இலத்தீன் சொல்லில் இருந்து இச் சொல் உருவானது. மெர்க்குரி எனப்படும் புதன் கோள் வணிகக்கடவுளாகவும் தூதுத் தேவதையும் மைய்யாவின் (Maia) மகனுமாகும். கிரேக்க, உரோமன் தொன்மக்கதைகள் போன்றுதான் ஆரியக்கதையும் இயற்கைக் கோள்களைத் தெய்வப் பிறப்பாக அல்லது தேவதைகளாகக் கற்பனைச் சிறகெடுத்துச் சொல்லப்படும். பின்னர் ஆரியத்தாக்கத்தால் கோள்களைப் பற்றிய மூடக் கதைகள் தமிழிலும் இடம் பெற்றிருந்தாலும் தொடக்கத்தில் அறிவியல் அடிப்படையில்தான்…
திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் – அன்றே சொன்னார்கள் 32 : இலக்குவனார் திருவள்ளுவன்
(மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் –-தொடர்ச்சி) திங்கள் மீது தீராக் காதல் கொண்டவர்கள் கடலலைகள் நிலவினால் உருவாவதாகக் கி.மு.2ஆம் நூற்றாண்டில் செலியூகசு (Seleucus) என்னும் அறிஞர் குறிப்பிட்டார். பின்னர் உரோமன் அறிஞர் செனெக்கா (Seneca) நிலவொளிக்கும் கடலலைகளுக்கும் உள்ள தொடர்பைக் குறிப்பிட்டார். கி.பி. 499 இல் ஆரியபட்டரும் இதைக் குறிப்பிட்டுள்ளார். கி.பி.1687 இல் அறிஞர் ஐசக்கு நியூட்டன் புவி ஈர்ப்பு விதியைத் தெரிவித்த பின்பு இக் கருத்து மேலும் வலுப்பட்டது. ஆனால், சங்கக் காலத்திலேயே நிலவொளிக்கும் கடல் அலைகளுக்கும் தொடர்பு இருப்பதாகக் கண்டறிந்துள்ளனர். அதன் வழி…
38. சனாதனத் தருமத்தில் தீண்டாமைக்கு இடமில்லை(ஆளுநர் இரவி) & 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்பது அறிவிலித்தனம் 40. சனாதனத்திற்கு ஆதரவாக நாடே கொந்தளிக்கிறது.- பொய்மைகள்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 – தாெடர்ச்சி) & 39. தீண்டாமையைப் போதிக்கிறது இந்துமதம் என்று அறிவிலித்தனமாகக் கூவி வருகிறதே! எத்தனை உதாரணம் சொல்லிப் புரிய வைக்க முயன்றாலும் மேலை நாட்டுப் பணத்துக்காக மானத்தை விற்ற கூட்டம் செவிப் புலன்களையும் விற்று விட்டது. எதுவும் காதில் ஏறாது. – ச.சண்முகநாதன் முகநூலில் சூத்திரன் தொட்டால் உணவு அசுத்தம். பன்றி மோத்தலினாலும், கோழி சிறகின் காற்றினாலும், நாய் பார்வையினாலும், சூத்திரன் தொடுதலாலும் பதார்த்தம் அசுத்தமாகின்றது.(மனு 3. 241) சூத்திரனாகவும், மிலேச்சனாகவும், பன்றியாகவும் பிறப்பது தமோ குணத்தின்…
மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் – அன்றே சொன்னார்கள் 31: இலக்குவனார் திருவள்ளுவன்
( எழுத்தைக் காப்போம் ! – தொடர்ச்சி) மணிப்பொறிகளை மாண்புடன் அமைத்தனர் கடிகாரத்தைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான கிளாக்கு (clock) மணி என்னும் பொருளைத் தரும் கிளோக்கா என்னும் செல்திக்கு (Celtic Language) சொல்லில் இருந்து உருவானது. மணி என்பது முதலில் ஒலிக்கும் மணியைக் குறித்தது. மணி அடித்து நேரத்தை அறிவித்ததன் அடிப்படையில் இச் சொல் பின்னர் மணியைக் குறிப்பதாக மாறியது. பீட்டர் என்கின் என்னும் பூட்டுத் தொழிலாளி கி.பி.1510இல் நிலைக் கடிகாரம் ஒன்றை உருவாக்கினார். கி.பி.1656இல் இயூயன்சு என்னும் ஆலந்து நாட்டுத் தொழில்நுட்ப வல்லுநர் ஊசல்…
பிராமணனைமட்டும் சனாதனம் உயர்த்திக்கூறுவதாகத் தவறாகக்கூறுகிறார்கள் என்கிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 35-36 தொடர்ச்சி) சனாதனம் – பொய்யும் மெய்யும் 37 37.பிராமணனைமட்டும் சனாதனம் உயர்த்திக்கூறுவதாகத் தவறாகக்கூறுகிறார்கள் என்கிறார்களே! பின்வரும் சனாதனக் கருத்துகளைப் பாருங்கள். இவற்றைப் படித்த அறிவுள்ள எவரும் மேற்குறித்தவாறு பொய்யுரை கூற மாட்டார்கள். “பிராமணன் மூடனானாலும் அவனே மேலானதெய்வம்” – (மனு 9. 317) “பிராமணர்கள் இழி தொழில்களில் ஈடுபட்டிருந்தாலும் பூசிக்கத் தக்கவர்கள் ஆவார்கள்.” (மனு 9. 319). “பிராமணனிடமிருந்து சத்திரியன் உண்டானவனாதலால் அவன் பிராமணனுக்கு துன்பஞ் செய்தால் அவனைச் சூன்னியம் செய்து ஒழிக்க வேண்டும்.” (மனு 9….
35.வேதங்கள்பெண்களைப்போற்றுகின்றனஅல்லவா?+ 36.சனாதனத்தில் யாவரும் சமம் என்று பொய்யாகக் கூறிவருகிறார்களே! – இலக்குவனார் திருவள்ளுவன்
(சனாதனம் – பொய்யும் மெய்யும் 33-34-தொடர்ச்சி) ஆமாம் இது பொய்தான். சான்றுக்கு ஒன்றைப் பார்ப்போம் அயோத்தியில் பிராமணன் ஒருவனின் மகன் இறப்பிற்குக் காரணம் சூத்திரன் ஒருவன் தவம் மேற்கொண்டுவருவதுதான் என நாரதர் இராமரிடம் கூறினார், இராமர் அவ்வாறு தவமிருந்த சம்புகனைத் தேடிச்சென்று அவனைத் தவக்கோலத்தில் கண்டான். அக்கணமே தன் வாளால் அவன் தலை வேறு உடல் வேறாகும்படி வாளால் வெட்டிக் கொன்றான். சூத்திரன் தவமிருக்கக்கூடாது என இராமரும் நாரதருமே கூறுகையில் சாதாரண மக்கள் என்ன எண்ண மாட்டார்கள். இத்தகைய சனாதனத்தை நாம் வரவேற்பது முறையா?…
எழுத்தைக் காப்போம்! : அன்றே சொன்னார்கள் 30 – இலக்குவனார் திருவள்ளுவன்
(செய்க பொருளை!-தொடர்ச்சி) எழுத்தைக் காப்போம் ! உலகம் பார்வைகள் இணைக்கப்பட்ட பட்டை. ஒவ்வொரு மொழியும் மறையும் பொழுது அதற்குரிய பார்வைப் பகுதியை இழந்து விடுகிறது என்கிறார் பிரான்கோயிசு (Franபois Grosjean 1946, மேனாள் இயக்குநர், மொழி-பேச்சு ஆய்வகம், சுவிட்சர்லாந்து) மொழியைக் கண்ணாகக் கருதி ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தெரிவித்த கருத்தை ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பே எண்ணென்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண்ணென்ப வாழும் உயிர்க்கு ( திருக்குறள் 392) என்கிறார் தெய்வப்புலவர் திருவள்ளுவர். இதனையே ஔவையார் எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்…
