மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக! – இலக்குவனார் திருவள்ளுவன்

மக்களாட்சியைக் காத்திடத் தேர்தல் ஆணையத்தைக் கலைத்திடுக!   தேர்தலை நடத்துவதற்கு ஒரு நடுநிலை அமைப்பு தேவை என்பதால்தான் தேர்தல் ஆணையம் தன்னாட்சி அமைப்பாக உருவாக்கப்பட்டது.  மக்களின் அடிப்படை உரிமைகளுள் முதன்மையானது தம்மை ஆளும் மக்களைத் தேர்ந்தெடுக்கும் வாக்குரிமையைப் பயன்படுத்துவது. அதற்கான வாய்ப்பைக்கூடத் தராத செயல்பாட்டுக் குறைவான தேர்தல் ஆணையம் இருந்து என்ன பயன்?  தேர்தலின் பொழுது வாக்காளர் விழிப்புணர்வுப் பரப்புரைகள் நடத்துகின்றனர். உண்மையில் விழிப்புணர்வு வாக்காளர் பதிவு அதிகாரிகளுக்குத் தேவை. நமக்கு 100விழுக்காடு வாக்குப்பதிவிற்காகப் பரப்புரை தேவையில்லை. 100 விழுக்காடு வாக்காளர் பதிவு விழிப்புணர்வுதான்…

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! -இலக்குவனார் திருவள்ளுவன்

தவறுகள் தொடரா வண்ணம் தேர்தல் ஆணையம் திருத்திக் கொள்க! எல்லா அமைப்பையும்போல் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் நிறைகளும் உண்டு; குறைகளும் உண்டு. ஆனால், குறைகளற்றுச் செயல்பட்டால்தான் தேர்தல்கள் சிறப்பாக நடைபெறும். எனவே, இதன் குறைகளைப்பற்றிச் சில கூற விரும்புகிறேன். சான்றுக்குச் சில:   புழுதிவாக்கம் வாக்குப்பதிவு மையத்தில் கடந்த தேர்தலில் சில வாக்குப்பதிவு அறைகளின் முன்னர்ப் பந்தல் போடாமல் வெயிலில் வாட விட்டிருந்தனர். இது குறித்து முறையிட்டதும் இங்கெல்லாம் வெயில் வராது என எண்ணிப் போடவில்லை என்ற அதிகாரிகள் சில மணி நேரத்தில் பந்தல்…

வெருளி அறிவியல் – 3 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 2 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  – 3 ‘தெனாலி’ படம் பார்த்தவர்களுக்குப் பின்வரும் பயங்கள்பற்றிய பேச்சு நினைவிருக்கும்: “எனக்கு எல்லாம் பயமயம். … காலால் உதைத்தால் காலில் அடிபடும் என்ற பயம் எனக்கு; கவிதை பயம் எனக்கு; கதை பயம் எனக்கு; பீமனின் கதைக்கும், அனுமனின் கதைக்கும் பயம்; உதைக்கும் பயம்; சிதைக்கும் பயம்; கதவு பயம் எனக்கு; கொஞ்சம் திறந்த கதவும் பயம், முழுதாக மூடின கதவும் பயம், பூட்டு போட்ட கதவென்றாலும் பயம் எனக்கு; காடு பயம்…

தமிழ்வழிக் கல்வி இயக்கத்தின் பாவேந்தர் விழா-நிகழ்வுப் படங்கள்

நிகழ்ந்த நாள்: வைகாசி 14, 2050 சனி 27.04.2019 மாலை 04.30  இடம்: முத்தமிழ் மன்றம், கோயில் பதாகை, ஆவடி, சென்னை-62 படங்களைப் பெரிதாகக் காணச் சொடுக்குக.

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! -இலக்குவனார் திருவள்ளுவன்

சிங்கார வேலர் விருது : நோக்கத்தைத் தெளிவு படுத்துக! அறிஞர்களையும் ஆன்றோர்களையும் அரசு மதிக்க வேண்டும். அதன் அடையாளமாகத்தான் தமிழக அரசு விருதுகள் பலவற்றை வழங்கி வருகிறது; திருவள்ளுவர் திருநாள் விருதுகள் எனவும் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகள் எனவும் இரு நிலைகளில் வழங்குகிறது. அவ்வப்பொழுது புதிய விருதுகளை அறிவிப்பதுபோல் இவ்வாண்டு புதியதாகவும் சில விருதுகளை அறிமுகப்படுத்துகிறது. திருவள்ளுவர் விருது (1986 முதல்) மகாகவி பாரதியார் விருது (1997 முதல்) பாவேந்தர் பாரதிதாசன் விருது (1978 முதல்) தமிழ்த்தென்றல் திரு.வி.க. விருது (1979 முதல்) கி.ஆ.பெ….

எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? – இலக்குவனார் திருவள்ளுவன்

எங்களுக்காக உழைப்பார் உண்டோ!? உழைத்தோம் உழுதோம் உணவின்றி வாடுகிறோம்   உழைத்தோம் நெய்தோம் துணியின்றி ஏங்குகிறோம்   உழைத்தோம் கட்டினோம் வீடுஇன்றி அலைகிறோம்   உழைத்தோம் பிறருண்ண பிறருடுக்க பிறர்வசிக்க   எங்களுக்கு எல்லாம் கிடைக்க உழைப்பார் உண்டோ!? இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தனிப் பரப்புரைகளைத் தடை செய்து வேலூரில் தேர்தலை நடத்துக!  வேலூரில் மட்டும்தான் வாக்கு வணிகம் நடைபெற்றதுபோல் தேர்தல் ஆணையம் அங்கே தேர்தலை நிறுத்தி விட்டது. வாக்கு வணிகம் நடைபெறாத தொகுதி என்று ஒன்றைச் சொல்ல முடியுமா? அல்லது வாக்கு வணிகர்கள் தேர்தலில் பஙகேற்கா வண்ணம் தேர்தல் ஆணையம்தான் எங்காவது நடவடிக்கை எடுத்துள்ளதா? ஒன்றும் இல்லை. அவ்வாறிருக்க, வேட்பாளர்களின் செல்வமும் உழைப்பும் மக்களின் வரிப்பணமும் நேரமும் வீணடிக்கப்படும் வகையில் தேர்தலை நிறுத்தியது ஏன்? வேலூரில்  தேர்தலை நிறுத்தியதற்கு எல்லாக் கட்சியினரும் தமிழக அரசும் எதிர்ப்பு காடடியுள்ளனர்….

வெருளி அறிவியல் – 2 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வெருளி அறிவியல் 1 இன் தொடர்ச்சி) வெருளி அறிவியல்  –  2 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) ஒரேவகை வெருளி ஒன்றுக்கு மேற்பட்ட பெயர்களாலும் குறிப்பிடப்படுகின்றது. ஒரே நேரத்தில் வெவ்வேறு சூழலில் வெவ்வேறு வல்லுநர்கள் ஆராய்வதால் இந்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே அவற்றை எல்லாம் ஒரே வகையாகக் குறித்துள்ளேன். நான் இதற்கு முன்பு வெருளி வகைகளைக் குறிப்பிட்டுப் பட்டியல் அளித்துள்ளேன். எனினும் இப் பொழுது அவற்றில் சிலவற்றை வேறு சிலவற்றில் சேர்த்து மாற்றியுள்ளேன். ஆங்கிலத்தில், மருத்துவர்கள்…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 91-100 : இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் 81-90 தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் (குறள்நெறி) 91. விண்ணகத்தாரின் விருந்தினன் ஆக, வந்த விருந்தினரை அனுப்பிப் புது விருந்தினரை எதிர்பார்! 92. அளவிடற்கரிய பெருமை அடைய, விருந்தோம்பு! 93. விருந்தினரைப் பேணாது ஈட்டிய பொருளை இழந்து வருந்தாதே! 94. விருந்தினரைப் பேணா மடமையால், செல்வமிருந்தும் வறுமை யாளனாகாதே! 95. மாறுபட்டுப் பார்த்து விருந்தினரை வாட விடாதே! 96. வஞ்சனையற்ற இன்சொல் கூறி அறவாணனாக விளங்கு! 97. மனமுவந்து கொடுப்பதைவிட மேலான முகமலர்ச்சியாய் இரு! 98. அனைவரிடமும் இன்சொல் கூறித்…

இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

இலங்கைத் தமிழ் நிலப் பகுதிகளில் வெடிகுண்டுகள் மூலம் படுகொலைகள்! உயிர்ப்பு நாளன்று (21.04.2019) காலை 8.30 மணி முதல் 9.15மணிக்குள்ளாக, கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம், நீர்க் கொழும்பு தேவாலயம், சாங்குரிலா நட்சத்திர விடுதி, கிங்சுபரி நட்சத்திர விடுதி, சின்னமான் பெரு நட்சத்திர விடுதி, மட்டக்களப்பு தேவாலயம் ஆகிய ஆறு இடங்களில் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. தொடர்ந்து  நண்பகல் இரண்டு மணியளவில், தெஃகிவலாவிலும், கொழும்பு  தெமடகொட பகுதியிலும் குண்டு வெடிப்புகள் நிகழ்ந்தன. 3 நாளுக்குப் பின்னர் இலங்கை கம்பஃகாவில் நீதிமன்றம் அருகே மீண்டும்…

வெருளி அறிவியல் – 1 : இலக்குவனார் திருவள்ளுவன்

வெருளி அறிவியல்  –  1 (Science of fear or Phobia) (அச்ச நோய் வகைகள் எனப்படும் வெருளி வகைகள்) (http://thiru-science.blogspot.com/2012/08/blog-post.html விரிவு)  முன்னுரை  ஒன்றைப் பற்றிய அச்சத்தினால் ஏற்படும் அச்ச நோய் பல வகைப்படும். ஒன்றின் மீதான கடும் அச்சம், அல்லது விருப்பமின்மை, அல்லது வெறுப்பு, ‘போபியா(phobia)’ எனப்படுகிறது. ஒருவர் மீது, அல்லது ஒரு சூழல் பற்றி, அல்லது ஓர் அமைப்பு மீது, அல்லது அமைப்பினர், நாட்டினர், அவர்கள் தொடர்பானவை என்பனவற்றின் மீது, அல்லது இவை போன்றவற்றின்மீது, எவ்வகைப் பேரிடருக்கும் வாய்ப்பு இல்லாத…