வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 -இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 இன் தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 21-30 (குறள்நெறி) ஒழுக்கத்தார் பெருமையே உயர்ந்தது என்று போற்று! துறந்தார் பெருமையை அளவிடுவது இறந்தாரை எண்ணுவது போன்றது என அறி! அறம்புரிவார் பெருமை அனைத்திலும் பெருமையுடைத்து என உணர்! அறிவு வலிமையால் ஐம்புலன் காத்திடு! ஐம்புலன் அடக்கி ஆற்றலராக விளங்கு! அரியன செய்து பெரியாராய்த் திகழ்! ஐவகை உணர்வும் அறி.! நல்லுரை மூலம்  நிறைவுடையார் பெருமையைப் பெறு!  குணக்குன்றோர் சீற்றம் நொடிப்பொழுதும் தங்காது என உணர்! “அந்தணர் என்போர்…

படை வீரர்கள் மரணமும் கட்சி அரசியலும் – இலக்குவனார் திருவள்ளுவன்

படை வீரர்கள் மரணமும் கட்சி அரசியலும் படையில் சேருபவர்கள் தாய் மண்ணைக் காதலிப்பதுடன் இறப்பையும் காதலிக்கிறார்கள். எனவே, போரில் இறப்பு நேரும் என்பதை எதிர்பார்த்து வீர மரணத்தை எதிர்நோக்கியே இருக்கிறார்கள். ஆனால், இப்பொழுது நடைபெற்ற  புல்வாலா தாக்குதல் போர்ச்சூழலில் நிகழவில்லை; எதிரி நாட்டுடனான  போரின் பொழுது கொல்லப்படவில்லை. எதிரிநாட்டுடன் இணக்கமாக உள்ள    தீவிரவாதிகள் மேற்காண்ட தாக்குதல் இது. எனவே, இது கடுமையான கண்டனத்திற்கு உரியது. சம்மு காசுமீர் மாநிலத்தில்  புல்வாமா மாவட்டத்தில் இரத்னிபோரா பகுதியில் மத்திய ஆயுதப்படைக் காவலர்கள்(சிஆர்பிஎப்) வாகனங்களில் திரும்பிக் கொண்டிருந்தனர். அந்த…

நரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்! இலக்குவனார் திருவள்ளுவன்

 நரேந்திரரின் பாக்கித்தான் மொழி பேசுநரைக் கண்டிக்கும் பேச்சு நாட்டைப் பாழ்படுத்தும்!  இரு நாள் முன்னர், இராசசுதான் மாநிலத்தில் தோங்கு (Tonk ) தொகுதியில் தேர்தல் பரப்புரையில் இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர(மோடி) கலந்து கொண்டுள்ளார். அப்பொழுது அவர், இந்தியாவில் இருந்து கொண்டு சிலர் பாக்கித்தான் மொழியில் பேசுவதாகக் கண்டனம் தெரிவித்துள்ளார். இச்செய்தியை எல்லா ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. ஆனால் இப்பேச்சின் தீய நோக்கத்தை யாரும் கண்டிக்க வில்லை. பாக்கித்தானில் பாக்கித்தான் மொழி என ஒன்றும் கிடையாது. அங்கே உள்ள பல மொழிகளில் பஞ்சாபி, பசுதூ(Pashto), சிந்தி, சராய்கி(Saraiki), உருது,…

சிக்காகோ: உள்ளூர் உரையரங்கமா? உலகத்தமிழ் மாநாடா? – இலக்குவனார் திருவள்ளுவன்

சிக்காகோ: உள்ளூர் உரையரங்கமா?உலகத்தமிழ் மாநாடா? 10 ஆவது உலகத்  தமிழ் ஆராய்ச்சி மாநாடும்  32ஆவது பேரவை-சிகாகோ தமிழ் சங்கத்தின் பொன்விழாவும் வருகின்ற ஆனி – 19-22, தி.பி. 2050 / சூலை 2019 – 4 முதல் 7 ஆம் நாள்களில் அமெரிக்கா(சிக்காகோ)வில் நடக்க இருக்கிறது.  கருத்தரங்க அமைப்பாளர்கள் இது குறித்த அறிவிப்பைப் பரவலாக விளம்பரப்படுத்தி யுள்ளனர். பெதுவாக, ‘அகரமுதல’ இதழில் எக்கருத்தரங்கம் அல்லது மாநாடு குறித்துச் செய்தி வெளியிட்டாலும் நானும் அதன் பொறுப்பாளர்களில் ஒருவன் எனத் தவறாகக் கருதி விளக்கங்கள், விவரங்கள் கேட்பவர்…

தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தாய்மொழி நாளுக்கு வாழ்த்திய முதல்வருக்குப் பாராட்டுகள்! உலகத்தாய்மொழி நாளை முன்னிட்டுத் தமிழக முதல்வர் எடப்பாடி க.பழனிசாமி இம்முறை வாழ்த்துச் செய்தி அளித்துள்ளார். உண்மையிலேயே இது வரவேற்க வேண்டிய ஒன்றாகும். இம்முறை ஊடகங்களிலும் உலகத் தாய்மொழி நாள் குறித்த கட்டுரைகள், பேச்சுகள் தமிழின் சிறப்பை உணர்த்தும் வகையில் இடம் பெற்றுள்ளன. பல்கலைக்கழகங்கள், அரசு நிறுவனங்கள், கல்வி நிலையங்கள், தமிழ் அமைப்புகள் சார்பில் உலகத்தாய்மொழி நாள் கொண்டாடப்பட்டுள்ளது. இஃது ஒரு வளர்நிலையாகும்.  எனவே அதற்கு முதல்வரும்  வாழ்த்துச் செய்தி அளித்துள்ளது தாய்மொழி நாள் மகிழ்ச்சிக்கு மகுடம் சூட்டுவதாக…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 -இலக்குவனார் திருவள்ளுவன்

(வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இன் தொடர்ச்சி) வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 11-20 (குறள்நெறி) உலகிற்கு நலம் பயக்கும் மழையே அமிழ்தம் என அறி! உணவை உருவாக்குவதும் உணவாவதும் மழையே என உணர்! மழை பொய்த்தால் பசி உலகத்தவரை வாட்டும் என உணர்! மழை இல்லாதுபோனால் உழவரும் உழார் என அறி!. கெடுப்பதும் கொடுப்பதும் மழையே என்பதை உணர்! மழைத்துளி இல்லையேல் புல் பூண்டும் இல்லை என அறி! கடல்நீர் மழையாக மாறாவிடில் கடல் வளமும் குறையும் என உணர்! வானம்…

சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

சித்திரை விருது மாசியிலேயே ஏன்? அரசு நிலைக்கும் என்ற நம்பிக்கை இல்லையா                                      முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு விருதுகளை ஐம்பத்து அறுவருக்கு (மாசி 08, 2050 / 19.02.2019) தலைமைச்செயலகத்தில் வழங்கியுள்ளார். விருதாளர்களுக்குப் பாராட்டுகள்! மேலும் தமிழ்த்தொண்டாற்ற வாழ்த்துகள்! பொதுவாக விருதுகளை முந்தைய நாள் அல்லது கடைசி நேரம் அறிவிப்பதையே அரசு வழக்கமாகக் கொண்டுள்ளது. காலங்கடந்தும் அறிவித்துள்ளனர். சான்றாக ஒவ்வொரு தை 2 ஆம் நாளும் திருவள்ளுவர் திருவிழாவைத் தமிழ்நாடு அரசு கொண்டாடும். அப்பொழுது திருவள்ளுவர் விருதையும் பிற ஆன்றோர்கள் பெயர்களிலான…

தமிழ் உரிமை முழக்கப் போராட்டம்

மாசி 09, 2050 வியாழக்கிழமை 21.02.2019 பிற்பகல் 3.00 முதல் இரவு 7.00 மணி வரை உலகத்தாய்மொழி நாளில் உலகத்தமிழ்க்கழகம் நடத்தும் தமிழ் உரிமை முழக்கப் போராட்டம் தொடக்கவுரை: பழ.நெடுமாறன்

உடல் கொடை: விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு! – இலக்குவனார் திருவள்ளுவன்

உடல் கொடை – விழிப்புணர்வும் செயலுணர்வும் தேவை அரசிற்கு! எந்த நலத்திட்டமாக இருந்தாலும் அது முழுமையாக நிறைவேற மக்களிடையே விழிப்புணர்வு தேவை. ஆனால், அத்தகைய விழிப்புணர்வு முதலில் அது தொடர்பான அரசு அதிகாரிகளுக்கும் ஊழியர்களுக்கும் தேவை. எவ்வாறு செயல்படுத்த வேண்டும் என்ற உணர்வு அரசிற்கு இல்லாத வரையில் எந்தத் திட்டத்தாலும் முழுப்பயன் கிட்டாது என்பதே உண்மை. உடல்கொடை குறித்து ஓரளவு விழிப்புணர்வு மக்களிடம் ஏற்பட்டுள்ளது. ஆனால் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் கருதுவது போல் இவ்விழிப்புணர்வு அரசால் ஏற்பட்டதல்ல. செய்தியிதழ்கள் உடற்கொடை பற்றிய  செய்திகளைப் பதிவிடுவதால்…

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4 :: இலக்குவனார் திருவள்ளுவன்

வரலாறு படைத்த திருக்குறள் சான்றோர்கள் – நூலறிமுகம் 4/4  தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி (பிள்ளை) தமிழறிஞர் சே.எம்.நல்லசாமி(பிள்ளை) குறித்த பேரா.சே.சி. கண்ணப்பனார் கட்டுரை  8 ஆவதாக இடம் பெற்றுள்ளது. 150 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த இவர் 20 ஆண்டுகள் நீதிபதியாகப் பணியாற்றியிருந்தாலும் வாணாள் முழுவதும் தமிழ் ஆர்வலராகத் திகழ்ந்தார்; தமிழறிஞரான இவர் அறிஞர் போப்பு அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்; சமய இலக்கியங்களையும் திருக்குறளையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து, மாக்சு முல்லர் முதலான பன்னாட்டு அறிஞர்களின் பாராட்டுகளைப் பெற்றவர் என இவரின் சிறப்புகளைக் கட்டுரையாளர் தெரிவிக்கிறார். இவரின் திருக்குறள் பணிகளை…

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 இலக்குவனார் திருவள்ளுவன்

வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம் : 1-10 (குறள்நெறி) எழுத்துக்கு அகரமும் புவிக்குப் பகலவனும் முதல் என அறி! கற்றதன் பயனாக அறிவர்வழி நட! நெடுங்காலம் வாழ மாண்புடையோர் வழி நட! துன்பம் இல்லாதுபோக விருப்பு வெறுப்பிலார் வழிநில்! இருவினை சேராதிருக்கப் புகழுடையார் வழி நில்! நீடு வாழ மெய்யொழுக்கர் வழி நில்! மனக்கவலையை மாற்ற உவமையில்லார் வழிநில்! துன்பக்கடல் நீந்த அறவர்வழி நில்! தலையால் நற்குணத்தானை வணங்கு! அறியாமைக் கடலை நீந்த, ஆளுமையுடையவர் வழி நில்! (தொடரும்) -இலக்குவனார் திருவள்ளுவன் வாழ்வியல் கட்டளைகள் தொள்ளாயிரம்…

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்!

சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் இயற்கை எய்தினார்  திராவிட இயக்க வைர விழுது, தன்மானப் போராளி சு.இரா.இராமச்சந்திரனாரின் இளைய மகன் சிவகங்கை இராசமுத்துராமலிங்கம் (எ) சின்னத்தம்பி தம்முடைய 93ஆம் அகவையில் இன்று (தை 23, 2050 / 06.02.2019) வைகறை 2.15 மணிக்கு இயற்கை எய்தினார். ஏழை எளியவர்களுக்கு உதவி மகிழும் அவர் வாழும்பொழுதே தன் கண்களில் ஒன்றைத் தானமாகக் கொடுக்க மருத்துவர்களை நாடினார். வாழ்பவர் கண்ணைத் தானமாகப் பெறச் சட்டத்தில் இடமில்லை என மருத்துவர்கள் மறுத்து விட்டனர். பின் மறைவிற்குப் பின்னான கண் தான விருப்பத்தையும்…