உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் -ப. மருதநாயகம்

தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் பின்னிணைப்பு உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள் 1/5 செம்மொழித்தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் வெளியீடாகப்(2022) பேராசிரியர் முனைவர் ப. மருதநாயகத்தின், ‘உயர்தனிச்செம்மொழி முன்மொழிந்த மூதறிஞர்கள்’ நூல் வந்துள்ளது. இந்நூல் குறித்து அணிந்துரையில் நிறுவன இயக்குநர் பேரா.இரா.சந்திரசேகரன், “உயர்தனிச்செம்மொழித் தமிழின் உயர்வுக்கு உழைத்த சான்றோ்கள் பலராவர். அவர்களின் உண்மை உழைப்பை முறையாக எடுத்துச்சொல்ல வேண்டியது காலத்தின் தேவையாகும். அந்தத் தேவையை உரிய முறையில் செய்தளித்துள்ளார் பேராசிரியர் ப.மருதநாயகம் அவர்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்நூலில் தமிழ், செம்மொழியேயென்று முதற்குரல் கொடுத்த மூதறிஞர்கள்…

இந்தி எதிர்ப்புத் தீர்மானம்: முதல்வருக்கும் பேரவையினருக்கும் பாராட்டு! எனினும் . . . .- இலக்குவனார் திருவள்ளுவன்

முதல்வர் தலைமையில் தேசிய மொழிகள் ஆட்சிமொழிச் செயலாக்கக் குழு அமைக்க வேண்டும்! நேற்றைய சட்டமன்ற நாள்(ஐப்பசி 01,2053/18.10.2022) மொழிப்போர் வரலாற்றில் முதன்மையான நாள்களுள் ஒன்றாகும். நேற்று சட்டப்பேரவையில் இந்தி எதிர்ப்புத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிக்கத்தக்கதாகும்.  தீர்மானத்தை முன் மொழிந்து முதல்வர்  மு.க.தாலின், “மொழி என்பது, நமது உயிராய், உணர்வாய், விழியாய், நம் அனைவரின் எதிர்காலமாய் இருக்கிறது.  . . . ஆட்சி நிருவாகத்தில் இந்தியைத் திணிப்பது தொடங்கிக், கல்வி மூலமாகத் திணிப்பது வரை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தியைத் திணிப்பதுதான் என்று நினைக்கிறார்கள். …

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி

‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள்’ தலைப்பிலான கட்டுரைப் போட்டி 17.11.2022 அன்று வரும் உலகத்தமிழ் நாளையும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 123 ஆவது பிறந்த நாளையும் முன்னிட்டு, ‘ஒன்றிய அரசின் இந்தித்திணிப்புகள், முற்றாக ஒழிப்பதற்கான தீர்வுகள்’ என்னும் தலைப்பிலான கட்டுரைப்போட்டியைத் தமிழ்க்காப்புக் கழகமும் இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்துகின்றன. ஏ4 அளவில் 4 பக்கம் குறையாமல் 6 பக்கம் மிகாமல் கட்டுரை இருத்தல் வேண்டும். இந்திய விடுதலை நாளில் இருந்து ஒன்றிய அரசு செய்துவரும் இந்தித்திணிப்புகளையும் அவற்றால் தேசிய மொழிகளுக்கு ஏற்பட்டு வரும் இடர்களையும்…

தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும்  பாராட்டுகள்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தலைவர் தாலினுக்கும் பிற பொறுப்பாளர்களுக்கும் பாராட்டுகள்! தி.மு.க.பொதுக்குழு கூடித், தலைவரையும் பிற பொறுப்பாளர்களையும் தேர்ந்தெடுத்துள்ளது அல்லது நியமித்துள்ளது. திமுகக் கட்சித் தலைவராக முதலமைச்சர் மு.க.தாலின், திமுகப் பொதுச்செயலாளராகத் துரைமுருகன், பொருளாளராக த.இரா.பாலு ஆகியோர் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதேபோல், திமுகத் துணைப் பொதுச்செயலாளர்களாகக் கனிமொழி, இ.பெரியசாமி, க.பொன்முடி, ஆ.இராசா, அந்தியூர் செல்வராசு ஆகியோரும் நியமிக்கப்பட்டுள்ளனர். திமுக முதன்மைச் செயலாளராக கே.என்.நேரு நியமிக்கப்பட்டுள்ளார். அவ்வாறு தங்கள் பொறுப்பைத் தொடர்ந்தவர்களுக்கும் புதிய பொறுப்பை ஏற்றவர்களுக்கும் பாராட்டுகள். சிறப்பாகச் செயலாற்றி நாட்டிற்கும் மக்களுக்கும் தொண்டாற்ற வாழ்த்துகள். தமிழ் வளர்ச்சி, தமிழின…

விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு நன்றியும் பாராட்டும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

விடுமுறை நாள் அறிவிக்கை தலைமைச்செயலருக்கு நன்றியும் பாராட்டும்! “விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா?” என நாம் கேட்டிருந்தோம். இதனை எழுப்பியதன் காரணம் காலம் காலமாக அப்படித்தான் இருக்கிறது என்பதால்தான். நான் 33 ஆண்டுகள் அரசுப்பணியில் இருந்துள்ளேன்; விடுமுறை ஆணை  ஒரு முறை கூடத் தமிழில் வந்ததில்லை. பின்னர் ஆங்கிலத்தில் ஆணை பிறப்பித்தாலும் தமிழிலும் அதனை வெளியிட வேண்டும் என அரசு ஆணை பிறப்பித்தது. அதன் பின் அதற்கிணங்கத் தமிழில் விடுமுறை அறிவிக்கையை வெளியிட்டாலும் உடனே  ஆங்கில அறிவிக்கை சுற்றுக்கு வந்து…

விடுமுறை நாள்களைத் தெரிவிக்கக் கூடத் தமிழுக்குத் தகுதி இல்லையா? – இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 8 இன் தொடர்ச்சி) தமிழுக்குச் செய்ய வேண்டிய ஆயிரம் 9.  தமிழ் வளர்ச்சிப் பணிகளில் உரிய வளர்ச்சி தேவை. வரும் 2023 ஆம் ஆண்டின் பொதுவிடுமுறை நாள்கள் பட்டியலை அரசு வெளியிட்டுள்ளது. வழக்கம்போல் ஆங்கிலத்தில்தான் வெளியிட்டுள்ளது. நமக்குத்தான் ஒன்றும் புரியவில்லை. புத்தாண்டு நாள், பொங்கல், திருவள்ளுவர் நாள் முதலிய விவரங்களைத் தமிழில் தெரிவிக்க இயலவில்லையா? அல்லது கிழமைகளைத் தமிழில் குறிப்பிடத் தெரியவில்லையா? அல்லது தமிழில் கிழமைப்பெயர்கள் தெரியாதவர்கள்தான் செயலகத்தில் உள்ளனரா? அல்லது விடுமுறைப் பட்டியலில் தமிழில் கூற இயலாத அளவிற்கு அறிவியல் சொற்கள்…

தமிழ்க்காப்புக்கழகம்:ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம்

அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மைதிறனறிந்து தேர்ந்து கொளல். (திருவள்ளுவர், திருக்குறள், ௪௱௪௰௧ – 441) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 19, 20 & 21: இணைய அரங்கம் நிகழ்ச்சி நாள்: புரட்டாசி 22, 2053 ஞாயிறு 09.10.2022 காலை 10.00 “தமிழும் நானும்” உரையாளர்கள்: மழலையர் நரம்பியல் மருத்துவ வல்லுநர் மரு.முனைவர் ஒளவை மெய்கண்டான் குத்தூசி மருத்துவ வல்லுநர் பேரா.முத்துக்குமார்    சித்த மருத்துவ வல்லுநர்  மரு.அசித்தர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode:…

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே!

அகரமுதல முறைமன்றம்: ஆ.இராசா குற்றவாளியே! – இலக்குவனார் திருவள்ளுவன் தி.மு.க.நாடாளுமன்ற உறுப்பினான முன்னாள் ஒன்றிய அமைச்சர் ஆ.இராசா, இந்துக்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் வகையில் பேசியுள்ளார் எனப் பிராமணியன் என்பார் முறையிட்டுள்ளார். அவர், ஆ.இராசா, சென்னை பெரியார் திடலில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில், “இந்துவாக இருக்கிற வரை நீ பஞ்சமன். இந்துவாக  இருக்கிற வரை நீ தீண்டத்தகாதவன். இந்துவாக இருக்கிற வரை நீ சூத்திரன்;  சூத்திரனாக இருக்கும் வரை நீ பரத்தையின்(விபச்சாரியின்) மகன். எத்தனை பேர் பரத்தையின் மகனாக இருக்க விரும்புகிறீர்கள்? . .  எத்தனை பேர்…

தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு

தமிழ்ப்பரப்புரைக் கழகம் : இலக்குவனார் கனவை நனவாக்கும் முதல்வருக்குப் பாராட்டு –  இலக்குவனார் திருவள்ளுவன் கடந்த ஆண்டு சட்டமன்றத் தொடரில் 31.8.2021 அன்று நடைபெற்ற தமிழ் வளர்ச்சித் துறையின் 2021-2022-ஆம் ஆண்டிற்கான நல்கைக் கோரிக்கையின்போது மாண்புமிகு அமைச்சர் தங்கம் தென்னரசு “அயல்நாடு மற்றும் வெளிமாநிலங்களில் வாழும் தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்க தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்கப்படும்” என அறிவித்திருந்தார். 06.01.22 அன்று தமிழ்ப் பரப்புரைக் கழகம் உருவாக்குவதற்குத் தொடர் செலவினமாக உரூ.1 கோடி நிதி ஒப்பளிப்பு அளித்துத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது  நேற்று…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 2/3

(சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் நூல் 1/3தொடர்ச்சி) “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு சொற் சிக்கனம் என்பது மொழிக்குச் சிறப்பாகும் என்று எடுத்துரைக்கும் கட்டுரையாளர், ஒரு சொல் குறிப்பிட்ட ஒரு துறையில் ஒரு பொருளை மட்டும் விளக்கும் வகையிலும் பிற துறைகளில் வெவ்வேறு பொருளை விளக்கும் வகையிலும் அமையலாம். அதேநேரம் ஒரு துறையில் ஒரு சொல்லே வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு பொருள்களில் கையாளும் நிலை இருக்கக் கூடாது என்பதையும் வலியுறுத்துகிறார். எடுத்துக்காட்டாக ஆங்கிலத்தில் Post என்னும் சொல் light post என்னும்…

சொல்லாக்க ஆர்வலர்களுக்குப் பெரிதும் பயன்படும் “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்”  நூல் 1/3 – புதேரி தானப்பன்

“சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” – நூலாய்வு ஆட்சித் தமிழறிஞர் இலக்குவனார் திருவள்ளுவன் அவர்கள், “சொல்லாக்கம் – நெறிமுறையும் வழிமுறையும்” என்னும் நூலொன்றை வெளியிட்டுள்ளார். இது கலைச் சொற்கள் தொடர்பான ஒன்பது கட்டுரைகளின் தொகுப்பு நூலாகும். இந்த நூலில் உள்ள ஒவ்வொரு கட்டுரையும் என்ன சொல்லுகிறது என்பதைச் சொல்லும் கட்டுரையாக ‘முன்னுரை’ என்னும் முதற் கட்டுரை அமைந்துள்ளது. இக் கட்டுரைகள் யாவும் கலைச் சொற்கள் தொடர்பானவையே. எனினும் இந்நூல் கலைச் சொற்கள் குறித்து எழுதப்பட்ட தனி நூல் அல்ல. ஆயினும் கலைச் சொற்கள் குறித்த…

தமிழ்க்காப்புக்கழகம்: ஆளுமையர் உரை 16,17 & 18: இணைய அரங்கம்

புரட்டாசி 01, 2053 ஞாயிறு , 18.09.2022, காலை 10.00 கற்றில னாயினுங் கேட்க அஃதொருவற்கு ஒற்கத்தின் ஊற்றாந் துணை.   (திருவள்ளுவர், திருக்குறள் – 414) தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை 16,17 &18 : இணைய அரங்கம் “தமிழும் நானும்” உரையாளர்கள்: 3.) பேரா.முனைவர் ந.தெய்வசுந்தரம் கணிணி மொழியியல் ஆய்வர் 1.) முனைவர் தமிழ்ப்பரிதி மாரி திட்ட முதன்மையர், தமிழ்ப்பேழை 2.) நிரலர் நீச்சல்காரன் இராசாராமன் வாணி பிழை திருத்தி உருவாக்குநர் கூட்ட எண் / Meeting ID: 864 136 8094 ;…