வெருளி அறிவியல் – உரூ. 1500/- விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு!

வெருளி அறிவியல் – உரூ. 1500/ விலையுள்ள இந்நூலை இலவயமாகப் படிக்க வாய்ப்பு! அன்புசால் தமிழார்வலர்களே! வணக்கம். ‘வெருளி அறிவியல்’ என்னும் என் நூலை நான்  ஊக்குவிப்பு வெளியீட்டகமான கிண்டில் வெளியீட்டகத்தில் பதிந்துள்ளேன். உலக மொழிகளில் தாய்மொழியிலான முதல் வெருளி நோய்க் கலைச்சொல் விளக்க அகராதியாகவும் விக்கிப்பீடியாவில் கூட இல்லாத அளவுக்கு மிகுதியான வெருளிக் கலைச்சொற்களைக் கொண்ட பெருந்தொகுப்பாகவும் இந்நூல் உருவெடுத்துள்ளது. மருத்துவத் துறையினருக்கும் மருத்துவம் சார் துறையினருக்கும் அறிவியல் ஆர்வலர், கலைச்சொல் ஆர்வலர், தமிழ் ஆர்வலர் ஆகியோருக்கும் பொது அறிவு நூல்களை விரும்புவோருக்கும் ஏற்ற நூலாக…

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி – இலக்குவனார் திருவள்ளுவன், தினச்செய்தி

தமிழ்ச்சொற்களை அயற்சொற்களாகக் காட்டும் அயற்சொல் அகராதி சொல்லில் என்ன இருக்கிறது எனச் சொற்களைப் பொருட்படுத்தாதவர்களால்தான் தமிழ், மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைந்து வந்தது. இப்பொழுது விரைவாகவே குறைகிறது. பிற மொழிச் சொற்களைக் கலந்ததால்தான் நாவலந்தீவு முழுவதும் இருந்த தமிழ் இன்றைக்குத் தமிழ்நாட்டில் அங்கும் இங்குமாகப் பயன்படுத்தப்படும் சிறுமை நிலைக்கு வந்து விட்டது. பிறமொழிச் சொற்களின் ஒலிப்பிற்காகப் பிற மொழி எழுத்தொலிகளைத் தமிழ் நெடுங்கணக்கில் புகுத்தியதால்தான் தமிழில் இருந்து புதுப் புது மொழிகள் தோன்றும் நிலை வந்தது. இந்நிலையின் வீச்சைத் தடுத்துக் காப்பாற்றி வருபவர்களில் தனித்தமிழ்க்கடல்…