(திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 4/6 தொடர்ச்சி)

திருக்குறளும் மாறாத விழுமியங்களும் 5/6


8.2.4.அறத்தாற்றின் இல்வாழ்க்கை ஆற்றின் [குறள்.45]
அறிபொருள்:
அறவழியில் இல்லறத்தை நடத்துதல்

8.2.5.மனைத்தக்க மாண்[பு]உடையள் ஆகித்,தன்
கொண்டான்
வளத்தக்காள் வாழ்க்கைத் துணை [குறள்.51]
அறிபொருள்:
இல்லறத்திற்குத் தகுந்தவளாய் அமைந்து இல்லறக் கடமை களை நிறைவுடன் செய்தல்

8.2.6.உடம்பா[டு] இல்லாதவர் வாழ்க்கை  [குறள்.890]
அறியப்படுபொருள்:
உடன்பாடு உள்ள வாழ்க்கை


8.2.7.இல்வாழ்க்கை அளவில் அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் —
தொகுப்பு:

1. குடும்பத் தலைவன், தாய், தந்தை, மனைவி, மக்கள் ஆகி யோரைக் காப்பாற்றுதல்
2. தம் குழந்தைகள் பிஞ்சுக் கைகளால் அளாவிய அமிழ்தக் கூழைக் குடித்தல்

3. தந்தை மகனை / மகளை அவையில் முன்நிற்க வைத்தல

4. இல்லறத்திற்குத் தகுந்தவளாய் அமைந்து இல்லறக் கடமை களைச் செய்தல்
5. உடன்பாடு உள்ள வாழ்க்கை

8.3.0.வறுமை ஒழிப்பு அளவிலான அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் —
குறள்கள் — 8


8.3.1.இலம் என்று வெஃகுதல் செய்யார், [குறள்.174]
அறிபொருள்:
வறுமையை ஒழிக்க எனப் பிறர் பொருளைக் கைப்பற்றா மை


8.3.2.இலன்என்று தீயவை செய்யற்க [குறள்.205]
அறிபொருள்:
இல்லாதவன் என்று பொருள் பெறத் தீயவை செய்யாமை

8.3.3.தெள்நீர் அடுபுற்கை ஆயினும், தாள்தந்தது
உண்ணலின் ஊங்[கு]இனிய[து] இல் [குறள்.1065]
அறிபொருள்:
சொந்த உழைப்பால் பெற்ற இனிய கஞ்சியைக் குடித்தல்

8.3.4.சலத்தால் பொருள்செய்[து]ஏ மார்த்தல் [குறள்.660]
அறிபொருள்:
ஒழுக்கக் கேடுவழிப் பொருள் திரட்டாமை

8.3.5.செய்க பொருளை [குறள்.759]
அறிபொருள்:
அனைத்துப் பயன்பாட்டிற்கும் தேவையான அளவில் பொருளை ஈட்டுதல்

8.3.6.ஆற்றின் அள[வு]அறிந்து ஈக [குறள்.477]
அறிபொருள்:
வருவாய்வழி அறிந்து சம வாய்ப்பு அமைய வறியவர் களுக்குக் கொடுத்தல்

8.3.7.வறியார்க்[கு] ஒன்[று] ஈவதே ஈகை [குறள்.221]
அறிபொருள்:
வறியவர்க்குத் தேவையானதைக் கொடுக்கும் அறச் செயல்

8.3.8.அற்றார் அழிபசி தீர்த்தல், [குறள்.226]
அறிபொருள்:
ஏழைகளின் பசி தீர்த்தல்

8.3.9.வறுமை ஒழிப்பு அளவிலான அமைதியை
ஏற்படுத்தும் அமைதியியல் சிந்தனைகள் —
தொகுப்பு:

1. வறுமையை ஒழிக்கப் பிறர் பொருளைக் கைப்பற்றாமை
2. இல்லாதவன் என்று பொருள் பெறப் தீயவை செய்யாமை
3. சொந்த உழைப்பால் பெற்ற இனிய கஞ்சியைக் குடித்தல்
4. ஒழுக்கக் கேடுவழிப் பொருள் திரட்டாமை
5. அனைத்துப் பயன்பாட்டிற்கும் தேவையான அளவில் பொரு ளை ஈட்டுதல்
6. வருவாய்வழி அறிந்து சம வாய்ப்பு அமைய வறியர்கள் எல்லோருக்கும் கொடுத்தல்
7. வறியவர்க்குத் தேவையானதைக் கொடுக்கும் அறச் செயல்
8. ஏழைகளின் பசி தீர்த்தல்


8.4.0.விருந்து ஓம்பல் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 3

8.4.1.வைகலும் வருவிருந்து வைகலும்
ஓம்புவான் வாழ்க்கை [குறள்.83]
அறிபொருள்:
தேடி வரும் விருந்தினர்களுக்கு விருந்து படைத்து நாளும் காத்தல்

8.4.2.செல்விருந்[து] ஓம்பி வருவிருந்து
பார்த்து இருப்பான் [குறள்.86]
அறிபொருள்:
தேடி வந்த விருந்தினருக்கு விருந்து அளித்துவிட்டு, இனி விருந்தினர்கள் யாரேனும் வருகிறார்களா என எதிர்பார்த்துக் கொண்டிருத்தல்

8.4.3.முகம்திரிந்து நோக்கக் குழையும் விருந்து [குறள்.90]
அறிபொருள்:
விருந்தினரின் முகம் கோணாமல் வரவேற்று விருந்தளிப் போர் நடந்து கொள்ளுதல்


8.4.4.விருந்து ஓம்பல் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு:

1. தேடி வரும் விருந்தினர்களுக்கு விருந்து படைத்து நாளும் காத்தல்
2. தேடி வந்த விருந்தினருக்கு விருந்து அளித்துவிட்டு, இனி விருந்தினர்கள் யாரேனும் வருகிறார்களா என எதிர் பார்த்துக் கொண்டிருத்தல்
3. விருந்தினரின் முகம் கோணாமல் வரவேற்று விருந்தளிப் போர் நடந்து கொள்ளுதல்


8.5.0.ஒப்புரவு அளவிலான அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 3

8.5.1.தாள்ஆற்றித் தந்த பொருள் எல்லாம், தக்கார்க்கு
வேள்ஆண்மை செய்தல் பொருட்டு [குறள்.212]
அறிபொருள்:
தம் முயற்சியால் ஈட்டிய பொருள் எல்லாம் தக்கார்க்கு ஒப்ப உதவுதல்

8.5.2.ஊருணி நீர்நிறைந்[து] அற்றே, உல[கு]அவாம்
பேரறி வாளன் திரு [குறள்.215
அறியப்படுபொருள்:
தண்ணீரால் உடல் நலம் காக்கும் ஊருணிபோல் உலகத்தார் உடல் நலம் கருதி ஒப்புரவு செய்தல்

8.5.3.பயன்மரம் உள்ளூர்ப் பழுத்[து]அற்றால், செல்வம்
நயன்உடை யான்கண் படின் [குறள்.216]
அறியப்படுபொருள்:
பழம் தந்து பசி போக்கும் பழுமரம்போல் உலகத்தார் பசி போக்கும் ஒப்புரவைச் செய்தல்

8.5.4.மருந்[து]ஆகித் தப்பா மரத்[து]அற்றால், செல்வம்
பெருந்தகை யான்கண் படின் [குறள்.217]
அறிபொருள்:
நோய் தீர்க்கும் மருந்து மரம்போல் உலகத்தார் நோய் தீர்க் கும் ஒப்புரவைச் செய்தல்

8.5.5.ஒப்புரவு அளவிலான அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் – தொகுப்பு:

1. தம் முயற்சியால் ஈட்டிய பொருள் எல்லாம் தக்கார்க்கு ஒப்ப உதவுதல்
2. தண்ணீரால் உடல் நலம் காக்கும் ஊருணிபோல் உலகத்தார் உடல் நலம் கருதி ஒப்புரவு செய்தல்
3. பழம் தந்து பசி போக்கும் பழுமரம்போல் உலகத்தார் பசி போக்கும் ஒப்புரவைச் செய்தல்
4. நோய் தீர்க்கும் மருந்து மரம்போல் உலகத்தார் நோய் தீர்க் கும் ஒப்புரவைச் செய்தல்

8.6.0.பகுத்து உண்ணல் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள் 1

8.6.1.பகுத்[து]உண்டு பல்உயிர் ஓம்புதல் [குறள்.322]
அறிபொருள்:
பகுத்து உண்டு பல் உயிர்களைக் காத்தல்

8.7.0.உதவி அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 3

8.7,1.செய்யாமல் செய்த உதவி [குறள்.101]
அறிபொருள்:
முன்னர் உதவி செய்யாதவர்க்கும் உதவி செய்தல்

8.7.2.காலத்தி னால்செய்த நன்றி [குறள்.102]
அறிபொருள்:
தேவையான காலத்தில் செய்யும் உதவி

8.7.3.பயன்தூக்கார் செய்த உதவி [குறள்.103]
அறிபொருள்:
பயனை எதிர்பார்க்காமல் செய்யும் உதவி

8.7.4.உதவி அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — தொகுப்பு:

1. முன்னர் உதவி செய்யாதவர்க்கும் உதவி செய்தல்
2. தேவையான காலத்தில் செய்யும் உதவி
3. பயனை எதிர்பார்க்காமல் செய்யும் உதவி

8.8.0.சமுதாயம் அளவில் அமைதியை ஏற்படுத்தும்
அமைதியியல் சிந்தனைகள் — குறள்கள் 16

8.8.1.எவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்[டு]ஒழுகல் [குறள்.30]
அறிபொருள்:
எல்லா உயிர்களிடத்திலும் அருள் பொழிந்து வாழ்தல்

8.8.2.ஒல்லும்வாய் எல்லாம் அறவினை ஓவாதே
செல்லும்வாய் எல்லாம் செயல் [குறள்.33]
அறிபொருள்:
முடிந்த அளவு முடிந்த இடங்களில் எல்லாம் இடைவிடாது அறம் செய்தல்

8.8.3.உலகத்தோடு ஓட்ட ஒழுகல் [குறள்.140]
அறியப்படுபொருள்:
வேற்றுமைகள் மறந்து வாழ்தல்

8.8 4.தோன்றின் புகழொடு தோன்றுக [குறள்.236]
அறிபொருள்:
எந்தத் துறையானாலும், அதில் புகழ் பெறும்படி தோன்றுதல்

8.8.5.மன்உயிர் ஓம்பிஅருள் ஆள்க [குறள்.244]
அறிபொருள்:
உலகம் நிலைபெற உயிர்களிடத்தில் அருள் காட்டுதல்

8.8.6.உயிர்க்[கு] உறுகண் செய்யாமை [குறள்.261]
அறிபொருள்:
என்றும் எந்த உயிருக்கும் தீமை செய்யாமை
8.8.7.உவப்பத் தலைக்கூடி உள்ளப் பிரிதல்
அனைத்தே புலவர் தொழில் [குறள்.394]
அறிபொருள்:
கற்றவர்கள் கூடிக் கல்வி அறிவைப் பரிமாறிக் கொள்ளல்
8.8.8.எனைத்தானும் நல்லவை கேட்க [குறள்.416]
அறிபொருள்:
எவ்வளவு சிறிய அளவாக இருந்தாலும் நல்லன கேட்டல்

8.8.9.தெரிந்[து]இனத்தோடு தேர்ந்[து]எண்ணி
[குறள்.462]
அறிபொருள்:
ஆய்ந்து அறிந்த அறிஞர்களுடன் கலந்து ஆராய்ந்து செயல்படுதல்


(தொடரும்)
பேரா. வெ.அரங்கராசன்
முன்னாள் தலைவர், தமிழ்த்துறை,
கோ.வெங்கடசாமி நாயுடு கல்லூரி,
கோவிற்பட்டி 628 502