அறத்தமிழ்த் தாயே உறக்கம் களைக ! – பழ.தமிழாளன்

அறத்தமிழ்த் தாயே உறக்கம் களைக !
1.
மூத்தமுதற் தமிழ்க்குடியின் முத்தமிழ்த் தாயே !
மூவுலகும் போற்றிடவே முடிபுனைந்த உன்னை
நேத்துவந்த ஆரியத்தார் நிலைகுலைத்தல் கண்டும்
நீருறக்கம் கொள்ளுவது நன்றாமோ சொல்க
பாத்திறத்த பைந்தமிழ இனமதனை வீழ்த்திப்
பன்மொழியாய்ப் பல்லினமாய்ப் பாரதனில் கண்டும்
பூத்திருக்கும் தூக்கமதன் பூவிழியால் கண்டே
பகைத்தமிழ ஆரியரைப் பாரைவிட்டே ஓட்டு !
2.
இனத்தமிழ இனமதனை அழிப்பதற்குப் பாரில்
எடுபிடியாம் சில்லறையை இணைத்துவைத்தே இன்பக்
கனவுகண்டே ஆடுவதைக் களையெடுத்தே ஓட்டல்
கதிரொக்கும் தமிழ்த்தாயுன் கடமையெனக் கொள்க
தனதுநலம் கொண்டவரைத் தடிகொண்டு தாக்கித்
தமிழகத்தில் ஆரியத்தைத் தழைக்காது வீழ்த்தி
மனமொன்றி மக்களெல்லாம் மாறுபடா நின்று
மாண்புமிகு தமிழகத்தில் பகையொழியச் செய்க !
புலவர் பழ.தமிழாளன்,
இயக்குநர், பைந்தமிழியக்கம்,
திருச்சிராப்பள்ளி.
Leave a Reply