genocide109

ஓர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில்

எலும்பும் சதையுமாக

எரிந்து கொண்டிருந்தது

முள்ளிவாய்க்கால்.

இறந்த தாயின் முலையில்genocide134

குழந்தை பால் குடிக்க

இழுத்து வந்து

நெருப்பு மூட்டினர்

இருளின் நடுவே

சிலுவை தாங்கி

இறைவன் வருவான்

என நிலவைப் பார்த்தோம்

கண்களை மூடி

இது உன் விதி என்றது

எங்களின் வீட்டினுள்

யூதர்கள் நுழைந்தனர்

யேசுவைக் கேட்டனர்

ஆயிரம் ஆயிரம் சிலுவையில்

அவர்களை அறைந்தனர்

அடையாளம் காட்ட யூடாசு வந்தான்

மாவீரன் கல்லறையில்

மீண்டும் இரத்தம் வடிய

உயிர்த்திருந்தவர்களை

இன்னொருமுறை

புதைத்தனர்

கனவுகள் உடைந்து

கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது

இரத்தமும் சதையுமாய்

எழுப்பிய சுவருக்குள்

எங்கள் முகங்கள்

எரிந்து கருகின.

முள்ளிவாய்க்கால் முழுமையாகmullivaaykkal-london-cross01

மூச்சிழந்தது

ஆயிரம் சிலுவையோடு அணைந்து போனது

அந்த உயிர்களின் கனவும் வாழ்வும்

கங்கையில் மிதந்த

பிணங்களைப் போல்genocide121genocide121genocide122

எங்களின் வயல்களில்

பிணங்கள் நீந்தின

எல்லாமே எரிந்து முடிந்தது

மிஞ்சிக் கிடக்கும் சாம்பலில் இருந்து

எலும்பை எண்ணிக் கணக்கெடுக்க

அங்கு யாரும்

சாட்சிகள் இல்லை

எரிந்து கிடக்கும் சாம்பலைத் தவிர

எஞ்சியிருப்பதற்கு

எங்களிடம் ஒன்றுமில்லை

மிஞ்சியிருக்கும் காக்கையும் குருவியும்

கரைந்த படி திரிய

 genocide137

நாறிக் கிடந்தன பிணங்கள்

நாங்கள் மனிதரில்லை என்றே

மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்

புத்தரின் காவியினால்.

தாகம் தீர்த்தது சத்திய சோதனை

எங்களின் குருதியினால்.

eeahzam-blood01

நன்றி  : மா.கெம்புகுமார்

வழக்குரைஞர்

9245581684

http://naamtamilar.wordpress.com