வன்னி மண் தின்ற பேய்கள்.. – செந்தமிழினி பிரபாகரன்
ஒன்றல்ல இரண்டல்ல
நூறாயிரம்..
எம் இனம் அழிந்த சோகம்
கொடும் துயரம்..
நினைந்து நினைந்து
நாளுமிங்கு நாம் அழுகின்றோம்..
சிதைந்து சிதைந்து
எம் இனமும் இன்னும் அழிகிறதே..
வன்னி மண் தின்ற பேய்கள்..
முப்பொழுதும் ஆட்டமிட
கண்ணீரில் எம் மண்ணோ
நித்தமும் குளிக்கிறதே..
ஆற்றுவார் யாருமில்லை..
யார் காப்பார் தெரியவில்லை..
நாடாண்ட இனம் இன்று
நடைப்பிணமாய் வீதியிலே..
-தரவு :முகநூல்
🙁