(கவிஞர் முடியரசனின் பூங்கொடி : 37 : பூங்கொடிக்கு வரவேற்பு – தொடர்ச்சி)
பூங்கொடி
அரங்கின் தோற்றம்
பொய்யும் புளுகும் துணையாய் வாழ்வோர்,
தெய்வப் பெயரால் தீங்குகள் இழைப்போர்,
பதுங்கி நின்று பார்த்தனர்; பூங்கொடி
ஒதுங்கிநின் றாரும் உணரும் வகையால் 70
விளக்கி உரைத்தனள், வீணுரை யின்றித்
துளக்கம் இலளாய்த் தொகுத்தும் வகுத்தும்
இடையறா தருவி இழிதரல் மான
நடைஎழில் காட்டும் நல்லதோர் சொன்மழை
பொழிந்தனள்; மக்கள் ...