image-25984

பேரா.சி.இலக்குவனார் வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்! : 1 – இலக்குவனார் திருவள்ளுவன்

  பேரா.சி.இலக்குவனார்  வழியில் செந்தமிழ் நடை பேணுவோம்!   தமிழ்க்கென மலர்ந்து தமிழ்க்கென வாழ்ந்து தமிழ்த்தாய் உருவமாகப் பார்க்கப்படும் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் நினைவு நாள், ஆவணி 18 / செட்டம்பர் 03. இந்நாளில் அவரை நினைவுகூர்ந்து தமிழ்க்கடமை ஆற்றுவது நம் கடனாகும்.   பேரா.சி.இலக்குவனார் தம் தாத்தா முத்து வழியில் பள்ளியில் படிக்கும்பொழுதே கவித்திறனுடையவராக இருந்து ஆசிரியர்களாலும் ...
image-26015

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார் வழியில் நற்றமிழ் பேணுவோம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தனித்தமிழ்க்காவலர் இலக்குவனார்  வழியில் நற்றமிழ் பேணுவோம்!   படிக்கும் பருவத்திலிருந்தே தனித்தமிழ்நடை பேணியவர்; தனித்தமிழில் எழுதியும் பேசியும் வந்ததுடன் - தனித்தமிழ் வித்தைப்பிறரிடம் விதைத்தவர்; தனித்தமிழ் அன்பர்களைத் தம் உறவாகவும் தனித்தமிழுக்கு எதிரானவர்களைத் தமக்குப் பகையாகவும் கருதி வாழ்ந்தவர்; தனித்தமிழ் வளர்ச்சிக்கெனவே இதழ்கள் நடத்தியவர்; அவர்தாம் தனித்தமிழ்க்காவலர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார். அவர் புகழுடல் எய்திய நாளில்(ஆவணி ...
image-25970

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3 – மறைமலை இலக்குவனார்

(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3  தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 3/3   தி.மு.க.ஆட்சிப் பொறுப்பேற்றது, அரசு இலச்சினையில் விளங்கும் ‘சத்ய மேவ சயதே’ என்னும் இந்தித்தொடரை உடனே அகற்றி 'வாய்மையே வெல்லும்” என்னும் தொடரை அறிமுகப்படுத்துமாறு அறிவுறுத்தியவர் இலக்குவனாரே. சத்தியம் என்பதனை உண்மை என்றே மொழியாக்கம் செய்திருக்கவேண்டும் எனச் சிலர் குறிப்பிட்டனர். ஆனால் மூதறிஞர் ...
image-25981

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 39: தொடர்ச்சி) இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 40 சின்னச்சாமி   1965 ஆம் ஆண்டு தமிழ் நாட்டில் இந்தி மொழித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம் நடைபெற்றது. மாணவர்கள் முழுவேகத்துடன் போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுமக்களும் ஆதரவு வழங்கினர். ஒரு சிலர், இந்தி மொழித்திணிப்பால் தமிழ்நாட்டுக்கு உண்டாகக்கூடிய துன்பத்தை எண்ணித் தம்மையே மாய்த்துக் ...
image-25976

மொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் ! – மா. கந்தையா

  மொழிப்போராளி பேரா. இலக்குவனார் புகழ் நின்று நிலைக்கும் ! பருவுடல்    மறைந்தது ;     திருவுயிர்   மறையவில்லை !   'ஓரினம் அழிக்க அவ்வினம்பேசும் மொழியைஅழி' சிற்றினம் சார்ந்த சிற்றறிவு படைத்தோர் முற்றாக உலகின் முதன்மொழியாம் தமிழைஅழிக்கும் நற்றாயைக்  கொலைசெயும் நரிக்கூட்டச் செயலை   இமிழ்கடல்   ஒலிக்கும்   தமிழ்  மண்ணில் தமிழ்  காக்க   அமிழ்துயிர்   துறந்தோராயிரம் உமிழ்கின்ற   எச்சிலை   உறிஞ்சிவாழ்வோர்  பலராயினும் தமிழெனும்  எச்சத்தைத்  தானெடுத்துஅது   தழைப்பதற்கு   வறுமைக் கோலத்தையும் பெருமைக்கோல மாய்க்கொண்டு தறுகண்  உடைத்த ...
image-25967

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3 – மறைமலை இலக்குவனார்

(தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  தொடர்ச்சி) தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 2/3   1933-ஆம் ஆண்டில் திருவையாறு அரசர் கல்லூரிப் புலவர் மாணாக்கராக இருந்தபோதே ‘எழிலரசி’என்னும் குறுங்காப்பியத்தை இயற்றி வெளியிட்டார் இலக்குவனார். 1930களில் புரட்சிக்கவிஞர் படைத்த கவிதைகளிலும் குறுங்காப்பியங்களிலும் வடமொழியின் வாடை தூக்கலாக இருந்தது. ஆனால் இலக்குவனாரின் “கதைபொதி பாட்டு” முற்றும் தனித்தமிழாலேயே இயன்றது.   1936-இல் ...
image-25961

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3 – மறைமலை இலக்குவனார்

தமிழியக்கத் தலைமைப் போராளி இலக்குவனார் 1/3  இயல்பாகத் தமிழுக்கு முதன்மையும் பெருமையும் வழங்கிப் போற்றிவந்த தமிழர் வேற்றவர் மொழியும் பண்பாடும் அறிமுகமான பொழுதில் தமிழின் தனித்தன்மையும் மேலாண்மையும் பின்னுக்குத் தள்ளப்படக்கூடாது என எழுச்சியுடன் இயங்கிய செயல்முறையே தமிழியக்கம் என வரையறை அளிக்கலாமல்லவா? சமணர் நுழைவும் அர்த்தமாகதி, சௌரசேனி முதலான பிராகிருதங்களின் அறிமுகமும் ஏற்பட்டவேளையில் வடசொற் கிளவி வடவெழுத்தொரீஇ எழுத்தொடு ...
image-25957

மனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும்! பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் – 10

(பேரறிவாளன் குறிப்பேடு! தொடரும் வலி: பாகம் – 09 தொடர்ச்சி) மனச்சான்று உள்ளவர்கள் விடை சொல்லட்டும்! பேரறிவாளன்  குறிப்பேடு! தொடரும் வலி!- பாகம் - 10 வேலூர் சிறையில் 25 ஆண்டுகளைக் கடந்து முடக்கப்பட்டு இருக்கும் பேரறிவாளன், அவரது வழக்கறிஞர் மூலமாகச் சொல்லி அனுப்பிய தகவல்களின் தொகுப்பு இது!  சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்கிறது இந்திய அரசியல்யாப்பின் பிரிவு ...
image-25954

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! – தாமோதரன் கபாலி

சந்தம் ஒலிக்கும் செந்தமிழே!   முத்து முத்தாய்த் தமிழ்ச்சொற்கள் முந்தும் உயிரை அரவணைக்கும் கொத்துக் கொத்தாய்ப் பெரும்வினைகள் கொள்ளும் உயிரைக் கடைத்தேற்றும் சித்துச் சித்தாய் அகமடங்க திங்கள் ஒளியாய்க் குளிர்விக்கும் சத்துச் சத்தாய் உயிர்க்கலந்து சந்தம் ஒலிக்கும் செந்தமிழே! தாமோதரன் கபாலி
image-25951

திருவள்ளுவரா வைத்தார், ஒரு பெயரில் ஈர் அதிகாரம்! – தமிழரசி

திருவள்ளுவரா வைத்தார்? ஒரு பெயரில் ஈர் அதிகாரம்!   திருக்குறள் முழுவதையும் எப்போது படித்தேனோ அப்போதிருந்து இந்தக் கேள்வி என் நெஞ்சினில் எழுந்து என்னை மருட்டுகிறது. ஒரு பெயரை இரு அதிகாரத்திற்குத் திருவள்ளுவர் வைத்திருப்பாரா! என எண்ணிப் பார்க்கும்போது அது உங்களுக்கும் வியப்பைத் தரும். ஔவையாரால் “அணுவைத் துளைத்து ஏழ் கடலைப் புகட்டித் குறுகத் தறித்த குறள்” எனப் ...
image-25947

மேதினியே நட்பிற்குள் அடங்கிற் றின்று ! 1/5 : பாவலர் கருமலைத்தமிழாழன்

மேதினியே   நட்பிற்குள்   அடங்கிற்   றின்று ! 1/5  தொலைபேசி  வருமுன்பு  நெஞ்சி   ருக்கும் தொலைதூர   உறவோடு   தொடர்பு  கொள்ள மலைகடந்து   பறக்கின்ற   புறாவின்   காலில் மனக்கருத்தைக்   கட்டியன்று   அனுப்பி  வைத்தார் அலைகடலைக்   கடந்தின்று   இருப்போ  ரோடே அறிவியலால்   மின்னஞ்சல்   முகநூல்   தம்மில் வலைத்தளத்தில்   கட்செவியில்   கையால்   தட்டி வார்த்தையாக்கிக்   கண்களிலே   பேசு   கின்றார் ! எத்தனைதான்   முன்னேற்றம்   வந்த  போதும் எழில்கிராமப்   பச்சைவயல்   அழகைப்   போல சித்தத்தை   மயக்குகின்ற   சேலை  தன்னில் சிரிக்கின்ற   ...
image-25942

அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு

தமிழ்ப்பரம்பரை மையத்தின் (Tamil Heritage Trust)நிகழ்வு  அ.கருப்பன்(செட்டியார்) (ஏ.கே.செட்டியார்) : படம், பயணம், பதிவு  வழங்குநர் : ஆ.இரா.வேங்கடாசலபதி ஆவணி 18, 2047 / செட்டம்பர் 03, 2016 மாலை 5.30 ஆர்.கே.மையம், 146/3,  இராயப்பேட்டை நெடுஞ்சாலை, (ஓம்சுஇலக்சனா, சா மின்பொருள்கடை மாடியில்), மயிலாப்பூர், சென்னை 600 004 தமிழ் பாராம்பரியம் சார்பாக நடைபெறும் மாத உரை நிகழ்ச்சியில், செட்டம்பர் 2016 நிகழ்வாக,  ஏ.கே. செட்டியார் ...