image-20410

பெரியார் நோக்கில் திருக்குறள் – மு.இரத்தினம்

  பெரியார் நோக்கில் திருக்குறள் பெரியாரின் பெரும் பாராட்டைப் பெற்ற ஒரே நூல் திருக்குறள். தன் பாராட்டுக்கான காரணங்கள் பலவற்றை அவர் அடுக்குகிறார். அவற்றுள் சில: திருக்குறள் பாமரர்க்குப் புரிவது, அறிஞரும் ஏற்பது. வள்ளுவர்க்கு யாரும் ஞானப்பால் ஊட்டவில்லை. 'பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்' என வருணாசிரமத் தருமத்தை எதிர்க்கிறது. உயிர்ப்பலியிடும் வேள்வியை எதிர்க்கிறது. அறிவியலுக்குப் புறம்பான கருத்துகள் அதிகம் இல்லை. ஒழுக்கத்தை வலியுறுத்துகிறது. மூடநம்பிக்கை இல்லை. மனிதச் சிந்தனைகளுக்கு எதிரான மத ...
image-20397

பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு

வண்டலூரில் நாளை நடைபெற இருந்த பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு அறிவிப்பு பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-     தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாடு 14-ஆம் நாள் சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இம்மாநாட்டை எப்படியாவது ...
image-20406

குறள் வழிச் சென்றால் பெருமையை அடையலாம் – ஈ. வே. இராமசாமி

குறள் வழிச் சென்றால் உலகிற்கு நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை அடையலாம்.   தமிழ் நூல்களையெல்லாம் பதினெட்டாம் பெருக்கில் ஆற்றில் போடச் செய்தும், நெருப்பில் பொசுக்கிப் பாழாக்கியும் விட்டனர் தமிழ்ப் பகைவர்கள். எஞ்சியிருப்பது குறள் ஒன்றேயாகும். நமது திருவள்ளுவர் வகுத்த இக்குறள் வழிச்சென்றால் நம் நாட்டுக்கு மட்டுமின்றி வடநாட்டுக்கும், உலகத்துக்கும்கூட நாம் நன்னெறி காட்டியவர்கள் என்ற பெருமையை ...
image-20413

அசோகர் காலமே வள்ளுவர் காலம்! – சி.இலக்குவனார்

அசோகர் காலமே வள்ளுவர் காலம்   வள்ளுவர் காலம் சங்கக் காலம் என்றோம். சங்கக் காலப் புலவர்களில் பலர் இவருடைய திருக்குறளை எடுத்தாண்டுள்ளார். மணிமேகலையாசிரியர் சாத்தனார் 'தெய்வம் தொழான் கொழுநன் தொழுது எழுவான் பெய்யெனப் பெய்யும் மழை என்ற பொய்யில் புலவன் பொருளுரை தேறாய்'' என்று கூறுகின்றார். இதில் வள்ளுவர் மொழியை எடுத்தாண்டு அவரைப் பொய்யில் புலவர் என்று பாராட்டுவதையும் காண்கின்றோம். அதனால் ...
image-20416

அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் மிகுதியாம்! – க.அன்பழகன்

அழிவுற்ற தமிழ் ஏடுகளின் பட்டியல் நாம் பெற்றுள்ளனவற்றிலும் மிகுதியாம்! அவ்வகையில் தமிழில் பிறந்த சங்கத் தொகை நூல்களின் செய்யுள்களுக்கும், எப்பாலவரும் போற்றும் அய்யன் திருவள்ளுவரின் முப்பாலாம் திருக்குறளுக்கும் முற்படத் தோன்றிய ஒல்காப்புகழ் தொல்காப்பியம் ஓர் ஒப்பற்ற இலக்கண நூலாய்த் திகழ்வதாம். 'இலக்கியம் கண்டதற்கென்றே இலக்கணம்'' கூறலாகும் என்பதை மெய்ப்பிக்கும் வகையில், அதற்கு முன்னரே தமிழில் தோன்றி வழங்கிய ...
image-20390

தருசன் படுகொலைக்கு எதிரான மே 17 இயக்கத்தின் கண்டன ஆர்ப்பாட்டம்

  தருசன் படுகொலை என்பது இனப்படுகொலையின் தொடர்ச்சியே!   சிங்களப் படையினரால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு, வயிற்றில் கல்லைக் கட்டி, கிணற்றில் வீசிப் படுகொலை செய்யப்பட்ட ஆறு அகவைத் தமிழ்ச் சிறுவன் தருசன் படுகொலைக்கு நீதி கேட்டுக் கண்டன ஆர்ப்பாட்டம் மே பதினேழு இயக்கத்தினால் தை 22, 2047 / 05-02-2016 வெள்ளி அன்று மாலை, சென்னை வள்ளுவர் ...
image-20387

தாயே! வேறு கடவுளும் உண்டோ?- கவி இளவல் தமிழ்

வலி பொறுத்தவள் ! பேரருட் கருணையின் திரு உருவாகி வலி பொறுத்தெம்மை பிறப்பளித் தீன்று மேதினி மீதினில் நனி உயிராக்கி நன்மையும் தீமையும் வகுத்துரைத்தெமக்குக் களிப்புறச் சிந்தையில் கனித்தமிழ் ஏற்றி இச்சகத்தினில் புகழுறத் தனித்துவம் தந்து சபைகளும் போற்றும் நல் சான்றோனாக்கி காசினி மீதினில் கவியென்றென்னை தனியொரு ஆளாய் நிறுவிய தாயே நின் கால்புரள் புழுதிக்கு ஈடென்றாகிட இக்கடல் சூழ் உலகிலோர் கடவுளும் உண்டோ ? கவி இளவல் தமிழ்
image-20384

விலைபோகும் கல்விநிலை மாற வேண்டும்! – ஞானச்செல்வன்

என்ன வேண்டும்? விண்கலத்தைத் திங்களுக்கே அனுப்பி னாலும் வினயமுடன் பக்குவமும் வாழ்வில் வேண்டும்! மண்கலந்து மக்கிப்போய் மடிந்த போதும் மனிதத்தை நிலைநாட்டிச் செல்ல வேண்டும்! கண்கலங்கி நிற்பார்மேல் கருணை இன்றேல் கதிநமக்கும் இல்லையென்று நம்ப வேண்டும்! எண்ணமெல்லாம் காமத்தில் மூழ்கிக் கெட்டால் இடரெல்லாம் வருமென்றே அறியவேண்டும்! கொலைகளவு கற்பழிப்பு தொலைய வேண்டும் கொடுமைகளே இல்லாத உலகம் வேண்டும்! மலைமலையாய்ப் பணம்குவித்து வைப்ப தாலே மானமது கெட்டொழியும் உணர வேண்டும்! விலைபோகும் கல்விநிலை மாற வேண்டும்! வெறியூட்டும் ...
image-20360

தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை நிறைவேற்றுக! – கி. வெங்கட்ராமன்

    தென்பெண்ணை கிளைவாய்க்கால் திட்டத்தை  இடைக்கால நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்கி – நிறைவேற்றுக! தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர் தோழர் கி. வெங்கட்ராமன் கோரிக்கை!  கிருட்டிணகிரி மாவட்டம் ஒசூரில், மாசி02, 2047/12.02.2016  காலை, செய்தியாளர்களைச் சந்தித்த, தமிழக உழவர் முன்னணி அறிவுரைஞர்தோழர் கி. வெங்கட்ராமன், வரும் பிப்பிரவரி இறுதியில்  தமிழ்நாடுஅரசுஅளிக்கவுள்ள இடைக்கால நிதிநிலை அறிக்கையில், தென்பெண்ணைக்கிளைவாய்க்கால் திட்டத்திற்கான நிதியை ஒதுக்கி, அத் ...
image-19576

இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 20: ம. இராமச்சந்திரன்

(இலக்குவனார் கவிதைகள் – ஓர் ஆய்வு 19 தொடர்ச்சி) இக்கவிதையின் பயன்   எளியோர்க்கு உதவ வேண்டும், ஏழைக்குக் கல்வி அறிவிக்க வேண்டும். ஏற்றத் தாழ்வை அகற்ற வேண்டும். பொய்மையை மாய்க்க வேண்டும். உண்மையை நிலைநிறுத்த வேண்டும். உயர்கணம் கொள்ளல் வேண்டும். ஏழ்மைக்கு அஞ்சாது இருத்தல் வேண்டும். இனிய சொல் பேச வேண்டும். இன்னாச் சொல் எள்ளல் ...
image-20311

தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா – கருத்துரைக் கூட்டம்

  2047, தைத்திங்கள் / சுறவத்திங்கள் 24ஆம் நாள் / பிப்.07, 2016/ முள்ளிவாய்க்கால் முற்றத்தில் தனித்தமிழ்இயக்க நூற்றாண்டு விழா- கருத்துரைக் கூட்டம் நடைபெற்றது.   அக்கூட்டத்தை ஏற்பாடு செய்த உலகத்தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையுரை ஆற்றினார்.   திருவாவடுதுறை இளையபட்டத்தார், முனைவர் க.தமிழமல்லன் முதலியோர் கருத்துரை வழங்கினர்.
image-20263

இதயம் இரும்பால் ஆனதில்லை! – ஈழத்துப் பித்தன்

அகம் கனக்க அகன்று போனேன்! முல்லைத்தீவு போயிருந்தேன் - அந்த முள்ளிவாய்க்கால் தாண்டிப் போனேன் இறங்கி நின்று படமெடுக்க - என் இதயம் ஒன்றும் இரும்பால் ஆனதில்லை விசுமடு தாண்டிப் போக நான் தொழுத வீரர் புதைந்த குழி மேடாய் கண்ட பின்னர் வீதி வழி விடுப்புப் பார்த்து மனம் கனக்க விருப்பம் இன்றி பூனை போல ஆகி நின்றேன் ஆனந்தபுரமும் மாத்தளனும் பெயர்ப் பலகையிலே அருகிருந்த தம்பி தட்டி ...