image-19060

சொல் காக்க! – மதன். சு, சேலம்

கூரிய வாளைவிட கூரிய  சொல் வலிமை! கூடுமட்டும்  சொல் காக்க கூடுமுந்தன் வாழ்வில் நலம் ! வாளினாலிவ் உடலில் துன்பம் சொல்லினாலிவ் வாழ்வே துன்பம் ! வரம்புடைய  சொல்லால் வாழ்வினிலே சேரும் இன்பம் ! ஒரு  சொல் உரைத்திடினும் உயர்வு எனின் உலகை ஆளும் ! தவறான  சொல்  லெனின் தரமிழந்து தரணி மாளும் ! ஆதலினால்  சொல்லினை அளந்து நீங்கள் பேசிடுவீர் ! காதலினால் பேசுதற்போல் கண்ட  சொல் விட்டிடாதீர் ! மதன். சு   சேலம் ecemadhan94@gmail.com
image-18968

ஒரு போரால் மட்டுமே தோற்று விடுவதில்லை…2/2 – புகழேந்தி தங்கராசு

2/2 தமிழர் தாயகத்தைக் காப்பது... தமிழ் தேசிய அடையாளங்களைக் காப்பது... தமிழரின் தன்னாட்சி உரிமையை மீட்பது...   இவைதாம் பிரபாகரன் என்கிற அப்பழுக்கற்ற மனிதனின் நோக்கங்களாக இருந்தன. சிங்களக் குமுகாயத்தை அழித்து ஒழிப்பது எந்தக் காலத்திலும் புலிகளின் நோக்கமாக இருந்ததில்லை. தமிழ்க் குமுகாயத்தின் மானத்தை மீட்பதென்கிற பெயரில், அடுத்தவரின் மானத்துக்குக் கறை ஏற்படுத்துகிற செயலில் பிரபாகரனின் தோழர்கள் ஒருபோதும் ஈடுபட்டதில்லை.   வெற்றி ...
image-18963

நன்றி மறவேன் என்றும்! – இலக்குவனார் மறைமலை

  சொந்தக் கதை 01 எண்ணிப் பார்த்தால் எனக்கே நகைப்பாம் அறுபது  அகலுது  வருவது எழுபது எண்களில்  மட்டுமே இந்த மற்றம் எனக்குள் எந்த மாற்றமும் இலையே! பிறந்தேன் எனல்பிழை பெற்றனர் என்னை; இலக்குவர் மலர்க்கொடி இணையர் அன்பால் உலகினில் தோன்றினேன் என்செயல் என்ன? வந்தேன் வளர்ந்தேன் வண்டமிழ்ச் சூழலில்! கல்வியால் பதவியும் பதவியால் செல்வமும் மேலும் மேலும் மேன்மையும் தேடிய அறிஞர் நிறைந்த அருந்தமிழ் நாட்டில் கல்வியும் பதவியும் செல்வமும் கொண்டே தமிழின் உரிமை ...
image-18960

பன்னிரு மாதங்களும் தமிழ்ப்பெயர்களே! – சி.இலக்குவனார்

  கார் காலம் என்பது ஆவணியும் புரட்டாசியுமாம். ஒரு காலத்தில் ஆண்டுத் தொடக்கம் ஆவணி முதலாகக் கொள்ளப்பட்டது என்பர். இன்றும் மலையாள நாட்டில் ஆண்டுத் தொடக்கம் ஆவணியிருந்தே கொள்ளப்படுகின்றது. இப்பொழுது சித்திரை முதலாக ஆண்டுத் தொடக்கம் கொள்கின்றோம். இம்மாற்றம் என்று உண்டாயிற்று என்பது ஆராய்ந்து காண்டற்குரியது. ஆவணியும் புரட்டாசியும் கார்காலம்; ஐப்பசியும் கார்த்திகையும் கூதிர் காலம்; ...
image-18958

காதல்வாழ்வே இலக்கியத்தோற்றத்தின் விளைநிலம் – சி.இலக்குவனார்

       காதல் என்பது நாகரிகப் பண்பாட்டின் அளவு தெரிவிக்கும் உரைகல் என்றும் உரைக்கலாகும். சாதி மத நிலை வேறுபாடற்ற மக்களின் வாழ்வின் நிலைக்களமும், ஆண் பெண் சமத்துவ உரிமைப் பண்பும் காதலே. அக்காதல் வாழ்வே இலக்கியத் தோற்றத்திற்கு உரிய விளை நிலமாதலின் அது பற்றி இலக்கியத்தில் கூறும் மரபுகளைத் தொகுத்துரைப்பதே அகத்திணையியலாகும். செந்தமிழ்மாமணி முனைவர் சி.இலக்குவனார் : ...
image-18955

தமிழ்ப்பண்பாடே உலக நாகரிக ஊற்று – சி. இலக்குவனார்

       தமிழர்கள் வெளிநாட்டிலிருந்து வந்தவர் என்றும், ஆரியர்களால் நாகரிகர் ஆக்கப்பட்டவர் என்றும், திராவிடம் என்ற சொல்லிலிருந்தே ' தமிழ் என்ற சொல் தோன்றியது என்றும் உண்மை நிலைக்கு மாறாகக் கூறியவர்களும் உளர். ஆரியர்கள் கலப்பு ஏற்படுவதற்கு முன்னர் இருந்த தமிழகப் பண்பாட்டையும், நாகரிகத்தையும் தொல்காப்பியத்தினால் நன்கு அறியலாகும். அப் பண்பாடும் நாகரிகமும் இக் காலத்திலும் போற்றிக்கொள்ளக் ...
image-18945

வீரத்தமிழர் முன்னணியின் தமிழர் திருநாள், இலண்டன்

தை 02, 2047 / சனவரி 16, 2016   உலகெங்கும் பரவி வாழ்கின்ற எமது உயிருக்கு நிகரான தாய்த்தமிழ் உறவுகளுக்கு வணக்கம்   ஓர் இனத்தின் பண்பாட்டையும் மொழியையும் அழித்தால் அந்த இனத்தை அவர்களே அறியாதவண்ணம் அடிமைப்படுத்தி விடலாம் என்பது கடந்த காலத்தில் நடந்து முடிந்த வரலாற்றுப் படிப்பினைகள். இதை மிகச்சரியாக புரிந்து கொண்ட நமது முன்னோர்களும் ...
image-18987

இலக்கு – ஆண்டு நிறைவு

மார்கழி 06, 2046 / திசம்பர் 22, 2015 மாலை 06.30 சென்னை அன்புடையீர் வணக்கம்.                    இளைஞர்களுக்குத்  தன்னம்பிக்கை ஊட்டி, அவர்தம் ஆளுமைத் திறன் கூட்டி, குடத்து விளக்குகளைக் குன்றத்து விளக்குகளாக  ஏற்றி வைக்கும் பல்கலைப் பயிற்றகம்  இலக்கு.   இது -    * இளைஞர்களுக்கான இலக்கியப்  பல்லக்கு... * சாதனை இளைஞரின் சங்கப் பலகை...    2009 ஆம் ...
image-18912

தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 8 இலக்குவனார் திருவள்ளுவன்

(தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 7 தொடர்ச்சி) 08   “தமிழர் தமிழால் எல்லாவற்றையும் கற்கும் போதுதான் உண்மையான கல்வியைப் பெற்றவராவார். அவ்வாறு கற்காத காரணத்தினால்தான் இந்நாட்டில் அறிவியற் பேரறிஞரும் கலையியற் பேரறிஞரும், இருநூறு ஆண்டுகளாக ஆங்கிலத்தைக் கற்றும் தோன்றும் நிலை ஏற்படவில்லை. தாய்மொழி வாயிலாக உயர் கல்வியைக் கற்ற நாட்டில் ஆங்கிலத்தின் உதவியின்றியே உலகம் போற்றும் ...
image-18888

எழிலரசி அல்லது காதலின் வெற்றி 12 – பேரா.சி.இலக்குவனார்

(எழிலரசி அல்லது காதலின் வெற்றி 11 தொடர்ச்சி)   இருப்பின் துயரம்; இறந்தால் யாதோ?” என்றே யரற்றி ஏங்கிப் புலம்ப “பிறந்தோர் இறப்பது பெரிது மறிவாய் இறந்தோர் பொருட்டு ஏங்கிப் புலம்பி உடலும் உளமும் ஒருங்கே வாடி மாளும் வரையில் மகிழ்வு மற்று இறந்தோர் பலரும் எய்திய தென்னோ? இன்னும் சிலநாள் இருந்து மறைவோன் இன்னே மறைந்தனன் இதுவும் வியப்போ உலகிற் பிறந்த ஒவ்வொரு வருமே, ஒவ்வொரு தொண்டு செவ்விதி னாற்றக் கடப்பா டுடையர்; ...