image-9597

நாள்தோறும் நினைவில் : ஒன்றி வேலைசெய் – சுமதி சுடர்

ஒன்றி வேலைசெய் ஈடுபாட்டுடன் பணிசெய் விதிமுறைகளைக் கடைப்பிடி நேரத்தோடு இணைந்து செல் பாதுகாப்புடன் வேலைசெய் விளைவுகளைக் கவனத்தில் வை சமுதாயப் பங்கைஅளி கடமையில் கண்ணாயிரு வேலையில் நிறைவுகாண் நுட்பங்களைக் கற்றுக்கொள் நுட்பங்களைக் கற்பி ஐந்தொழில் செய்  - சுமதி சுடர், பூனா  
image-9593

“தமிழக மக்கள் முன்னணி” தொடக்கம்

'தமிழக மக்கள் முன்னணி” தமிழகத்தில் இயங்கி வரும் பத்துக்கும் மேற்பட்ட இயக்கங்கள் ஒருங்கிணைந்து ”தமிழக மக்கள் முன்னணி” எனும் ஒரு முன்னணி இயக்கம் தொடங்கியிருக்கின்றன. தமிழக மக்கள் புரட்சிக் கழகம் 2.தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலைக் கழகம் 3.தென்மொழி இயக்கம் 4.தமிழக மக்கள் விடுதலை இயக்கம் 5.தமிழர் தன்மானப் பேரவை 6.தமிழர் உரிமை இயக்கம் 7.தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் 8.புரட்சிக் கவிஞர் கலை இலக்கியப் பேரவை 9.தமிழர் விடுதலை கழகம் 10.தமிழ்நாடு ...
image-9589

கலைச்சொல் தெளிவோம் 23 : எக்கர் – Sand hill; sandy

எக்கர்-மணற்குன்று 23 எக்கர் - Sand hill; sandy   மணற்குன்று எக்கர் என்பது பெருமணற்பரப்பை, மணற்குன்றைக் குறிக்கும் 54 பாடல்கள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அவற்றில் சில : எக்கர் இட்ட மணலினும் பலவே (புறநானூறு: 43.23) நில வெக்கர்ப் பல பெயரத் (பொருநராற்றுப்படை: 213) தூஉஎக்கர்த் துயில் மடிந்து (பட்டினப்பாலை 117) படுசினை தாழ்ந்த பயிலிணர் எக்கர் (அகநானூறு 11.9) முழங்குதிரை கொழீஇய மூரி ...
image-9584

கலைச்சொல் தெளிவோம் 22 : அட்டில்- cuisine

அட்டில்- cuisine தமிழில் சமையலறை எனப் பொதுவாகச் சொல்லப்படுவது ஆங்கிலத்தில் இருவகையாகச் சொல்லப்படுகிறது; kitchen-அடுக்களை, சமையலறை என வேளாண்துறையிலும் மனை அறிவியல் துறையிலும் கையாளப்படுகின்றது. cuisine-என்பதும் சமையலறை என்றே கையாளப்படுகிறது. அவற்றுக்குத் தமிழிலும் தனித்தனிச் சொற்களைக் கையாளலாம். புனிற்றுநாய் குரைக்கும் புல்லென் அட்டில் - சிறுபாண் ஆற்றுப்படை 132 அறம்நிலைஇய அகன்அட்டில் - பட்டினப் பாலை 43 விருந்துண்டு ஆனாப் பெருஞ்சோற்று ...
image-9553

சிறுகதைப் போட்டி – (உ)ரூபன் & யாழ்பாவாணன்

(உ)ரூபன் & யாழ்பாவாணன் இணைந்து நடத்தும் உலகம் தழுவிய மாபெரும் சிறுகதைப் போட்டிக்கு அழைக்கிறோம்… வாருங்கள்… வாருங்கள்… சிறுகதைகள் அளிக்க வேண்டிய இறுதி நாள் தை 17, 2046 / 31.01.2015   போட்டியின் நெறி முறைகள்: 1. கொடுக்கப்பட்டுள்ள ஒரு தலைப்பைத் தோ்வு செய்து அதற்கான சிறுகதையை 250-350 சொற்களுக்கு மிகாமல் எழுத வேண்டும். 2. 100 மதிப்பெண்கள் வழங்கப்படும். 3. போட்டிக்கான சிறுகதையை ...
image-9578

இந்தியாவில் 32 இணையத்தளங்களுக்குத் தடை – மணி.மணிவண்ணன் கண்டனம்!

32 இணையத்தளங்களை இந்திய அரசு 'தடை' செய்தது சரியா? மணி.மணிவண்ணன் நன்றி : http://www.bbc.co.uk/tamil/india/2015/01/150101_inidiawebsite.shtml இந்தியாவுக்குள் இணையச் சேவை வழங்கும் தொலைத்தொடர்பு சேவை நிறுவனங்களுக்கு 32 இணையதளங்களைத் தடை செய்யுமாறு, இந்திய அரசு உத்தரவிட்டிருப்பதாக, இணையத் தன்னுரிமைக்கான செயற்பாட்டாளர்கள் குற்றம் சுமத்தியிருக்கிறார்கள். பெங்களூரைச் சேர்ந்த இணையம் - சமூகத்திற்கான மையம் என்கிற இணையத் தன்னுரிமைக்கான தன்னார்வத் தொண்டு அமைப்பு இந்திய ...
image-9576

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுக் குழு முடிவுகள்

தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் பொதுக் குழு சென்ற மார்கழி 13, 2045 / 28.12.2014 ஞாயிறு அன்று சென்னையில் கூடி எடுத்த ஒருமன முடிவுகள்:       1) தோழர் தியாகு இயக்கத்தின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விடுவிக்கப்படுகிறார்.       2) தோழர் வே.பாரதி இயக்கத்தின் புதிய பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார்.     ...
image-9572

மாந்தர்குல வரலாறு – சுமதிசுடர்

  கடற்கோளால் சிதறுண்டு கடல்கடந்து சென்றோம்; கற்றறிவின் துணைகொண்டு சூழலுக்குள் வாழ்ந்தோம்; அடக்குமுறை கொள்கையாளர் ஆட்சியினைப் பற்றி அழித்துவிட்டார் பண்பாட்டுக் கூறுகளை மெல்ல; கடந்துவந்த பயணத்தை ஓரளவே பதிந்தோம்; காணாமல் விட்டவற்றை கண்டறிந்து பதிவோம்; அடங்காத உணர்ச்சிநிலை ஆய்வுகளால் பயன்என் ஆய்வுசெய்யும் சித்தனாகி அறம்செழிக்கச் செய்வோம்.                                                                             -  சுமதிசுடர், பூனா
image-9544

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! – கவிஞர் தணிகைச்செல்வன்

எங்கேயும் நான் தமிழனாக இல்லை ! எங்கேயும் நான் தமிழனாக இல்லை! நாடாளுமன்ற மண்டபத்துக்கு வெளியே உயர்ந்தோங்கிய தூணோரம் ஒதுங்கி நின்று உள்ளே வரலாமா? என்று “இந்தி”ராணியிடம் உத்தரவு கேட்டு ஐம்பதாண்டு காலமாக அடிதொழுது கிடக்கிறாள் என் தாய். பள்ளிகளின் வாயில்களுக்கு வெளியே வறியவள் போல் நின்று தான் பெற்ற குழந்தைகளுக்குத் தாய்ப் பாலூட்ட ஆங்கிலச் சீமாட்டியிடம் இசைவு கோரி கண்ணீரோடு காத்து நிற்கிறாள் என் தாய். ஆலயத்துக்குள்ளே நடக்கும் ஆறுகால பூசைகளில் ஒரு காலத்துக்கேனும் என்னை உள்ளே விடக்கூடாதா- என்று சமசுகிருத எசமானியிடம் தட்டேந்தி நிற்கிறாள் என் தாய். இசை மன்றங்களின் குளிரூட்டிய ...
image-9540

தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! – பெருஞ்சித்திரனார்

வாழ்ந்தாலும் தமிழுக்கும் தமிழர்க்கும் வாழ்வேன்! வளைந்தாலும் நெளிந்தாலும் தமிழ்பொருட்டே ஆவேன்! தாழ்ந்தாலும் வீழ்ந்தாலும் தமிழ் மேல்தான் வீழ்வேன்! தனியேனாய் நின்றாலும் என்கொள்கை மாறேன்! சூழ்ந்தாலும் தமிழ்ச்சுற்றம் சூழ்ந்துரிமை கேட்பேன்; சூழ்ச்சியினால் பிரித்தென்றன் உடலையிருகூறாய்ப்போழ்ந்தாலும் சிதைத்தாலும் முடிவந்த முடிவே! புதைத்தாலும் எரித்தாலும் அணுக்களெல்லா மதுவே! - பாவலரேறு பெருஞ்சித்திரனார்
image-9538

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார்

பெண்ணுரிமைக் காவலர் பேராசிரியர் இலக்குவனார் மகன் என்னும் சொல்லைத் தெய்வப்புலவர்திருவள்ளுவர் கையாளும் இடங்களில் மகளைப் புறக்கணித்து மகனைமட்டுமேஉயர்த்தும் வகையில் அவர் எழுதியுள்ளதாகப்  பலரும்தவறானவிளக்கங்கள்அளித்துள்ளனர். இவற்றை மறுத்து மகன் எனக் குறிப்பிடும் இடங்கள் மகளுக்கும்பொருந்துவதைப் பேராசிரியர் விளக்குகிறார். சான்றோன் எனக் கேட்ட தாய், தந்தைமகற்காற்றும் நன்றி,  மகன் தந்தைக்காற்றும் உதவி, கொழுநன் தொழுதெழுவாள்முதலான குறளடிகளுக்கு ஆணையும் பெண்ணையும் இணையாகக் கருதிய ...
image-9535

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார் – முனைவர் மறைமலை

தமிழ் உரிமைப் ‘பேராசிரியர்’ இலக்குவனார்   எண்ணற்ற பேராசிரியர்கள் தமிழுக்குத்தொண்டாற்றியுள்ளனர். தமது ஆய்வு நூல்களின் வழியாகவும் உரைகளின் மூலமும்சொற்பொழிவுகளின் வாயிலாகவும் தமிழ் இலக்கிய இலக்கணங்களின் பெருமையை எடுத்தியம்பியுள்ளனர். ஆனால் தமிழுக்குத் தீங்கென்று உரைக்கக் கேட்டமாத்திரத்திலே நரம்பெல்லாம் இரும்பாக்கி நனவெல்லாம் உணர்வாக்கிக் கிளர்ந்தெழுந்து உரிமைப் போர்க்களம் புகுந்த போராளியாகத் திகழ்ந்த ஒரே பேராசிரியர் இலக்குவனார் மட்டுமேயாவர். தமிழ் வளர்த்த ...