image-16534

சீறிப் பாய்வேன் தமிழாலே! – இராம.குருநாதன்

கவிதைக்கு அழிவில்லை காற்றும் மழையும் அழித்தாலும்- என் கவிதைக் கனலுக் கழிவில்லை ஊற்றாய்ப் பெருகும் எண்ணத்தை- இனி உறைக்குள் போட மனமில்லை மண்ணும் மலையும் சரிந்தாலும்- என் மானிடப் பார்வைக் கழிவில்லை விண்ணும் கடலும் திரண்டாலும்- என்னுள் விரியும் கவிதைக் கழிவில்லை வெட்டிப் பொழுது போக்குவதை- நான் வீணில் என்றும் கழித்ததில்லை கொட்டிக் கிடக்கும் எனதுணர்ச்சி- களத்தில் கூர்மை வாளாய்க் களமிறங்கும் சொல்லும் பொருளும் உள்ளவரை- என்னுள் தொடரும் சமூகச் சிந்தனைகள் வெல்லும் என்கவி எனச்சொல்லி வித்தகம் பேச ...
image-16521

வரலாற்றுக் கல்விக்கான கையேடாக ‘வடகரை’ புதினம்

வரலாற்றுக் கல்விக்கான கையேடாக              ‘வடகரை’ புதினம் வெளிவந்துள்ளது - நூல் அறிமுகவிழாவில் எழுத்தாளர் இமையம் பேச்சு      திருச்சி.செப்.07. ’உயிர் எழுத்து’ பதிப்பகத்தின் சார்பில் திருச்சியில் தமிழக வேளாண்மைத்துறை இயக்குநர் முனைவர் மு. இராசேந்திரன் இ.ஆ.ப.,எழுதிய ‘வடகரை- ஒரு வம்சத்தின் வரலாறு’ புதினம் அறிமுக விழா திருச்சி கலையரங்கில் நடைபெற்றது.      இவ்விழாவிற்குத் தலைமையேற்ற எழுத்தாளர் இமையம் பேசும்போது, “ஒரு ...
image-16477

தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” – பொழிவு: முகிலை இராசபாண்டியன்

நாள்   : ஆவணி 25, 2046 / 11.09.2015, வெள்ளிக்கிழமை நேரம் : மாலை 4.30 மணி இடம் : கலையரங்கம், தமிழ் இணையக் கல்விக்கழகம் தமிழ் இணையக் கல்விக்கழகம் காந்தி மண்டபம் சாலை, கோட்டூர், சென்னை- 600 025.   வழங்கும்   தகவலாற்றுப்படை (திட்டத்தின்) தொடர் சொற்பொழிவு-11 “தமிழக வரலாற்றில் சங்க இலக்கியம்” என்னும் தலைப்பில் முனைவர் முகிலை இராசபாண்டியன் (பேராசிரியர், மாநிலக் கல்லூரி) அவர்கள் உரையாற்றுகிறார்.   அனைவரும் வருக! அன்புடன் இயக்குநர் தமிழ் இணையக் கல்விக்கழகம், காந்தி மண்டபம் சாலை, அரசு ...
image-16504

காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! – வித்யாசாகர்

 காற்றுவீசும் திசையெல்லாம் நின்று நீயும் வாழ்வாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! விண்ணை விரல்நுனியில் சுமக்கவும் உயரே பறந்து வான்முட்டி நிற்கவும் என்றோ கற்ற தமிழினமே1 காலத்தைக் காற்று போல கடந்துவந்துள்ளாய், உலகின் நாகரிகத்தில் உயிரெனக் கலந்துள்ளாய், ஊரின் பேரின் வாழ்தலின் இடுக்களில் மொழியாய் நிறைந்திருக்கிறாய் தமிழினமே! தமிழினமே! தமிழினமே! என் தமிழினமே! எங்கிருக்கிறாய் இன்று தமிழினமே! யாருக்கு கீழ்நின்று உன் மூச்சை விடுகிறாய் யாரை நம்பிக் கொண்டு இன்னும் உனை யிழக்கிறாய்! கடல் தின்றதில் கலங்காத நீ காற்று, ...
image-16394

நயினைத்தவம் மணிவிழா

நயினைத்தவம். அவர்களின் மணிவிழா சென்னை மேற்கு மாம்பலம் ஆனந்து சந்திரசேகரரங்கில் பன்னாட்டுத் தமிழுறவு மன்றம் சார்பில் ஆவணி 20, 2046 / செப்.09, 2015 காலை நடைபெற்றது. பெருங்கவிக்கோ வா.மு.சே.தலைமையில் கவிக்கொணடல் மா.செங்குட்டுவன், மேனாள் மாநகரத்தலைவர்(மேயர்) சா.கணேசன், மறைமலை இலக்குவனார் ஆகியோர் வாழ்த்துரைத்தனர். கனடாநாட்டுத்தமிழ் .எழுத்தாளர் நயினைத் தவம் ஏற்புரையாற்றினார். தமிழ்ப்பணிவா.மு.சே.திருவள்ளுவர் வரவேற்புரையாற்றினார். கவிச்சிங்கம் கண்மதியன் நன்றிநவின்றார். - மறைமலை இலக்குவனார்
image-16512

தொல்காப்பியர் சிலை – எதுவும் சொல்ல வேண்டுமா?

தொல்காப்பியர் சிலை -உங்கள் கருத்து என்ன? தலைநகரத் தமிழ்ச்சங்கம் குமரி மாவட்டம் காப்பிக்காட்டில் அமைக்க இருக்கும் தொல்காப்பியர் சிலை வார்ப்பாக்கத்திற்குச் செல்லக்கூடிய நிறைநிலையை எட்டியுள்ளது. இப்படங்களைப் பார்த்து மேற்கொண்டு செம்மையாக்கம்  தேவை யெனின் கருத்துரைக்குமாறு அன்புடன் வேண்டுகின்றோம். சற்றுப்  பெரிதாகக் காணச் சொடுக்கிப் பார்க்கவும் தொல்காப்பியர் சிலையமைப்புக்குழு