image-3082

தொல்காப்பிய விளக்கம் – 11: முனைவர் சி.இலக்குவனார்

தொல்காப்பிய விளக்கம் – 11 (எழுத்ததிகாரம்)   தொல்காப்பியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் (பங்குனி 23, தி.ஆ.2045 / 06, ஏப்பிரல் 2014 இதழின் தொடர்ச்சி)  ‘வல்லின மெல்லினமாறுகை’ (Convertablilty of surds and sounds) பழந்தமிழில் இல்லையென்பார் இந்நூற்பாவின் பொருளை நோக்குதல் வேண்டும். ஒலிப்பு வகையான் எழுத்தொலி சிறிதளவு மாறுபடுவதைக் கண்ட ஆசிரியர் தொல்காப்பியர், ஐயம் அறுத்தற்காகவே ...
image-3099

திருக்குறளில் உருவகம் – 5: பேராசிரியர் வீ. ஒப்பிலி

   (பங்குனி 23, தி.பி.2045 / 06 ஏப்பிரல் 2014   இதழின்  தொடர்ச்சி)    இனி நீர் உருவகமாகப் பயன்படும் மற்ற குறட்பாக்களை எடுத்துக் கொள்வோம். நீர் தூய்மையை உண்டாக்கும் தன்மையுடையது. புறத்தே தோன்றும் அழுக்கை நீக்கும் நீர் அகத்தே தோன்றும் வாய்மையின் உருவகமாகிறது. புறந்தூய்மை நீரான் அமையும் அகந்தூய்மை வாய்மையால் காணப் படும் (298)   வாய்மையின்மையால் நேரும் கேட்டினையும், அப்போது நீர் பயன்படாது ...
image-3089

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ படித்தேன்! இன்புற்றுக் களித்தேன்! – முனைவர் குமரிச் செழியன்

  இலக்கியத்திலிருந்து பெறப்படுவதுதான் இலக்கணம் என்றாலும் இலக்கியத்தின் அழகுக்கும் இளமைக்கும் கட்டுக்கோப்பு குலையாமல் காப்பதற்கும் இலக்கணம் முக்கியமானது. எனவே, இலக்கியத்திலிருந்து இலக்கணமும், இலக்கணத்தின் வழியே இலக்கியமும் வளம் பெற்று வளர்ந்த சிறப்பு தமிழ் மொழிக்கே உரியது. எனவே, இலக்கியம், இலக்கணம் என்பவை தூய தமிழ்ச் சொற்களே. எழுத்துக்களே இல்லாத மொழியில் சொல்கள் எப்படி இருந்திருக்க முடியும். எனவே, ...
image-3104

தமிழி – உரோமன் எழுத்துப்பெயர்ப்பு – 1 : முனைவர் இராம.கி

  ஒருங்குறியிற் தமிழ் - தேவைகளும், தீர்வுகளும் (Tamil in Unicode - requirements and solutions) என்ற கருத்தரங்கு மார்ச்சு 5 இல் தமிழிணையக் கல்விக்கழகத்தில் நடந்தது. அப்போது சென்னையில் நான் இல்லாததால் என்னாற் கலந்து கொள்ள இயலவில்லை. அதுபற்றித் தமிழிணையக் கல்விக்கழக நெறியாளரிடம் முன்னரே தெரிவித்திருந்தேன். அந்தக் கருத்தரங்கில் தமிழ்ப் பின்னங்கள், குறியீடுகள் - பெயரிடலும் ...
image-3085

‘‘தாய்மொழி விழிப்புணர்வு’’ – கவிஞர் சொ.நா.எழிலரசு

தமிழே குறி குறளே நெறி தமிழா! அறி தமிழுக்கு முதல் அகரம் தனிச்சிறப்பு ழகரம் ழகரம் பேசு சிகரந் தொடும் பேச்சு பிழையாகப் பேசாதே களையெனத் தழைக்காதே தமிழுடன் ஆங்கிலம் சோற்றுடன் கல் நீக்கிடு தனித்தமிழ் பேசு தமிழே நம் மூச்சு தமிழ்ப் பேசா வாய் தாங்கிடும் மெய் பொய் தமிழ் வாழ வாழ் தவறினால் தமிழ் பாழ்   ‘‘ழகரமாமணி’’ கவிஞர் சொ.நா.எழிலரசு செயலர், பொதுச்செயலர், தனித்தமிழ்ப் பயிற்றகம், தமிழ் ழகரப்பணி மன்றம், துரைப்பாக்கம், சென்னை.
image-3097

மொழித்திற முட்டறுத்தல் 1 – பெரும்புலவர் ந.மு.கோவிந்தராய( நாட்டா)ர்

  கட்டிளங் கன்னியாய்க் காலம் கடந்து நின்றாய் சொட்டும் அமிர்தத் துவர்வாயாய் -  மட்டில்லா மாட்சி யுடையாயிம் மாநிலத்தின் கட்டிலில் நீ ஆட்சி செய்வ தென்றோ அமர்ந்து.  ‘மொழித்திற முட்டறுத்தல்’ என்னும் இத்தொடர், இயற்றமிழ்ச் செய்யுட்களில் முன் பின்னாகக் கிடக்கும் சொற்களைக் கொண்டு கூட்டி முறைப்படுத்தி இலக்கண விதிகாட்டி விளங்க வைத்தல் எனப் பொருள்படும். ஈண்டெழுதப்படும் கட்டுரை இப்பொருள் குறித்ததன்று. மொழித் தோற்றம் ...
image-3040

தமிழ் எழுத்தொலிகளுக்கான ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை – கலந்துரையாடல்

 தமிழ்க்காப்புக்கழகமும் சென்னை மாநிலக்கல்லூரித் தமிழ்த்துறையும்  பிற தமிழ்க்காப்பு அமைப்புகளுடன் இணைந்து  தமிழ் எழுத்தொலிகளுக்கான  ஆங்கில ஒலி பெயர்ப்பு வரையறை - கலந்துரையாடலை நிகழ்த்தியது.   சென்னை மாநிலக்கல்லூரியில் உள்ள பேராசிரியர் பவெல் அரங்கத்தில்,தி.பி.2045 பங்குனி 23 / கி.பி.2014 ஏப்பிரல் 6 ஞாயிறு முற்பகல் இக்கலந்துரையாடல் நடைபெற்றது. திரு அன்றில் இறையெழிலன் வரவேற்புரை ஆற்றினார். திரு இலக்குவனார் திருவள்ளுவன் தலைமை ...
image-3031

இருபால் இளைஞர்களே! களம் புகுவீர்!

  நிகழும் சித்திரை 11, ஏப்பிரல் 24 அன்று நாடாளுமன்றத்தேர்தலுக்கான வாக்குப் பதவி நடைபெறுகிறது. தமி்ழ் மக்களுக்கு எதிரானவர்களுக்குப் பாடம் புகட்டவும், தமிழ்நாட்டிலாவது தமிழ் வாழ வகை செய்வோருக்கு வாக்களிக்கவும் உரிய களமாக இதைக் கருத வேண்டும்.  அரசியல் ஊழல் கறை படியாத இருபால் இளைஞர்களும் மாணாக்கர்களும் தேர்தலில் முதல்முறை வாக்களிப்பவர்களும்  முயன்றால்  தவறான  பாதையில் ...
image-3023

ஈரோடு தமிழன்பன் முத்துவிழா – பங்குனி 25, 2045 சென்னை

ஒய்.எம்.சி.ஏ. பட்டிமன்றம் நடத்தும் கவிஞர் ஈரோடு தமிழன்பன் முத்து விழா 08.04.2014  செவ்வாய்க்கிழமை மாலை 6-00மணி       எசுபிளனேடு ஒய்.எம்.சி.ஏ.அரங்கம், சென்னை தமிழன்பனைப் பற்றிய பார்வை அவரது படைப்புத் தலைப்புகள் மூலம் - பேரா.மறைமலை இலக்குவனார் ‘தமிழன்பன் கவிதைகள்’ வாசகர் உள்ளத்தில் ஏற்படுத்திய ‘சிலிர்ப்புகள்’(1970) மதிப்பீடுகள்(2002) எவற்றாலும் அளக்கமுடியாதவை. கவியரங்கங்களில் அலைமோதும் சுவைஞர்வெள்ளத்தை நீந்தி அந்தப் பாட்டுத் ‘தோணி வருகிறது’என்றால் கேட்டுக் ...
image-3017

மாமூலனார் பாடல்கள் – 13 : சி.இலக்குவனார்

   (பங்குனி 09, தி.ஆ.2045 / 23, மார்ச்சு 2014 இதழின் தொடர்ச்சி) 13.பொருள்வயின் நீடலோ இலர் - தோழி   – சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார்    (தலைவன் பொருள்தேடச் சென்றபின் வருந்தும் தலைவியும் ஆற்றும் தோழியும்) தோழி : அம்ம! ஏன் இப்படி நினைந்து நினைந்து வருந்துகின்றாய். கண்ணீர் ஆறாகப் பெருகிவழிந்தோடுகிறதே. தலைவி : இளமை நிலைத்து நில்லாது ...
image-3003

மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு – 2014

அன்பார்ந்த தமிழ் உறவுகளே... வணக்கம். மியன்மா-மலேசியா-சிங்கப்பூர் தமிழ் உறவுப்பாலம் மாநாடு (2014) என்ற தமிழ் உறவுகள் ஒன்று கூடி மொழி, இனம், கல்வி, பண்பாடு போன்ற சிறப்பியல்புகளைப் பரிமாற்றம் செய்யும் மாபெரும் நிகழ்வுகள், மியன்மா நாட்டின் வணிக நகராம் யாங்கோன் நகரில் 2014 சூன் திங்கள் 6,7,8 ஆகிய நாட்களில் சிறப்புடன் நடைபெறும். உலகத் தமிழ் உறவுகள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். மலேசியா-சிங்கப்பூர் ...
image-2992

குறள் நெறி – மே.சி.சிதம்பரனார்

குறுமை என்ற பண்பின் பெயர் அப்பண்பினையுடைய பாவிற்குப் பெயராகி, மை விகுதி குன்றி, அள்சாரியை பெற்று, குறு + அள் = குறள் என்றானது. ஒரு தடியில் துண்டித்ததடி குறுந்தடி. ஒரு அரிசியில் துண்டித்த பகுதி குறுநொய் (குறுணை) என்றாங்கு முதற்பாவான ஒரு வெண்பாவின் நான் கடியிற்றுண்டித்த ஒன்றே முக்காலடி, குறள் எனப் பண்பாகு பெயர் ...