சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 4

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்   4 வீர நெஞ்சத்தாலும் ஈர உணர்வாலும் நிகரற்று விளங்கியவன் வேள்பாரி. அவன் ஆண்ட பறம்பு மலை, பகை வேந்தர் பல்லாண்டு முற்றுகையிடினும் ‘கொளற்கரி தாய்க் கொண்ட கூழ்த்தாகி அகத்தார் நிலைக்கெளிதாய்‘ (குறள், 745) அரண் ஆற்றல் மிக்கதாய் விளங்கியது. கலப்பை ஏந்தும் உழவர் எல்லாரும் கூர்வாள் ஏந்திப் போர் முனை புகினும் சிறியிலை மூங்கிலின் நெல்லும், தீஞ்சுவைப் பலாவின் சுளையும், வள்ளிக்கிழங்கும், நறுஞ்சுவைத் தேனும் வேண்டளவும் கிடைக்கும் வற்றா வளமுடையது அவன்…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3.

 (சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள்   3 1. கபிலர்  தொடர்ச்சி  மாவும் பலாவும், வாழையும் வள்ளியும், ஆரமும் கமுகும், வேங்கையும் விரிமலர் வெட்சியும், தேனும் தினையும் பெருகிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் இயற்கை அன்னையின் இன்பத் திருவிளையாடல் ஏற்றமுற்று விளங்குவது இயல்பேயன்றோ? அத்தகைய பல்வளமும் மல்கிக் கிடக்கும் பேறு பெற்று விளங்கியது மாவண்பாரியின் புகழ் பரப்பும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த பறம்பு மலை. பறம்பின் வளத்தைக் கபிலர் பாடியுள்ள திறத்தினை என்னென்று போற்றுவது! சங்கச் சான்றோர்க்கே உரிய…

சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2

(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. தொடர்ச்சி) சங்ககாலச் சான்றோர்கள்   2  1. கபிலர்  ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நம் தாயகமாம் தமிழகம் இயற்கை வளனும் செயற்கைத் திறனும் நிறைந்து, அறிவும் ஆண்மையும் அருளும் பொருளும் நிறைந்த இன்பத் திருநாடாய்க் காட்சியளித்தது. கலை வளமிக்க புலவர் கவித்திறத்தாலும், கொடை வளமிக்க புரவலர் கருணைத் திறத்தாலும், வேலெதிர் வரினும் அஞ்சி இமையாத விழிகள் படைத்த வீரர் நெஞ்சுரத்தாலும், ‘மக்களின் உயிர் நான்,’ என உணரும் உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சிய கோவேந்தரின் நெறி…

தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்! – வ.சுப.மாணிக்கம்

தமிழ்மொழியின் சிறப்பே அகத்திணைதான் என்று சொல்லாமல் சொன்ன கபிலர்!   தமிழ்த் தொல்லிலக்கணன் தொல்காப்பியன் அகத்திணையின் இயல்பு தெரிவிக்க, அகத்திணையியல், களவியல், கற்பியல், பொருளியல் என இயல் நான்கு வகுத்துள்ளனன். புறத்திணையின் இயல்பு தெரிவிக்கவோ, அவனால் எழுதப்பட்ட இயல் ஒன்றே. சங்கப் பெருஞ்சான்றோர் கபிலர், ஆரியவரசன் பிரகதத்தனுக்குத் தமிழின் மேன்மையை அறிவுறுத்த விரும்பினார்; விரும்பியவர் அவனுக்கெனத் தாமே குறிஞ்சிப்பாட்டு ஒன்று இயற்றினார். இஃது ஓர் அகத்திணைப்பா. கபிலர் புறம் பாடாது அகம் பாடிய நோக்கம் என்ன? தமிழினத்தின் அறிவுச் சின்னம் அகத்திணைப் படைப்பு; தமிழ்மொழியின்…

சங்கக்கால வாழ்த்துகள் சில!

வாணாள்   வாழ்த்து             பசி இல்லாகுக பிணிசேண் நீங்குக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 5             அறம் நனி சிறக்க அல்லது கெடுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 7             அரசுமுறை செய்க! களவுஇல் ஆகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 8             நன்று பெரிது சிறக்க! தீது இல்லாகுக! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 9             மாரி வாய்க்க! வளம் நனி சிறக்க! ஓரம்போகியார் : ஐங்குறுநூறு : 10             ஆயிர வெள்ள ஊழி வாழி!…

மழை வேண்டாம்! – கி.வா.சகந்நாதன்

  “மழை வேண்டாம்!” என்று அவர்கள் சொன்னார்கள். ‘இப்படியும் சொல்வார் உண்டோ?’ என்று நமக்குத்தோன்றுகிறது. எத்தனையோ காலமாக மழையைக் காணாமல் பஞ்சத்தில் அடிபட்ட நமக்கு, “வருமா, வருமா” என்ற ஏக்கம் இருப்பதுதான் இயற்கை. ஆனால், நமக்கு வேண்டிய மழை பெய்து, அதற்கு மேலும் மழை கொட்டு கொட்டென்று கொட்டி ஆற்றில் வெள்ளம், ஏரியில் உடைப்பு, குளங்களில் கரைகள் உடைந்து எங்கும் வெள்ளம் என்ற நிலை ஏற்பட்டால், “மழையே! மழையே! வா,வா!” என்றா பாடுவோம்? “கடவுளே! இப்போதைக்கு மழை வேண்டாம்” என்றுதான் சொல்வோம். மழை பெய்யாமலும்…