குறள் நெறி வாழ்க – கவிஞர் கதி.சுந்தரம்

1. தமிழினமே! எழுந்தார்த்துக் குறளென்னும் கேடயத்தைத் தாங்கி நின்றே இமிழ்கடல்சூழ் உலகுய்ய வழிகாட்டு! கலையூட்டு! எழிலை ஈட்டு! குமிழியெனும் இளமைதனைக் கொழிதமிழின் குறள் நெறிக்கே கொடுத்து வாழ்வாய்! அமிழ்தனைய வளம்பலவும் நாடெய்தும்; ஆல்போலப் பெருகி வாழ்வாய்! 2. தூளாக்கு வஞ்சகத்தைத் தோள்தூக்கு முயற்சிக்கே என்று பாடி. ஆளாக்கும் குறள்நெறியை அவனியெலாம் பரப்பிடுவீர்! முழக்கம் செய்வீர்! தாளாற்றிப் பொருள் சேர்ப்பீர்! தருபுகழைப் பெற்றுவாழ்வீர்! வேற்று நாட்டார் கேளாத பழங்காலம் கிளைவிரித்தே அறமுரைத்த குறளே! வாழ்க!!  – குறள்நெறி தை 2, 1995 /15.01.1964

தமிழ் வாழ்க நாளும் – நாமக்கல் கவிஞர்வெ.இராமலிங்கம்(பிள்ளை)

தமிழென்று தருகின்ற தனியந்தப் பெயரில் அமிழ்தென்று வருகின்ற அதுவந்து சேரும். நமதிந்தப் பெயர்கொண்ட மொழியென்ற எண்ணம் தமிழர்க்குப் புகழ்மிக்கத் தருமென்றல் திண்ணம்.       1 பயிருக்கு நீர்என்ற பயன்மிக்க வழியே உயிருக்கு வெகுநல்ல உணர்வுள்ள மொழியே. துயருற்ற மனதிற்குத் துணைநின்றே உதவும்; அயர்வற்ற ஞானத்தை அடைவிக்கும் அதுவே.       2 அன்பென்று அதைமிக்க அறிவிக்க நின்று துன்பங்கள் தருகின்ற துயரத்தை வென்றே இன்பத்தின் நிலைசொல்ல இணையற்ற வழியாம்; தென்புள்ள தமிழென்று திகழ்கின்ற மொழியாம்.       3 அருளென்ன உலகத்தின் அறிவாள ரெல்லாம் பொருள்கொள்ளும் பொருள்தன்னைப் புரிவிக்கும் சொல்லாம்; இருள்கொண்ட…

வெல்க குறள் நெறி – புலவர் வேலவன்

  1. கூடல் நகரில் குறள்நெறித் தென்பெருகி ஓடல் இனிதே உவந்தது. 2. குறள் நெறிப் பூங்குயிலே கொள்கைப் புரட்டர் குரல்நெறிக்க வந்தாயோ கூறு. 3. எழுதத் தெரிந்தோர் எழுத்தாள ராகுந் தொழுநோய் துடைப்பாய் துணிந்து. 4. பிறழ்நெறியே பேசுகின்ற பித்தருளும் மாற குறள்நெறியே கூவு குழைந்து. 5. அருள்நெறி பேச அவம் செய்து வாழும் இருள்நெறி யாளரை எற்று. 6. பாலில் நீர் பெய்துவிற்கும் பாவியரைப் போலெழுது நூலில்தீச் சொற்கலப்பின் நூறு. 7. குறுக்குவழி யோடுங் குறுமதியைக் கொட்டிப் பொறுப்பு வழிகாட்டிப் போற்று,…

என்றும் உள்ள தென்றமிழ்- நாமக்கல் கவிஞர்

  அமிழ்தம் எங்கள் தமிழ்மொழி        அன்னை வாழ்க வாழ்கவே. வைய கத்தில் இணையி லாத               வாழ்வு கண்ட தமிழ் மொழி        வான கத்தை நானி லத்தில்               வரவ ழைக்கும் தமிழ்மொழி பொய்அ கந்தை புன்மை யாவும்               போக்க வல்ல தமிழ்மொழி        புண்ணி யத்தை இடைவி டாமல்               எண்ண வைக்கும் தமிழ்மொழி மெய்வ குத்த வழியி லன்றி               மேலும் எந்தச் செல்வமும்        வேண்டி டாத தூய வாழ்வைத்               தூண்டு கின்ற தமிழ்மொழி…

வேண்டும்! வேண்டும்! – ஓ.மு.குருசாமி

  தாய்மொழியாம் தமிழ்மொழியைக் காக்க வேண்டும்! தளராமல் எந்நாளும் உழைக்க வேண்டும்! வாய்மொழியைச் செயலுருவா ஆக்க வேண்டும்! வள்ளுவர்தொல் காப்பியமும் பரவ வேண்டும்! ஆய்வுரைகள் தமிழ்மொழியில் பெருக வேண்டும்! தண்டமிழே தலை சிறந்து விளங்க வேண்டும்! ஓய்ந்துவிடும் மனமுடையார் குறைய வேண்டும்! உலகமெலாம் தமிழ்நூல்கள் செல்ல வேண்டும்! திருவுடைய ‘குறள் நெறியே’ பரவ வேண்டும்! தினந்தினமும் திருக்குறளை ஓத வேண்டும்! அருளுடையார் அன்புடையார் பெருக வேண்டும்! அறிவுடையார் மொழிகாக்கக் கிளம்ப வேண்டும்!. உருவடைய நற்செயலை ஊக்க வேண்டும்! உண்மைக்கு வணக்கமதைச் செய்ய வேண்டும்! இருளுடைய…

பிறமொழி கலந்து பேசக் கூசு ! – கவிஞர் இரா .இரவி !

  இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் ! ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் ! திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் ! திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் ! எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ் ! எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் ! உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக ! உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக ! உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் ! உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ்…

கருப்புச் சூரியன்களுக்கு நடுவே – பாவலர் வையவன்

கறுக்கும் கருப்புச் சூரியன்களுக்கு நடுவே தளிரிலையால் தடவிவிடும் அன்புத்தாய் – நன்று அறிவித்தாய்! மூவுயிரைக் காக்கும் உந்தன் ஆணை ! – உனக்கு நிகராகக் காட்ட முடியாதொரு ஆணை !

நம்மாழ்வார் – திருக்குறள் பாவலன் தமிழ்மகிழ்நன்

 சேற்று வயலில் செம்மண் நிலத்தில் ஆற்றில் காட்டில் அணையில் மலையில் காற்றில் தோய்ந்து களமதில் காய்ந்து மாற்றம் வேண்டி மனம்மிக ஒன்றி ஊரினை நாட்டினை உழைக்கும் உழவரை பாரினை பண்டைய வாழ்வினைக் காக்க ஏரினைத் துவக்காய் எடுத்த பெரியோய்! ஆளும் அரசுகள் செய்யும் அழிம்புகள் நாளும் உழவரை நாச மாக்கிடும் கேட்டினைத் தடுக்க கீழ்த்திசை வானில் மூட்டிய நெருப்பாய் முகிழ்த்த கதிரே! உடையில் உணர்வில் உரிமை மீட்பில் தடைகள் தகர்த்திடும் தன்னல மறுப்பில் நடையால் நானிலம் நிமிர்த்தும் உழைப்பில் திண்மை நெஞ்சில் திறனில் நீயெம்…

“இனிமைத் தமிழில்” மை!

இனிமைத் தமிழில் இருக்கின்ற ” மை ” விகுதிக்       கனிவான மூவெழுத்துச் சொற்கள் எவையெனஎன் கருத்தாய்வில் முனைந்து பொருத்தத் தேடினேன்      திருத்தச் சொற்களைக் குருத்தாய்க் கூறுகிறேன். அண்மை யோடருமை அடிமை இம்மை இனிமை இருமை இளமை இறைமை இன்மை இலாமை யோடுஆளுமை ஆடுமை ஆண்மை ஆணுமை ஆடாமை ஆளாமை ஆணிமை ஆகாமை ஈகாமை உரிமை      உடைமை உண்மை உம்மை உவமை உறாமை ஊராமை ஊர்மை ஊதாமை      ஊதுமை ஊடாமை ஊடுமை எண்மை எளிமை எருமை எம்மை எழுமை     …

மண் பறித்த மானம்! -இளையவன் செயா

விடுதலையே எம்பிறப்புரிமைஅவ் வேட்கைக்குக்        கெடுதல் செய்வோரையும் கெடவைத்த வீரமிகு  நேத்தாசியைப்பெற்று  வளர்த்த       வங்கமண்  இன்று தொங்கிவிட்டதே ! மொழிஅது தாய்காத்த விழிஅந்த        விழியை அழிப்பதற்கு விழையாதீர் விழைந்ததால் தான்பெற்ற”சர்” விருதையும்        பிழையான விருதுஎனப் புறமொதுக்கி பிழைப்புக்காக ஏந்திய பித்தலாட்டத்தைக்       கழையாக  நினைத்தொடித்த  கவிஞர் பிழையில்லா  இரவீ ந்திரநாத் தாகூர்       பிறந்திட்ட மண்அதுவே வங்கமண் ! விடுதலை  வேட்கையால்  வீறுகொண்டு       கெடுதலையே  செய்யும்   கேடர்களை வெற்றிகொள்ள  வீரமுழக்கமிட்ட வீரர்கள்       வற்றிப்  போகாதமண்   வங்கமண் !…

வாழ்ந்தேதான் காட்டிடுவோம் – இளவல்

வாழ்க்கை என்பது போராட்டம்   –  எனில் போரில் கலந்து வென்றிடுவோம் வாழ்க்கை என்பது விளையாட்டு –  ஆயின் ஆடி வாகை சூடிடுவோம் வாழ்க்கை என்பது பயணம்        –   ஆனால் இனிதே இலக்கை அடைந்திடுவோம் வாழ்க்கை என்பது கேளிக்கை  –     என்றால் பார்த்து நாமே மகிழ்ந்திடுவோம் வாழ்க்கை என்பது கணக்கு       –  எனவே போட்டுப் பார்த்துத் தேர்ந்திடுவோம் வாழ்க்கை என்பது வரலாறு          – அதனால் செம்மைச் செயலைப் பதித்திடுவோம் வாழநாமும் பிறந்து விட்டோம் வாழ்ந்தேதான் காட்டிடுவோம் எத்தனைத் தடைகள் வந்தாலும் அத்தனைப் படிகளாய் மாற்றிடுவோம் மெல்ல…

பழி வராமல் படி – பாவலர் வையவன்

ஆய்ந்து படி அன்னைத்தமிழ் ஆய்ந்து படி அதனையும் ஆழ்ந்து படி பார்மொழியாம் தமிழ் படி பழகுதமிழ் நீ படி யார்மொழியின் நூலெனினும் பசுந்தமிழில் பாயும்படி புதைபடும் தமிழ்மடி பொலிவினைக் காணும்படி புதுப்புது நூல்கள் படி புரட்சிவர நீயும் படி புகுந்திள நெஞ்சினிலே புதுஒளி பாயும்படி புனைந்துள நூலெதையும் புரியும்படி தேடிப் படி பகுத்திடும் நால்வருணம் பாரினில் ஏன்இப்படி? பகுத்தறி வாளர்களின் பலவிதநூல் வாங்கிப் படி கலைகளில் தமிழ் படி கல்வியிலும் தமிழ் படி அலைபடும் ஆலயத்தில் ஆட்சியினில் தமிழைப் படி திருமணம் தமிழ் படி…