முள்ளிவாய்க்கால்

  எங்கள் தேவதூதுவனின் இறக்க முடியாத சிலுவையைப் போல் என் மனக்கிடங்கினுள்ளும் அமிழ்ந்து கிடக்கும் பளுவையும் என்னால் இறக்க முடிவதில்லை! ஓட ஓட விரட்டப்பட்டோம் ஒன்றின் மேலொன்றாய்ப் பிணமாய் வீழ்ந்தோம் வீழ்த்தி விட்டோமென்ற வெற்றிக்களிப்பில் இன்று நீ வீழ்ந்து கிடக்கின்றாய்! பார் விழிகளில் நீர் வழிய வீதிகளில் நாங்கள் வெதும்பிக் கிடக்கின்றோம் கொடி ஏற்றி, கொலு வைத்து குடம் நிறைந்தது போலநிறைந்த நிறைந்த எம் வாழ்வில் குடியேற்றங்களுக்காய்க் காத்துக்கிடக்கின்றோம் அகதிகளாகி! அழகுதமிழ்ச் சோறும் ஆடிக்கூழுமுண்ட எங்கள் வாயினுள் பரிசென்று பால்சோறு திணிக்கின்றாய் நீ புசிக்கின்றோம்…

பொங்கி எழு தமிழா பொங்கி எழு! – கவிச்சிங்கம் கண்மதியன்

  கரைக்காயைப் போன்றிருக்கும் ஈழ நாட்டில் கண்டைக்காய் என நினைத்துத் தமிழர் தம்மை  வெறிநாயாய்க் கடித்திங்கே குதறி மாய்த்தான்! வெந்தணலில் இராசபக்சே குளியல் போட்டான்! அரக்கனந்தக் கொடியவனின் இலங்கை நாடா அமைதிபுத்தன் அறத்தினையும் போற்றும் நாடு? கரைமீதில் எழுந்தகடல் சுனாமி போல கயவனவன் மனிதநேய மாண்ப ழித்தான்! விண்மழையாய்க் குண்டுமழை கொத்துக் கொத்தாய் விழுந்ததடா அப்பாவித் தமிழர் மேலே! புண்மீது நெருப்பானான் இராச பக்சே! புத்தனுக்கே களங்கத்தைச் சேர்த்த ‘கோட்சே’! பெண்டிர்தம் கற்புமங்கே குரங்கின் கையில் பிடிபட்ட மாலையாகிப் பிய்ந்த தாச்சே! கண்விழித்துப் பூமி…

வீழ்ந்ததெல்லாம் விதை – உமா சுப்பிரமணியன்

சுய மண்ணைச் சுடுகாடாய், பிணப்பண்ணை ஆக்குகின்றான் சுண்டினால் சுருண்டு விடும் சுண்டைக்காய் தேசத்தான் சுழல் தெரிந்திருந்தும் சூறையாட விட்டு விட்டோம். கருவியோடு களமிறங்கிய காவல்தெய்வம் ஆயிரம் குருதியோட, கொலையுண்ட குடும்பங்களோ மாயிரம் நூறாயிரம் பொறுமையோடு பார்த்திருக்க பொம்மைகளா அழிந்தது? ஞாலத்து மக்களிலே ஈழத்துத் தமிழனின் இனம் செத்துக் குவிவதை தினம் பார்த்துக் குமைவதை விதியென்று விடலாமா தமிழனே முடிவொன்று முனைவோம் வா போராடத் துணிந்தெழுந்தான் புலிக்கூட்டம் வழிநடத்த அப்பாவித் தமிழர்களின் கொடும்பாவியைக் கொய்திட அர்ப்பணித்தான் வாழ்வெல்லாம் சமர்ப்பித்தான் சக குடும்பம் பிணம் தின்னும் கமுகனை,…

முற்காலத்தில் – சுருதி (இளையவள்)

மக்கள் ஆடிப்பாடி வாழ்ந்த ஊர் நேற்று அழுகுரல் எழுந்து ஊழித் தாண்டவமாடி இன்று சுடுகாட்டுச் சாம்பலாய்க்கிடக்கிறது தொடர் வேவுவிமான இரைச்சலில் மழையாயிற்று எறிகணை இழந்த உறவுகள் போக எஞ்சியவர் சித்தம் இழந்தனர் எல்லாம் சூனியமாயிற்று அழுகுரல் நிரம்பிய மண் அதிர்விலிருந்து மீளவில்லை முள்ளிவாய்க்கால் முள்ளாய் தொண்டையில் சிக்கிற்று தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383

முள்ளிவாய்க்கால் ஓரத்திலே – ஓவியா

  விடிவு முடிவான காலத்திலே அங்கும் இங்கும் எங்கும் ஒப்பாரிகள் முதுமையான பசுமை நினைவைச் சுமக்கும் வாய்க்கால் இப்போது பயங்கரமாய் இரத்தம் கலந்த சிவப்பாய் மனிதரை அல்ல சடலங்களைச் சுமக்கிறது   கந்தகப்புகையை சுவாசித்து வாழ்ந்த மக்கள் கையில்லாமலும் காலில்லாமலும் சிறைப்பிடிக்கப்பட்டார்கள் தரவு : (இ)லியோ நன்றி : leomalar.blogspot.com http://www.yarl.com/forum3/?showtopic=103383

என் தேசக் காற்றே..! – நா.நிரோசு

    செந்தமிழ் பேசும் என்தேசக் காற்றே செங்கடல் தாண்டி வந்து என்தேகம் தூண்டிவிடு…! ஈழமண்ணின் ஈரம் கொண்டு இந்தப் பாலை மண்ணை பனிமலர்த் தோட்டமாய் மாற்றிவிடு…! தாயகம் தாண்டி வந்து தவிதவிக்கும் நேரம் இது தடையின்றித் தாவிவந்து – என் தலையைக் கோதிவிடு…! அம்மாவின் கைச்சோறு அன்பான சாப்பாடு அந்தநாள் நினைவுகளை அள்ளிவந்து ஊட்டிவிடு…! ஆண்டுகள் பல கடந்தாலும் அன்பு நெஞ்சங்கள் மறந்தாலும் என்தமிழே நீமட்டும் என்னோடு வாழ்ந்துவிடு…! http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211564

நாங்கள் மனிதரில்லை! – பா. உதயகுமார், நோர்வே

ஓர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில் எலும்பும் சதையுமாக எரிந்து கொண்டிருந்தது முள்ளிவாய்க்கால். இறந்த தாயின் முலையில் குழந்தை பால் குடிக்க இழுத்து வந்து நெருப்பு மூட்டினர் இருளின் நடுவே சிலுவை தாங்கி இறைவன் வருவான் என நிலவைப் பார்த்தோம் கண்களை மூடி இது உன் விதி என்றது எங்களின் வீட்டினுள் யூதர்கள் நுழைந்தனர் யேசுவைக் கேட்டனர் ஆயிரம் ஆயிரம் சிலுவையில் அவர்களை அறைந்தனர் அடையாளம் காட்ட யூடாசு வந்தான் மாவீரன் கல்லறையில் மீண்டும் இரத்தம் வடிய உயிர்த்திருந்தவர்களை இன்னொருமுறை புதைத்தனர் கனவுகள் உடைந்து…

படத் தொழில் வளர

பாடுமிடம் தெரிந்து பாடவேண்டும் – ஆடுவோர் பாட்டின் பொருள் உணர்ந்து ஆட வேண்டும் – கவிஞன் (பாடும்) பாடும் படக் கலைக்கும் பாடுபட்டோர் தமக்கும் பலருக்கும் பலனளிக்கும் பக்குவ மிருக்கும்படி (பாடும்) கலைஞர்களைக் குழுவாய்க் கூட்ட வேண்டும் – முதலில் கதையமைப்பை விளக்கிக் காட்டவேண்டும் – அந்தக் கருத்தோ டிணைந்து கவிதீட்ட வேண்டும் – அதில் காலத்திற் கேற்ற சுவையூட்ட வேண்டும் – கவிஞன் (பாடும்) ஆடற்கலைக் கழகு உடலமைப்பு-இன்னும் அகத்தின் நிலை விளக்கும் முகக்குறிப்பு பாடற்கலைக் கழகு இசையமைப்பு – கலை பலருழைப்பால்…

அருட்பா திருக்குறட்பா

     பேராசிரியர் வெ.அரங்கராசன் முன்னாள் தமிழ்த்துறை தலைவர் கோ.வெங்கடசுவாமி நாயுடு கல்லூரி கோவிற்பட்டி- 628 502. கைப்பேசி: 98409 47998.   குறும்பா, பெரும்பா, அரும்பா… அறம்பொருள் இன்பம், தரும்பா… விரும்பா தவரும், விரும்பும் நறும்பா, அருட்பா குறட்பா… எறும்பா உழைத்திட அரிவினைத் தரும்பா, பெரும்புகழ் பெரும்பா… இரும்பா இருப்போர் தமையும், கரும்பாக் கரைக்கும், குறட்பா… விருப்பா? வெறுப்பா? இரண்டையும் அறுப்பா, எனச்சொலும் திருப்பா… திறப்பா, படித்துப் பறப்பா… நெறிப்பா, குறிப்பா இருப்பா… அயிர்ப்பா, உரிப்பா, உயர்த்தும் உயிர்ப்பா, உரைப்பா, உணரப்பா… கோலப்பா,…

தமிழகச் சிறப்பு – கவிஞர் முடியரசன்

  அலையெழு நெடுங்கடல் ஆடை உடீஇய நிலமகள் தனக்கு நிறைமதி முகமெனும் நாவலந் தீவின் நாடியாய் விளங்கும் பாவலர் புகழ்தரு பண்டைத் தமிழகம்                 மேவலர் அணுகா வீரங் கெழுமிய 5   காவலர் மூவர் கயல்புலி வில்லெனும் கொடிமூன் றுயர்த்திக் கோலோச் சியது; சங்கம் நிறீஇத் தமிழ்மொழி ஓம்பிப் பொங்கும் புகழ்வரப் பொலிந்தநன் னாடு; `யாதும் ஊரே யாவரும் கேளிர்’என்      10          றோதி ஓதி உயர்ந்ததோ டன்றி வருபவர் தமக்கெலாம் வணங்கி வரவுரை தருவது தொழிலாத் தான்கொண்…

ஓயாத கவிதைத்தேன்

1. முல்லைமலர் என விளங்கு தமிழைக் காத்த மூவேந்தர் பரம்பரையின் முதல்வனானாய்! சொல்மலர வில்லையடா இறந்த சோகம்! சுட்டெரிக்கக் கனலானாய்! கவிதைத் தேனீ! எல்லையில்லாப் பெரும் பயணம் தொடங்கி விட்டாய் எரிமலையே தமிழ்காத்த வலிய கோட்டை கல்லுடைந்து வீழ்ந்ததுவோ? கால வேந்தன் கைகளினைப் பஞ்சணையாய் ஆக்கிக் கொண்டாய். 2. தூய தமிழ்க் கணையெடுத்துப் பகையை வென்று தூளாக்கித் தலையெடுத்தாய்; குயிலதாகி ஓயாத கவிதைத்தேன் ஊற்றி வைத்தாய் உன் மொழியால் தென்னகத்தார் நெஞ்சில் வேகம் பாய்ந்ததடா பகை முடிக்கத் திரண்ட காலை படை முதல்வா நீ…

பாரதிதாசர்க்கு இரங்கற்பா

ஒப்பில் புலவர் உயர்வில் கலைஞர் இப்புவி கண்ட எதிரிலா வலத்தினர் தமிழ்த்தாய் புதல்வர் தனித்தமிழ்க் காவலர் தாழ்த்தாத் தலையர் தளரா நெஞ்சினர் பாரதி தாசர் பான்மை பலப்பல பாரும் அறியும் ஊரும் உணரும் இத்தகு சிறப்பில் ஏமமுறு கவிஞர் கத்தவே எம்மைப் பிரிந்தது என்கொல்? தமிழர் உணர்வறைப் போயது கண்டோ? தமிழ்மொழி தமிழகத்தில் தளர்வற உணர்ந்தோ? இந்திக் கிங்கே இடம் வரக் கண்டோ? எதனால் புத்தேன் உலகம் புக்கார்? எல்லாம் தெள்ளிதின் உணரும் இறையே எமக்குச் செய்க உரையே. – க.தி.நாகராசன் – குறள்நெறி:…