ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 15
(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 14 தொடர்ச்சி) ஊரும் பேரும் 15 தொண்டை நாட்டில் ஓர் ஊர் பில வாயில் என்று பெயர் பெற்றிருந்தது. நாளடைவில், ஊர் என்னும் சொல் அப் பெயரோடு சேர்ந்து பிலவாயிலூர் என்று ஆயிற்று. அப்பெயர் குறுகி வாயிலூர் என வழங்கிற்று. இந் நாளில் அது வயலூர் எனச் சிதைந்தது. செங்கற்பட்டைச் சேர்ந்த திருவள்ளுர் வட்டத்தில் அவ்வூர் உள்ளது.9 முற்றம் வாயிலைப் போலவே முற்றம் என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். சங்க இலக்கியத்தில் குளமுற்றம் என்ற ஊர் குறிக்கப்பட்டிருக்கிறது….
ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 14
(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 13 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 14 3. குடியும் படையும் குடியும் படையும் நாடாளும் அரசனுக் குரிய அங்கங்கள் என்று திருவள்ளுவர் கூறியருளினார்1. ஆதியில் தமிழகத்தில் எழுந்த குடியிருப்பும் அதனைப் பாதுகாக்க எழுந்த படையிருப்பும் ஊர்ப் பெயர்களால் ஒருவாறு விளங்கும். இக் காலத்தில், இல் என்பது பெரும்பாலும் மக்கள் வாழும் வீட்டைக் குறிப்பதாகும். ஆயினும், அச்சொல் சில பழமையான ஊர்ப் பெயர்களிற் சேர்ந்திருக்கின்றது. திருச்சி நாட்டிலுள்ள ஊர் ஒன்று, அன்பில் இல் என்னும் அழகிய பெயரைப் பெற்றது.2 அன்பின் இருப்பிடம்…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 13
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 12 தொடர்ச்சி) ஊரும் பேரும் –13 நாடும் நகரமும் நாடு(தொடர்ச்சி) இவ்வாறு கங்கை கொண்ட சோழன் கண்ணெனக் கருதி வளர்த்த பெரு நகரம் இக் காலத்தில் உருக்குலைந்து பாழ்பட்டுக் கிடக்கின்றது. சிவாலயம் சிதைந்துவிட்டது. பெரிய ஏரி பேணுவாரற்றுத் தூர்ந்து போயிற்று. அரண்மனை இருந்த இடம் மாளிகைமேடு என்ற அழைக்கப்படுகின்றது. நீரற்ற ஏரி பொன்னேரி என்று குறிக்கப்படுகின்றது. அந் நகரின் பெயரும் குறுகிக் கங்கை கொண்ட புரம் ஆயிற்று. தஞ்சைச் சோழர் ஆட்சியில் அந் நகரம் எய்தியிருந்த…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 12
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 11 தொடர்ச்சி) ஊரும் பேரும் –12 நாடும் நகரமும் நாடு நாடு என்னும் சொல் ஆதியில் மனிதர் வாழும் நிலத்தைக் குறிப்பதற்கு வழங்கப்பட்டது. அந்த முறையில் தமிழர் வாழ்ந்த நாடு தமிழ்நாடு என்று பெயர் பெற்றது. அந்நாடு மூன்று பாகமாகிய பொழுது ஒவ்வொரு பாகமும் தனித்தனியே நாடு என்னும் பெயருக்கு உரியதாயிற்று. சேர நாடு, சோழ நாடு, பாண்டி நாடு என்ற பெயர்கள் தமிழிலக்கியத்தில் மிகத் தொன்மை வாய்ந்தனவாகும். நாளடைவில் முந் நாடுகளின் உட்பிரிவுகளும் நாடு…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–11
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 10 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 11 நெய்தல் நிலம் தொடர்ச்சி பாக்கம் கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை மாநகரின் அருகே சில பாக்கங்கள் உண்டு. கோடம் பாக்கம், மீனம் பாக்கம், “வில்லி பாக்கம் முதலிய ஊர்கள் நெய்தல் நிலத்தில் எழுந்த பாக்கம் குடியிருப்பேயாகும். சில காலத்திற்கு முன் தனித் தனிப் பாக்கங்களாய்ச சென்னையின் அண்மையிலிருந்த சிற்றூர்கள் இப்போது அந்நகரின் அங்கங்க ளாய்விட்டன. புதுப் பாக்கம், புரசை பாக்கம், சேப்பாக்கம், நுங்கம் பாக்கம்…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–10
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 9 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 10 நெய்தல் நிலம் தமிழ் நாடு. நெடிய கடற்கரை யுடையது. முன்னாளில் “சோழ நாட்டுக் கடற்கரை, சோழ மண்டலக்கரை என வழங்கிற்று. அஃது ஐரோப்பியர் நாவில் சிதைந்து கோரமண்டல் கரையாயிற்று. பாண்டி நாட்டுக் கடலில் நினைப்பிற் கெட்டாத. நெடுங் காலமாக நல் முத்து விளைந்தமையால் . அக் கரை முத்துக்கரை என்று பிற நாட்டாரால் ‘குறிக்கப்பட்டது.100 சேர நாட்டுக் கடற்கரை, மேல் கரை என்று பெயர் பெற்றது. கரை “கடற்கரையில்…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 9
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 8 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 9 மருத நிலம் தொடர்ச்சி கேணி, கிணறு இன்னும், ஊற்று நீரால் நிறையும் கேணியும் கிணறும் சில ஊர்களைத்தோற்றுவித்துள்ளன. சென்னை மாநகரிலுள்ள திருவல்லிக்கேணியும்,நெல்லை நாட்டிலுள்ள நாரைக் கிணறும் இவ்வுண்மைக்குச் சான்றாகும். நிலம் இங்ஙனம் ஆற்று நீராலும், ஊற்று நீராலும் ஊட்டி வளர்க்கப்படும்நிலத்தின் தன்மையை உணர்த்தும் பெயர்களைக் கொண்டுள்ள ஊர்கள்பலவாகும். நிலம் என்னும் சொல்லை நன்னிலம் என்ற ஊர்ப் பெயரிற்காணலாம். அப்பெயரிலுள்ள அடைமொழி அந்நிலத்தின் வளத்தைக்குறிப்பதென்பர். புலம் …
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 8
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 7 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 8 மருத நிலம் தொடர்ச்சி சமுத்திரம் சில ஊர்ப் பெயர்களில் சமுத்திரம் என்ற வடசொல் இடம் பெற்றிருக்கின்றது. தமிழ்நாட்டு மன்னரும் செல்வரும் உண்டாக்கிய பெரிய ஏரிகள், கடல் என்றும், சமுத்திரம் என்றும், வாரிதி என்றும் புனைந்துரைக்கப் பெற்றன.77 இராசராச சோழன் வெட்டிய பெருங்குளம் ஒன்று சோழ சமுத்திரம் என்று சாசனத்திற் குறிக்கப்படுகின்றது.78 எனவே, தமிழ் நாட்டு ஊர்ப் பெயர்களில் உள்ள சமுத்திரம் என்னும் சொல், பெரும்பாலும் ஏரியின் பெயரென்று கொள்ளலாகும். நெல்லை…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 7
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 6 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 7 மருத நிலம் தொடர்ச்சி ஓடை இயற்கையான நீரோட்டத்திற்கு ஓடை என்பது பெயர். மயிலோடைஎன்னும் அழகிய பெயருடைய ஊர் நெல்லை நாட்டிலும், பாலோடைஇராமநாதபுரத்திலும், செம்போடை தஞ்சை நாட்டிலும் விளங்கக் காணலாம். மடை கால்வாய்களிலும், குளங்களிலும் கட்டப்பட்ட மதகுகள் மடையென்று பெயர் பெறும். மடையின் வழியாகவே, தண்ணீர் வயல்களிற் சென்று பாயும். இத் தகைய மடைகள் அருகே சில ஊர்கள் எழுந்தன. நெல்லை நாட்டிலுள்ள பத்தமடை என்னும் பத்தல்…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 6
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 5 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 6 மருத நிலம் தொடர்ச்சி பெரும்பாலும் தென்னாட்டில் உள்ள நதிகள் மலைகளிலே பிறக்கும். அவ்வாறு பிறவாமல் சமவெளியாம் முல்லை நிலத்தில்தன்னூற்றாகப் பொங்கி எழுந்து, கயமாகப் பெருகிச் சிறு ஆறாக ஓடும் சிறப்பினைக் கண்டு, அதற்குக் கயத்தாறு என்று முன்னையோர் பெயரிட்டார்கள். இந் நாளில் அப்பெயர் ஆற்றின் பெயராக வழங்காவிடினும் அவ்வாற்றங் கரையிலுள்ள கயத்தாறு என்ற ஊரின் பெயராகக் காணப்படுகின்றது.60 ஆற்றின் அருகே யமைந்த ஊர் ஆற்றூர் எனப்படும். தமிழ்…
ஊரும் பேரும்:இரா.பி.சேது(ப்பிள்ளை):– 5
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 4 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 5 மருத நிலம் ஆறு நிலவளமும், நீர்வளமும் உடைய தமிழ் நாட்டில் நினைப்பிற்கு எட்டாத காலந் தொட்டுப் பயிர்த்தொழில் பண்புற நடந்து வருகின்றது. பண்டைத் தமிழர் ஆற்று நீர் பாயும் அவல பரப்பைப் பண்படுத்திப் பயிர் செய்து மருத நிலமாக்கினார்கள். அருமந்த பிள்ளையைப் பாலூட்டி வளர்க்கும் தாய்போல் மருத நிலத்தை நீரூட்டி வளர்ப்பது நதியென்று கண்டு அதனைக் கொண்டாடினார்கள்.49 காவிரியாற்றைப் பொன்னியாறென்று புகழ்ந்தார்கள்; வைகையாற்றைப் “பொய்யாக் குலக்கொடி” 50 என்று…
ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):– 4
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 3 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 4 நாவல் நாவல் என்பது ஓர் ஊரின் பெயர். தேவாரம் பாடிய மூவருள் ஒருவராகிய சுந்தரர் அவ்வூரிலே பிறந்தருளினார். ‘அருமறை நாவல் ஆதி சைவன் என்று பெரிய புராணம் கூறுமாற்றால் அவர் பிறந்த ஊரும் குலமும் விளங்கும். அந்நாவல், சுந்தரர் தோன்றிய பெருமையால் திருநாவல் ஆயிற்று. ஈசனால் ஆட் கொள்ளப்பெற்ற சுந்தரர் அவரடியவராகவும், தோழராகவும் சிறந்து வாழ்ந்த நலத்தினை அறிந்த பிற்காலத்தார் அவர் பிறந்த ஊரைத் திருநாவல் நல்லூர் என்று…