தோழர் தியாகு எழுதுகிறார் 137 : பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம்

(தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு தொடர்ச்சி) பாசிச எதிர்ப்பின் பன்னாட்டுப் பரிமாணம் இனிய அன்பர்களே! குசராத்தில் 2002ஆம் ஆண்டு நரேந்திர மோதி ஆட்சியில் நடந்தது என்ன? மதக் கலவரமா? இல்லை. தற்செயலாக வெடித்த வன்முறை நிகழ்ச்சிகளா? இல்லை. உண்மையில் நடந்தது இசுலாமிய மக்கள் மீதான இனக் கொலை; திட்டமிட்ட இனக் கொலை. நரேந்திர மோதி ஆட்சிப் பொறுப்பில் இருந்து வழிநடத்திய இனக் கொலை என்பதை நாம் முன்பே அறிந்து வைத்துள்ளோம், பல முறை கூறியுள்ளோம் என்றாலும் பி.ஒ.நி.(பிபிசி)யின் மோதி…

தோழர் தியாகு எழுதுகிறார் 136 : குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ் நாசரின் பேச்சு

(தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி – தொடர்ச்சி) குண்டர்களால் தாக்கப்பட்ட தமிழ்நாசரின் பேச்சு தில்லி சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் ஆர்எசுஎசு மாணவர் பிரிவான அ.பா.மா.அ. (ஏபிவிபி) குண்டர்கள் நடத்திய தாக்குதலில் அன்புத் தோழர் தமிழ்நாசர் தாக்கப்பட்டதை அறிவீர்கள். அப்பொழுது  குருதிக் காயத்தோடு அவரது மருத்துவமனைப் படமும் கண்டு நானும் தோழர்களும் பதறிப் போனோம். சப்தர்சங்கு மருத்துவமனையில் காயத்துக்குக் கட்டுப் போட்டுக் கொண்டு திரும்பி வந்ததும் தொலைபேசி வழி அவர் தெரிவித்தவை வருமாறு: ச.நே.ப.(J.N.U.) மாணவர் சங்க அலுவலகத்தில் ‘நூறு பூக்கள்’ (100…

தோழர் தியாகு எழுதுகிறார் 135 : இரத்தினம் மணி

(தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் தொடர்ச்சி) இரத்தினம் மணி தாழி குறிப்பு: வழக்கறிஞர் இரத்தினம் அன்று போலவே இன்றும் களத்தில் நிற்கிறார். 1980ஆம் ஆண்டு சென்னைச் சிறையில் என்னையும் தோழர்களையும் நேர்காண வந்த இளைஞர் இரத்தினம் இப்போதும் அதே துடிப்புடன் இயங்கிக் கொண்டிருக்கிறார். பகைவர்களையும் நண்பர்களையும் உறங்க விட மாட்டார்.    திண்ணியம் வழக்கைத் திறம்பட நடத்திய வழக்கறிஞர் சு.க. மணி என் கல்லூரி நண்பர், குடந்தை கல்லூரியில் அறிவியல் இளநிலையில் எனக்கு ஓராண்டு மூத்தவர். சேக்குசுபியரின் ஒதெலோ நாடகத்தின் ஒரு காட்சியை…

தோழர் தியாகு எழுதுகிறார் 134 : பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் . இ –  தொடர்ச்சி) இனிய அன்பர்களே! உலகத் தாய்மொழி நாள் பன்னாட்டுத் தாய்மொழிகள் நாள் பிப்பிரவரி 21இல் ‘உலகத் தாய்மொழி நாள்’ வாழ்த்துச் செய்திகள் முகநூலிலும் புலனத்திலும் பிற சமூக ஊடகங்களிலும் நிறைந்துள்ளன. வேறு எதற்கெல்லாமோ வாழ்த்துப் பரிமாற்றம் செய்துகொள்வதை விடவும் தாய்மொழி நாள் வாழ்த்துப் பரிமாற்றம் என்பது சிறப்பு. ஒரு திருத்தம் மட்டும் சொல்கிறேன். இது உலகத் தாய் மொழி நாள் என்பதில் இரு பிழைகள் உண்டு. ஒன்று உலகம் அல்ல, பன்னாடு!…

தோழர் தியாகு எழுதுகிறார் 133 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – இ

(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் ஆ. தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் –  இ மருத்துவச்சான்று வலுவற்று இருப்பதாக நீதிபதி குறைபட்டுக் கொள்வது பொருளற்றது. தாக்குண்டவர்கள் மருத்துவர்களிடம் அனுப்பி வைக்கப்பட்ட போது காயங்கள் பெரும்பாலும் ஆறிப்போய் இருந்ததில் வியப்பில்லை. ஆனால் முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு இந்தியத் தண்டனைச் சட்டத்தின் 323 / 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பு வழங்குவதற்கு நீதிபதி இதே மருத்துவச் சான்றைத்தான் நம்பியுள்ளார். வழக்குரைஞர்களின் போற்றத்தக்க பணி இந்த வழக்கில் பாதிக்கப்பட்டவர்களின் அச்சத்தைப் போக்கி…

தோழர் தியாகு எழுதுகிறார் 132 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – ஆ 

(தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – ஆ காப்பு எதற்கு? உண்மையில் காப்புக் கட்டுவது சமத்துவத்திற்காக அல்ல, மரியாதைக்காகவும் அல்ல. திருவிழா முடியும் வரை யாரும் ஊரை விட்டுப் போகக் கூடாது என்பதற்காகவே இந்த வழக்கம் தொன்று தொட்டு நிலவி வருவது. அப்படியானால் இன்று மட்டுமல்ல, எந்தக் காலத்திலும் தீண்டாமை நிலவியதில்லை என்று சொல்லி விட முடியுமா? காப்புக் கட்டும் வழக்கம் திண்ணியத்திற்கு மட்டும் உரியதல்ல. தமிழ்நாடு முழுக்க இந்த வழக்கம்…

தோழர் தியாகு எழுதுகிறார் 131 : திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ

(தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5 தொடர்ச்சி) திண்ணியம் தீர்ப்பில் திமிறி வழியும் சாதியம் – அ  நீதிபதியிடம் ஒரு கேள்வி இவற்றை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்ப்போம். அதற்கு முன் நீதிபதியிடம் ஒரு கேள்வி: இந்த ஏழு குறைபாடுகளையும் மீறித் தானே முதல் எதிரி சுப்பிரமணியனுக்கு 323, 324 பிரிவுகளில் குற்றத் தீர்ப்பும் தண்டனையும் கொடுத்துள்ளீர்கள்? முதல் எதிரிக்கும் மற்றவர்களுக்கும் எதிரான பிற குற்றச்சாட்டுகளை மெய்ப்பிப்பதற்கு மட்டும் இந்தக் குறைபாடுகள்(?) எப்படித் தடையாகும்? தாமதம் ஏன்? வழக்கிற்குக் காரணமான முதல் நிகழ்ச்சி 2002 மே 20ஆம் நாள் நடைபெற்றது….

தோழர் தியாகு எழுதுகிறார் 130 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 5

(தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும்  5  தமிழ்நாட்டில் நிருவாகத் தலைவர், அவர்தான் ஆளுநர், ஆளுநர் இரவி! தமிழரல்ல என்பதே முதல் தகுதி! உயர் நீதிமன்றத்தில் தற்காலிக நீதிபதியாக இப்போது ஒரு தமிழர் இருக்கிறார். ஆனால் நிரந்தரமாக ஒரு நீதிபதி வந்தால் தமிழராக இருக்கக் கூடாது என்பது நிபந்தனை. முகமது இசுமாயில் காலத்திற்குப் பிறகு உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள் எல்லாருமே தமிழர் அல்லாதவர்கள்தான் ஒவ்வொரு துறையாக எடுத்துக் கொண்டு பார்க்க வேண்டும்….

தோழர் தியாகு எழுதுகிறார் 129 : வடவர் வருகையும் தமிழ்நாடும் 4

(தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 4  நான் சொல்வது போல் தமிழ்நாட்டிற்கு ஒரு குடியுரிமை இருந்தால், இந்தியக் குடியுரிமை இல்லை என்றாலும்  நாம் தமிழ்நாட்டுக் குடியுரிமை வழங்க முடியும். இப்போது தமிழ்நாட்டில் ஏதிலியர்களாக இருக்கிறார்களே, அவர்கள் எல்லாரும் குடிமக்களா? அவர்கள் ஏதிலிகள் கூட இல்லை. ஏனென்றால் எதிலிகள் தொடர்பான அனைத்துலகச் சட்டத்தில் இந்தியா கையொப்பம் இடவில்லை. ஏதிலிகள் என்பதைக் கூட  அங்கீகரிக்கவில்லை. அகதிகள் பற்றிய உலகச் சட்டம் எதுவுமே அவர்களுக்கு பொருந்தாது! (உ)ரோகிங்கியா முசுலிம்களுக்குப்…

தோழர் தியாகு எழுதுகிறார் 128 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.3

(தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2 தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 3  மிகச் சுருக்கமாக நான் ஒன்று சொல்கிறேன். நண்பர்களே, இந்தியாவிற்கு வருவதற்கு கடவுச்சீட்டு,  நுழைவுச்சீட்டு இருப்பது போல, இந்தியாவை விட்டு வேறொரு நாட்டிற்குச் செல்வதற்குக் கடவுச்சீட்டு, நுழைவுச்சீட்டு தேவைப்படுவது போல, தமிழ்நாட்டிற்கு வருவதற்கும் கடவுச்சீட்டு,  நுழைவுச்சீட்டு தேவை என்கிற சட்டம் வந்தால் இந்தச் சிக்கல் தீரும்.   நாம்  தெருச் சண்டைகள் போட்டு இவர்களை  விரட்ட முடியாது.  அது சரியான நடைமுறையல்ல.  இன்றைக்கு என்ன செய்கிறார்கள்? சாதிச் சண்டைகள், சமயச்  சண்டைகளை ஊக்கப்படுத்திக் குளிர்…

தோழர் தியாகு எழுதுகிறார் 127 : வடவர் வருகையும் தமிழ்நாடும்.2

(தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’? தொடர்ச்சி) வடவர் வருகையும் தமிழ்நாடும் 2  நம்முடைய ஈழத் தமிழர்கள் 10 இலக்கம் பேர் மேலை நாடுகளில் போய் வாழ்கிறார்கள், உழைத்துப் பிழைக்கிறார்கள். அவர்கள் ஆசைப்பட்டுச் செல்லவில்லை. இனக் கொலையினால் விரட்டப்பட்டுச் சென்றார்கள்;  மீண்டு செல்ல வாய்ப்பு இருந்தால் மீளத்தான் விரும்புவார்கள். யாருக்கும் அகதியாக, வழியற்றவராக, ஏதிலியாக வாழப் பிடிக்காது. இன்றைக்குப் பொருளியல் காரணங்களுக்காக, வறுமையின் காரணமாக அகதிகளாக விரட்டப்பட்டு இடம்பெயர்ந்து செல்பவர்களுடைய கூட்டம்  உலகெங்கும் அதிகமாக இருக்கிறது.  இதற்கு அடிப்படைக் காரணமாக இருப்பது இன்றைக்கு ஏற்பட்டிருக்கிற பொருளியல் சூழல், பொருளியல்…

தோழர் தியாகு எழுதுகிறார் 126 : சீமான் ‘தமிழவாளரா’ ?

(தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால் – தொடர்ச்சி) சீமான் ‘தமிழவாளரா’? திமுக ஏற்கெனவே அதற்குரிய வழியில் பாசகவை வீழ்த்தியுள்ளது. தேர்தல் முடிவுகள் அதிகாரத்தைத் தீர்மானிக்கிற வரை தேர்தல் போராட்டமும் அதில் குடியாட்சியம் பெறுகிற வெற்றியும் முகன்மையானவை. ஆர்எசுஎசு ஏவலின் படி மோதியும் அமித்துசாவும் இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் பாசக ஆட்சியை நீக்கமற நிறுவ எல்லா முயற்சியும் செய்து கொண்டிருக்கும் நிலையில் அந்த முயற்சிக்குத் தடையாக எந்தக் கட்சி இருந்தாலும் அந்தக் கட்சி பாசிச எதிர்ப்பு அணியில் இடம்பெறுவது ஒரு புறஞ்சார் உண்மை….