தோழர் தியாகு எழுதுகிறார் 125 : நாற்றங்கால்

(தோழர் தியாகு எழுதுகிறார் 124: நம்ப முடியுமா? தொடர்ச்சி) நாற்றங்கால் தாழி நூறு கண்டதை ஒட்டி வாழ்த்துக் கூறியுள்ளார் அன்பர் இலக்குவனார் திருவள்ளுவன்: நூறாவது மடல் பன்னூறாயிரமாகத் தொடர வாழ்த்துகள். 0 நன்றி அன்பரே! தொடர்ந்து 100 நாள் – ஒருநாள் கூட விடாமல் தாழி மடல் எழுதியுள்ளேன். தொடங்கும் போதே எடுத்துக் கொண்ட உறுதிதான்: என் இறுதி நாள் வரை தொடர்ந்து எழுதிக் கொண்டே இருப்பேன். ஒருசிலர் மட்டும்தான் தொடர்ந்து படிக்கின்றீர்கள் என்பது எனக்குத் தெரியும். வேறு சிலர் படிக்க நேரமில்லை என்கின்றனர். பிறகு படிப்பதற்காகச் சேர்த்து…

தோழர் தியாகு எழுதுகிறார் 124: நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா?

(தோழர் தியாகு எழுதுகிறார் 123: அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள் – தொடர்ச்சி) நெடுமாறனையும் காசி ஆனந்தனையும் நம்ப முடியுமா? இனிய அன்பர்களே! தஞ்சாவூர் முள்ளிவாய்க்கால் முற்றத்தில் திரு பழ,நெடுமாறன் கொடுத்துள்ள செய்தியைப் பற்றி என்னிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அஃதாவது தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் உயிருடனிருப்பதாக அவர் சொல்வது உண்மைதானா? என்று கேட்கின்றனர். உண்மையா? என்று தெரியாது. உண்மையாக இருந்தால் மகிழ்ச்சி என்பதுதான் என் விடை. பிரபாகரன் இறுதிப் போர்க் களத்தில் வீரச்சாவடைந்து விட்டார் என்று ஏற்கெனவே நான் சொல்லி வருகிறேன்….

தோழர் தியாகு எழுதுகிறார் 123: அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 122 : குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002 தொடர்ச்சி) அதானியை எதிர்த்து மூன்று முழக்கங்கள் அதானியுடன் தரவு மையப் புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் தமிழக அரசு கையொப்பமிட்ட கடந்த காலச் செய்தி ஒன்றின் படி, அதானி என்டர்ப்பிரைசசு, எல்&டி, எசுடிடிசுடிசி,சிடிஆர்எல்எசு, பாரதி ஏர்டெல்லுக்குச் சொந்தமான  நெக்சுட்டிரா ஆகிய பெருநிறுவனங்கள் தமிழக அரசுடன் தமிழ்நாட்டில் தரவு மைய மேம்பாடுகளுக்கான புரிந்துணர்வு உடன்படிக்கைகளில் ஒப்பமிட்டுள்ளன. தரவு மையம் (இரண்டாம் கட்டம்) எனும் இத்திட்டத்துக்காகச் சென்னையில் அதானி எண்டர்ப்பிரைசசு  2,500 கோடி உரூபாய் (336 மில்லியன் தாலர்) முதலீடு செய்துள்ளது. தமிழ்நாட்டில் அதானி குழுமத்திடம் இந்திய அரசு…

தோழர் தியாகு எழுதுகிறார் 122 : குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002

(தோழர் தியாகு எழுதுகிறார் 121 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2 தொடர்ச்சி) குசராத்து இசுலாமியர் இனக்கொலை 2002: வேண்டும் தற்சார்பான பன்னாட்டு வினவல் பி.ஒ.நி. / பிபிசி “இந்தியா: மோதி வினா” என்ற ஆவணப்படத்தை இரு பாகங்களாக வெளியிட்டுள்ளது. நெருக்கடிநிலைக்காலச் சட்டம் ஒன்றைப் பயன்படுத்தி மோதி அரசு இந்தப் படத்தை சுட்டுரை(‘டுவிட்டர்’), வலையொளி (‘யூட்யூப்’) போன்ற குமுக ஊடகங்களில் வெளியிட விடாமல் தடுத்துள்ளது. சவகர்லால் நேரு பல்கலைக் கழகம், சென்னைப் பல்கலைக் கழகம் போன்ற கல்வி வளாகங்களில் இப்படத்தைத் திரையிட விடாமல் மாணவர்களைத் தடுத்துள்ளனர். அதே போது…

தோழர் தியாகு எழுதுகிறார் 121 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2

(தோழர் தியாகு எழுதுகிறார் 120 : இரு தேசங்கள் ஒரு தேர்தல் 1/2 -தொடர்ச்சி) இரு தேசங்கள் ஒரு தேர்தல் 2/2 இப்போது அதிபராகியுள்ள இராசபட்சர் சந்திரிகாவால் தலைமையமைச்சர் பதவிக்குப் பொறுக்கியெடுக்கப்பட்டவர். இருவரும் ஒரே கட்சியைச் சேர்ந்தவர்கள். ஆகவே எவ்வித அரசியல் தடையுமின்றி அவர்களால் ஒரு தீர்வை முன் மொழிந்திருக்க முடியும். ஆனால் அவர்கள் எதுவும் செய்யவில்லை. புலிப்படையை அழித்தொழித்துத் தமிழீழ மக்களின் உரிமைப் போராட்டத்தை நசுக்கும் ஆசைத் திட்டத்தைக் கைவிடவும் இல்லை. அதனால் புலிகளோடு உடன்பாடு காண்பதை விடவும் இந்தியாவோடு இராணுவ உடன்படிக்கை…

தோழர் தியாகு எழுதுகிறார் 120 : இரு தேசங்கள் ஒரு தேர்தல்

(தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்-தொடர்ச்சி) இனிய அன்பர்களே! ஈழத் தமிழர் இனவழிப்புக்கு சிங்களப் பேரினவாத அரசு காரணம், அதற்கு உடந்தையாக இருந்த இந்திய அரசு காரணம் என்ற உண்மையை மறைத்துத் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மீது பழிபோடும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இப்படிப் பழி சுமத்துகின்றவர்கள் எடுத்துக் காட்டும் ஒரு முகன்மைச் சான்று 2005ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற பொதுத் தேர்தல் ஆகும். இந்தத் தேர்தலில் இரணில் விக்கிரமசிங்காவும் மகிந்த இராசபட்சேவும் போட்டியிட்டார்கள். இந்தத் தேர்தலை விடுதலைப் புலிகளின்…

தோழர் தியாகு எழுதுகிறார் 119 : வள்ளலார் சொல்கிறார்

வள்ளலார் சொல்கிறார்             கங்கையிலே காவிரியிலே            நூறு முறை மூழ்கி கணக்கற்ற திருக்கோயில் கால்தேயச் சுற்றி வெங்கொடிய பலநோன்பு ஏற்றுடலை வருத்தி வேதங்கள் கூறுகின்ற யாகமெல்லாம் செய்து பங்கமிலா வேதியர் கை பணம் அள்ளித் தந்து பசுவதனைப் பூசித்து அதன் கழிவை உண்டு தங்களுயிர் மோட்சத்தை அடைவதற்கே முயலும் தயவிலார் சத்தியமாய் முக்தியதை அடைய மாட்டார். (தொடரும்)தோழர் தியாகுதரவு : தாழி மடல் 92

தோழர் தியாகு எழுதுகிறார் 118 : கம்பிக்குள் வெளிச்சங்கள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 117 : காவித் திகிலியம் (3)+ மகுடைத் தொற்று-தொடர்ச்சி) அன்பர் குருநாதன் சிவராமன் எழுதுகிறார்…’கம்பிக்குள் வெளிச்சங்கள்‘ “வசந்தத்தின் இடிமுழக்கம்” எனக் கொண்டாடப்பட்ட நக்சல்பாரி இயக்கத்தின் எழுச்சியில் தன்னை இணைத்துக் கொண்டு அழித்தொழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு மரணத் தண்டனை வரை சென்றவர் தோழர் தியாகு. காங்கிரசு, நக்குசல் இயக்கம், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிசுட்டு) எனப் பல அரசியல் தளங்களில் பயணித்தவர். தனது அரசியல் பாதையைத் தன்னாய்வு செய்து கொள்வதிலும், படிப்பினைகளைக் கற்றுக் கொள்வதிலும் சிறிதும் தயக்கம் கொள்ளாதவர் என்பது அவரது எழுத்துகளில் புரிகிறது. மார்க்குசியக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 117 : காவித் திகிலியம் (3)+ மகுடைத் தொற்று

(தோழர் தியாகு எழுதுகிறார் 116 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (2) தொடர்ச்சி) ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (3) ஆர்எசுஎசு அமைப்பில் 1990ஆம் ஆண்டு சேர்ந்து முனைப்புடன் இயங்கிக் கொண்டிருந்தவர்தான் யசுவந்து சிண்டே. ஆர்எசுஎசு ஒரு நச்சரவம் என்று சொன்னால் போதாது. அது ஒரு பத்துத்தலைப் பாம்பு போல் பல பிரிவுகள் கொண்டது. விசுவ இந்து பரிசத்து, இந்து முன்னணி, சேவா பாரதி, பசுரங்கு தள், வித்தியார்த்தி பரிசத்து என்று எத்தனையோ பிரிவுகள். ஆர்எசுஎசு-இன் அரசியல் பிரிவுதான் பாராதிய சனதா கட்சி. யசுவந்து…

தோழர் தியாகு எழுதுகிறார் 115 : ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1)

(தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை – தொடர்ச்சி) ஆர்எசுஎசு கும்பலின் காவித் திகிலியம் (1) 1.       எழுபத்தைந்து ஆண்டு முன்பு 1948 சனவரி 30 மாலை 5.17 – தில்லியில் பிருலா மாளிகையில் அனைத்து மத வழிபாட்டுக் கூட்டத்துக்காகப் புல்வெளியில் நடந்து வந்து கொண்டிருந்த 78 வயது முதியவர் காந்தியாரை இந்துமத  வெறியன் நாதுராம் கோட்சே மிக அருகிலிருந்து சுட்டுக் கொலை செய்தான். ஆர்எசுஎசு இந்துத்துவக் கோட்பாடுகளால் கொலை வெறி கொண்டவன் கோட்சே என்பதில் மாற்றுக் கருத்தே இருக்க முடியாது. காந்தி கொலை வழக்கில் கோட்சேக்கும் நாராயண் ஆபுதேக்கும் தூக்குத் தண்டனை…

தோழர் தியாகு எழுதுகிறார் 114: முத்துக்குமார் குறித்த கலைவேலு கட்டுரை

(தோழர் தியாகு எழுதுகிறார் 113: நிலத்தில் அமிழும் நிலம் தொடர்ச்சி) முத்துக்குமார் மரண சாசனம் நமக்குக் கைகாட்டி; கலங்கரை விளக்கம்! தமிழ்நாட்டின் அரசியலை ஒரே ஓர் உயிர், ஒரே ஒரு நொடியில் முற்றிலும் மடைமாற்றி விட்டது. தமிழரின் நலனைக் காவு கொடுக்கும் தன்னலப் பதவிவெறி அரசியல் பின்னங்கால் பிடறியில் அடிவிழ ஓட்டம் பிடித்து விட்டது. வாக்கு வேட்டை அரசியல் அம்மணப்பட்டு அவமானத்தில் கூனிக்குறுகி நிற்கிறது. தமிழ் மக்களை விடுவிக்கும் தமிழ்த் தேசிய சமூக நீதி அரசியல் வீறு கொண்டு எழுகிறது. அது சுட்டெரிக்கும் சுடு நெருப்பாய்…

தோழர் தியாகு எழுதுகிறார் 113: நிலத்தில் அமிழும் நிலம் 

(தோழர் தியாகு எழுதுகிறார் 112: சனவரி 26 – தொடர்ச்சி தோழர் தியாகு எழுதுகிறார் சோசிமத்து: நிலத்தில் அமிழும் நிலம் விழுங்கப்படுமுன் விழித்துக் கொள்வோமா?   “இயற்கையின் மீது நம் மாந்தக் குலம் ஈட்டிய வெற்றிகளைச் சொல்லி நம்மை நாம் பாராட்டிக்கொள்ள வேண்டா. ஒவ்வொரு வெற்றிக்கும் இயற்கை நம்மைப் பழிக்குப் பழி வாங்குகிறது. ஒவ்வொரு வெற்றியும் முதலில் நாம் எதிர்பார்த்த வெற்றிகளைக் கொண்டுவருவது மெய்தான். ஆனால் இரண்டாவதாகவும் மூன்றாவதாகவும் அது அறவே வேறான எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்த விளைவுகள் முதலில் கிடைத்ததைப் பல நேரம்…