அகல் விளக்கு – மு.வரதராசனார்: 41

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 40. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 17 அடுத்த மார்கழி விடுமுறையில் ஊருக்குச் சென்றபோது, பாக்கிய அம்மையார், வீட்டுக்கு வந்து என்னைப் பற்றியும் சந்திரனைப் பற்றியும் கேட்டார். அவருடைய முகத்தில் முன்போல் மகிழ்ச்சியும் ஊக்கமும் காணப்படவில்லை. கவலையும் சோர்வும் காணப்பட்டன. அவரைப் பார்த்தவுடன், இமாவதி சொன்னது நினைவுக்கு வந்து என் உள்ளத்தை வருத்தியது. எந்தப் பெண்ணையும் – வயதில் பெரியவள் சின்னவள் என்று இல்லாமல் – தன்மேல் ஆசை கொண்டதாக எண்ணி யாரையும் இப்படிப் பழி தூற்றுவது சந்திரனுடைய தீயகுணம்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 16

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம்  6 தொடர்ச்சி   “தரளம் மிடைந்து – ஒளிதவழக் குடைந்து – இருபவளம் பதித்த இதழ்முகிலைப் பிடித்துச் சிறுநெளியைக் கடைந்து – இருசெவியில் திரிந்த குழல்அமுதம் கடைந்து – சுவைஅளவிற் கலந்து – மதன்நுகரப் படைத்த எழில்“ படித்துக் கொண்டே வரும் போது, அந்தப் பெண்ணின் முகத்தைக் கண்களுக்கு முன் கொண்டு வர முயன்றான் அரவிந்தன். குடையும் கையுமாக அவள் அன்னநடை பயின்றதும், பின்பு வீதி நடுவே மூர்ச்சையற்று விழுந்ததும் அவன் கண்ணுக்குள் மறையாக்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 40

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 39. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 16 தொடர்ச்சி மாலன் பேசாமல் இருந்தான். மறுபடியும் குறிப்புப் புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தபடி இருந்து எழுந்து சென்றான். சந்திரன் ஒரு வகையில் கெட்டான்; மாலன் மற்றொரு வகையில் குறுக்கு வழிகள் நாடித் தவறான பாதையில் போவதால் கெடுவானோ என்று அவனைப் பற்றியும் அன்று கவலைப்பட்டேன். சூரியனை உலகம் சுற்றுவது முதல் அணுக்களின் சுழற்சிவரையில் பல துறையிலும் விஞ்ஞான அறிவு பெற்று வளரும் கல்லூரி மாணவர்களின் மனப்பான்மையே இப்படி இருந்தால், உலகம் எப்படி முன்னேற…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 15

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14. தொடர்ச்சி) குறிஞ்சி மலர்அத்தியாயம்  6 நிலவைப் பிடித்துச் – சிறுகறைகள் துடைத்துக் – குறுமுறுவல் பதிந்த முகம்,நினைவைப் பதித்து – மனஅலைகள் நிறைத்துச் – சிறுநளினம் தெளித்த விழி பசித்த வயிறும் கொதித்த மனமுமாகப் பூரணி என்னும் பெண் மதுரை நகரத்து நாற்சந்தியில் மயங்கி விழுந்தபோது மங்களேசுவரியம்மாளும், இந்தக் கதையின் வாசகர்களும் தான் அனுதாபப்பட்டு உள்ளம் துடித்தார்கள் என்று நினைத்திருந்தோம். ஆனால் அன்று அங்கே அந்தச் சம்பவம் நடந்த இடத்துக்கு மிக அருகில் ஓர் இளம் கவியுள்ளமும்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 39

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 38. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி திருமணம் முடிந்ததும் மணமகனும் மணமகளும் ஒரு முறை எங்கள் வீட்டுக்கு வந்து பாலும் பழமும் உண்டார்கள். பிறகு மறுநாள் மாலையில் பெண்வீட்டு மருவுக்குச் சென்றார்கள். அங்கிருந்து திரும்பி வந்தபிறகு, மணமகள் நடத்திய வாழ்க்கையைப் பார்ப்பதற்காகப் பாக்கியத்தின் வீட்டுக்குச் சிலமுறை போயிருந்தேன். பாக்கியம் பழையபடியே தம் கடமைகளைச் செய்துகொண்டிருந்தார். தம்பியின் திருமணத்தை முடித்தது பற்றிய மகிழ்ச்சி அந்தம்மாவின் முகத்தில் இருந்தது. மணமகள் சமையலறையிலேயே பெரும்பாலும் இருந்தபடியால் சரியாகக் கவனிக்க முடியவில்லை. நான் அடிக்கடி…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 14

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13. தொடர்ச்சி)   குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 தொடர்ச்சி “நேற்றுவரை எனக்கு இரண்டு பெண்கள்தான். இன்றைக்கு நீ மூன்றாவது பெண் மாதிரி வந்து சேர்ந்திருக்கிறாய்; வா, என்னோடு உட்கார்ந்து ஒருவாய் சாப்பிட்டுவிட்டுப் போகலாம்” என்று அகமும் முகமும் மலர அந்த அம்மாள் அழைத்தபோது அவள் பேசாமல் எழுந்து உடன் சென்றாள். சாப்பாட்டு அறையில் மேசையின் எதிரெதிரே இலைகள் போடப்பட்டிருந்தன. சமையற்காரப் பெண் பரிமாறினாள். கை வழுக்கினாற்போல் கண்ணாடித் தகடு பரப்பிய நீண்ட மேசை அது. பூரணி தடுமாறினாள்….

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 38

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 37. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 தொடர்ச்சி   ஒருநாள் விட்டுவருவதை விட மூடிவருவதே நல்லது. “நான் வேண்டாங்க. என் மனைவியை அழைத்துச் செல்லுங்கள். என் பையனை அழைத்துச் செல்லுங்கள். என் குடும்பத்திலிருந்து இரண்டு பேர் வந்தால் போதாதா?” என்று சொல்லிவிட்டார். அதனால் நானும் அம்மாவும் மட்டும் போய் வந்தோம். அது சின்ன ஊர்.  உழவுத் தொழில் செய்பவர்கள் நல்ல குடும்பத்தார் பலர் வாழ்ந்த ஊர் அது. எல்லாரும் எளிய ஏழைக் குடும்பத்தாரே. ஒருநாள் இரவு தங்கி உறுதி…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 13

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 5 சோதியென்னும் கரையற்ற வெள்ளம்தோன்றி எங்கும் திரைகொண்டு பாய,சோதியென்னும் நிறைவு இஃதுலகைச்சூழ்ந்து நிற்ப ஒருதனி நெஞ்சம்சோதியென்றதோர் சிற்றிருள் சேரக்குமைந்து சோரும் கொடுமையிதென்னே!      — பாரதி மயக்கம் தெளிந்து கண் விழித்தபோது ஒருகணம் தான் எங்கே இருக்கிறோமென்றே பூரணிக்கு விளங்கவில்லை. ஏதோ ஒரு பெரிய வீட்டில், புதிய சூழ்நிலையில் காற்றைக் சுழற்றும் மின்விசிறிக்குக் கீழே கட்டிலில் படுத்திருப்பதை உணர்ந்தாள். பரக்கப் பரக்க விழித்தவாறே தன்னைச் சுற்றிலும் பார்த்தாள். அப்படி அவள் ஒன்றும் புரியாமல் விழித்துப் பார்த்தபோது தான் சற்றுத்…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 37

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 36. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 15 விடுதிக்குத் திரும்பிச் சென்றபோது, மாலன் மறுநாள் காலைப் பயணத்துக்காகப் புத்தகங்களைப் பெட்டியில் அடுக்கி வைத்துக் கொண்டிருந்தான். என்னைக் கண்டவுடன், “நான் தேறிவிடுவேன்” என்று மகிழ்ச்சியான செய்தியைச் சொன்னான். நான் பாராட்டுத் தெரிவித்து விட்டு, “செய்தி எப்படித் தெரிந்தது? இதற்குள் தெரிவதற்கு வழி இல்லயே. ஆசிரியர் சொன்னாரா?” என்றேன். “சோதிடம் கேட்டேன்” என்றான். “சோதிடக்காரனுக்கு நீ எழுதியது எப்படித் தெரிந்தது!” என்று சிரித்தேன். “குருதசை நன்றாக இருக்கிறது வக்கிரம் இல்லாமல்” என்றான். என்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 12

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 4 தொடர்ச்சி   பூரணியின் நிலையைப் பார்த்து கமலா பயந்து போனாள். “இதென்ன பூரணி! உனக்கு ஏன் இப்படி வேர்த்துக் கொட்டுகிறது? அவன் சாகவேண்டியது விதி. பாம்புக் கடித்துச் செத்தான். அதற்கு நீ ஏன் நடுங்குகிறாய்?” “நேற்று இரவு நடந்ததைப் பற்றி யாரிடமாவது சொன்னாயா கமலா?” “மூச்சுவிடுவேனா நான்? உன்னையும் என்னையும் தவிர வேறு யாருக்கும் தெரியாது. சரவணப் பொய்கைக் கரையில் ஒரே கூட்டம். இரவு அவனுடைய விதி என் சங்கிலியில் இருந்திருக்கிறது, பாவம்.” “மனித நப்பாசை எத்தனை வேடிக்கையாக…

அகல் விளக்கு – மு.வரதராசனார்: 36

(அகல் விளக்கு – மு.வரதராசனார். 35. தொடர்ச்சி) அகல் விளக்கு அத்தியாயம் 14 தொடர்ச்சி   “முதலாம் நாள் சந்திரனைக் கண்டு பழகி வீட்டில் பேசிக் கொண்டிருந்தோமே, அன்று அம்மா ஒன்றும் சொல்லவில்லை. அடுத்தமுறை ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலையில் சந்திரன் வந்து போனார் என்று சொன்னேன் அல்லவா? அன்று இரவு அம்மா என்னைத் தனியே அழைத்து அறிவுரை கூறினார். “நல்ல பிள்ளை அம்மா அதில் எனக்குச் சந்தேகம் இல்லை. இருந்தாலும் ஒத்த வயது உள்ள ஆண் பிள்ளைகளோடு பழகுவதில் மிக மிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்….

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 11

(மணிவண்ணனின் குறிஞ்சி மலர் – 10. தொடர்ச்சி) குறிஞ்சி மலர் அத்தியாயம் 4 “என் செயல் ஆவது யாதொன்றும் இல்லை இனித்தெய்வமேஉன் செயலே என்று உணரப் பெற்றேன் இந்த ஊன் எடுத்தபின் செய்த தீவினை யாதொன்றும் இல்லை பிறப்பதற்குமுன் செய்த தீவினையோ இங்ஙனே வந்து மூண்டதுவே!” ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்ற கொதிப்பினால் ஏற்பட்ட துணிவு வெறியில் பூரணி அந்தத் திருட்டுக் கிழவனைப் பிடித்து, அவன் மேல் துண்டாலேயே கைகளைக் கட்டிப் போட முயன்றாள். சங்கிலியைப் பறிகொடுத்த கமலாவோ பயந்தோடி வந்து அவன் பூரணியால் பிடிக்கப்பட்ட இடத்தில் நழுவி விழுந்திருந்த சங்கிலியின் மூன்றாய் அறுந்துபோன துணுக்குகளைத்…