6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 2/6

(6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்-1/6 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் 2/6 காங்கிரசு மாநாடுகள் எவ்வகை விசாரணையுமின்றி எவரையும் தண்டித்தற்கு இடந்தரும் (இ)ரெளலட்டு சட்டத்தை ஆங்கில அரசு திணிக்க முயன்றது. இதனை எதிர்த்து அண்ணல் காந்தியடிகளார் ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கினார். நாடெங்கும் சுற்றுப் பயணம் செப்து, இச்சட்டத்தின் கடுமையை பொல்லாங்கைப் பொதுமக்களுக்கு விளக்கத் துணிந்தார். இதன் பொருட்டுச் சென்னை வந்தார். காந்தியடிகள் சென்னை வருவதையறிந்த நாவலர் பாரதியார் அவரைத் தூத்துக்குடிக்கு வரச் செய்தார். முதன்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 19

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி பதினேழாம் நூற்றாண்டில் (கி.பி. 1650) துஞ்சத்து எழுத்தச்சன் என்பவர் மலையாள (தமிழ்) மொழிக்கு ஆரிய மொழியை ஒட்டி எழுத்து முறைகளையும் இலக்கண விதிகளையும் அமைத்துவிட்டார். பின்னர்த் தமிழின் தொடர்பு குறைந்து ஆரியமொழித் தொடர்பு மிகுந்து தமிழுக்கு அயல்மொழியாக வளரத்  தலைப்பட்டு விட்டது. மொழிக்குரியோரும் தம்மை ஆரியர்களோடு தொடர்பு படுத்திக்கொள்ள விரும்பினரே யன்றித் தமிழருடன் உறவு முறைமை பாராட்ட விரும்பினாரிலர். தம் மொழியை ஆரியத்தின் புதல்வி என்று கூறிக்கொள்வதில் பெருமையும் அடைந்தனர்….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 

( தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 546-550 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 546. Secondary Education – இரண்டாங் கல்வி 547. University – பல்கலைக்கழகம் நான் இரண்டாங் கல்வி கடந்து பல்கலைக் கழக…

ஊரும் பேரும் : இரா.பி.சேது(ப்பிள்ளை): 15

(ஊரும்பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 14 தொடர்ச்சி) ஊரும் பேரும் 15 தொண்டை நாட்டில் ஓர் ஊர் பில வாயில் என்று பெயர் பெற்றிருந்தது. நாளடைவில், ஊர் என்னும் சொல் அப் பெயரோடு சேர்ந்து பிலவாயிலூர் என்று ஆயிற்று. அப்பெயர் குறுகி வாயிலூர் என வழங்கிற்று. இந் நாளில் அது வயலூர் எனச் சிதைந்தது. செங்கற்பட்டைச் சேர்ந்த திருவள்ளுர் வட்டத்தில் அவ்வூர் உள்ளது.9 முற்றம் வாயிலைப் போலவே முற்றம் என்ற சொல்லும் சில ஊர்ப் பெயர்களில் அமைந்திருக்கக் காணலாம். சங்க இலக்கியத்தில் குளமுற்றம் என்ற ஊர் குறிக்கப்பட்டிருக்கிறது….

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 541-545

(தமிழ்ச்சொல்லாக்கம் 536-540 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 541-545 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 541. Mayor – தலைவர் அந்நாளில், கல்கத்தா நகரபரிபாலன (முனிசிபல்) சபையின் தேர்தலில் சுயராச்சிய கட்சியினரே வெற்றி பெற்றனர். இதுகாறும் சட்ட சபையில்…

மணிவண்ணனின் குறிஞ்சி மலர் 81

(குறிஞ்சி மலர்  80 தொடர்ச்சி) குறிஞ்சி மலர்  28 தொடர்ச்சி தொழிற்போட்டிகளையும், பொறாமை, பகைகளையும் கூடியவரை நியாயமாகவும், கண்ணியமாகவும் தீர்க்க முயன்றான் அரவிந்தன். அனாவசியச் சண்டைகளை முன்கூட்டியே தவிர்த்தான். தான் கிராமத்தில் நிலம் விற்றுக் கொணர்ந்த பணத்தில் அச்சகத்துக் கடன்களை அடைத்தவை போக எஞ்சிய பகுதியை தேர்தல் செலவுக்கென ஒதுக்கி வைத்தான். தன்னுடைய திறமையான நிருவாகத்தினாலும் நாணயமான நடவடிக்கைகளாலும் மீனாட்சி அச்சகத்துக்கு வந்து கொண்டிருந்த எந்த வேலைகளும் குறையாமல் பார்த்துக் கொண்டான் அரவிந்தன். பக்கத்தில் புதிதாக ஏற்பட்டிருந்த அச்சகம் அவனையோ, அவனுடைய தொழிலையோ எந்த…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 17

(உ.வே.சா.வின்என்சரித்திரம் 16 தொடர்ச்சி) உ.வே.சா.வின் என் சரித்திரம் 17 அத்தியாயம் 10 இளமைக் கல்வி முதலில் உத்தமதானபுரத்தில் எனக்கு உபாத்தியாயராக இருந்த நாராயணையர் சற்றேறக்குறைய முப்பத்தைந்து பிராயம் கொண்டவர்; நல்ல வடிவம் உடையவர். அவரைக் காணும்போது எனக்கும் மற்றப் பிள்ளைகளுக்கும் பயம் உண்டாகும்; பிரம்பை அதிகமாக அவர் உபயோகிப்பார். அவரை நினைக்கும்போதெல்லாம் அவருடைய பிரம்படிதான் எனக்கு ஞாபகம் வருகிறது. அவரது பள்ளிக்கூடத்தில் அக்கிரகாரத்துப் பிள்ளைகளும் குடியானத் தெருப் பிள்ளைகளும் படித்தார்கள். அடிக்கிற விசயத்தில் அவர் யாரிடமும் பட்சபாதம்   காட்டுவதில்லை. பிள்ளைகளுக்குள் பிச்சு என்று…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 537-541 

( தமிழ்ச்சொல்லாக்கம் 532-536 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 537-541 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 537. Watch   –          மணிக்கூடு 538. Latrine  –          மலசலக்கூடம் 539. dash      –          கீறல் 540. Jfen       –          இணைமொழிக்குறி…

தமிழ்நாடும் மொழியும் 16; பல்லவப் பேரரசு – பேரா.அ.திருமலைமுத்துசாமி

(தமிழ்நாடும் மொழியும் 15 தொடர்ச்சி) தமிழ்நாடும் மொழியும் 16 பல்லவப் பேரரசு தொடர்ச்சி ‘தந்தையை ஒப்பர் மக்கள்‘ என்னும் மூதுரைப்படி, மகேந்திரனைப் போலவே அவன் மகனான நரசிம்மவர்மனும் சிறந்த கலைஞன்; கட்டடப் பிரியன்; கலைப்பித்து மிகக் கொண்டவன். அதன் பயனாகக் கடல்மல்லை எனப்படும் மாமல்லபுரம் சீர்திருத்தப்பட்டது. பல கற்கோவில்கள் அங்கு எழுந்தன. இன்று காண்போர் கண்ணைக் கவரும் வகையில் விளங்கும் பஞ்சபாண்டவர் இரதங்கள் இவன் காலத்தில் உண்டானவையே. சீனயாத்திரிகனான யுவான்சுவாங்கு இவன் காலத்தில் தான் தென்னாட்டுக்கு வந்தான். அவன் தென்னகத்தைத் திராவிடம் என்கிறான். மேலும்…

6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார் – சி. பா. 1/6

(ஆய்வுத் தமிழ் வளர்த்த அறிஞர் மு. இராகவை யங்கார் 4/4 – சி.பா. தொடர்ச்சி) 6. இருபதாம் நூற்றாண்டு நக்கீரர் சோமசுந்தர பாரதியார்- 1/6 1. வாழ்வு ‘இருபதாம் நூற்றாண்டின் நக்கீரர்’ என்று தமிழ் கூறு நல்லுலகு பெருமையுடன் பேசும் பேராசிரியர், முனைவர் நாவலர் கணக்காயர் சோமசுந்தர பாரதியார் ஆவர். சான்றோருடைத்தான தொண்டை நாட்டில் சென்னை மாநகரின் மேற்பால் சூளை என்னும் ஊரில் வாணிக வாழ்க்கை நடத்தி வளமுடன் வாழ்ந்து வந்தவர். ‘சைவ சித்தாந்த சண்டமாருதம்’ எனப் பாராட்டப் பெற்ற சோம சுந்தர நாயகர்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 18

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 17 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 5. பழந்தமிழ்ப் புதல்விகள் தொடர்ச்சி  ஆரியம் ஆங்காங்குச் செல்வாக்குப் பெற்றது. அதன் வழியில் பிற மொழிகள் எல்லாம் இயங்கத் தொடங்கின. பழந்தமிழைக் கண்டு தன் எழுத்துகளை அமைத்துக்கொண்ட ஆரியத்தின் புது அமைப்பு முறையைப் பின்பற்றித் தம் எழுத்து முறைகளை அமைத்துக் கொண்டன.  ஆரிய மொழிச் சொற்களை மிகுதியாகக் கடன் பெற்று ஆரிய மொழியின் துணையின்றித் தாம் வாழ முடியாத நிலைக்கு  ஆளாகிவிட்டன. ஆதலின் தம் தாயாம் தமிழிலிருந்து புதல்விகளாம் பிற திராவிட மொழிகள் வேறுபட்டன போல்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 532-536 

( தமிழ்ச்சொல்லாக்கம் 527-531 தொடர்ச்சி) தமிழ்ச்சொல்லாக்கம் 532-536 (சொல், மொழிமாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழி மாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழி மாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 532. ICE – நீர்கட்டி சூன்மீ2. சத்தியநேசனில் பிரசுரிக்கப்பட்ட வைத்திய சாத்திரக் குறிப்புக்களைப் படித்துப் பார்த்தேன். அவற்றில் இலங்கையில் பல்வலியைக் குறித்துப்…