கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா,நாகப்பட்டினம்

கா.சு., இலக்குவனார், அ.ச.ஞா., சுரதா போற்றி விழா தமிழ் வளர்ச்சித் துறை நாகப்பட்டினம் தமிழறிஞர்கள், எழுத்தாளர்களைச் சிறப்பிக்கும் இலக்கியக் கருத்தரங்கம் கார்த்திகை 08, 2053 24.11.2022 வியாழன் முற்பகல் 10.00 பேராசிரியர் கா.சுப்பிரமணியன் பேராசிரியர் சி.இலக்குவனார் பேராசிரியர் அ.ச.ஞானசம்பந்தனார் கவிஞர் சுரதா ஆகியோரைச் சிறப்பிக்கும் இலக்கியக் கூட்டம் இடம்: மீன்வளப் பொறியியல் கல்லூரி காஞ்சூர் சோதனைச் சாவடி நாகூர், நாகப்பட்டினம்

திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! -இலக்குவனார் திருவள்ளுவன்

திராவிட ‘மாடல்’ ஏன்? முன்முறை அல்லது நன்முறை என்று சொல்லலாமே! தமிழுக்குத் தலைமை அளிக்கும் வகையில் செயல்படுவதைத் தமிழக அரசு இலக்காகக் கொண்டுள்ளது. ஆனால், சொற்கள்தாமே செல்வம். நாம் தமிழ்ச்சொற்களைக் கைவிடலாமா? பிற மொழிச் சொற்களை இறக்குமதி செய்துவிட்டுத் தமிழை வளர்க்கிறோம் என்பதில் பயனில்லையே! இதற்கு எடுத்துக்காட்டாகத் ‘திராவிட மாடல்’ என்று பயன்படுத்துவதைக் கூறலாம். கேம்பிரிட்சு பல்கலைக்கழக அச்சக வெளியீடாக செட்டம்பர் 2011 இல் உருவாக்கப்பட்ட ஒரு நூல் நவம்பர் 25, 2011 இல் வெளிவந்தது. அந்த நூலின் பெயர் “திராவிட மாதிரி: தமிழ்நாட்டின்…

அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் – குவியாடி

பிற கருவூலம் அனலும் புனலும் : வழி வழி மரபில் தமிழ்ப்பகையில் ஊறும் காஞ்சி மடம் காஞ்சி காமகோடி பீடம் என்றும் காஞ்சி சங்கர மடம் என்றும் அழைக்கப்பெறும் மடத்தின் இளைய மடாதிபதி விசேயந்திரன் என்ற சங்கரநாராயணன். இவர், பங்கேற்ற நூல் வெளியீட்டு நிகழ்ச்சி ஒன்றில் வழக்கம்போல் தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்டது. அப்பொழுது அவையோர் எழுந்திருந்து வணங்கியபொழுது இவர் அமர்ந்து இருந்து அவமதிப்பு செய்துள்ளார். இந்நிகழ்வே தமிழ்மக்களின் இன்றைய கொந்தளிப்பாகும். சங்கரமடத்தினர் தமிழைப் பழிப்பது என்பது அவர்களின் இரத்தத்தில் ஊறிய ஒன்றாகும். வழி வழி…

பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்,திருநகர், மதுரை 625006

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து மறைமொழி காட்டி விடும்.   தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் 108ஆவது பிறந்தநாள் பெருமங்கலம்   கார்த்திகை 01, 2048 / நவம்பர் 11, 2017 காலை 9.00 இலக்குவனார் இல்லம் முன்பு 4ஆவது நிறுத்தம், திருநகர், மதுரை 625006       9 ஆம் வகுப்பில்  பள்ளி அளவில் முதல் 10 இடங்கள் பெற்று 10 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணாக்கியருக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் நூல்கள் பரிசாக வழங்கப்பெறுகின்றன. தமிழன்பர்கள் புகழுரை ஆற்றுவர். அன்புடன் இரா.பா.முருகன்…

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்,சென்னை

பேராசிரியர் சி.இலக்குவனார் நினைவரங்கம்   ஆவணி 20, 2048 / 05.09.17 செவ்வாய்  மாலை 6.00 கி.இ.க./ஒய்.எம்.சி.ஏ.பட்டிமன்றம் தலைமை நினைவுரை  : முனைவர் மமைறலை இலக்குவனார் நினைவுப் பாமாலை : கவிச்சிங்கம்  கண்மதியன் அரிமாப் பாவலர்  கா. முருகையன் கவி முனைவர் இளவரச அமிழ்தன் எழுச்சிப்பாவலர்  வேணு.குணசேகரன் கெ.பக்தவத்சலம், செயலாளர்

ஆவணியில் தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்! – இலக்குவனார் திருவள்ளுவன்

ஆவணியில்  தொடங்குவது ஆண்டு! சித்திரையில் தொடங்குவது வருடம்!  தமிழ்ப்புத்தாண்டு தொடக்கத்தில் மேற்குறித்த தலைப்பு புதிராக இருக்கலாம். தைப்புத்தாண்டிற்கு மாறான கருத்துகளைத் தெரிவித்தாலே கண்டன அம்பு தொடுப்போர் இருப்பதையும் அறிவேன்.   60 ஆண்டுக் காலச்சுழற்சியில் அறிவுக்குப் பொருந்தாத ஒழுக்கக்கேடான கதைகளைக் கற்பித்து இழுக்கு ஏற்படுத்தும் வகையில் சித்திரை ஆண்டு மாறியதால் வந்த தைப்புத்தாண்டு வரவேற்கத்தக்கதே. நாம் அனைவரும் பின்பற்றப்பட வேண்டியதே! அதே நேரம் கடந்த கால வரலாற்றை அறியவேண்டியதும் நம் கடமையாகும்.  அந்த வகையில் அமைந்தததே இக்கட்டுரை.   வருடம் என்பதற்குச் சரியான தமிழ்ச்சொல்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 7/7: இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி, திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 7/7     “தொல்காப்பிய ஆராய்ச்சியில் இலக்குவனாரின் உட்பொருள் விளக்கம்” குறித்து, முனைவர் உ.அலிபாவா உவகையுடன் உரைக்கிறார்; தமிழின்மீது, தமிழ்மக்கள்மீது, தமிழ் நாகரிகத்தின்மீது உயரிய மதிப்பினை ஏற்படுத்தும் வண்ணம் இலக்குவனாரின் ஆய்வுரைகள் அமைந்துள்ளன என்கிறார்; தொல்காப்பியத்தைத் தமிழ்மரபு நெறியில் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தவர்; தொல்காப்பியம் மூலம் அறியலாகும் பல்துறை அறிவைப் புலப்படுத்தியவர்;…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 6/7: இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 5/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 6/7     “பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ்ப்பணி” குறித்து முனைவர் சி.சுந்தரேசன் போற்றியுள்ளார்; பேராசிரியராக, நூலாசிரியராக, இதழாசிரியராக, மரபுக்கவிஞராக, களப்போராளியாக எனப் பலவகையிலும் செம்மாந்து வாழ்ந்து தொண்டாற்றியமையைச் சான்றுகளுடன் விரிவாக விளக்கியுள்ளார்; கவிதைகளில் சமூக அங்கதம் காணப்படுவது, மணமானவர்தான் குடும்ப விளக்கு பாடம் நடத்த வேண்டும் என்ற பாவேந்தர் பாரதிதாசனை உடன் மறுத்த…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 2/7 : இலக்குவனார் திருவள்ளுவன்

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : தொடர்ச்சி) வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் -பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை 2/7   இலக்குவனாரின் படைப்புகள் பற்றிய கட்டுரையாளர்கள் கருத்துகள் குறித்த சுருக்கப் பார்வை வருமாறு:   பேராசிரியர் சி.இலக்குவனார் தேவையான இடங்களில் பரிமேலழகர் உரையை மறுத்துத் தமிழ் மரபை முன்னிறுத்தி உரை கூறுகிறார் என முனைவர் பி.தட்சிணாமூர்த்தி ‘மூன்றும் ஐந்தும்’ என்னும் கட்டுரை மூலம் விளக்குகிறார்.   “பேரா.இலக்குவனார் ‘பழந்தமிழ்‘ நூலில்…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – தொகுப்புரை 1/7 : இலக்குவனார்திருவள்ளுவன்

வெ.ப.சு.தமிழியல் ஆய்வு மையம், தமிழ்த்துறை, ம.தி.தா.இந்துக்கல்லூரி திருநெல்வேலி பேராசிரியர் சி.இலக்குவனாரின் தமிழ்ப்பணிகள் – பன்னாட்டுக் கருத்தரங்கம் கட்டுரைத் தொகுப்பு நூல் தொகுப்புரை  1/7      செந்தமிழ்மாமணி, செம்மொழிச்சுடர் தமிழ்ப்போராளி பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்களின் பிறந்தநாள் பெருமங்கல நூறாம் ஆண்டுத் தொடக்கத்திலிருந்து (2009) விழாக்கள் நடத்தப் பெறுகின்றன. பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், தமிழ் அமைப்புகள், அ.இ.வானொலி நிலையம்,  சாகித்திய அகாதமி எனப்  பல்வகைத் தரப்பினராலும் தமிழ்நாட்டில் நூற்றாண்டு விழா, கவியரங்கம், கருத்தரங்கம், உரையரங்கம் முதலானவற்றில் தமிழறிஞர்கள் பங்கேற்றுச் சிறப்பித்துள்ளனர். தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல், மலேசியா, சிங்கப்பூர்,…

மறக்க முடியுமா? – பேராசிரியர் சி.இலக்குவனாரை : எழில்.இளங்கோவன்

மறக்க முடியுமா? : பேராசிரியர் சி.இலக்குவனார்  அன்றைய தஞ்சை – இன்றைய நாகை மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் வாய்மைமேடு என்ற ஊரில் வாழ்ந்த சிங்காரவேலு – இரத்தினத்தாச்சி இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார் இலக்குவனார்.   இலட்சுமணன் என்ற இவரின் இயற்பெயரை, இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இவரின் ஆசிரியரான தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவன் என்று மாற்றினார்.   கார்த்திகை 1, 1940 / 1909ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் பிறந்த இவரின் தொடக்கக் கல்வி, கண்ணுசாமி,…