மறக்க முடியுமா? – பேராசிரியர் சி.இலக்குவனாரை : எழில்.இளங்கோவன்
மறக்க முடியுமா? : பேராசிரியர் சி.இலக்குவனார் அன்றைய தஞ்சை – இன்றைய நாகை மாவட்டம் திருத்துறைப் பூண்டிக்கு அருகில் வாய்மைமேடு என்ற ஊரில் வாழ்ந்த சிங்காரவேலு – இரத்தினத்தாச்சி இணையரின் இரண்டாம் மகனாகப் பிறந்தார் இலக்குவனார். இலட்சுமணன் என்ற இவரின் இயற்பெயரை, இவர் எட்டாம் வகுப்பு படிக்கும் போது, இவரின் ஆசிரியரான தமிழறிஞர் சாமி சிதம்பரனார் இலக்குவன் என்று மாற்றினார். கார்த்திகை 1, 1940 / 1909ஆம் ஆண்டு நவம்பர் 17 ஆம் நாள் பிறந்த இவரின் தொடக்கக் கல்வி, கண்ணுசாமி,…
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6
பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை – திருக்குறள் ஆராய்ச்சி 1/6 தெய்வப்புலவர் திருவள்ளுவர் அருளிய திருக்குறள் காலத்தால் அழியாத கருவூலம்; உள்ளுதொறும் உள்ளுதொறும் உயர் எண்ணங்களை விளைவிக்கும் உயர்நூல்; எழுதப்பட்டது ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட அக்காலத்தில்தான் என்றாலும் எக்காலத்திலும் ஏற்றம் தரும் வாழ்வியல் இலக்கியம்; உலகிலே எண்ணற்ற நூல்கள் தோன்றிவரினும் உலக நூலாகக் கருதக்கூடிய ஒரே ஒப்புயர்வற்ற அறநூல். ஒப்புயர்வற்ற திருக்குறளில் முற்றும் துறைபோகிய புலனழுக்கற்ற புலவர் பெருமானாய்த் திகழ்ந்தவர் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் அவர்கள். தொல்காப்பியம், சங்கஇலக்கியங்கள், திருக்குறள் ஆகியவற்றை ஆய்ந்தாய்ந்து அகன்ற…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 4/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 5/9 “இன்று தமிழ்நாட்டில் ’சமசுகிருதம்’ என்ற ஒரு மொழி உண்மையிலேயே தேவைதானா? எதற்காவது பயன்படுகிறதா? அதற்கும் நமக்கும் கடுகத்தனையாவது, எதிலாவது, ஒற்றுமை – பொருத்தம் எவ்வகையிலாவது இருக்கிறதா என்று எண்ணிப் பார்க்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழர்களின் வாழ்வில், சமயத்தில், சமுதாயத்தில், அரசியலில், விஞ்ஞானத்தில் மற்றும், ஏதாவது ஒரு காரியத்திற்கு இந்த சமசுகிருதம் பயன்படுகிறதா? ” என்று கேட்டுத் தமிழ்நாட்டவரிடம் ஓர் எண்ணத்…
தமிழர் எனப் பெருமைப்பட என்ன இருக்கிறது?- 5: இலக்குவனார் திருவள்ளுவன்
(அகரமுதல 106 கார்த்திகை 06, 2046 / நவ. 22, 2015 தொடர்ச்சி) 05 இந்நூற்பா மட்டுமல்ல, மற்றொரு நூற்பா மூலம் தமிழர் உலகிலேயே முதன்முறையாகத்திருமணப் பதிவு முறையைப்பின்பற்றி உள்ளனர் என்பதையும் நாம் அறியலாம். இதனைப் பேராசிரியர் சி.இலக்குவனார் நன்கு விளக்கியுள்ளார். திருமணப் பதிவை இங்கிலாந்து அரசாங்கம் 1653இல் அறிமுகப்படுத்தியது. பிரான்சு நாட்டில் பிரெஞ்சுப் புரட்சியின் விளைவாக 1791இலும் உருசியப் புரட்சியினால் உருசியாவில் 1917இலும் திருமணப் பதிவு நடைமுறைப்படுத்தப்பட்டது. இவ்வாறு வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு காலங்களில் திருமணப் பதிவைக் கட்டாயமாக்கினாலும் பல…
இனி முழுக்க முழுக்க, மான மீட்புப்பரப்புரைகளே! வீரமணி சூளுரை
புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் 125ஆம் ஆண்டு பிறந்த நாள்விழாவும் சமக்கிருத ஆதிக்க எதிர்ப்புக்கருத்தரங்கமும் பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில், இரண்டாம் நாளாகச் சித்திரை 13, 2046 / 26.4.2015 அன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் நிகழ்வில் கருத்தரங்குடன், கலை நிகழ்ச்சியாக புரட்சிக் கவிஞர் பாடல் களுடன் குயில்மொழி குழுவினரின் நடனம் பார்வையாளர்களின் கருத்துகளைக் கவர்ந்தன. இரண்டாம் நாள் நிகழ்வாக வாழ்வியல் பண்பாட்டு மீட்டுருவாக்கக் கருத்தரங்கம் நடைபெற்றது. முனைவர் அ.இராமசாமி தலைமையில் புதுவை மாநிலப் பகுத்தறிவாளர்கழகத் துணைத்தலைவர் மு.ந. நடராசன் வரவேற்றார். எழுத்தாளர்…
பார்புகழ் அறிஞர் பல்லாண்டு வாழ்க – பேராசிரியர் சி.இலக்குவனார்
அறிஞர் அண்ணா அவர்கள் இன்று தமிழ்க் காக்கும் தனிப்பெரும் தலைவராக விளங்கி வருகின்றார்கள். இந்தியப் பெருந் தலைவராக உலகப் பெருந் தலைவராக விளங்கப் போகும் காலம் விரைவில் வந்து கொண்டிருக்கின்றது. மக்கள் உளங்களை வன்மையாகப் பிணித்துத் தன்பால் ஈர்க்கும் தனிப்பெரும் தலைவர் அறிஞர் அண்ணா. ‘‘விரைந்து தொழில்கேட்கும் ஞானம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின்’’ எனும் திருவள்ளுவர் செம்மொழிக்குச் சிறந்த எடுத்துக்காட்டாக விளங்குபவர் அறிஞர் அண்ணா அவர்களே! நம் அன்னைத் தமிழ், தொன்மையும், வன்மையும் தூய்மையும் இனிமையும் பொருந்தியதுதான். ஆயினும் தமிழ் மக்களே தமிழின்…
மாமூலனார் பாடல்கள் 28: சி.இலக்குவனார்
(ஆடி 4, 2045 / சூலை 20, 2014 இதழின் தொடர்ச்சி) உஅ. முன்னே புறப்படு என்நெஞ்சே! -சங்க இலக்கியச் செம்மல் பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனார் தலைவன் திருமணத்தை நடத்திக்கொள்ளாது வேற்றுநாட்டிற்குச் சென்றுவிட்டான். தலைவி முதலில் ஆற்றி இருந்தாளேனும், நாள் ஆக, நாள் ஆக உடல் இளைத்தது; கைகளில் அணிந்துள்ள வளையல்கள் கழன்று கழன்று விழுந்தன உறக்கம் என்பது இல்லாது கண்களினின்றும் கண்ணீர் வடிந்து கொண்டே இருந்தது. ஆற்ற முடியாத துன்பம்! இதைப் போக்கி கொள்வதற்கு வழிதேடுதல் வேண்டும். வழி என்ன?…
ஊடகர் மீது கை வைக்காதீர்! ஊடகங்கள் மீது கண் வையுங்கள்!
தினமலர் நாளிதழ்ச் செய்தியாளர் அருள்செல்வனைத் தாக்கியது அருளற்ற செயல்! கிளர்ச்சிகள் என்பன மக்கள் குறைகளைத் தெரிவிக்கும் வாயில்கள் எனவும் அரசு அவற்றை அடக்கித் துன்புறுத்தாமல் மென்மையாகக் கையாண்டு குறைகளைப் போக்க வேண்டும் என்றும் தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் குறிப்பிடுவார். ஆனால், கிளர்ச்சிகள் என்றாலே அரசை அழிக்கும் ஆயுதமாகவும் கிளர்ச்சியாளர்கள் என்றாலே நாட்டின் பகைவர்கள் என்றும் கருதும் போக்கு எல்லா நாட்டிலும் உள்ளது வருந்தத்தக்கதே! இதனால், மக்களின் உற்ற தோழனாக இருக்க வேண்டிய காவல்துறை ஆளும்கட்சியின் அடிவருடிபோல் நடந்துகொண்டு மக்களுக்குத் தீங்கிழைத்து, அரசிற்கும்…
வேண்டாக் கிளர்ச்சி வென்றது! விரும்பும் தாய்மொழி விலகியது! – பேராசிரியர் சி.இலக்குவனார்
பயிற்று மொழியைத்தேர்ந்தெடுக்கும் உரிமை மாணவர்க்கு வேண்டும் என்று சிலர் கிளர்ச்சி தொடங்கினர். தமிழ்நாட்டுக் கல்லூரிகளில் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி வாயில்களாக மாணவர்கள் கற்றுவரும் நிலை உள்ளது. ஆங்கிலத்தின் வழியாகக் கற்கும் மாணவர்களே மிகுதியாக உள்ளனர். தமிழ் வழியாகக் கற்றலைப் பையப் பைய மிகுதிப்படுத்துதலைத் தமிழக அரசு மேற்கொள்ளத் தொடங்கி உள்ளது. ஆங்கிலேயர் ஆண்டபோது, ஆங்கிலம் ஆட்சி மொழியாக இருந்தது. ஆகவே ஆங்கிலம் பயிற்று மொழியாக இருந்தது. ஆங்கிலேயர் ஆட்சி அகன்று, தமிழர் ஆட்சி அமைந்தது. தமிழே ஆட்சி மொழி என்ற…
தமிழ்ப் பயிற்று மொழி – பேராசிரியர் சி.இலக்குவனார்
கல்லூரிகளிலும் தமிழைப் பயிற்றுமொழியாக்க வேண்டும் என்று கல்விப் பெரியார்களும் நாட்டு நலனில் கருத்துடைய நற்றமிழ்த் தலைவர்களும் மாணவ மணிகளும் ஓயாது வேண்டிக்கொண்டுதான் உள்ளனர். ஆனால், மொழிப்பற்றும் நாட்டுப் பற்றும் அற்றவர்கள், பதவிகளில் அமர்ந்து கொண்டு தமிழ்ப்பயிற்று மொழித் திட்டத்தைத் தள்ளிப் போட்டுக் கொண்டே வருகின்றனர். சென்னைப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் கல்லூரி முதல்வர் களுக்கெல்லாம் தமிழைப் பயிற்று மொழியாக்குவது பற்றிக் கடிதம் எழுதியதாகவும் எந்தக் கல்லூரி முதல்வரும் அதற்குச் சார்பாகக் கடிதம் எழுதிலர் என்றும் ஒரு செய்தி வெளிவந்தது. கல்லூரிப் புகுமுக…
தமிழ் வழியாகப் படித்தல் – பேராசிரியர் சி.இலக்குவனார்
கல்லூரிகளில் இன்று ஆங்கிலத்தின் வழியாகப் படித்துப் பட்டம் பெறும் முறையேயுள்ளது. அவரவர் மொழிவழியாகப் பயிலலே இயற்கையோடு ஒத்ததும் எளிதும் ஆகும். உயர்நிலைப் பள்ளிக்கூடங்களில் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் நிலை இருந்தது; அதனை மாற்றித் தமிழின் வழியாகப் படிக்குமாறு செய்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. அவ்வாறு கல்லூரிகளிலும் தமிழ் வழியாகவே படித்துப் பட்டம் பெறும் திட்டத்தைச் செயலுக்குக் கொண்டு வந்திருக்க வேண்டும். உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழ்வழியாகப் படித்துவிட்டு கல்லூரிக்கு வந்தவுடன் ஆங்கிலத்தின் வழியாகப் படிக்கும் முறையால் மாணவர்கள் இடர்ப்பாடு அடைகின்றனர். மாணவர்கள்…
புகுமுக வகுப்பில் புகுத்துக தமிழை – பேராசிரியர் சி.இலக்குவனார்
புகுமுக வகுப்புகளில் (Pre-University) ஆங்கிலத்தில் கற்பிக்குங்கால் – தமிழினும் – பேச்சுத் தமிழினும் – கற்பிக்கலாம் எனப் பல்கலைக்கழகத்திலிருந்து கல்லூரிகட்கு அறிவுரைக் குறிப்பு வந்துள்ளது. உயர்நிலைக் கல்விக் கூடங்களில் தமிழிற் பயிலும் மாணவர்கள் கல்லூரிகட்குள் நுழைந்ததும் அயல்மொழியாம் ஆங்கிலத்தில் கற்பிப்பதை அறிந்த கொள்ள முடியாமல் இடர்ப்படுகின்றனர் என்பது நாடு அறிந்த ஒன்றாகும். தமிழ்நாட்டின் ஆட்சி மொழி தமிழ் என்று ஏற்றுக்கொள்ளப்பட்ட போதே கல்லூரிப்பாடமொழியும் தமிழ்தான் என்று சட்டம் செய்திருக்க வேண்டும். பி.ஏ. வகுப்புகளில் விரும்புவோர் கலைப்பாடங்களை(arts) தமிழிற் படிக்கலாம் என்று கூறிவிட்டுத் …