திருக்குறள் அறுசொல் உரை – 096. குடிமை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 095. மருந்து தொடர்ச்சி) 02. பொருள் பால் 13.குடி இயல் அதிகாரம் 096. குடிமை உயர்குடியில், குடும்பத்தில் பிறந்தாரின் இயல்பும், பெருமையும், சிறப்பும். இல்பிறந்தார் கண்அல்லது இல்லை, இயல்பாகச் செப்பமும், நாணும் ஒருங்கு. நேர்மையும், பழிக்கு நாணலும், நல்குடிப் பிறந்தார்தம் இயல்புகள். ஒழுக்கமும், வாய்மையும், நாணும்இம் மூன்றும் இழுக்கார் குடிப்பிறந் தார். ஒழுக்கத்தில், உண்மையில், நாணத்தில், உயர்குடிப் பிறந்தார் தவறார். நகை,ஈகை, இன்சொல், இகழாமை நான்கும் வகைஎன்ப, வாய்மைக் குடிக்கு. …
திருக்குறள் அறுசொல் உரை – 095. மருந்து : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 094. சூது தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 095. மருந்து நோய்கள் வரும்முன் காக்கும், வந்தால், நீக்கும் மருத்துவம். மிகினும், குறையினும் நோய்செய்யும், நூலோர் வளிமுதலா எண்ணிய மூன்று. உடல்சூடு, குளிர்ச்சி, காற்று, நிறையினும், குறையினும் நோயே. ”மருந்(து)”என வேண்டாஆம் யாக்கைக்(கு), அருந்திய(து), அற்றது, போற்றி உணின். “மருந்து”என, வேண்டாம், உணவு முழுதும் செரித்தபின் உண்டால். அற்[று]ஆல் அள(வு)அறிந்(து) உண்க; அஃ(து)உடம்பு பெற்றான், நெடி(து)உய்க்கும் ஆறு….
திருக்குறள் அறுசொல் உரை – 093. கள் உண்ணாமை: வெ. அரங்கராசன்
(அதிகாரம் 092. வரைவின் மகளிர் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 093. கள் உண்ணாமை நல்உணர்வு, உடல்நலம், செல்வம் அழிக்கும் கள்ளைக் குடிக்காமை. உட்கப் படாஅர், ஒளிஇழப்பர், எஞ்ஞான்றும் கள்காதல் கொண்(டு)ஒழுகு வார். கள்ளைக் காதலிப்பார் எப்போதும் அஞ்சப்படார்; புகழையும் இழப்பார். உண்ணற்க கள்ளை; உணில்உண்க, சான்றோரால் எண்ணப் படவேண்டா தார். கள்ளைக் குடிக்காதே; பெரியார்தம் மதிப்பு வேண்டாம்எனில், குடிக்க. ஈன்றாள் முகத்தேயும், இன்னா(து)ஆல், என்மற்றுச்…
திருக்குறள் அறுசொல் உரை – 092. வரைவின் மகளிர் : வெ. அரங்கராசன்
(அதிகாரம் 091. பெண்வழிச் சேறல் தொடர்ச்சி) 02. பொருள் பால் 12. துன்ப இயல் அதிகாரம் 092. வரைவின் மகளிர். பொருள்விருப்பால் மட்டுமே, பலரை விரும்பும் திருமணம்ஆகா மகளிர். அன்பின் விழையார், பொருள்விழையும் ஆய்தொடியார், இன்சொல் இழுக்குத் தரும். அன்புஇன்றிப் பொருள்கள் விரும்பும் பரத்தையின் இன்சொல் இழிவுதரும். பயன்தூக்கிப், பண்(பு)உரைக்கும் பண்(பு)இல் மகளிர், நயன்தூக்கி, நள்ளா விடல். பெறுபயன் ஆய்ந்து பண்போடு பேசும், பரத்தையரை நெருங்காதே. பொருள்பெண்டிர் பொய்ம்மை முயக்கம், இருட்(டு)அறையில்…
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும்- ஆய்வுரை 2. : இலக்குவனார் திருவள்ளுவன்
2 இதேபோல், அடுத்த இயலில், ‘கனியிருப்ப’ என்பதற்குப் பிற உரையாசிரியர்கள் விளக்கங்களைத் தொகுத்தளித்துள்ளார். நாக்கின் இயல்பு முதலானவற்றைக்கூறிவிட்டு, கனியிருப்பக் காய்கவரக் கூடாமைக்குப் பின்வரும் வகையில் விளக்கம் அளிக்கிறார். 1.) கனியைக் கவர்ந்து உண்பதால் உண்டாகும் ஆக்கங்கள் 2.) காய்களை உண்பதால் உண்டாகும் கேடுகள் 3.) கனிச்சொல் சொல்வதால் உண்டாகும் ஆக்கங்கள். 4.) காய்ச்சொல் சொல்வதால் உண்டாகும் கேடுகள். இவ்வாறு ஆழமாக விளக்குவதுடன் இன்சொற்களங்கள் யாவை, வன்சொற்களங்கள் யாவை எனவும் நமக்கு உணர்த்துகிறார். கடுஞ்சொல் வேண்டா, கனிச்சொல் வேண்டும் என்பதற்கு அறநெறிச்சாரம்,…
திருக்குறள் விருந்தும் நகைச்சுவை விருந்தும் – ஆய்வுரை 1. : இலக்குவனார் திருவள்ளுவன்
1 உலகப் பொதுநூலாம் திருக்குறள் உலக மொழிகளில் மிகுதியாக மொழிபெயர்க்கப்பட்ட இலக்கிய நூல். ஆதலால் உலக அறிஞர்களின் பாராட்டிற்குரிய நூலாகவும் திகழ்கிறது. திருக்குறளை அவரவர் நோக்கில் ஆராய்வதற்கு இடம் தரும் வகையில் தெய்வப்புலவர் திருவள்ளுவர் திருக்குறளை யாத்துள்ளார். இதனால் சிலர் தாங்கள் சார்ந்துள்ள கருத்தியத்திற்கு ஏற்றாற்போல் திருக்குறளுக்குத் தவறான விளக்கம் அளித்துள்ள சில நேர்வுகளும் உள்ளன. எனினும் ஈராயிரம் ஆண்டிற்கு முற்பட்ட திருக்குறள் இன்றைக்கும் புதுப்பொலிவுடன் விளங்குகிறது. எப்பாலோரும் பாராட்டும் முப்பாலாம் திருக்குறள் வாழ்வியல் நூலாக, அறநூலாக, தலைமைக்கு வழிகாட்டும் நூலாக,…
தமிழ் இலக்கிய மன்றம், புழுதிவாக்கம் : இலக்கிய நிகழ்ச்சி
ஐப்பசி 15, 2046 / நவ.01, 2015
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 063. இடுக்கண் அழியாமை
(அதிகாரம் 062. ஆள்வினை உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 063. இடுக்கண் அழியாமை துன்புறினும், மனம்கலங்காது, வென்று நின்று, இன்புற்று வாழும்திறன். இடுக்கண் வரும்கால், நகுக; அதனை, அடுத்(து)ஊர்வ(து), அஃ(து)ஒப்ப(து) இல். எத்துன்பம் வந்தாலும், இகழ்ந்து சிரித்தலே அத்துன்பத்தை வெல்லும்வழி. வெள்ளத்(து) அனைய இடும்பை, அறி(வு)உடையார், உள்ளத்தின் உள்ளக், கெடும். வெள்ளம் போன்ற பெரும்துயரும், சிந்தனை உறுதியால் சிதையும். இடும்பைக்(கு) இடும்பை, படுப்பர்; இடும்பைக்(கு) …
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 062. ஆள்வினை உடைமை
(அதிகாரம் 061. மடி இன்மை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 062. ஆள்வினை உடைமை ஏற்றுக் கொண்ட செயல்முடிக்க, இடைவிடாது செய்யும், நல்முயற்சி “அருமை உடைத்(து)”என்(று), அசாவாமை வேண்டும்; பெருமை, முயற்சி தரும். “முடியாதது” என்று, மலைக்காதே; முயற்சி, பெருமையாய் முடியும். வினைக்கண், வினைகெடல் ஓம்பல்; வினைக்குறை தீர்ந்தாரின், தீர்ந்தன்(று) உலகு அரைகுறையாய்ச் செயல்கள் செய்யாதே; செய்தால், உலகமும் கைவிடும். தாள்ஆண்மை என்னும், தகைமைக்கண் தங்கிற்றே, வேள்ஆண்மை என்னும், செருக்கு….
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 061. மடி இன்மை
(அதிகாரம் 060. ஊக்கம் உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 061. மடி இன்மை குடும்பத்தையும், குடியையும் உயர்த்த முயல்வார் விடவேண்டிய சோம்பல் குடிஎன்னும் குன்றா விளக்கம், மடிஎன்னும் மா(சு)ஊர, மாய்ந்து கெடும். சோம்பல்தூசு படிந்தால், அணையாக் குடும்ப விளக்கும் அணையும். மடியை, மடியா ஒழுகல், குடியைக், குடியாக வேண்டு பவர். குடியை, உயர்ந்த குடியாக்க விரும்புவார், சோம்பலை விலக்குக. மடிமடிக் கொண்(டு)ஒழுகும், பேதை பிறந்த குடி,மடியும்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 044. குற்றம் கடிதல்
(அதிகாரம் 043. அறிவு உடைமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 044. குற்றம் கடிதல் எவ்வகைக் குற்றமும், சிற்றளவும், வராதபடி கடிந்து விலக்குதல் செருக்கும், சினமும், சிறுமையும், இல்லார் பெருக்கம், பெருமித நீர்த்து. செருக்கு, சீற்றம், சிறுமைத்தனம், இல்லார் முன்னேற்றம் பெருமையது. இவறுலும், மாண்(பு)இறந்த மானமும், மாணா உவகையும், ஏதம் இறைக்கு. கருமித்தனம், பொய்மானம், இழிமகிழ்வு, ஆள்வோர்க்கு ஆகாக் குற்றங்கள். தினைத்துணைஆம் குற்றம் வரினும், பனைத்துணைஆக்…
திருக்குறள் அறுசொல் உரை – வெ. அரங்கராசன்: 043. அறிவு உடைமை
(அதிகாரம் 042. கேள்வி தொடர்ச்சி) 02. பொருள் பால் 05. அரசு இயல் அதிகாரம் 043. அறிவு உடைமை கல்வி, கேள்விகளால் பெறுஅறிவின், இலக்கணமும், பன்முகப் பயன்களும். அறி(வு),அற்றம் காக்கும் கருவி; செறுவார்க்கும், உள்அழிக்கல் ஆகா அரண். அழிவை நீக்கும் அறிவுக்கருவி, அழிக்க முடியாத உள்பாதுகாப்பு. சென்ற இடத்தால் செலவிடாது, தீ(து)ஒரீஇ, நன்றின்பால் உய்ப்ப(து), அறிவு. அறிவு, நெறிப்படுத்தும்; தீது நீக்கும்; நல்லவற்றுள் சேர்க்கும். எப்பொருள், யார்யார்வாய்க் கேட்பினும், அப்பொருள், மெய்ப்பொருள் காண்ப(து),…