தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள்
தேவதானப்பட்டிப் பகுதியில் மறைந்து வரும் தமிழர் திருநாள் காட்சிகள் பொங்கல் திருநாள் போகிப்பண்டிகை, பெரும்பொங்கல், பட்டிப்பொங்கல், காணும் பொங்கல் என்று நான்கு நாட்கள் கொண்டாடப்படுகின்றது. முதல் இரண்டு நாட்களாக போகிப்பண்டிகையை முன்னிட்டு இல்லத்தில் உள்ள பழைய பொருட்களை எரித்துவிட்டுப் புதிய பொருட்களை கொண்டுவருதல் என்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர் மக்கள்; பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற முறையில் புதிய பொருட்களை வாங்கத் தொடங்கினர். இதில் சூரிய வழிபாடும் உண்டு. மேலும் தங்களுடைய மூதாதையர் வழிபாடும் ஆன்றோர் வழிபாடும்தான் முதன்மைப் பங்கு வகிக்கின்றன….
நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை
நெல் பயிரில் நோய் தாக்குதல் – உழவர்கள் கவலை தேவதானப்பட்டிப் பகுதியில் பயிரிடப்பட்டுள்ள நெல் பயிரில் கடும் குளிர் காரணமாகப் புகையான் நோய் ஏற்பட்டுள்ளது. தேவதானப்பட்டி, மஞ்சளாறுஅணை, கெங்குவார்பட்டி, சில்வார்பட்டி முதலான பகுதிகளில் ஏறத்தாழ 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட காணி(ஏக்கர்) பரப்பளவில் நெல் பயிரிடப்பட்டுள்ளது. தற்பொழுது பகலில் போதிய வெயில் இல்லாமலும், வானம் மேக மூட்டத்துடனும், இரவில் கடும் குளிருடனும் தட்பவெப்பம் நிலவுகிறது. மேலும் பகலில் சில நேரங்களில் அதிக வெயிலும், இரவு நேரத்தில் கடும் குளிரும் மாறிமாறி அடித்து வருகின்றன….
மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி
தேவதானப்பட்டி தொடக்க நல்வாழ்வு நிலையத்திற்கு மருத்துவர்கள் வராததால் நோயாளிகள் அவதி தேவதானப்பட்டி, மேல்மங்கலம் முதலான தொடக்க நல்வாழ்வு நிலையங்களுக்கு மருத்துவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்கு வராததால் நோயாளிகள் கடும் அவதிப்படுகின்றனர். பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், சில்வார்பட்டி, புல்லக்காபட்டி முதலான ஊர்களில் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். தற்பொழுது பனிக் காலம் என்பதால், மாறிவரும் காலநிலையில் பலவிதமான தொற்று நோய்களுக்கும், சளி, இருமல், காய்ச்சல் போன்ற நோய்களுக்கும் மக்கள் ஆளாகின்றனர். இதனை உடனடியாகச் சரி செய்யாவிட்டால் பத்து நாட்கள் வரை நோய் நீடிக்கிறது. உடனடி மருத்துவம்…
தேனி : பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம்
தேனிமாவட்டத்தில் இரவு, பகலாக இயங்கும் தனியார் பேருந்துகள் நேர்ச்சி(விபத்து)கள் ஏற்படும் கண்டம் தேனி மாவட்டத்தில் இரவு, பகலாக தனியார் பேருந்துகள் இயங்குவதால் மோதல் நேர்ச்சி ஏற்படும் கண்டம் உள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள போடி, கம்பம், தேனி, கூடலூர் பகுதிகளில் இருந்து நாள்தோறும் சென்னைக்குத் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவ்வாறு இயக்கப்படும் தனியார் பேருந்துகள் புறப்பட்டு தேவதானப்பட்டியில் உணவருந்த நிறுத்திவிட்டு அதன்பின்னர் புறப்படுகின்றன. புறப்பட்ட பின்னர் வேறு எங்கும் நிற்காமல் சென்னையில் உள்ள கோயம்பேடு பேருந்தில் நிறுத்தப்படுகின்றன. மேலும் இப்பகுதியில் விளையும்,…
பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ
தேனி மாவட்டத்தில் விலை இல்லாததால் பறிக்கப்படாமல் உள்ள கோழிக்கொண்டைப் பூ – உழவர்கள் கவலை தேனி மாவட்டத்தில் விலை குறைந்ததால் கோழிக்கொண்டைப் பூக்கள் பறிக்கப்படாமல் தோட்டத்திலேயே விடப்பட்டுள்ளன. தேவதானப்பட்டி அருகே உள்ள அ.வாடிப்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி முதலான பகுதிகளில் பூ பயிரிடல் நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் கோழிக்கொண்டை ஊசிப்பூவும் பலவிதமான மலர்களும் பயிரிடப்படுகின்றன. இவ்வாறு பயிரிடப்படும் பூ வகைகள் ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, சென்னை முதலான பகுதிகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. கடந்த 3 ஆண்டுகளில் போதிய மழை இல்லாததால் பூப் பயிரிடலை…
தேவதானப்பட்டிப் பகுதியில் குறைவான அளவு பருப்பு வகைகள் வழங்கல்
தேவதானப்பட்டிப் பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் உளுந்தம்பருப்பு குறைவாக வழங்கப்பட்டுள்ளதால் பொதுமக்களுக்கும் கடை ஊழியர்களுக்கும் மோதல் ஏற்படுகிறது. தேவதானப்பட்டி, கெங்குவார்பட்டி, கெ.கல்லுப்பட்டி, பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், செயமங்கலம், மேல்மங்கலம், எருமலைநாயக்கன்பட்டி பகுதியில் உள்ள உணவுப்பொருள் கடைகளில் கடந்த மாதம் பருப்பு வகைகள் வழங்கப்படவில்லை. இதனால் பொதுமக்கள் வெளிச்சந்தையில் வாங்கினார்கள். தற்பொழுது தைப்பொங்கல், கிறித்துமசு, ஆங்கிலப்புத்தாண்டை முன்னிட்டு உணவுப்பொருட்கள் வழங்குவார்கள் என நம்பி இருந்தார்கள். ஆனால் மாவட்ட நிருவாகத்திடம் இருந்து 50% பொருட்களே வழங்கப்பட்டுள்ளன.. இதில் உழுந்தம்பருப்பு, எண்ணெய் வகைகள் மிகவும் குறைவாக வழங்கப்பட்டுள்ளன. இவற்றைக்…
மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு
மஞ்சளாறு அணையில் தண்ணீரை நிறுத்த உழவர்கள் எதிர்பார்ப்பு தேனி மாவட்டத்தில் உள்ள மஞ்சள் ஆறு அணையில் தற்பொழுது 44 அடி தண்ணீர் உள்ளது. மஞ்சளாறு அணையிலிருந்து திறந்துவிடப்படும் தண்ணீரானது தேனி, திண்டுக்கல்; மாவட்ட மக்களின் வேளாண்மைக்கும், குடிநீர்த் தேவைக்காகவும் பயன்படுத்தப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர்ப் பெய்த கனமழையை ஒட்டி மஞ்சளாறு அணை திறக்கப்பட்டது. இதன் மூலம் தேனி, திண்டுக்கல் மாவட்டங்களில் உள்ள குளங்கள், கண்மாய்கள், ஏரிகள் நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்நிலையில் தலையாறு, மூலையாறு, வறட்டாறு ஆகிய ஆறுகளில் இருந்து வரும்…
இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள்
தேனி மாவட்டத்தில் நெடுஞ்சாலைத்துறை இசைவில்லாமல் தோண்டப்படும் சாலைகள் தேவதானப்பட்டிப் பகுதியில் தனியார் தோட்டங்களுக்குத் தண்ணீர் கொண்டு செல்வதற்குச் சாலைகளில் அகழ்பொறிகளைக்கொண்டு தோண்டுவதால் சாலைகள் விரைவில் பழுதாகின்றன. தேவதானப்பட்டி அருகே உள்ள செயமங்கலம் ஊராட்சிப்பகுதியில் குளம், ஏரிகளின் அருகில் வேளாண் நிலங்களை வாங்கித் தனியார் நிறுவனங்கள் ஆழ்துளைக்கிணறுகளை அமைத்துள்ளனர்; தங்களது தோட்டங்களுக்கும் கனிமநீர்த்தொழிலுக்கும் தண்ணீரைக் கொண்டு செல்கின்றனர். இதற்கென இரவோடு இரவாகச் சாலையைத் தோண்டிக், குழாய்யைகளைப் பதித்து விடுகின்றனர். மிகுபளு ஊர்திகள் செல்லும்போது குழாய்கள் உடைப்பு ஏற்படுகிறது. இவ்வாறு குழாய்கள் உடைப்பு ஏற்படும்பொழுது…
அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம்
திண்டுக்கல் மாவட்டத்தில் அகழ்களங்களை(கல்குவாரிகளை) மூடுவதற்குப் புதுமைப்போராட்டம் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்தில் உள்ள மல்லனம்பட்டி ஊராட்சிக்குற்பட்ட அழகாபுரி, பூசாரிபட்டி, மல்லனம்பட்டி ஆகிய ஊர்களில் இயங்கும் அகழ்களங்களால் (கல்குவாரிகளால்) பாதிப்படைந்த மக்கள் மண்டை ஓட்டை வைத்து அகழ்களங்களை முற்றுகையிட்டனர். மல்லனம்பட்டி ஊராட்சியில் 3 அகழ்களங்களும், கல் உடைப்பான்களும் இயங்குகின்றன.. உரிமை நிலங்களை விலைக்கு வாங்கி அகழ்களங்களை இயக்கிவருகிறார்கள். இப்பகுதி வேளாண்மை செழித்த பகுதியாகும். மேலும் நிலக்கோட்டை பூச் சந்தைக்கு 50 % பூக்களை இப்பகுதியில் விளைவித்து ஏற்றுமதி செய்து வந்தனர். இந்நிலையில் கடந்த 20…
வத்தலக்குண்டு நகரில் கலை இலக்கிய மாலை
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் – கலைஞர்கள் சங்கம் கலை இலக்கிய மாலை திண்டுக்கல் மாவட்டம், வத்தலக்குண்டு நகரில் வானொலித்திடலில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்-கலைஞர் சங்கம் சார்பாகக் கலை இலக்கிய மாலைமார்கழி 5, 2045 / 20.12.2014 அன்று மாலை 5.00 மணியளவில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கருத்தரங்கம், ஊரகக் கலைகளான தப்பாட்டம், கரகாட்டம், ஒயிலாட்டம், பரம்பரைக் கலையான கோட்டைப்பட்டி தேவராட்டம், நையாண்டி மேளம், பள்ளி மாணவ, மாணாக்கியர்களின் கலைநிகழ்ச்சிகள் முதலானவை நடைபெற்றன. பேராசிரியர் தண்டபாணி தலைமையில் நிகழ்ச்சி நடைபெற்றது. திண்டுக்கல்…
‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி
‘சுயஉதவிக்குழு’ என்ற பெயரில் கந்துவட்டி- காவல்துறையினர் விசாரணையை முடுக்கிவிட வேண்டும் தேவதானப்பட்டிப் பகுதியில் கந்துவட்டி தொடர்பான புகார்கள் மீது விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனப் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவிக்கின்றனர். தேவதானப்பட்டிப் பகுதியில் ஆண்கள் தன்னுதவிக்குழு, பெண்கள் தன்னுதவிக்குழு என்ற பெயரில் அரசின் ஏற்பு பெறாமல் 10 முதல் 20பேர்வரை சேர்ந்து பணத்தைச் சேர்த்து வட்டிக்கு விடுகின்றனர். இவ்வாறு குழுக்களாகச் சேர்ந்து பணம் கட்டுபவர்களுக்குப் பணம் தேவைப்பட்டால் அரசின் விதிமுறையை மீறி 100க்கு 5 % முதல் 10 % வரை வட்டியை முதலில்…
முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள்
முன்னாள் முதல்வர் எம்(ஞ்)சியார் நினைவு நாள் தேவதானப்பட்டியில் முன்னாள் முதல்வர் மக்கள்திலகம் எம்ஞ்சியார் நினைவு நாளையொட்டி அவரது தீவிர நம்பிக்கையாளர்கள் மொட்டையடித்து அவரது சிலைக்கு மாலை அணிவித்தனர். தேவதானப்பட்டி பேருந்து நிலையத்தில் உள்ள எம்ஞ்சியார் சிலை உள்ளது. இச்சிலைக்குப் பெரியகுளம் ஒன்றியப் பெருந்தலைவரும், ஒன்றியச் செயலாளருமான செல்லமுத்து மாலை அணிவித்தார். அப்போது அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சிறுவர்கள் முதல் பெரியவர் வரை மொட்டையடித்துக்கொண்டனர். மாலை அணிவித்தலின்போது முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் எம்.பெரியவீரன், தேவதானப்பட்டி பேரூர் செயலாளர் சுரேசு, தேவதானப்பட்டி பேரூராட்சி துணைத்தலைவர் பி.ஆர்….
