ஆளுமையர் உரை76,77 & 78 : இணைய அரங்கம்-03.12.2023

சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க சொல்லிற் பயனிலாச் சொல்.   (குறள் ௨௱ – 200) தமிழே விழி!                                                தமிழா விழி!                                          தமிழ்க்காப்புக்கழகம் ஆளுமையர் உரை  76,77 & 78 : இணைய அரங்கம் கார்த்திகை 17, 2054 ஞாயிறு 03.12.2023 காலை 10.00 கூட்ட எண் / Meeting ID: 864 136 8094  ; கடவுக்குறி / Passcode: 12345 அணுக்கிக்கூட்ட இணைப்பு : https://us02web.zoom.us/j/8641368094? pwd=dENwVFBIOTNncGsrcENUSWJxbVZHZz09 (map) தலைமை: இலக்குவனார் திருவள்ளுவன் வரவேற்புரை: கவிஞர் தமிழ்க்காதலன் “தமிழும் நானும்” – உரையாளர்கள்…

ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா

எழுத்தாளர் கவிஞர் ஆதிரைமுல்லையின் நூல் வெளியீட்டுவிழா   கவியரசர் கண்ணதாசன் பிறந்த நாள் விழாவும் நூல் வெளியீட்டு விழாவும் நால்வருக்கு விருது வழங்கும் விழாவுமான முப்பெரும் விழாவில்  ஆதிரை முல்லையின்  “உச்சிதனை முகர்ந்தால்” என்னும் கட்டுரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.   திரைப்பட நடிகர்  இராசேசு தலைமை வகித்தார். கலைமாமணி பிறைசூடன்  நூலை வெளியிட்டுச் சிறப்புரையாற்றினார். இலக்கிய வள்ளல் மாம்பலம் பாரி சந்திரசேகர்  நூல்களைப் பெற்றுக்கொண்டார்.   கவியரசரின் திருக்குமரன் அண்ணாமலை கண்ணதாசன் நிகழ்வில் முன்னிலை வகித்தார். [படங்களை அழுத்தின் பெரியஅளவில் காணலாம்.]

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி

(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 தொடர்ச்சி)   3     சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் வரதட்சணைக் கொடுமை, வரதட்சணை கொடுப்பதற்காகவே வேலைக்குப் போகும் பெண்கள் ஆங்காங்கு படுகொலைச் செய்யப்படும் கொடுமை முதலியவற்றைக் கண்டு மனம் கொதிக்கும் இக்கவிஞர் ஆண் என்பதால் கண்ணீர்த் துளிகளுக்கு மாற்றாகக் கவிதைத் துளிகளைச் சிந்தியுள்ளார். அந்தத் துளிகளில், கருவுக்குக் கருவான சமாச்சாரத்தின் கார்காலங்கள் நிசப்தப்பட்டுக் கிடக்கிறது !   பாதம் சுமக்கும் பாதரட்சைகளின் பரதேசி வாழ்வு போல  என்று தீண்டாமை என்று ஒதுக்கப்படும்…

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 – முனைவர். ப. பானுமதி

(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3  தொடர்ச்சி) 2    ஈழத் தமிழர்களின் மரணம் இவரது மனத்தைப் பல்லாயிரச்சுக்கலாக உடைத்துப் போட்டுள்ளது. அந்த உடைந்த சில்லுகள் ஒவ்வொன்றும் ஒரு கவிதையாகக் கண்ணீர் சிந்துகின்றன. மரணம் பேசியதைப் போலவே இவரது கவிதைகளில் மயான பூமியும் பேசுகிறது. மனிதனின் மரணத்தைத் தன் மடியில் தாங்குவது மயானம். அம்மயானமே, மனித எச்சங்களெல்லாம் மக்கிப் போனவுடன் தூது அனுப்புகிறேன்   அதுவரை உங்கள் துப்பாக்கி முனையை குத்தகைக்கு விடுங்கள் குருவிகள் கூடு கட்டி குடும்பம் நடத்தட்டும் ! என்று…

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 1/3 – முனைவர். ப. பானுமதி

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்!     கவிதை என்பது தம்மின், தம் நாட்டின், மொழியின், பெருமை பேசுவதோ, சிறுமையைக் கண்டு கொதிப்பதோ மட்டுமல்ல. அது தன் வேகம் நிறைந்த, விவேகம் நிறைந்த, எழுச்சி மிகுந்த கருத்தால் சிறுமையைக் களையும் பக்குவத்தோடு வெளிப்படல் வேண்டும். எதிர்காலப் புலனோடு மட்டுமன்றி சமுதாயத்தைக், குறிப்பாக இளைய சமுதாயத்தை முன்னேற்றப் பாதை நோக்கி இயக்கக் கூடிய விசையாக இருக்க வேண்டும். தனக்கான பாதையில் மட்டுமன்றி தான் பிறந்த நாட்டிற்கும் மக்களுக்கும் ஒர் அடையாளத்தை விட்டுச் செல்வதாக இருக்க வேண்டும்….

அ.இ.த.எ.சங்கம் : இலக்கிய உறவுகள் திருவிழா, சென்னை

     மலேசியாவிலிருந்து வருகை புரிந்துள்ள ஈப்போ முத்தமிழ்ப் பாவலர் மன்றத்தின் தலைவர் திரு. க. அருள் ஆறுமுகம் அவர்களுக்கும் மலேசியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு மன்னர் மன்னன் மருதை அவர்களுக்கும் வைகாசி 31, 2047 / 13.06.16 திங்கள் கிழமை மாலை நடைபெற உள்ள பாராட்டு விழாவில் கலந்து கொண்டு சிறப்பிக்க அனைத்திந்தியத் தமிழ் எழுத்தாளர்கள் சங்கத்தின் சார்பில் உங்களை எல்லாம் அன்போடு அழைக்கிறோம்.   ஆதிரை முல்லை

வளரி – சூல் வாசிப்புத்தளம் வழங்கும் கவிப்பேராசான் மீரா விருது

பங்குனி 21, 2047  / ஏப்பிரல் 03, 2016 காலை 10.00 மதுரை   வழங்குநர் : பேரா.கவிஞர் ஆதிராமுல்லை மீரா படத்திறப்பு : பேரா.தி.சு.நடராசன் அன்புடையீர், வணக்கம். கவிப்பேராசான் மீரா விருது நிகழ்வு தங்கள் வருகையால்  சிறக்கட்டும்.   கவிதை நட்புடன், அருணாசுந்தரராசன்  ஆசிரியர் – வளரி

தொல்லியல் ஆய்வாளர் வைகை அனீசு மறைந்தார்!

அன்னையிடம் சென்றாயோ நண்பா!   அகரமுதல இதழின் படைப்பாளரும் செய்தியாளரும், தொல்லியல், மாந்தரியல், கல்வெட்டியல், முதலான துறைகளின் ஆய்வாளரும் நூலாசிரியரும் கட்டுரையாளரும், தொலைக்காட்சிகள், இதழ்கள் ஆகியவற்றின் செய்தியாளருமான வைகை அனீசு (அகவை 44) ஐப்பசி 20, 2046 / நவ.06 வெள்ளியன்று அகால மரணமுற்றார் என்னும் வருத்தமான செய்தியைத் தெரிவிக்கின்றோம்.   நேற்று (ஐப்பசி 21, 2046 / நவ.07) யாமம் / இன்று (ஐப்பசி 22, 2046 / நவ.08) வைகறை 1.00 மணியளவில் முனைவர் ஆதிரை முல்லையின் முகநூல் வழியாகச் செய்தி…