தோழர் தியாகு எழுதுகிறார் : ஈழத்தைப் பகைத்தது இந்தியாவா?இந்தியாவைப் பகைத்தது ஈழமா?

(தோழர் தியாகு எழுதுகிறார் : கைச்சரக்கா மார்க்குசியம்?-தொடர்ச்சி) ஈழத்தைப் பகைத்தது இந்தியாவா? இந்தியாவைப் பகைத்தது ஈழமா? தமிழீழ மக்களின் விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கை கொள்ளாமல், இந்திய அரசை நத்தி ஏதாவது தீர்வு பெற்றுக் கொள்வது என்ற கோழைத்தனமான அணுகுமுறையைத் தமிழ் மக்களின் சார்பிலேயே சிலர் முன்மொழிந்து வரக் காண்கிறோம். அடிப்படையில் இந்திய வல்லரசுதான் ஈழத் தமிழர்களைப் பகைத்துக் கொண்டது என்ற உண்மையைத் தலைகீழாகக் கவிழ்த்துப் போட்டு தமிழீழ மக்கள் மீதும் புலிகள் மீதும் இவர்கள் சுற்றடியாகப் பழி போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். இப்போதைக்கு ஈழத்…

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 3

(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2 – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை 3/3 : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு இந்த அறிவிப்பில் நேர்மை இருக்குமானால், இந்திய நாடாளுமன்றத்தில் இதற்கான தீர்மானம் கொண்டுவர வேண்டும். இலங்கையில் நடந்திருப்பது இனவழிப்பு. அதற்காக இராணுவ வகையிலும் அரசியல் வகையிலும் குற்றம் புரிந்தவவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் அவர்களைக் கொண்டுபோய் நிறுத்த வேண்டும் என்று கடந்த காலத்தில் ஐ.நா. மனித உரிமைப்…

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 2

(தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1-தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை 2/3 : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு எல்லைப் பாதுகாப்பு என்பதைப் பேசித் தீர்த்துக் கொள்ளலாம். எத்தனையோ வகையில் தீர்த்துக் கொள்ளமுடியும். இந்தியாவுக்கும் சீனாவுக்கும், இந்தியாவுக்கும் பாக்கித்தானுக்கும் இடையில் மட்டும்தான் எல்லைச் சிக்கல் இருக்கிறதா? தமிழ்நாட்டிற்கும் கேரளாவிற்கும எல்லைச் சிக்கல் இல்லையா? மராட்டியத்துக்கும் கருநாடகத்திற்கும் இல்லையா? இந்திய வடகிழக்கின் ஏழு சகோதரிகள் என்னும் ஏழு மாகாணங்களுக்கு இடையே இல்லையா? பாதுகாப்பு…

தோழர் தியாகு எழுதுகிறார் : தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு, திலீபன் நினைவுப் பேருரை 1.

(தோழர் தியாகு எழுதுகிறார் : கல்வியுரிமைக் கோரிக்கை விளக்கம் – தொடர்ச்சி) திலீபன் நினைவுப் பேருரை: தமிழீழம் – இந்தியா – தமிழ்நாடு கடல் கடந்து போனாலும் தமிழ் கடந்து போகாமல் தமிழ் மொழி, இன, தேச, உணர்வோடு வாழ்ந்து வரும் உலகத் தமிழர்களுக்கு நான் சார்ந்த தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் சார்பில் முதலிலே வணக்கத்தை உரித்தாக்கிக் கொள்கிறேன். ஈகத்தின் இன்னொரு பெயர் திலீபன். என்றும் நினைவில் நிலைத்திருக்கும் திலீபனை நினைவுகூர்ந்து, தமிழீழ விடுதலைப் போரில் தம்மை ஆகுதி ஆக்கிக்கொண்ட பல்லாயிரம் மாவீரர்களையும்…

தமிழ் இணையம் 2023, மதுரை, நிறைவு விழா

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்மொழியியல் துறைதமிழ் இணையக் கழகம்,இந்தியாதமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கைதமிழ் இதழ், கனடாஇணைந்துதே.உ.க.[RUSA] திட்டம் 2 நிதி நல்கையுடன்நடத்தும்தமிழ் இணையம் 2023இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்நிறைவு விழாகா்த்திகை 01, 2054 வெள்ளி 17.11.2023

தமிழ் இணையம் 2023, மதுரை, தொடக்க விழா

மதுரை காமராசர் பல்கலைக் கழகம்மொழியியல் துறைதமிழ் இணையக் கழகம், இந்தியாதமிழறித நுட்பியல் உலகாயம், இலங்கைதமிழ் இதழ், கனடாஇணைந்துதேசிய உயர் கல்வி[(உ)ரூசா] திட்டம் 2 நிதி நல்கையுடன்நடத்தும்தமிழ் இணையம் 2023இரு நாள் பன்னாட்டுக் கருத்தரங்கம்தொடக்க விழாஐப்பசி 30, 2054 வியாழன் 16.11.2023

திலீபன் மண்ணுக்காக இறந்தான் – மேதகு பிரபாகரன்

திலீபன் மண்ணுக்காக இறந்தான்  – உயிர்க்கொடையின்பொழுது மேதகு பிரபாகரன் விடுத்த செய்தி   “எமது விடுதலை இயக்கம் எத்தனையோ அற்புதமான  ஈகங்களைச் செய்திருக்கிறது. வீரகாவியங்களைப் படைத்திருக்கிறது. இவையெல்லாம் எமது ஆயுதப் போராட்ட வரலாற்றில் நாம் ஈட்டிய வீர சாதனைகள். ஆனால், எனது அன்பான தோழன் திலீபனின் ஈகமோ-தியாகமோ வித்தியாசமானது, வியக்கத்தக்கது. எமது போராட்ட வரலாற்றில் புதுமையானது. அமைதிப் போராட்டக் களத்தில் தன்னைப் பலிகொடுத்து ஈடு இணையற்ற ஈகத்தைத் திலீபன் புரிந்தான். அவனது மரணம் ஒரு வரலாற்று நிகழ்ச்சி. தமிழீழத் தேசிய ஆன்மாவைத் தட்டியெழுப்பிய நிகழ்ச்சி….

தமிழீழப் படுகொலை  : உலகம் வருந்தவும் இல்லை!  திருந்தவும் இல்லை! – இலக்குவனார் திருவள்ளுவன்

தமிழீழப் படுகொலை  : உலகம் வருந்தவும் இல்லை!  திருந்தவும் இல்லை!   ‘’யாதும் ஊரே! யாவரும் கேளிர்!’’,  ‘’பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்’’ ஆகிய தமிழ் நெறிகள் உலகெங்கும் பரப்பப்படவில்லை. இதனால், இனம், சமயம்(மதம்) முதலானவற்றின் அடிப்படையில் பாகுபாடு காட்டப்பெற்று உலகெங்கும் படுகொலைகள் நடந்து கொண்டிருக்கின்றன. இத்ததகைய படுகொலைகளிலிருந்து மீண்டவர்களும் இத்தகைய படுகொலைகளுக்குத் துணை நிற்கின்றனர். உலக நாடுகளைக் கட்டுப்படுத்தக்கூடிய உலக அமைப்பு எதுவும் உருவாகவில்லை. இருக்கின்ற உலக அமைப்புகள் வல்லமையாளர்கள் கைப்பிடிகளில் உள்ளன. எனவே அவர்கள் ஆட்டுவிப்பிற்கேற்ப ஆடுகின்றன. எனவே, மனிதப் படுகொலைகளுக்கு எதிரான…

அனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா? – குவியாடி

பிற கருவூலம்   அனலும் புனலும் : வழக்காடு மொழி – இந்தியா, தமிழர்களுக்கான நாடு இல்லையா?   பன்னாட்டு மன்றமான ஐ.நா. உலக மனித உரிமைகள் சாற்றுரை (Universal Declaration of Human Rights) மூலம் மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய பல உரிமைகளைத் தெரிவித்துள்ளது. பன்னாட்டு மன்றத்தின் பொது அவையால் பாரிசு நகரில் 1948 இல் ஏற்கப்பெற்ற இச்சாற்றுரை அடிப்படையில் உலகநாடுகள் பலவும் தம் மக்களுக்கு உரிமைகள் வழங்கியுள்ளன. மனித உரிமைகள் சாற்றுரையில் குறிப்பிடத்தக்கன, கருத்து வெளிப்பாட்டு உரிமை, மொழி உரிமை, நேர்மையான…

இந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள்  – தமிழ் ஓவியா

இந்தியா எங்கும் ‘தமிழ்’ என்று தொடங்கும் ஊர்ப் பெயர்கள் ஆந்திராவில் – 29 ஊர்கள் அருணாசலப் பிரதேசத்தில் – 11 ஊர்கள் அசாமில் – 39 ஊர்கள் பீகாரில் – 53 ஊர்கள் குசராத்தில் – 5 ஊர்கள் கோவாவில் – 5 ஊர்கள் அரியானாவில் – 3 ஊர்கள் இமாசலப்பிரதேசத்தில் – 34 ஊர்கள் கருநாடகாவில் – 24 ஊர்கள் மகாராட்டிரத்தில் – 120 ஊர்கள் மேகாலயாவில் – 5 ஊர்கள் மணிப்பூரில் – 14 ஊர்கள்மத்தியப்பிரதேசத்தில் – 60 ஊர்கள் நாகாலாந்தில்…

ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?

“ஐநா மனித உரிமைப் பேரவையும் ஈழத்தமிழர் நீதியும்: அடுத்தது என்ன?”  – 34 ஆவது கூட்டத்தொடர் குறித்த கலந்துரையாடல் கூட்டம் –  மாசி 13, 2048 / 25.02.2017 சனிக்கிழமை, நேரம்: காலை 10.00 மணி   இடம்: ஆசா நிவாசு, 9, இரட்லண்டு வாயில் 5 ஆவது தெரு, நுங்கம்பாக்கம், சென்னை 6. (நுங்கம்பாக்கம் தாசு உறைவகம் எதிர்ப்பக்க சாலை) [ Asha Nivas, 9, Rutland Gate, 5th Street, Nungambakkam, Chennai, Tamil Nadu 600006. (Opp To Taj Coromandel)]…