எழுத்தைக் காப்போம்! இனத்தைக் காப்போம்! – 3 – இலக்குவனார் திருவள்ளுவன்

(பங்குனி 15, 2045 / மார்ச்சு 29, 2015 தொடர்ச்சி)  தாய்நிலமாகிய தமிழ்நிலத்திலேயே தமிழுக்கு மதிப்பில்லாச் சூழல் உள்ளது. கல்வியிலும் பணியிலும் வழிபாட்டிலும் ஆட்சியிலும் என எல்லா இடங்களிலும் தமிழுக்குத் தலைமையை நாம் தரவில்லை. உலகத்தமிழர்களிடையே இன்னல்கள் ஏற்படும் பொழுது குரல்கொடுத்து குறைகளைந்து உதவும் உணர்வு பெரும்பான்மையரிடம் இல்லை. இருந்திருந்தால் ஈழத்தில் இனப்படுகொலையும் நிலப்பறிப்பும் உறுப்புகள் உடைமைகள் இழப்பும் கற்பழிப்பும் வதைவெறியும் ஆகிய பேரவலம் நிகழ்ந்திருக்காதே! இங்கு நாம் தமிழே படிக்காமல் பணியாற்றவும் வணிகத்தில் சிறக்கவும் வாழ்வாங்கு வாழவும் இயலும். எனவே, தேவையில்லாத மொழியைக்…

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-3 : நாக.இளங்கோவன்

  (ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி) முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்கு மாற்றாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும் இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ விடுகுறி(caret)யையோ அலைக்குறி(tilde)யையோ போடலாம் என்று உகர ஊகாரத் துணைக்குறியீடாக அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர் போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த முன்வைப்பின் உச்சம் எனலாம். பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும் எழுத்துகளிற்குப் பல்வேறு  வேடங் கட்டிபிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ இன்னொரு போட்டியாளர் தனது எழுத்துவடிவ…

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-2 : நாக.இளங்கோவன்

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்!  பகுதி-2 : நாக.இளங்கோவன்   (ஐப்பசி 2, 2045 / அக்.09, 2014 தொடர்ச்சி) வா.செ.குழந்தைசாமி இப்படிச் சொல்கிறார் என்றால், காலஞ்சென்ற முனைவர் கொடுமுடி சண்முகனார்ஒரு குறியீட்டை உகர ஊகார வரிசைகட்குச்சூட்டி விடுகிறார். இது வடமொழி அடியொற்றியது. மேற்கண்ட செய்யுளில் உள்ளது போல உகர ஊகாரஉயிர்மெய் எழுத்துகளை மாற்றி விட்டால்கணிக்கு ஏற்றதுபோலத் தமிழை மாற்றிவிடலாம்என்று பரிந்துரைக்கிறார் கொடுமுடியார். கணிக்குஎன்ன குறை அல்லது கணியில் தமிழுக்கு என்ன குறைஎன்பதை மட்டும் வசதியாக எல்லோரும் தவிர்த்துவிடுவது வியப்புக்களில் ஒன்று….