ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு
ஏழு தமிழர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு! – இராமதாசு “இராசீவுகாந்திக் கொலை வழக்கில் 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் எழுவர் விடுதலையில் 161ஆவது பிரிவே சிறந்த தீர்வு” என்று பா.ம.க நிறுவனர் இராமதாசு கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இராசீவுகாந்திக் கொலை வழக்கில், செய்யாத குற்றத்திற்காகத் தண்டிக்கப்பட்டு 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சிறையில் வாடும் பேரறிவாளன் முதலான தமிழர்கள் ஏழு பேரையும் விடுதலை செய்வது குறித்த கருத்து கேட்டு நடுவண் உள்துறைச்…
கி.வெங்கடராமனின் எழுவர் விடுதலை – நூலரங்கம்
[படத்தை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]
எங்கள் கைகள் யாருடைய குருதியிலும் நனைக்கப்படவில்லை – நளினி
ஒவ்வொரு நாளையும் கழிப்பது பெரும் கொடுமையாக இருக்கிறது! – நளினி வேதனை “சிறையில் ஒவ்வொரு நாளையும் கழிப்பதே மிகக் கொடுமையாக இருக்கிறது. அதனால், எங்களை அரசாங்கம் விடுதலை செய்ய வேண்டும். தமிழக அரசு அதைச் செய்யும் என்று நம்புகிறோம்” என்று அரைநாள் காப்பு விடுப்பில்(parole) தந்தையின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்த நளினி வேதனையுடன் தெரிவித்தார். இந்தியச் சிறைகளிலேயே, தண்டனை அடைந்துள்ள பெண் கைதிகளில், மிகுதியான காலம் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ளவர் நளினி. முன்னாள் தலைமையமைச்சர் (பிரதமர்) இராசீவு காந்தி…
செங்கொடியின் நினைவு நாளில் எழுவர் விடுதலை முன்னெடுப்பு
ஆவணி 10, 2046 / ஆக. 27, 2015 வியாழக்கிழமை மாலை 5.00 பாலவாக்கம் மரணத்தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்கம்
எழுவர் விடுதலைக்காக மனித நேயர் எழுவர்! சட்ட எதிர்ப்பர், எதிர்ப்பர்!
இராசீவு கொலை வழக்கில் உண்மையான குற்றவாளிகளைத் தப்ப வைப்பதற்காகச் சிக்க வைக்கப்பட்ட எழுவரின் மரணத் தண்டனை வாணாள் தண்டனையாக மாற்றப்பட்டு விடுதலையும் அறிவிக்கப்பட்ட சூழலில் காங். அரசு இடைக்காலத் தடை பெற்றுள்ளது. எழுவரின் உடனடி விடுதலையை உலகெங்கும் உள்ள மனித நேயர்கள் வரவேற்கின்றனர். விடுதலைக்கான தடைக்கு எதிராக அறவழிகளில் போராடி வருகின்றனர். அதே நேரம் தலைமைக்குக் கால்கை பிடிப்பதுபோல் போக்குகாட்டும் போலிகள் எதிர்த்து வருகின்றனர். விடுதலையை முழுமனத்துடன் வேண்டி ஆதரிப்போர் ஒருபுறம் இருக்க, ஒரு சாரார் காலங்கடந்த முடிவு என்றும்…
