கல்பெயர்த்து இழிதரும் – (உ)ருத்ரா பரமசிவன்
கல் பெயர்த்து இழிதரும் இமிழ் இசை அருவி புல்லோடு ஆங்கு பழனம் தழீஇ பச்சை படர்த்தி பகலவன் தீவிழி அவிப்பக் குளிரும் நீர் விரி பரவை நெடுநல் நாட!அஃது மன் அன்று உள் ஊறு தண்புயல் கண்புயல் படர அடுதுயர் தந்தனை வெஞ்சுரம் ஏகி. நீர்ச்சுனை தீச்சுனை போலும் நிழலும் வேகும் அழல்நுரை அள்ளி அன்னமும் கலங்கும். ஐய நின் துழந்த பிரிவின் கொல் துயர் பொய்த்தீ பற்றி பொல்லாங்கு செய்யும். மைபொதி வானும் புள்நிரல் பொலிவும் இடி உமிழ்பு கண்டு…
அண்ணாப்பத்து – காரை இறையடியான்
1) பண்ணார் தமிழ்ப் பேச்சுப் பாங்கால் பெரியோர்க்கும் ‘அண்ணா’ வா ஆனான் அவன்! 2) மாற்றார் மதிக்கும் மதிவளம் தாங்கிய ஆற்றலால் ‘அண்ணா’ அவன் 3) இடுக்கண் புரிவோரும் இன்பமெனக் கேட்பர் அடுக்கு மொழி அண்ணா அவன்! 4) நஞ்சிந்திப் பேயை நசுக்கச் சிறையிருக்க அஞ்சாத அண்ணா அவன்! 5) தமிழர் தம் பண்பாட்டைத் தாக்கும் வெறியை அமிழ்த்திடும் அண்ணா அவன்! 6) பேராயக் கட்சிப் பெருங்குற்றம் போக்கிட ஆராயும் அண்ணா அவன்! 7) சீர் திருத்த கருத்தைச் செந்தமிழ் நல்லேட்டில் ஆர்த்தெழுதும் அண்ணா…
அறிஞர் அண்ணா அவர்கள் மீது பாடிய வெள்ளணி நாள் விழா வாழ்த்து
– பைந்தமிழ்ப் பாவலர் அ.கி.பரந்தாமனார் திருமணக்கும் கலைமணக்கும் திருத்தொண்டை நாட்டில் சிறப்புமிகப் பெற்றிலங்கும் திருக்காஞ்சி நகரம் பெரும்புகழை எய்திடவே பிறந்த பேரறிஞ, பிறர் இகழ்ச்சி தனை மறக்கும் பெருஞ்சால்பு மிக்கோய், ஒரு கடவுள் உளத்திருத்தி உறுமூடக் கருத்தை ஒழித்துவிடப் பாடுபடும் ஒப்பரிய தொண்ட, இருங்கடல்சூழ் இவ்வுலகில் நீடுழி வாழி! எழுத்தாள! அண்ணாவே, நீடுழி வாழி! இந்தி வந்து புகுவதனால் இனிய தமிழ் சாகும் என்றறிஞர் பெருமக்கள் எடுத்தெடுத்துச் சொலினும் அந்த இந்தி வெறியாளர் அதுபுகுந்து சிறக்க ஆனபல வழிமிகவும் ஆற்றுவது கண்டே அந்த நிலை…
தலைத்தலைமை – அரும்பு
நாமேடை தமிழ் நாடாக்கும் நடைமேடை; சிந்தனையோ பூமேடை; கருஞ்சிவப்பாய்ப் பூத்தவிழி இந்திக்குத் தீமேடை; புகழுக்குத் தெருவெல்லாம் மணிமேடை; கோமேடைப் பழங்காஞ்சிக் கொற்றவன்தான் குணமேடை. முக்கோணத் தமிழகத்தின் முழுக் கோணல் நீக்குகிற தெக்காணப் புதுச்சிற்பி; திருக்குறள்போற் சிறுவடிவம்; எக்கோண மும்நோக்கும் இயல்பறிவு; தூக்கியதோர் கைக்கோணத் துள்இளைஞர் கடற்கோணப் பெருந்தேக்கம். ஒருமைப்பா டென்று தமிழ் ஒழிக்கவரு வார்க்கெதிரே ஒருமெய்ப்பா டில்லாமல் உலவுகிற தமிழரிடை, பெருமைப்பா டொழியாத பெருகுதமிழ் மறத்திற்கு வறுமைப்பா டில்லையென வாழுகிற அகச்சான்று. ‘நாடெ’ன்பான், ‘நமதெ’ன்பான்; நறுந்தமிழ்க் கிடும்பையெனில் ‘வாடெ’ன்பான், ‘தூக்கிடுபோர் வா‘ ளென்பான்; மொழிகாத்தல்…
பிரான்சு கம்பன் மகளிரணியின் முத்தான கவிதை மூன்று
பள்ளிக்கு ஏன் செல்ல வேண்டும்? மரபுக் கவிதையைச் சுவைப்போர் குறைந்து வருவதும், அதைப் புரிந்து கொள்வோர் அருகி வருவதும் கண்கூடு. தொன்று தொட்டு வரும் கவி அரங்கம் அல்லது கவி மலர் என்கிற பாணியில் மக்களைச் சலிப்புற வைப்பதற்கு மாற்றாக அவர்கள் ஊன்றிக் கவனிக்கும் வகையில் அவற்றை அளித்தால் என்ன என்ற எண்ணத்தின் வெளிப்பாடே கடந்த இரு வருட மகளிர் விழாவில் முன் வைத்தக் கவிதைகள். சென்ற வருடம் “வினா-விடை” முறையில் ஒரு கவிஞர் கேட்கவும், மற்றொருவர் விடையளிக்கவும் வைத்த உத்தி…
இக்காலத் தமிழ்க் கவிதை—இணையக் களஞ்சியம்
வணக்கம். இக்காலத் தமிழ்க் கவிதைபற்றிய கலைக்களஞ்சியம் ஒன்றினை உருவாக்கி இணையத்தில் வெளியிட விழைகிறேன். இக்காலத் தமிழ்க்கவிஞர்களின்படைப்புகள் குறித்த தகவல்களும் கவிஞர்களின் வாழ்க்கை-வரலாறும் முழுமையாகத்தொகுக்கப்படவேண்டும்.வெறும்விவரப் பட்டியலாக அமைந்துவிடாமல் இக்காலத்தமிழ்க்கவிதை வளர்ச்சியைக் காட்டும் ஆவணமாக இக் களஞ்சியம் அமைய வேண்டும்.ஆயிரக்கணக்கான தமிழ்க்கவிஞர்களையும் பல்லாயிரக்கணக்கான கவிதைநூல்களையும்தொகுத்து வழங்குதல் எளிய முயற்சியன்று.அதேநேரத்தில் அனைத்துக் கவிஞர்களும்ஒத்துழைத்தால் இப் பணியை முழுமையுற நிறைவேற்றிவிட முடியும்.கீழ்க்காணும்தரவுகளை ஒருங்குகுறி (யூனிகோடு)அச்சுருவில் அனுப்பி உதவுக. என் மின்னஞ்சல்:maraimalai@yahoo.com 1) வாழ்க்கைவரலாறு/தன்விவரம் 2) கவிதைப்பணி:முதலில் வெளிவந்த கவிதை-கவிதை வெளிவந்தஇதழ்கள்–காலம்-கவிதைத் தொகுப்புகள் வெளிவந்த காலம்–பெற்றவிருதுகள்/பாராட்டுகள் 3) கவிதைத் தொகுப்புகள்- ஒவ்வொரு…
ஆடுவோமே பள்ளுப் பாடுவோமே! -முனைவர் மறைமலை இலக்குவனார்
’இந்திய இறையாண்மை’ இதுதான் துன்பக் கடலில் தத்தளிக்கும் இந்திய மீனவர்கள் வலைவீசிப் பிடிக்கும் சிங்களப் படையினர் பிடிபட்டால் சிறைவாசம் தப்பிக்கமுயன்றால் துப்பாக்கிச் சூடு வேடிக்கை பார்ப்பதற்குக் கடலோரத்தில் காவற்படை! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான் என்று புரிந்துகொள்ளுங்கள்! அரசியற்சட்ட அமைப்பில் அறிந்தேற்புப் பெற்றவை அட்டவணைப் படுத்தப்பட்டவை இருபத்துமூன்று மொழிகள்! அந்த வாய்ப்பும் அற்றவை பல நூறுமொழிகள்! ஆட்சி புரியும் நல்வாய்ப்பு ஒரே ஒரு மொழிக்குத்தான்! தொன்மையான மொழிகள் இரண்டே இரண்டு கொண்டாடுவதற்குச் சமற்கிருதம் திண்டாடுவதற்குத் தமிழ்! எதிர்த்துப் பேசாதீர்கள் ’இந்திய இறையாண்மை’ இதுதான்…
மாடுகள்முட்டி மலை சரியுமா???- கவிஞர் சீனி நைனா முகம்மது
பாராட்டத்தான் எண்ணுகிறேன் என்ன செய்வது?-அட பன்றிகளைச் சிங்கமென்று எப்படிச் சொல்வது? மாறாட்டத்தால் இலக்கியமா மயக்கம் காண்பது?-சிறு மண்புழுக்கள் வளைவதையா ‘ட’னா என்பது? கவிதையென்ன பாவமடா உனக்குச் செய்தது?-அதைக் கண்டுவிட்டால் உன்முகமேன் கருகித் தீய்வது? கவிஞனாக ஆசையென்றால் கற்றுப் பார்ப்பது- அது கைவராது போனதென்றால் விட்டுத் தீர்ப்பது! கவிதையுடன் உரைத்துணுக்கா கைகள் கோப்பது?-மலர்க் கதம்பத்துடன் கற்களையா கூட்டுச் சேர்ப்பது? புவிபுகழும் புதுமையென்றா புலம்பித் திரிவது?-என்ன புதுமையடா அலிகள் கூடிப் பிள்ளை பெருவது! கடிதத்துக்கே மொழியறியான் கதைக்குப் போவது-அதில் காலைவிட்டு வாலைநீட்டிக் கவிஞன் ஆவது வடிவமின்றி முடிவுமின்றி…
எங்கே நீ இருக்கின்றாய் அம்மா? – கவிஞர் சீனி நைனா முகம்மது
அனைத்துயிர்க்கும் நேரில் வந்து கருணை செய்ய ஆண்டவனுக் கியலாத காரணத்தால் தனித்தனியே தாய் படைத்தான் என்று மக்கள் தாய்க்குலத்தைப் புகழ்ந்துரைக்கக் கேட்டேன், ஆனால் எனக்கு மட்டும் கருணைசெய்யக் குப்பைத் தொட்டி ஏற்றதென ஏன்விடுத்துப் போனாய் அம்மா? தனக்கெனவே வாழாத தாய்மை என்னைத் தண்டிக்க என்ன பிழை நான் புரிந்தேன்?
இவனா தமிழன் ? இருக்காது – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
இவனா தமிழன் ? இருக்காது யானைக்குப் பூனை பிறக்காது! இவனுக்குப் பாட்டன் பாண்டியன் என்றால் எதிரிக்குக் கூடப் பொறுக்காது-இவன் இனத்துக்கு நேர்ந்த குறைபேறு! தமிழால் வேலையில் சேருகிறான் தமிழால் பதவியில் ஏறுகிறான் தமிழ்ப்பகை கூடி தன்னலம் நாடி தமிழ் மரபெல்லாம் மீறுகிறான் – அதைத் தடுத்தால் உடனே சீறுகிறான்! வடமொழிச் சொல்லைப் போற்றுகிறான்! வம்புக்குத் தமிழில் ஏற்றுகிறான் கடுமொழி என்றே கனித்தமிழ்ச் சொல்லைக் கண்டவர் மொழியில் மாற்றுகிறான் –அதைக் கடிந்தால் உடனே தூற்றுகிறான்! தானும் முறையாய்ப் படிப்பதில்லை தகுந்தவர் சொன்னால் எடுப்பதில்லை தானெனும் வீம்பில்…
அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – கவிஞர் செ.சீனி நைனா முகம்மது
தமிழனென்றால் பிறமொழிதான் பிடிக்குமோ – பிள்ளை தாயைவிட்டு வேறொருத்தி தாள்பணிந்து கிடக்குமோ? அமிழ்தைவிட அடுப்புக்கரி சுவைக்குமோ – அட அடுத்தவரின் சரக்கினில்தான் இவனுக்கென்றும் மயக்கமோ! பிழைப்புக்காகத் தமிழுங்கொஞ்சம் படிக்கிறான் – நல்ல பெரியவேலை கிடைக்கும்வரை திறமையாக நடிக்கிறான்! குழப்பம்பண்ணித் தாய்மொழியைக் கெடுக்கிறான் – வெளிக் குப்பையெல்லாம் தமிழுக்குள்ளே திணிப்பதற்கே துடிக்கிறான்! வடமொழிதான் இவனையின்னும் ஆளுது – பின்னர் வந்துசேர்ந்த ஆங்கிலமும் கூடியாட்டம் போடுது! விடுதலையே இவனுக்கென்றும் இல்லையோ! – இவன் வேற்றுமொழி அடிமைசெய்ய வேண்டிவந்த பிள்ளையோ!
தமிழ்மொழிக் கல்வி வீழுதடா மண்ணில்!- ச. சாசலின் பிரிசில்டா,
தேடும் பொருள் கைவர ஏற்றம் தரும் கல்வி தலை முறைகள் கடந்து திறமை ஊட்டும் கல்வி இன்று வெறுமை யுற்று சிறுமையுற்று வீழுதடா மண்ணில்! சந்தையிலே கூவி விற்கும் சரக்கு ஆனதடா கல்வி சிந்தை உறைய வைக்குமளவில் சிக்கலில் தமிழ்க் கல்வி நாம்வெந்து நொந்து போனாலும் மீட்க வேண்டும் அதனை! அறிவு மொழியாய் ஆங்கிலம் நாட்டில் ஆனதடா மாயையாய் அம்மா அப்பா எல்லாரும் ‘மம்மி டாடி’ போதையாய் தனியார்மயக் கல்வியில் தவிக்குதய்யா…
