வல்லமையாளர் தாலின் வெல்க! – இலக்குவனார் திருவள்ளுவன்  

வல்லமையாளர் தாலின் வெல்க!   திமுகவின் தலைவர் பொறுப்பேற்றதும் தாலின் ஆற்றிய உரை, அருமையான உரை எனப் பல தரப்பாரின் பாராட்டையும் பெற்றுள்ளது. இதில் பாசகவிற்கு எதிராகப் பேசியிருக்கவேண்டா எனச் சிலர் கூறுகின்றனர். கட்சியின் நிலைப்பாட்டை உறுதி செய்து தொண்டர்களை உற்சாகப்படுத்துவதற்கு அக் கருத்தும்தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. எனவே, புதியதாகப் பிறந்தவரின் புதிய உரையைப் பாராட்டலாம்.   திமுக தன் கொள்கைப் பாதையில் சறுக்கிக் கொண்டுள்ளது. எனவேதான் சிலர், திமுக தன் கொள்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும் எனத் துணிவுடன் அறிவுரை கூறுகின்றனர். அவ்வாறு…

கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்! – இலக்குவனார் திருவள்ளுவன்

கொள்கைக்காகவே கட்சிகளும் தலைவர்களும்!   நாம் விரும்பும் கருத்துகளுக்கேற்ற தலைவர்களைப் பின்பற்றி அவர்களது கட்சியில் நாம் ஈடுபாடு காட்டுகிறோம். அல்லது நமது கொள்கைகளுக்கேற்ற கட்சியை விரும்பி அதன் தலைவர் மீது பற்று வைக்கின்றோம். ஆனால், நாம் விரும்பும் கொள்கைகளில் இருந்து அல்லது நம்மை ஈர்த்த கொள்கைகளில் இருந்து தலைவர்கள் விலகினாலும், நாம் கொத்தடிமைகளாக இருந்து அவற்றுக்கு மாறான கருத்துகளைத் தெரிவிக்கும் தலைவர்களைப் போற்றுகிறோம். இந்தக் கொத்தடிமைத்தனத்தால்தான் நாடு அழிவினைச் சந்திக்கிறது. எனவே, நாம் கொள்கைளுக்கு மாறாகக் கடசியும் தலைவர்களும் தடம் புரண்டால் நம் எதிர்ப்பைத்…

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்

தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்!     நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016)  பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான்  கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல்  நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும்  என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…

மத்தியில்ஆட்சி மாறினாலும் மாறாத் தொல்லை – புலவர் சா.இராமாநுசம்

மாற்றமில்லை மாற்றமில்லை ஏதும்இல்லை-ஆட்சி மத்தியில் மாறினாலும் மாறாத்தொல்லை ஆற்றுவதாய் தேர்தலிலே சொன்னதெல்லாம் –மோடி அளித்திட்ட வாக்குறுதி நீர்மேல் சொல்லாம் தூற்றுவதாய் எண்ணாதீர் போகும்போக்கே –எடுத்து துல்லியமாய்க் காட்டுதந்தோ உற்றுநோக்க நேற்றுவரை இருந்தவர்கள் போன வழியே – ஐயா நீங்களுமா..! போவதென்ன? வருதல் பழியே! அழுகின்ற மீனவரின் அழுகுரலும் ஓயவில்லை – நாளும் அலைகடலில் அவன்சிந்தும் கண்ணீரும் காயவில்லை எழுவரவர் விடுதலையும் என்னநிலை ஆயிற்றே – அந்தோ! ஈழத்தில் தமிழருக்கும் நாதியற்றுப் போயிற்றே உழுவார்க்குஊக்கத்தொகை ! நெல்லுக்கேமறுப்பதா!- இந்த உலகுக்கே அச்சாணி!அவன்கழுத்தைஅறுப்பதா! எழுவாரா ! தொழில்செய்ய!…