புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 2/2 – சொருணபாரதி

(புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2  தொடர்ச்சி) புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம்  2/2   அத்துடன், தான் பார்த்த ஆலயங்கள், சுற்றுலாத் தளங்கள், புத்த மடாலயங்கள் ஆகியவற்றையும் விவரிக்கிறார். பசுமந்தான் அருள்மிகு வரதராசப் பெருமாள் கோவிலுக்குச் செல்கிறார்.  அது மட்டுமில்லாமல், அந்தக் கோவிலை வழங்கிய திருவரங்கம்இராசா இராமநாத(ரெட்டியா)ர்பற்றிய குறிப்பையும் தருவதோடு, அவர்தம் கொள்ளுப்பேரன் வாசுவைச் சந்தித்ததையும் குறிப்பிடுகிறார். அதோடு மட்டுமின்றி, கோவிலில் தட்டில் போடப்படும் காசைக் கூட அருட்சுனைஞர் (அர்ச்சகர்) எடுத்து உண்டியலில் போட்டு விடுவதைப் பற்றியும்,  கவனிப்புடன் சொல்கிறார். கம்பையில் ஒரு…

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2 – சொருணபாரதி

புத்தனின் பூமியில் பைந்தமிழ் நந்தவனம் 1/2   நெருப்புக் கோளமான கதிரவனிலிருந்து உடைந்த துண்டின் பயணம் பல கோடி ஆண்டுகளுக்குப் பின் பூமியாக உருவெடுத்தது. பூமிப்பந்தின் பல நூறாயிரம்(இலட்சம்) ஆண்டுகளின் பயணம் உயிர்களை உருவாக்கியது. உயிர்களின் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளின் பயணம் மனிதனை உருவாக்கியது. மனிதனின் வாழ்க்கையும் ஒரு பயணம்தான்!   பயணம் பட்டறிவுப் புதையலைக் கண்டெடுக்கும் அகழாய்வு; அறிவைச் சுரக்கும் பள்ளதாக்கு. பயணம் மனிதர்கள் அனைவருக்கும் பிடித்தமான ஒன்று. பயணங்கள் பல கண்டங்களைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் நாடுகளைக் கண்டுபிடித்தன. பல பயணங்கள் புதிய…

மு.முருகேசின் கதை நூலுக்கும் பிறர் நூல்களுக்குமான திறனாய்வுக் கூட்டம், கோவை

  தமுஎகச – இலக்கியச் சந்திப்பு – நிகழ்வு – 172 07.08.2016 – ஞாயிறு காலை 10 மணி – தாமசு மன்றம், தொடரி நிலையம் அருகில், கோவை. தலைமை – பா.க.சு.மணியன் நூல்கள் அறிமுகம்: மு.முருகேசின் சிறுகதைத் தொகுப்பு ‘இருளில் மறையும் நிழல்’ உரை – சூர்யா கா.சு. வேலாயுதனின் – ‘உச்சாடனம்’ (கலைஞரைச் சந்தித்திராத அனுபவங்கள் ) உரை –  சி..டி. இராசேந்திரன் அகிலாவின் கவிதை நூல் ‘மழையிடம் மெளனங்கள் இல்லை ‘ உரை – செ.மு.நசீமா பருவீன் ஏற்புரை:…

கருமலைத்தமிழாழனின் செப்பேடு – நூலாய்வு : பொன்.குமார், இனிய உதயம்

  செப்பேடு ( மரபுக் கவிதை நூல் ) ஆசிரியர் – பாவலர்  கருமலைத்தமிழாழன் திறனாய்வு – பொன் குமார்        தமிழ்க் கவிதையின்  தொடக்கம்   மரபுக்  கவிதையே.  பத்தொன்பதாம்  நூற்றாண்டு  வரை  மரபின்  ஆதிக்கம் தொடர்ந்தது.  பாரதிக்குப்  பின்  மாற்றம்  ஏற்பட்டது.  மரபைப்  பின்  தள்ளி  புதுக்கவிதை  முன்  சென்றது.  மரபுக்  கவிதை  என்றாலே  ஒரு  சிலர்  மட்டுமே  எழுதி ஒரு சிலர்  மட்டுமே  வாசிக்கும்  நிலையில்  மரபுக்  கவிதை  இருந்ததை  மாற்றி  அனைவரும்  வாசிக்கும்  வண்ணம்  மரபுக்  கவிதையை  எழுதி …

வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 3/3 – முனைவர். ப. பானுமதி

(வரலாறு படைக்கும் வாழ்வியல் கவிஞர் அன்வர்! 2/3 தொடர்ச்சி)   3     சமுதாயத்தில் பெண்களுக்கு எதிராக இழைக்கப் படும் வரதட்சணைக் கொடுமை, வரதட்சணை கொடுப்பதற்காகவே வேலைக்குப் போகும் பெண்கள் ஆங்காங்கு படுகொலைச் செய்யப்படும் கொடுமை முதலியவற்றைக் கண்டு மனம் கொதிக்கும் இக்கவிஞர் ஆண் என்பதால் கண்ணீர்த் துளிகளுக்கு மாற்றாகக் கவிதைத் துளிகளைச் சிந்தியுள்ளார். அந்தத் துளிகளில், கருவுக்குக் கருவான சமாச்சாரத்தின் கார்காலங்கள் நிசப்தப்பட்டுக் கிடக்கிறது !   பாதம் சுமக்கும் பாதரட்சைகளின் பரதேசி வாழ்வு போல  என்று தீண்டாமை என்று ஒதுக்கப்படும்…

கருமலைத் தமிழாழனின் ‘மண்ணும் மரபும்’ – கவிதைத் தொகுப்புக்கு மா.செங்குட்டுவன் அணிந்துரை

மண்ணும் மரபும் – இளைய  தலைமுறையினருக்கு  இனிய  அறவுரைகள் நிறைந்த கவிதைநூல் – கவிக்கொண்டல் மா.செங்குட்டுவன்   ‘மண்ணின் மணம்’  என்னும் முதற்பகுதியில்  தமிழ் ஒரு பூக்காடு என்னும் தலைப்பில்  தாய்த்தமிழை வணங்கி, தமிழ்மணம் வீசச் செய்யும் பாடலில் தொடங்கி  தமிழ்கொலை  புரிந்து வரும் தொ(ல்)லைக்காட்சி வரை இக்காலத்திற்கு  மிகவும் தேவையான பல்வேறு தலைப்புகளில் பத்தொன்பது கவிதைகளைத் தந்துள்ளார்.   ‘மரபின் வேர்கள்’ என்று இரண்டாம் பகுதியில்  மாதரி வீட்டில் கண்ணகி, தமிழ்மன்னன் இராவணன் என்னும் தலைப்புகளில் அருமையான இலக்கிய விருந்து படைத்துள்ளார். தந்தை…

மாம்பலம் ஆ.சந்திரசேகரின் “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்: மறைமலை இலக்குவனார்

மாம்பலம் ஆ.சந்திரசேகரின்  “வைகறை வண்ணங்கள்” —நூலறிமுகம்    ‘கவிதை என்பது கருத்துகளை விளக்கமாக மனத்தில் தைக்கும்படிக் கூறுவது.’ ‘வாழ்வின் எதிரொலியே கவிதை’ சமகால வாழ்வின் சரியான படப்பிடிப்பு’ என்றெல்லாம் கவிதையைப்பற்றிய  எண்ணற்ற விளக்கங்களும் வரையறைகளும் வழங்கிவருகின்றன.   குழந்தையின் குறுநகை ஒரு கவிதை; காலைக் கதிரவனின் கோல எழில் ஒரு கவிதை; மாலைநிலாவின் மயக்கும் எழில் ஒரு கவிதை என்று நாம் அடுக்கிக்கொண்டே செல்லலாம். நம்மை ஈர்க்கும் நயமும் எழிலும் சுவையும் திறனும் கொண்ட அனைத்துமே கவிதைகள் தாம். அக் கவிதைகளைச் சுவைக்கத் தெரிந்தால்…

பாலனின் சிறப்புமுகாம், மொழிபெயர்ப்பு நூல்கள் – ஒரு சிறுமியின் பார்வை : திவ்வியா பிரபாகரன்

    ஈழத்து மண்ணில் சிறிலங்கா அரசு நடத்திய இனப்படுகொலைகளில் இருந்து தப்பி நல்வாழ்வு இல்லாவிட்டாலும் “உயிராவது வாழும் வாழ்வு கிடைக்குமா?” என்ற ஏக்கத்தோடும் வழி தேடும் நோக்கோடும் தமது வீட்டையும் உறவுகளையும் பிறந்து வளர்ந்த மண்ணையும் பிரிந்து “இந்தியா எங்களைக் காப்பாற்றும்”, “தமிழ் நாடு எங்களை அரவணைக்கும்”, “தமிழர்கள் எமக்காக உள்ளார்கள்” என நம்பித் தமிழகம் சென்று பாதுகாப்பு தேடிய எம் ஈழ உறவுகள் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக 110 க்கும் மேற்பட்ட அகதி முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள் விலங்குகளைப்…

சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி- விசய் இராசுமோகன்

சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி வடகரை : ஒரு வம்சத்தின் வரலாறு   ஒரு வருடம் முன்பாக ஒரு நாள் திரு.இராசேந்திரன் அவர்களை அலுவலகத்தில் சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தபோது பக்கத்து மேசையில் இருந்த அவரது குடும்ப ஆவணங்களை எடுத்துக் காண்பித்து, அவரது குடும்ப வரலாற்றை எழுதிவருவதாகக் கூறினார். நான் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்ன வழக்கமாக எல்லாரும் சொல்லும், பெருமைப்பட்டுக் கொள்ளும் குடும்ப வரலாறாகத்தான் இருக்கும் என்று நினைத்தேன்.   ஆனால் நூலை எடுத்து இரு நாள் கீழே வைக்கமுடியவில்லை. சாமியாடி சொல்லவந்த குறியைச் சொல்லிவிட்டே…