இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06 –  சி.இலக்குவனார்

[இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  05  தொடர்ச்சி] இலக்கியம் கூறும் தமிழர்  வாழ்வியல் (சங்கக் காலம்)  06   தொல்காப்பியர் காலத் தமிழ்நாடு சேரர் சோழர் பாண்டியர் எனும் முக்குலத்தினரால் ஆளப்பட்டு அம் மூவர் பெயரால் சேரநாடு, சோழநாடு, பாண்டிய நாடு என அழைக்கப்பட்டு வந்துள்ளது.  கொங்குநாடு என்ற பிரிவோ தொண்டை மண்டிலம் என்ற நாடோ அன்று தோன்றிலது.  வடவேங்கடத்திற்குத் தெற்கே கன்னட நாடும் துளு நாடும் தோன்றில. பிற்காலத்தில் மலையாள நாடு என்று அழைக்கப்பட்டது, அன்று சேரநாடு எனும் பெயரோடு…

பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை : திருக்குறள் ஆராய்ச்சி 3/6

(பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை :  திருக்குறள் ஆராய்ச்சி 2/6 தொடர்ச்சி) பேராசிரியர் சி.இலக்குவனாரின் பன்முக ஆளுமை திருக்குறள் ஆராய்ச்சி 3/6 பெண்களும் அறியும் ஆற்றல் உடையவர்களே! பெண்மைக்கு எதிராக எங்குக் களை தோன்றினாலும் அதனைக் களையும் காவலராகப் பேராசிரியர் திகழ்ந்துள்ளார். எனவேதான் கல்வி ஆண் பெண் வேறுபாடின்றி அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும் என்றார். இதனை ‘அறிவறிந்த மக்கட்பேறு’ (குறள் 71) என்பதை விளக்கும்பொழுதும் பின்வருமாறு வெளிப்படுத்துகிறார்: ‘‘மக்களாய்ப் பிறப்போர் அனைவரும் ‘அறிதற்குரியர்’தாம். அறிதற்குரியோருள்தான் சிலர் அறிவுடையோராகவும் சிலர் அறிவற்றவராகவும் வளர்ந்து விடுகின்றனர். அறிவறிந்தவர்தாம்…

விதைக்க மறந்த மனித நேயம் – கு. நா. கவின்முருகு

விதைக்க மறந்த மனித நேயம் எந்தேசம் எங்கேபோ கிறது சொல்லு இழிநோக்கி நகரத்தான் மனிதம் என்றா சந்தையெனக் கல்வியாகித் திருட்டுக் கொள்ளை சாதிமதச் சண்டைகளும் மனிதம் கொல்ல எந்தத்திசை போகிறது மக்கள் கூட்டம் ஏனிந்த மிருகத்தோல் மனிதன் போட்டான் வந்துதிக்கும் சூரியனும் மதங்கள் சாதி மனிதனிலே பார்த்துத்தானோ இனியும் தோன்றும்? உடன்பிறந்து வாழ்ந்துவரும் உனது இரத்தம் ஊன்தின்னி யென்றான வேங்கை யர்கள் தடம்பதிக்க அறிவுகொள்ள கல்வி உண்டு சாக்கடையில் கரைத்துவிட்டான் கற்ற யெல்லாம் வடம்பிடித்து இழுப்பாரோ இனியும் நாட்டை வளங்காண மனிதநேயம் பெருகி யோட…

திருக்குறள் அறுசொல் உரை – 074. நாடு : வெ. அரங்கராசன்

(அதிகாரம் 073. அவை அஞ்சாமை தொடர்ச்சி) 02. பொருள் பால் 07. நாட்டு இயல்   அதிகாரம் 074. நாடு     நாட்டின் இலக்கணம், சிறப்புகள், நாட்டு மக்கள்தம் பண்புகள். தள்ளா விளையுளும், தக்காரும், தாழ்(வு)இலாச்    செல்வரும், சேர்வது நாடு.          தொடர்விளைவு, தக்கார், உயர்மனச்        செல்வர், இருப்பது நல்நாடு.   பெரும்பொருளால் பெள்தக்க(து) ஆகி, அரும்கேட்டால்    ஆற்ற விளைவது நாடு.            பெரும்பொருளால், கேடும் இல்லா        நிறைவிளைவால், அமைவது நாடு.   பொறைஒருங்கு மேல்வரும்கால்…

இந்நாடு முழுதும் பரவியிருந்தோர் தமிழரே ! – மறைமலையடிகள்

பண்டைக்காலத்தே ஆசியாக் கண்டத்தில் வடதிசைப் பக்கங்களில் இருந்த ஆரியர், குளிர்நனி மிகுந்த அவ்விடங்களை விட்டு, இந்திய நாட்டிற் குடிபுகுதற்குமுன், இவ்விந்தியநாடு முழுதும் பரவியிருந்த மக்கள் தமிழரேயாவர். (கேம்பிரிட்ஜின் தொல்லிந்திய வரலாறு) -தமிழ்க்கடல் மறைமலையடிகள்: முல்லைப்பாட்டு ஆராய்ச்சியுரை: பக்கம். 35  

உன்றனுக்காய் ஒருநாடு தோன்ற வேண்டும்! – சி.கருணானந்த இராசா

  சந்த வசந்தத்தில் தமிழழகைக் காட்டுதற்காய் வந்த புலவீர்! வழி நடத்திடும் தலைவ! குந்தியிருந்து குறிப்போடெமை நோக்கும் சொந்தங்காள் உங்களைக் கை தூக்கி வணங்குகிறேன். கானமயிலாடியதைக் கண்டபொல்லாக் கடைகெட்ட வான்கோழி சிறகு தூக்கி மோனநடம் ஆடியதைப்போல நானும் முனைகின்றேன் பாவலர் முன் கவிதைபாட ஆனதனால் கற்றோரே கேலிவிட்டு அறிவற்றோன் கவிகேட்பீர் என்று வேண்டி தேனினியாள் தமிழ்த்தாயின் பாதம் வீழ்ந்தேன் செய்த கவிக்(கு) இன்தமிழே என்றும் காப்பு காரிகையைக் கண்ணெடுத்தும் பார்த்திராத கட்டையிவன் கவிதழுவா மணங்காணான்(பிரமச்சாரி) தூரிகையாம் யாப்பையவள் அருங்கலத்தில் தோய்த்தெழுதி யறியாத சுத்த மூடன்…