தோழர் தியாகு எழுதுகிறார் 238 : நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க!

(தோழர் தியாகு எழுதுகிறார் 237 : மணிப்பூர்க் கோப்புகள், காதை 13 தொடர்ச்சி) நெ.ப.நி.(என்எல்சி) நிலப்பறிப்புக்கு எதிரான உழவர் போராட்டம் வெல்க! (போராட்ட அமைப்பினரின் முழக்கங்கள்) நெய்வேலி பழுப்பு நிலக்கரி (என்எல்சி) நிறுவனமே! 1) உழவர்களிடம் நிலம் பறிப்பதைக் கைவிடு! 2) கைப்பற்றிய நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கு! 3) நிலம் கொடுத்த உழவர்களுக்கு வீட்டுக்கு ஒருவருக்காவது நிலையான வேலை கொடு! 4) மூன்றாம் சுரங்கத் திட்டத்தைக் கைவிடு! இந்திய அரசே! 1) புதைபடிவ எரிபொருளைச் சார்ந்திருக்கும் நிலையை மாற்று! புதிய சுரங்கம் தோண்டுவதை…

தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்துக் கொண்டார்!

பதுளையிலுள்ள தமிழர் நிலங்களைப் புத்தத் துறவி பறித்து(அபகரித்து)க் கொண்டார்! செயலணியில் முறைப்பாடு ஊவா மாகாணம் பதுளையிலுள்ள தங்களது காணிகள் புத்தத்த துறவியால் பறிக்கப்பட்டிருப்பதோடு, மட்டக்களப்பிற்கு ஏதிலியராக (அகதியாக) வந்து 33 ஆண்டுகள் கழிந்தும், வாழ வீடு கிடைக்கவில்லை என்று பெருந்தோட்டப் பகுதி மக்கள் முறையிட்டுள்ளனர்.   நல்லிணக்க முயற்சியின்பொழுது தமிழ்க் குமுகம்(சமூகம்) நிகருரிமை(சமவுரிமை) பெற்று அனைத்து நலங்களுடனும் வளங்களுடனும் வாழ வழி வகை செய்ய வேண்டும் எனக் கோருகின்றோம்.   1983ஆம் ஆண்டு சூலைக் கலவரத்தில் இடம்பெயர்ந்து மட்டக்களப்பு பதுளை வீதிப் பகுதியில் வாழும்…

பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை!

பேரூராட்சிகளில் கொள்ளையோ கொள்ளை! ஆண்டுதோறும் தணிக்கை செய்ய சமூக ஆர்வலர்கள் எதிர்பார்ப்பு.   தமிழகத்தில் உள்ள பேரூராட்சிகளில் நடைபெறும் கொள்ளைகளைப் பற்றிக் குறிப்பிடும்பொழுது மன்னன் இல்லாத கோட்டை, தண்ணீர் இல்லாத ஆறு, அதிகாரம் இல்லாத காவலர், மரங்கள் இல்லாத மலை, தெய்வம் இல்லாத கோயில் என அடுக்கிக்கொண்டே போவார்கள். திரைப்படங்களில் காண்பிப்பது போல போடாத சாலை, வெட்டாத கிணறு, கட்டப்படாத கழிப்பறைகள் எனக் கணக்கு காட்டி பணத்தைக் கொள்ளையடிப்பது உண்டு.   பொதுவாகத் தமிழகம் முழுவதும் உள்ள பேரூராட்சிப்பகுதிகளில் பலவித முறைகேடுகள் நடைபெற்று வருகின்றன….