பூங்கொடி 11  – கவிஞர் முடியரசன்: வள்ளி குறிக்கோள் வாழ்வினள்

(பூங்கொடி 10  – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை வள்ளி குறிக்கோள் வாழ்வினள் அவர்முதன் மனையாள் அரும்பெறல் வள்ளி, எவர்துயர்ப் படினும் எழுந்துடன் சென்று 50 துன்பம் நீக்கலில் இன்பங் கொள்வாள்; என்பும் பிறர்க்கே எனுங்குறி வாழ்வினள்; பொதுநலத் தொண்டே புந்தியிற் பதிந்தவள்; எதுசரி என மனம் ஏற்குமோ அதனைத் துயர்பல நேரினும் துணிவுடன் ஆற்றும் 55 அயர்விலாக் கணவர் அரும்பணிக் கியைந்தவள்; அடிமை வாழ்வில் அருவருப் புற்று விடுதலை வேட்டு வீறுற் றெழுந்த நல்லவன் ஒருவனை நாய்மகன்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 797-807 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 797. ஆசுகவி, 798. மதுரகவி, 799. சித்திரகவி, 800. வித்தாரகவி ஆசுகவி –           கடும்பாச்…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 49 : அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 48 : மாயூரப் பிரயாணம் 2/2 தொடர்ச்சி) அத்தியாயம் 27. பிள்ளையவர்கள் முன் முதல் நாள் 1/2 மாயூரத்திற்கு நாங்கள் காலையில் வந்தசேர்ந்தோம். உடனே என் தந்தையார் குளியல் முதலியன செய்துவிட்டுப் பூசை செய்யத் தொடங்கினார். என் தாயார் இல்லாத காலங்களில் அவரது பூசைக்கு வேண்டிய பணிவிடைகளை நானே செய்வது வழக்கம். அவ்வாறே அன்றும் செய்தேன். அன்று புரிந்த பூசையில் என் நல்வாழ்வைக் குறித்து அவர் கடவுளைப் பிரார்த்தித்து உருகியிருக்க வேண்டுமென்று தெரிந்தது. பூசைக்குப் பின் போசனம் செய்தோம். அப்பால்…

ஊரும் பேரும் 45 : இரா.பி.சேது(ப்பிள்ளை: தலமும் கோவிலும்

(ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை): மாடமும் மயானமும்   தொடர்ச்சி) ஊரும் பேரும் 45 தலமும் கோவிலும் கருவூர்-ஆனிலை     பழங் காலத்தில் தமிழ் நாட்டிற் சிறந்து விளங்கிய நகரங்களுள் ஒன்று கருவூர் ஆகும். அதன் பெருமையைச் சங்க நூல்களும் சமய நூல்களும் எடுத்துரைக்கின்றன. “திருமா வியனகர்க் கருவூர்” என்று அகநானூறும், “தொன் னெடுங் கருவூர்” என்று திருத்தொண்டர் புராணமும் கூறுதலால் அதன் செழுமையும் பழமையும் நன்கு புலனாகும். ஆன்பொருநை என்னும் ஆம்பிராவதி யாற்றின் வடகரையில் அமைந்த கருவூர் பண்டைச் சோழ மன்னர் முடி…

தமிழ் வளர்த்த நகரங்கள், அ. க. நவநீத கிருட்டிணன்- 2. தன்னேரிலாத தமிழ்

(தமிழ் வளர்த்த நகரங்கள் 1. பதிப்புரையும் அணிந்துரையும் – தொடர்ச்சி) தன்னேரிலாத தமிழ் பாரில் வழங்கும் பன்னூறு மொழிகளுள் முன்னைப் பழமொழிகள் மிகச்சிலவே. அவற்றுள்ளும் முன்னைப் பழமொழியாய்ப் பின்னைப் புதுமைக்கும் புதுமையாய் விளங்கும் மொழி தன்னேரிலாத தமிழாகும். இளமையழகும் இனிமை நலமும் இறைமை நறுமணமும் என்றும் குன்றாது நின்று நிலவும் இயல்புடையது இம்மொழி. அதனாலேயே இதனைக் ‘கன்னித்தமிழ்’ என்று கற்றோர் போற்றுவர். கதிரவனும் கன்னித்தமிழும் கன்னித்தமிழைப் புலவர் ஒருவர் கதிரவனுக்கு ஒப்பிட்டார். கதிரவன் காலையில் உதயவெற்பில் உதிக்கிறான்; உயர்ந்தோர் உவந்து வணங்குமாறு வானில் ஒளி…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 50 : பழந்தமிழும் தமிழரும் 10

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 49 : பழந்தமிழும் தமிழரும் 9 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 10   களவொழுக்கத்தின்கண் மகளிருடன் விளையாட்டும் விழாவும் நீங்கிய வாழ்வு தலைவனுக்கு இல்லை என்பது இதன் பொருளாகும். பழந்தமிழில் மகளிர் விளையாட்டைக் குறித்த ஓரை என்ற சொல் தொல்காப்பியர் காலத்தில் ஆடவர் மகளிர் எனும் இரு சாரார் விளையாட்டுக்குரிய பொதுச் சொல்லாகப் பயன்படுத்தும் நிலை ஏற்பட்டிருக்கலாம். மொழியியலில் சொற்பொருள் விரிதல் எனும் முறையாகும் இது.  இவ்வாறு விளையாட்டைக் குறித்துநின்ற ஓரை என்ற  தூய தமிழ்ச்சொல்லுக்கு நச்சினார்க்கினியர் தீய…

பூங்கொடி 10  – கவிஞர் முடியரசன்: ஊரார் பழிமொழி

(பூங்கொடி 9  – கவிஞர் முடியரசன்: அருண்மொழியின் இசைப்புலமை- தொடர்ச்சி) பூங்கொடி பழியுரை காதை ஊரார் பழிமொழி இசைத்தொழில் புரியும் இவள் இத் தொழிலை வசைத்தொழில் என்று வெறுத்திடல் என்கொல் ? 35செருக்கினள் கொல்லோ செல்வம் மிகவாய்ப் பெருக்கினள் கொல்லோ ? என்றுரை பேசி ஏளனம் செய்தனர் என்ற கேன்மொழிக்கு அருண்மொழி அலருக்குக் கூசாமை அருண்மொழி நகைத்தனள் அருளினள் சிலசொல்; பொதுப்பணி புரிவோர் புகழ்வும் இகழ்வும் 40 நினைத்திடல் வேண்டும் ஒருநிகர் எனவே; ஆருயிர்த் தோழி! அந்நாள் வடிவேற் பேருடைச் செம்மலைப் பேணிஎன் காதற்…

சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796

(சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம்  787 – 790 – தொடர்ச்சி) சுரதாவின் தொகுப்பில் தமிழ்ச்சொல்லாக்கம் 791 – 796 (சொல், மொழி மாற்றம் பெற்ற சுவடுகளை அடையாளங் காட்டும் சுரதாவின் அரிய தொகுப்பு. கி.பி. 1857 முதல் 1953 வரை வெளிப்பட்ட மொழிமாற்றச் சொற்களைத் (தம் பார்வையில் பட்டவற்றைத்) தேடித் தந்துள்ளார். 238 நூல்களும் 200 நூலாசிரியர்களும் பட்டியலாய்த் தரப்பட்டுள்ளன. மொழிமாற்றச் சொல்லும், சொல் இடம் பெற்ற பகுதியும் நூலும் தரப்பட்டுள்ளன.) 791.Crane – ஓந்தி  Crane –           ஓந்தி 792. Share speculators…

உ.வே.சா.வின் என் சரித்திரம் 48 : மாயூரப் பிரயாணம் 2/2

(உ.வே.சா.வின் என் சரித்திரம் 47 : மாயூரப் பிரயாணம் 1/2 தொடர்ச்சி) என் சரித்திரம் – பாகம் 2 மாயூரப் பிரயாணம் 2/2 “என்ன செய்வது! நம்முடைய கால வித்தியாசம் இப்படி இருக்கிறது. இதுவரையிலும் அவன் படிப்பையே முக்கியமாக எண்ணி எங்கெங்கே போனால் அவன் படிப்பும் நம் காலட்சேபமும் நடைபெறுமோ அங்கங்கெல்லாம் போய் இருந்தோம். இப்போதோ மாயூரத்தில் நாம் போய் இருப்பது சாத்தியமன்றே! கிராமங்களில் உள்ள சனங்களைப் போல நகரவாசிகள் நம்மை ஆதரிக்க மாட்டார்களே! தவிர, அரியிலூரைச் சுற்றிலுமுள்ள ஊர்களில் இருப்பவர்கள் என்னிடம் அபிமானமுள்ளவர்கள்….

ஊரும் பேரும் 44 : இரா.பி.சேது(ப்பிள்ளை) : மாடமும் மயானமும்

(ஊரும் பேரும் 43 : இரா.பி.சேது(ப்பிள்ளை): அட்டானமும் அம்பலமும் தொடர்ச்சி) ஊரும் பேரும் 44 மாடமும் மயானமும்     மாடம் என்னும் பெயர் அமைந்த இரண்டு திருக்கோயில்கள் தேவாரத்திற் குறிக்கப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று கடந்தையென்னும் பெண்ணாகடத்தில் உள்ள தூங்கானை மாடம்,       “கடந்தைத் தடங் கோயில் சேர்       தூங்கானை மாடம் தொழுமின்கனே” என்று தேவாரம் அம் மாடத்தைப் போற்றுகின்றது. இன்னும், ஆக்கூரில் உள்ள சுயம்பு வடிவான ஈசன் திருக்கோவில் தான் தோன்றி மாடம் என்னும் பெயர் பெற்றது. முன்னாளில் அறத்தால் மேம்பட்டிருந்த ஊர்களில்…

தமிழ் வளர்த்த நகரங்கள் 1. பதிப்புரையும் அணிந்துரையும் அ. க. நவநீத கிருட்டிணன்

தமிழ் வளர்த்த நகரங்கள் நூற்குறிப்பு:தமிழ் வளர்த்த நகரங்கள்ஆசிரியர் : திருக்குறள்மணி, வித்துவான், செஞ்சொற் புலவர் திரு அ. க. நவநீத கிருட்டிணன்தமிழாசிரியர், ம. தி. தா இந்துக்கலாசாலை, திருநெல்வேலிதிருநெல்வேலித் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், லிமிடெட்,திருநெல்வேலி-6 சென்னை-1.1960அங்கப்ப பிள்ளை கங்காதர நவநீதகிருட்டிணன் (1921-1967) பதிப்புரை ‘என்றுமுள தென்தமிழ் இயம்பி இசைகொண்ட’ நந்தமிழ் நாட்டின்சீர் பரவுதற்குரியது. ‘பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே’ என்று நயந்தோன்றப் பாடியுள்ள பாரதியார் உயர்ந்த கருத்தொன்றையும் உள்ளடக்கி வைத்துள்ளார். தாயோடு மொழியும் நாடும் ஒருங்குவைத் தெண்ணப்பட்டு வருதல்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 49 : பழந்தமிழும் தமிழரும் 9

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 48 : பழந்தமிழும் தமிழரும் 8 – தொடர்ச்சி) பழந்தமிழும் தமிழரும் 9    ஈ யென இரத்தலை இழிவாகக் கருதிய பழந்தமிழ் நாட்டில் பிச்சை என்ற சொல் தோன்றியிருத்தல் கூடுமா என்று சிலர் ஐயுறக்கூடும். ஈ என இரத்தல் இழிந்ததுதான். ஆனால், ஈயேன் என்றல் அதனினும் இழிந்தது. பழந்தமிழர் வாழ்வு ஈதலும் துய்த்தலும் அடிப்படையாகக் கொண்டது என்பதை முன்பே சுட்டிக் காட்டினோம். ஆதலின், ஈதல் நிகழக், கொள்வோர் இருந்துதானே ஆக வேண்டும். கொள்வோரின்றிக் கொடுப்போர் யாது செய இயலும்?…